நடனம் முடிந்து ரூத்தின் இடையைப் பிடித்துக் கொண்டு நின்றவன், அந்த நிமிடம் என்ன மனதில் தோன்றியதோ, அவனது கண்களையே காதலாக பார்த்து நடனம் ஆடியவளை விட மனமின்றி அவள் இடையில் அழுத்தம் கொடுத்து அவளை சுயநினைவுக்கு வர வைத்தவன்.
“ரூத்…. ஐ லவ் யூ…” என்று அவன் காதலை கணநேரத்தில் சொல்லி, அவளை சிலையாக்கி விட்டு அவளிடமிருந்து நகர்ந்தான்.
“இப்போ என்ன ஆச்சு…” என்று குழம்பிப் போய் அவனையே பார்த்திருந்தவளின், தலையை மக்கள் பக்கம் திருப்பி, அவள் கையை பற்றி நன்றி சொல்லிவிட்டு உறைந்து நின்றிருந்த ரூத்தின் இழுத்து கொண்டு இறங்கிவிட்டான்.
மேடைக்குப் பின்னால் கை பிடித்து இழுத்துச் சென்ற ஆதிஷை வலி மறித்த மது,
“சூப்பர் டி செல்லம், அழகா ஆடுன” என்று ரூத்தின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி அவள் கொஞ்ச, அதை எதையும் கவனிக்காத ரூத் ஆதிஷைப் பார்த்து,
“ஸ்டேஜ்ல என்ன சொன்ன ஆதி…” என்றவளின் கையை கிள்ளிய மது,
“இங்க ஒருத்தி பேசிட்டு இருக்கேன், என்ன கவனிக்காம அவன் கிட்ட என்னடி பேசுற?”
என்ற மதுவின் சத்தத்தில் தான் மேடையை விட்டு இவள் கீழே இறங்கியதை உணர்ந்து, சுற்றிப் பார்த்தவள் மதுவின் முகத்தைப் பார்த்து,
“நான் எப்படி ஆடுன அக்கா…” என்று கேட்டு நின்றவளை முறைத்த மது,
“இத்தனை நேரம் நான் அதை தானடி சொல்லிட்டு இருந்தேன், நீ கவனிச்சியா இல்லையா? எங்கடி பறந்துட்டு இருக்க?” என்றதற்கு என்ன சொல்வதென்று முழித்தவளின் தலையில் தட்டிய மது,
“சூப்பரா ஆடி இருக்க, எத்தனை பேரு நின்னுட்டு கத்தி கை தட்டுனாங்க தெரியுமா?”
என்று இவள் பேசியதை நம்ப முடியாமல் கண்களை விரித்த ரூத், “உண்மையாவாக்கா?”
“உண்மையா தான், நீ பேசாம என்கிட்டயே டான்ஸ் கத்துக்க சேர்ந்திடு. உன்ன பெரிய ஆளா நான் மாத்தி காட்டுறேன் டி.”
“அச்சோ! நோக்கா, நமக்கு இந்த டான்ஸ் எல்லாம் செட் ஆகாது போலக்கா, இந்த ஒன் டேக்கே நாக்கு தள்ளிடுச்சு.”
“என்னடி இப்படி சொல்ற? எவ்வளவு அழகா ஆடியிருக்க! அதுவும் நம்ம டான்ஸ் மாஸ்டர் கூட ஜோடியா ஆடி அசத்திருக்க, நீ இப்படி செட் ஆகலன்னு சொல்லலாமா?”
“இப்படி ஆட மூணு மாசம் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியு…க்கா? தொடர்ந்து பிராக்டீஸ், பிராக்டீஸுனு தூக்கத்துல கூட டான்ஸ் ஆடுற மாதிரி தான் கனவு வருது….. எவ்வளவு பிரஷர், என்னால முடியாதுப்பா”
என்று தலைக்கு மேலே கும்பிட்டு நின்றவளை சிரித்த முகத்துடன் ஆதிஷ் பார்த்து நிற்கவும், அவனைப் பார்த்த மது அவன் இடிப்பில் இடித்து,
“என்னடா சிரிச்சிட்டு இருக்க? கடைசியா உனக்குக் கூட ஆட பொண்ணு ஒன்னு கிடைச்ச சந்தோஷத்துல, நம்ம க்ரூப் இருந்தா, இவ என்னடா இப்படி சொல்றா? நீயும் அதப் பார்த்து சிரிக்கிற?” என்று மது பேசியதை புரியாமல் பார்த்த ரூத்.
