அனல் – 27

சமையல் அறையில் தேங்காய் சட்னியை அரைத்து அதில் தாளித்து ஊற்றியவள், வெந்திருந்த இட்லியைத் தட்டில் இருந்து ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்த ரூத்,

திரும்பி இவர்களின் பெட்ரூமைப் பார்த்தவள், அதை நோக்கி நடந்து சென்றாள்.

காலையிலிருந்து இதோடு பத்தாவது முறையாக அந்த அறைக்குச் சென்று ஸ்டெல்லா தூங்குவதைப் பார்த்து விட்டு வருகிறாள்.

என்னும் எழாமல் தூங்கும் ஸ்டெல்லாவை நினைத்து பதட்டத்துடன் மீண்டும் சமையல் அறைக்குச் சென்று பாத்திரம் கழுவும் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் ரூத்.

இன்றுதான் ரூத்தும் ஆதிஷும் இணைந்து மேடையில் நடனம் ஆடப் போகிறார்கள். காலை ஒன்பது மணிக்கே புறப்பட்டு மது வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான் ஆதிஷ்.

இன்று பார்த்து எப்போதும் ஐந்து மணிக்கு எழுந்து கொள்ளும் ஸ்டெல்லா, மணி எட்டைத் தொட இருந்தும் எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.

இரவு தாமதமாகத் தூங்கியதால் இப்படித் தூங்குகிறாளோ என்று எண்ணி, ரூத் ஒருவிதப் பதட்டத்துடனே அனைத்து வேலையையும் செய்து கொண்டு இருக்கிறாள்.

இன்னும் அரை மணி நேரத்தில் ஸ்டெல்லாவிற்கு கேப் வந்துவிடும். அதில் வேறு வழியின்றி ரூத்தே அவளை எழுப்பச் சென்றாள்.

நன்றாகத் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தவளைப் பார்க்க, எழுப்ப மனமே வரவில்லை.

நேற்று இரவு வேலை முடித்து நேரம் சென்றுதான் தூங்கினாள் ஸ்டெல்லா; அதை நினைத்தே இத்தனை மணி நேரம் அவளை எழுப்பாமல் இருந்தாள் ரூத்.

ஆனால் இப்போது வெகு நேரம் ஆகி விட்டது ஸ்டெல்லா வேலைக்கு செல்ல வேண்டும் அதுவும் இன்றி இவள் மது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அனைத்தயும் நினைத்த ரூத்,

“ஸ்டெல்லா…. ஸ்டெல்லா…” என்று லேசாக அவளை உலுக்கவும், கண்களைத் மெல்ல திறந்து ரூத்தைப் பார்த்தவள் சிரித்தபடி,

“குட் மார்னிங் ஜோசப்”

என்று விட்டு மீண்டும் கண்களை மூடித் தூங்கப் சென்றாள். அதை பார்த்து “ அச்சோ… ஸ்டெல்லா…” என்று ரூத் வேகமாக, அவளை உலுக்கி

“ஸ்டெல்லா… மணி ஒன்பது ஆகப் போகுது, இன்னும் அரை மணி நேரத்துல கேப் வந்திடும்”

என்று ரூத் சொன்னதைக் கேட்டு பதறி எழுந்து அமர்ந்தவள், நேரத்தைப் பார்த்துவிட்டு,

“ஓ… காட்… “ என்று வேகமாக சென்று குளித்து தயாராகி வெளியே வந்தவள்

“என்ன ஜோசப், இவ்வளவு நேரம் நான் தூங்கினா , நீ என்னை எழுப்ப மாட்டியா டா !” என்று பேசியபடி தலையை வாரி கிளம்பவும்

“டைம் இருக்கு ஸ்டெல்லா, நீ பதறாம பொறுமையாவே கிளம்பு” என்று பேசியபடி, இருவருக்கும் தட்டில் நான்கு நான்கு இட்லி வைத்து எடுத்து வந்து, ஸ்டெல்லாவையும் அமர வைத்து உண்ண வைத்தாள்.

இட்லியை வேகமாக உண்டு முடிக்கவும், இவளுக்கு கேப் வரவும் நேரம் சரியாக இருக்க ரூத்திடம் சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டாள் ஸ்டெல்லா.

ஸ்டெல்லா சென்றதும் ரூத்தும் மணியம்மாளிடம், பாட்டு கிளாஸ் போவதாக பொய் கூறிவிட்டு மது வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

இங்கு மது வீட்டிற்க்கு வந்த ரூத் அங்கிருந்து மதுவுடன் நடனம் ஆடப் போகும் அரங்கத்திற்கு இருவருமாகச் சென்று சேர்ந்தனர்.

அங்கு உடை மாற்றும் அறையில் ஆதிஷ் ஏற்கனவே வாங்கி கொடுத்திருந்த பரத உடையை மது ரூத்திற்கு அணிய உதவி செய்தாள். பின் அவளுக்கு ஒப்பனை செய்து அவளை முழுமையாகத் தயார் செய்து முடித்தவள்.