“என்னக்கா சொல்றீங்க, ‘கடைசியா ஆதி கூட ஆட பொண்ணு கடச்சிருக்கு ன்னா ‘என்ன அர்த்தத்துல சொல்றீங்க க்கா?”
“ஏன் உனக்குத் தெரியாதா ரூத்? இந்த பக்கி இது வரை ஜோடியா ஆடுனதே இல்ல, உன் கூடத்தான் முதல் தடவ ஜோடியா ஆடியிருக்கான்” என்று மது சொன்னதை நம்ப முடியாமல் ரூத், ஆதிஷைப் பார்க்க
ஆதிஷோ மது சொன்னது எதையும் கண்டு கொள்ளாமல், “உனக்கு ஆட ஏன் விருப்பம் இல்லை ரூத்?” என்றவனுக்குச் உடனே பதில் சொன்னாள் , “ஏன்னா பாடுறப்போ எனக்கு வர்ற ஃபீல் இதுல இல்ல ஆதி”
என்று தோள் குலுக்கியவளை உண்மையாவா என்பது போல இவன் பார்க்க, ரூத்தும்
“உண்மையாவே தான், அம்மா படம் பார்த்துட்டு ஆடனும்னு ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு ஆடுறதை விட பரதம் ஆடுறத பாக்குறதும், பாட்டுப் பாடுறதும் தான் பிடிச்சிருக்கு” என்று மது, ஆதிஷைப் பார்த்துப் பேசினாள்.
அதில் மது, “சரி, உனக்கு இன்கேஸ் ஆடுறத கண்டினியூ பண்ணனும்னு தோணுனா என் கிட்ட நேரா வந்திடு டி” என்று சொல்லி, அவள் மேடை அருகே அவளிடன் பயின்ற மற்ற மாணவ, மாணவிகள் ஆடுவதைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும், ரூத்தும் உடை மாற்றும் அறைக்கு செல்லத் திரும்பப் போனவளின் கையைப்பிடித்து நிறுத்திய ஆதிஷ்,
“எங்க போற ரூத்?” என்ற கேள்விக்கு
“எங்கன்னா ட்ரெஸ் மாத்தத்தான், டைம் ஆகுதுல, வீட்டுல பாட்டி தேடுவாங்க” என்று திரும்பப் போனவளை,
“பாட்டி உன்ன இப்படிப் பார்க்க வேணாமா ரூத்?” என்றவன் பேச்சில் ஆசையாகத் திரும்பியவள், பின் நிதர்சனத்தை உணர்ந்து
“இல்ல வேணாம், நான் இப்படி அங்க போய் நின்னா ஸ்டெல்லாவுக்கு விஷயம் தெரிஞ்சு பிரச்சனை ஆகிடும், வேணாம் ரிஸ்க்” என்று உதட்டைப் பிதுக்கியவளை அள்ளி அணைக்கத் துடித்தாளும்; அவன் அசையாமல் அவளைக் கண்களில் பருகியபடி,
“ஸ்டெல்லா நைட் தான் வருவா, அன்ட் நம்ம தெருல அதுவும் அவ முன்னாடி நின்னு பேசுற அளவு யாருக்கும் தைரியம் இல்ல.
சோ, உன்ன இந்த கோலத்துல பார்த்தாலும் யாரும் அவ கிட்ட சொல்ல மாட்டாங்க, சோ பயப்படாத.”
என்றவன் பேச்சில் ஆசையாக இருந்தாளும், அதே அளவு பயமாகவும் இருக்க,
“பாட்டி ஏதாவது சொல்லிட்டா…?”
“என்னது பாட்டியா? அவங்க தான? எப்படி ஸ்டெல்லா கிட்ட பேசுவாங்க பாரு. நீ பயப்படாம கிளம்பு, வா போலாம்.”
என்றவனுக்கு ஏற்பத் தலையை அசைத்தவளுக்கு, ஒரு பக்கம் ‘பாட்டி நம்மளை இப்படிப் பார்த்தால் எப்படி இருக்கும்?’ என்று நினைக்கவே ஆசையாகவும் இருந்தது; உடனே சம்மதமாக தலை அசைத்தவள்,
ஆதிஷை மேலிருந்து கீழ் பார்த்து, “நீங்களும் இப்படிச் சட்டை இல்லாம இப்படியே தான் வரப் போறீங்களா?” என்று கேட்டவளின் விரலைப் பிடித்து,
“ஏன், இப்படி வந்தா என்ன தப்பு? இப்படித்தான் கொஞ்சம் முன்னாடி டான்ஸே ஆடுனேன்.”
என்றவனை முறைத்துப் பார்த்தவள், உதட்டைச் சுளித்து, “என்னமோ பண்ணுங்க” என்று விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் சிரித்தபடி பின்னே சென்றவன், ஒரு வெள்ளைச் சட்டையை அணிந்து கொண்டு வந்தான்.
வெள்ளை சட்டை அணிந்து வந்தவனை கண்டு கொள்ளாமல், காரில் ஏறி அமர்ந்தவளை, “இதோ பாருடா, பொம்ம கோபமா போறா” என்றபடி அவள் அருகிலேயே அமர்ந்தான்.
கார் புறப்பட்டு பத்து நிமிடம் ஆகியும், இவன் பக்கம் திரும்பாமல் இருந்தவளைப் பார்த்தவன்
“இவளுக்காக டிரஸ் மாத்தாம சட்டை போட்டு வந்தா பாக்குறாளா பாரு” என்று முணுமுணுத்தபடி அவளைப் பார்த்து அமர்ந்திருந்த ஆதிஷ், பக்கம் திடீரென்று திரும்பி அமர்ந்த ரூத்.
அவனை குறு குறுவெனப் பார்க்கவும், “என்ன ரூத்…” என்று இவளின் திடீர் பார்வையில் திடுக்கிட்டுப் பார்த்தான்.
அவனை கூர்ந்து பார்த்தவள், ரகசியமாக அவன் அருகே சாய்ந்து
“நீங்க மேடையில என்கிட்ட சொன்னீங்களே, அதைத் திரும்பச் சொல்லுங்களேன்” என்று முகம் சிவந்து நாணத்துடன் கேட்டவளை ரசனையாகப் பார்த்தவன்.
“நான் மேடையில வச்சு சொன்னதா ரூத்?” என்று சிரித்தவனின் சிரிப்பைக் கண்டு கோபமாக
“ ஆமா ஆதி… திரும்ப அதைச் சொல்லுங்க.”
“திரும்பனா? எப்படி திரும்ப? உன் கூட அப்போ அடுன மாதிரியே ஆடிட்டே சொல்லணுமா?”
“நான் உங்களச் சொல்லத்தான் சொன்னேன் ஆதி, ஆடச் சொல்லல” என்று முணுமுணுத்தவளை, ஆள் காட்டி விரலால் அருகில் அழைக்க, ரூத்தும் இவன் காதலைத்தான் சொல்லப் போகிறான் என்று எண்ணி அவன் அருகில் நகர்ந்து அமர்ந்தாள்.
அமர்ந்தவளின் காதருகே சென்று, அவளின் கலைந்து கிடந்த முடியை காதின் பின்னால் நகர்த்தியவன், அவன் முகத்தை அவள் காது அருகே கொண்டு சென்று
“வீடு வந்திருச்சு, இறங்கலாமா?” என்று கேட்டவனை தள்ளிவிட்டவள், “போடா…” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினாள்.
இங்கு மணியம்மாள், எப்போதும் நேரத்திற்கு பாட்டு கிளாஸ் முடிந்து வரும் ரூத் இன்னும் வராமல் போனதால், ஒருவித பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள, ஆதிஷின் வீட்டு வாசலில் நின்றபடி ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்.
மணியம்மாளின் பதட்டத்தைப் பார்த்த வாணி, அவர் அருகே வந்து, “என்ன அத்தை, இங்க நின்னுட்டு இருக்கீங்க? சீரியல் பார்க்க பக்கத்து வீட்டுக்கு போகலையா?”
“அது வாணி, எப்பவும் இந்நேரம் வரும் பொண்ணு இன்னும் வரல, அதான் இங்கயே நின்னு பார்த்துட்டு இருக்கேன்.”
என்ற வாணியின் கூற்றைக் கேட்டு, நிதானமானவர் இருவரையும் பார்த்துவிட்டு, ஏமாற்றமாக முகத்தை வைத்தவர்
“ப்ச்… ஆடிட்டா வந்தீங்க! நான் கூட என்னமோன்னு ஆசைப்பட்டுட்டேன்!” என்று பேசியவரை வாணி முறைக்க, ஆதிஷோ “ரொம்ப ஃபீல் பண்ணி, நீங்க கொடுத்த வாக்க மாத்திடாதீங்க பாட்டி!”
என்றவனை முகத்தைச் சுருக்கிப் பார்த்தவர், “என்னடா பேசுற? நான் என்ன வாக்குக் கொடுத்தேன்?”