“வாவ் ரூத், ரொம்ப அழகா இருக்க டி! நானா உனக்கு மேக்கப் போட்டேன், என்னாலயே நம்ப முடியல” என்று சுற்றிச் சுற்றி போட்டோ எடுத்துக்கொண்டு இருக்க.

ரூத் மெல்ல எழுந்து அவளின் விம்பத்தை அந்த உயரமான கண்ணாடியில் பார்த்து, கண்கள் கலங்க அதைத் தொட்டுத் தடவியவளுக்கு, அவள் முகத்திற்குப் பதில் அவளின் அம்மாவின் முகமே அதில் தெரிந்தது.

அதைப் பார்த்து கண் கலங்கி கண்ணீர் வழிய நின்றவளின் கண்களைத் துடைத்த ஆதிஷ்

“ஏய்… லூசு, இப்போ எதுக்கு அழுற? பாரு, போட்டிருக்க மை கலையுது ” என்று அவள் கண்களை கைக்குட்டையால் துடைத்தவனை கண்ணாடி வழியே பார்த்தவள்.

“அம்மா இப்படித்தான இருந்திருப்பாங்க?” என்றவளின் கேள்வியில், அவள் தோளை இரு கைகளால் பற்றியவன்,

“இல்ல, இப்படி அழுமூஞ்சியா அம்மா இருந்திருக்க மாட்டாங்க” என்று சீண்டியவனை முறைத்த ரூத், முகத்தைச் சுருக்கி,

“உங்க கிட்ட போய் கேட்டேன் பாரு, என்ன சொல்லணும்?”

“ என்னன்னு சொல்லணும் பொம்ம..என்னன்னு சொல்லு நானே சொல்றன் பொம்ம.” என்றவனைத் திரும்பிப் பார்த்த ரூத்,

“ஆமா, அதென்ன எப்பப் பாரு பொம்ம பொம்மன்னு கூப்பிடுறீங்க?” என்றவளை அவன் பக்கம் திருப்பி, நுனி மூக்கை  ஆள் காட்டி விரலால் தொட்டு,

“அப்படியே புசு புசுன்னு கன்னம் வச்சு அழகா இருந்தா பொம்மன்னு தான் கூப்பிடுவாங்க” என்று அழகாகச் சிரித்தவனை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள்.

மேலாடை இன்றி அங்கவஸ்திரம் அணிந்து இவள் அருகில் ஒட்டி நின்றவனைப் பார்க்க கூச்சமாக இருக்கவும், அவனை விட்டுத் தள்ளி நகர்ந்து நின்று

“நீங்க எப்போ ரெடி ஆனீங்க ஆதி…” என்று தரையைப் பார்த்துப் பேசியவளை பார்த்து,

“அடியே பொம்ம, என்ன இப்படி வெட்கப்படுற? இன்னைக்கு என் கூடத்தான் ஆடணும் நீ, நினைவு இருக்கு தான? நீ இப்படி வெட்கப்பட்டா எங்க இருந்து டி ஆட?” என்று அதிர்ந்தான்.

“அதெல்லாம் ஆடிடுவேன் ஆதி…” என்று அவன் தோளைப் பார்த்துப் பேசியவளை நிதானத்துக்கு கொண்டு வர ஆதிஷ்,

“அது சரி, என் கண்ணைப் பார்க்கவே தயங்கிற நீ, எப்படி என்னப் பார்த்து ஆடுவ? இது வேலைக்கு ஆகாது, பேசாம சீனியர்க்கு ஆம்பல வேசம் போட்டு ஆட விட்டுற வேண்டியதுதான்” என்று அங்கு நின்று கொண்டிருந்த மதுவைப் பார்க்கவும்,

இவர்கள் பேசுவதை அங்கு நின்று வேலை பார்ப்பது போலக் கேட்டுக்கொண்டிருந்த மது, ஆதிஷ் கூறியதில் அதிர்ந்து

“ஏ…. ஆதிஷ், என்னடா… என்ன கடைசி நிமிஷத்துல கோத்து விடுற? இல்ல, இது சரி வராது, நான் ஸ்டேஜ் கிட்ட போறேன். நீங்க வந்தா வாங்க, இல்லன்னா போங்க” என்று கூறிவிட்டு மது சென்று விடவும் ரூத்

“அச்சோ அக்கா முடியாதுன்னு போயிட்டாங்களே” என்றவளை முறைத்தவன்,

 “என் கூட ஆட ஒத்துக்கிட்ட தான ரூத், அப்புறம் என்னடி இப்போ பிரச்சனை உனக்கு?”