“அதான் எங்க கல்யாணத்தை சுமுகமா பேசி முடிக்கிறேன்னு சொன்னியே, அதைத்தான் சொல்றேன் பாட்டி,”
என்று ஆதிஷ் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் ரூத் வாயில் கைவைத்து விட, வாணியோ
“ஆதிஷ்…” என்று சத்தம் போட்டார்,
அவர் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்தும் கலங்காத ஆதிஷ், மிக உருதியாக,
“சொல்லும்மா, உனக்கு இதுல ஏதாவது பிரச்சனை இருக்கா? டோன்ட் வொரிம்மா, என்னன்னு பாட்டி கிட்ட சொல்லு, அவங்க பார்த்துப்பாங்க,” என்று பாட்டியை பார்க்க,
தெரியாமல் வாயைத் திறந்த பாட்டியை அனைவரிடமும் கோர்த்துவிட்டான் ஆதிஷ்.
இவற்றை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த ரூத், “இங்க என்ன நடக்குது?” என்றபடி தான் அனைவரது முகத்தையும் பாவமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஒருவன் இன்றுதான் காதலைச் சொன்னான்; அதற்கு இவள் பதில் சொல்லும் முன்பே, அவன் இப்படி அவனது குடும்பத்திடம் கல்யாணம் வரை பேசியதைக் கேட்டு என்ன விதமாக உணருவது என்று புரியாமல் தான் முழித்தாள்.
“நான் லவ் பண்றேன்னு கூடக் கேட்கல, இவங்க என்ன பாட்டி கிட்ட இப்படிச் சொல்றாங்க? அப்போ என் சம்மதம்? நான் சரின்னு சொல்ல ரெடியா இருந்தாலும், நான் அந்த சம்மதத்தை இவங்க கிட்ட சொல்ல வேணாமா?” என்று சிறுபிள்ளையாகக் குழம்பி நின்றாள்.
இது சரியா இல்லை தவறா என்று குழம்பி நின்றவளின் முகத்தைப் பார்த்த ஆதிஷ், அவள் குழப்பம் எதனாலே இருக்கும் என்று சரியாகக் கணித்தவன், இந்த பேச்சை மாற்றும் விதமாக,
“பாட்டி…., உங்ககிட்ட காட்டத்தான் உன் பேத்தி டான்ஸ் ஆடுன டிரஸ்ஸோட வந்திருக்கா. அவளப் பார்க்காம என்ன கதை பேசிட்டு இருக்கீங்க?” என்று அவளைப் பற்றி முழுதும் அறிந்தவன் அவளின் குழப்பத்தையும் திசை மாற்றினான்.
ஆதிஷ் சொன்னதைக் கேட்டு ரூத் பக்கம் திரும்பியவர், அவளை இப்போதுதான் பொருமையாகப் பார்த்தார்.
தலை முதல் பாதம் வரை அவளைப் பார்த்தவர், அவள் நாடி பற்றி, “ரூத்…” என்று கண் கலங்க, “அப்படியே உங்க அம்மா மாதிரியே இருக்க ரூத்,”
“உங்க அம்மா உன் வயசுல இப்படித்தான் இருந்திருப்பா….,” என்று பேசியவர், அவள் முகத்தை கைகளால் தடவிப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்,
“ஜோசப்…” என்ற ஸ்டெல்லாவின் சத்தத்தில் அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, ஸ்டெல்லா தான் நின்று கொண்டிருந்தாள்.
ஆச்சரியம் இருக்காதா பின்ன, அவள் பாட்டி இறந்தபோது கூட கண்கள் கலங்கி நின்றாளே தவிர அழவில்லையே அவள்.
அப்படி கல்லாக இருந்தவள் கரைந்து அழுவது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
உடைந்து போய் நின்றவள், கையில் இருந்த பையைத் கீழே விழுவது கூட தெரியாது, மெல்ல நடந்து ரூத் அருகே வந்தாள்.
ஸ்டெல்லாவின் அழுகையைப் பார்த்த ரூத்திற்கும் கண்ணீர் வர, அழுதபடி ஸ்டெல்லா அருகே சென்று,
“ஸ்டெல்லா…” என்று அழைக்கத்தான் செய்தாள். அதற்கே அவளை இறுக அணைத்துக்கொண்ட ஸ்டெல்லா சத்தமாக கத்தி அழுதாள்.
அவள் அழுவதைப் பார்த்த அனைவருக்கும் ஒரு மாதிரி பாவமாக போய் விட்டது.
“இந்த பொண்ணு அம்மாவுக்காக இப்படி ஏங்கிருக்கு போலயே,” என்று தான் வாணியே நினைத்தார்.
ஆதிஷே ஸ்டெல்லாவின் அழுகையைக் கண்டு ஒரு நிமிடம் ஆடித்தான் போனான். சத்தமாக கத்தி அழுதவள், திடீரென்று அவள் அழுகை நிறுத்தி, ரூத்தை விட்டு விலகி நின்று அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்தவள்.
“இல்ல இது வேணா ஜோசப், இது வேணா இதை போடாத, இதை கலட்டு…” என்று முனங்கியவள், ரூத் போட்டிருந்த நகைகளையும் அவளின் உடையையும் கலைக்க முயன்றவளைத் தடுத்த ரூத்.
“ஸ்டெல்லா என்ன பண்ற, விடு ஸ்டெல்லா… ரோட்ல வச்சி என்ன பண்ற?” என்று அவள் தடுத்தும் பலன் இன்றி, அவளின் உடையைக் கலைக்க முயன்றவளைத் தள்ளிவிட்ட ஆதிஷ், ரூத்தை அவன் பின்னே மறைத்து நிறுத்தி,
“ஸ்டெல்லா என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, உனக்கு பிடிக்கலன்னா உன் தங்கச்சி அதை பண்ணவே கூடாதா?” என்று பேசியவனை ஓங்கி ஒரு அறை விட்ட ஸ்டெல்லா.
ஒற்றை விரலை காட்டி, “உன்ன கொன்னுடுவேன்! ஜோசப் பக்கம் வராதன்னு உனக்குச் சொன்ன தானே!” என்று கண்கள் சிவக்க கோபமாக நின்றவளைப் பார்த்து பயந்து தான் போனான் ரூத்.
“என்னொரு வாட்டி ஜோசப் கிட்ட வந்த, உன்ன உயிரோட விட மாட்டேன்டா!” என்று மிரட்டியவளைக் நக்கலாகப் பார்த்தவன்,
“சின்ன வயசுல அடிச்சித் தோறதுன மாதிரி என்னைத் தொறத்திரலாம்னு பாக்குறியா ஸ்டெல்லா…” என்று ஒற்றை புருவம் தூக்கியவன்,
“அப்போ அவ குழந்தை, என்னால ஒன்னும் பண்ண முடியல, ஆனா இப்போ அவ லைஃப்க்கு என்ன வேணும்னு முடிவு எடுக்குற உரிமை அவளுக்கு இருக்கு ஸ்டெல்லா” என்று சிரித்தவன்; சிரிப்பில் பயந்தவளாக ஸ்டெல்லா.
“ஜோசப்… ஜோசப் இங்க வா, நம்ம இங்க இருக்க வேணா வா… ஜோசப் போயிட்டலாம்” என்று ரூத்தின் கையை பிடித்து இழுக்க, ஏற்கனவே ஸ்டெல்லாவைப் பார்த்து பயந்து நடுங்கிப் போய் நின்றவள், அவளின் செயலில் அவளின் பேச்சில் இன்னும் பயந்தவளாக,
ஆதிஷ் பின்னே சென்று மறைந்து கொண்டாள். அதில் கோபம், பயம், வருத்தம் என்று அனைத்தும் ஒன்றாக இணைந்து , ஸ்டெல்லாவுக்கு என்ன செய்கிறோம் என்று எதுவும் புரியாமல்,
“ஜோசப்…. இங்க வா….” என்று கத்தி அவளைப் பிடித்து இழுக்கச் செல்ல, வழியில் அவளை மறைத்து நின்ற ஆதிஷை கோபத்துடன் அடிக்கத் தொடங்கினாள்.
அந்நேரம் சரியாக காரில் வந்து இறங்கிய த்ரூவ் மற்றும் மதி, இருவரும் ஸ்டெல்லா கத்திக்கொண்டு நிற்பதை பார்த்து என்னமோ என்று த்ரூவ் வேகமாக அவளை நோக்கி செல்ல , ஸ்டெல்லா
“போ… போ… நீ வேணா… போ… ஜோசப்ப விடுடா… போ… அவள விட்டுப் போ…” என்று ஆதிஷ் மார்பில் அவனை அடித்து கத்தி அழுதவளை பிடித்து இழுத்த த்ரூவ்
“ஸ்டெல்லா….” என்று அழைத்து பார்த்தும் அவள் காதில் எதுவும் விழவில்லை. கண்களை மூடிக்கொண்டு அழுது தீர்த்தவளின் அழுகையை நிறுத்த வழியின்றி, அவளை அவனுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன்.
“ஸ்டெல்லா…. ரிலாக்ஸ் ம்மா…. ரிலாக்ஸ்…” என்று அவள் தலையை வருட, மெது மெதுவாக அவள் அழுகை அமைதியாகி அப்படியே அவன் மீதே மயங்கி விழுந்தாள் ஸ்டெல்லா.