“அது ரீஹர்சல் கூட நம்ம சேர்ந்து ஆடலயா…., அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. அழகா நேத்து நீங்க லீவ் போட்டுருந்தா ஆடி பார்த்துருக்கலாம் தான ” என்று ஆதிஷ் மீது இவள் பழி போடவும்,

“நான் ஆட வந்தா தான் நீ அய்யோ சாமின்னு பயப்படுறியேடி”

“அது…….” என்று இழுத்தவள், “சரி அத விடுங்க, இப்போ நம்ம ஆடுறோமா இல்லையா அத மொதல்ல சொல்லுங்க” என்று பேசியவளை நன்றாகவே முறைத்தான் ஆதிஷ்.

அவன் முறைப்பில் பல்லை ஈ… என்று காட்டி சிரித்தவள், “சும்மா சொல்லி பாத்தேன் நீங்க என்ன பண்றீங்கன்னு” என்று அவள் சாமாளிக்கவும்; இடிப்பில் கைவைத்து பார்த்தவன்,

“உண்மைய சொல்லு ரூத், நீ இப்போ எப்படி ஃபீல் பண்ற?” என்றவனை பயத்துடன் பார்த்தவள்,

“ஸ்டெப்ஸ் லாம் நல்லா ஞாபகம் இருக்கு தான்…. ஆனா…” என்று அவன் முகத்தைப் நிமிர்ந்து பார்த்து

“பாட்டே… நாலு பேரு சேர்ந்து இருந்தா வராது, இதுல டென்ஸ் எப்படி ஆதி…. எந்த தைரியத்துல ஓகே சொன்னேன்னு தெரியல, இப்போ இந்த கூட்டத்த பாக்க பயமா இருக்கு ஆதி….” என்று பயத்துடன் பேசியவளை, உற்று பார்த்தவன் அவளை அவனுடம் சேர்த்து நெருக்கி நிறுத்தி, அவள் முகம் பார்த்தவனின் செயலில் பயந்த ரூத்

“ஆதி…” என்று அவன் முகத்தை அதிர்ந்து பார்க்க, “இங்க என்ன பாரு ரூத்…” என்றவனைப் பார்க்காமல் ரூத் சுற்றி நிற்பவர்களைப் பார்த்து பயந்து அவனைத் தள்ளிவிட முயல, அதில் அவளை மேலும் அவனுடன் சேர்த்து நெருக்கிய ஆதிஷ்,

“பொம்ம….” என்று அழுத்தமாக அவளை அழைத்த அழைப்பில் அவனை நிமிர்ந்து சங்கடமாகப் பார்த்த ரூத்,

“ஆதி… என்ன இது, விடுங்க எல்லாம் பாக்குறாங்க, பாருங்க” என்றவளின் பேச்சை இவன் கை கொண்டு அடைத்தவன்.

தலையை இட வலமாக அசைத்து பேசாதே என்பது போல செய்கை செய்தவன்.

அவள் வாயில் இருந்து இவன் கையை எடுத்து அவளின் வலக்கையை பற்றி, அதை அவன் கன்னம் மீது வைத்து அழுத்தியவன்

“ஆடும் போது என்னோட முகத்த. அதை மட்டும் பாரு, வேற எங்கயும் பாக்காத, சரியா?”

 என்றவனுக்கு ஏற்ப அவளின் தலை அசைய, கண்களோ அவன் கண்ணை விட்டு அகலாமல் அதில் தொலைந்து கொண்டு இருந்தது.

ரூத்தின் கண்களில் இவனுக்காக தெரிந்த மயக்கத்தை ஆசையாகப் பார்த்த ஆதிஷ் மெல்ல அவனின் கன்னத்தில் இருந்த கையை விலக்கி அதை நோக்கி குனிந்தவன்.

குனிந்தபடி ரூத்தின் சம்மதத்தைப் பார்க்க, அவள் அவனைத் தான் அதிர்ந்த படி பார்த்தால்,  அவன் செய்யப் போகும் காரியத்தில் வெட்கி முகம் சிவக்க, பயம் ஒரு புறம் நாணம் ஒரு புறம் என்று தவித்தவளின் தவிப்பை அவன் உதடு கொண்டு அமைதி சொய்தான்.

உள்ளங்கையில் குத்திய மீசை முடியின் குறுக்குறிப்பில் கைகளை இறுக்கி மூடி, அவளிடம் அதை இழுத்து கோண்டவள் அதை அவளின் பின்னே மறைத்து வைத்து நின்றவளைப் பார்த்து,

சிரித்தவன் அவள் தலையை அவன் கைகொண்டு ஆட்டி, “நினைவு வச்சிக்கோ…ஆடும் போது உன் கண்ணுக்கு நான் மட்டும் தான் தெரியணும்”

என்று சொல்லி சென்றவன் சொன்னது போல முழு நடனம் ஆடி முடிக்கும் வரை ஏன், அதன் பின்னும் ரூத்தின் கண்களுக்கு அவன் மட்டும் தான் தெரிந்தான்.