நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானா
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
ஆச வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்
3 வருடங்களுக்கு பிறகு
எபிலாக்
மதுரை சித்திரை திருவிழாவுக்காக மதுரை வீட்டில் குடும்பம் முழுவதும் சேர்ந்து இருந்தனர்.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் அனைவரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அனைவரும் அங்கு இருந்தனர்.
ராகவன் மாலையில் வந்து சேர்ந்து கொள்வதாக சித்துவிடம் சொல்லி இருந்தான். இவனும் திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையில் அவ்வப்போது தேனி சென்று பார்த்துவிட்டு வருவதாக சொல்லி தான் இங்கு வந்திருந்தான்.
அனாமிகாவோ 10 நாள் மருத்துவமனைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வந்து சேர்ந்திருந்தாள், சித்து அனாமிகாவிற்கும் முதல் குழந்தையே இரட்டை குழந்தை தான் ஒரு பையனும் பொண்ணும் என்று இருக்க வீட்டில் உள்ள பெரியவர்களின் உதவியோடு இதோ குழந்தைகளை வளர்த்தாயிற்று, இப்போது இரண்டு வயது இரண்டு மாதம் ஆகிறது.
வீட்டின் முன் பக்கம் இருக்கும் அந்த பெரிய இடத்தில் உணவு பரிமாறும் விதமாக பெரிய துணிப் பந்தல் போட்டு இருக்க, அனைவரும் அங்கங்கே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர்.
இவளோ அப்போது தான் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள், பிள்ளைகளுக்கு கதை சொல்லியபடி உணவை ஊட்ட அருகில் வந்து அமர்ந்த சித்து ஏதோ பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க., அவனிடமும் பேசியபடி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
சற்று தள்ளி அமர்ந்திருந்த சரிகா தான் நித்திலனை சுரண்டி, “கொஞ்சம் எங்க அண்ணனை பாருங்களேன்”, என்று அவனிடம் சொல்ல.,
அவனும் “என்ன”, என்று கேட்டான்.
“அண்ணி கல்யாணம் முடிஞ்ச புதுசுல, அவங்க காதல் கதையை சொல்லும் போதும் எங்க அண்ணன் இப்படித்தான் அண்ணிய பாத்துக்கிட்டே உட்கார்ந்து இருந்தான்., இப்போ பிள்ளைகளுக்கு கதை சொல்லிட்டு இருக்காங்க., அப்பவும் இப்படித்தான் பார்க்கிறான், எப்படித்தான் அண்ணியை இப்படி ரசிக்கிறானோ தெரியல”, என்று சொல்ல.,
“வேணும் னா கூப்பிட்டு கேட்டுருவோமா”, என்று நித்திலன் சொல்ல.,
“நீங்க வேற சும்மா இருங்க, அண்ணி அதுக்கு வேற ஏதாவது சொல்லிட போறாங்க”, என்று சொல்லவும் சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்கும் போது தான்.,
நித்திலன் அவர்களை பார்த்தபடி சொன்னான்., “அவர்களுக்குள் இருக்கும் காதல் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே ஒழிய கொஞ்சம் கூட குறையவில்லை, குறையவும் குறையாது அப்படின்னு தான் நினைக்கிறேன்., ரெண்டு பேருக்கும் சண்டை வராம இருக்கும்னு நினைக்கிறாயா? அதெல்லாம் இல்ல., நல்லா ஆர்கியுமென்ட்ஸ் வருது, நல்லாவே சண்டை வரும்., ஆனா ரெண்டு பேராலையும் ஒருத்தர விட்டு ஒருத்தர் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது., அதனால தான் ஃபர்ஸ்ட் பேபி கன்சிவான ஏழு மாசம் வரைக்கும் மூணாறு தானே இருந்தாங்க, இவளும் அப்பவும் பிராக்டிஸ் விடல., ஏழு மாசத்துக்கு அப்புறம் நல்ல வயிறு பெருசானதற்கு அப்புறம் தான் தேனிக்கு வரும் முடிவுக்கு வந்தாங்க., அப்புறமும் வீடு மாற்றக்கூடாது அப்படின்னு சொல்லி பெரியவங்க எல்லாம் சொன்னதால., மதுரைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு., இவரு தினமும் மதுரையில் இருந்து தேனிக்கு போயிட்டு வந்துகிட்டு இருந்தாரு., இவ வளைகாப்பு போட்ட உடனே சென்னை வந்தாச்சு., டெலிவரி ஆன மூன்று மாதத்தில் இரண்டு பிள்ளையும் பார்த்துக்கிடுவேன்னு சொல்லி தேனியில் வீடு பார்த்து செட்டில் பண்ணியாச்சு., உங்க பெரியம்மா., எங்க பாட்டி., உங்க பாட்டி., எல்லாரும் மாத்தி மாத்தி ஆளாளுக்கு பிள்ளைகளை வளர்த்து கொடுத்துட்டாங்க., இப்பவும் அங்க தானே மாத்தி மாத்தி போயிட்டு இருக்காங்க”, என்று சொல்ல.,
“ஐயோ நமக்கு இவன் ஒருத்தன வச்சுட்டு எத்தனை கஷ்டப்படுறோம்., அண்ணியை யோசிங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்கிறாங்க”, என்று சொல்ல.,
“இவனை பாரு சாப்பாடு எப்படி ஊட்டுன, ஒரு மிரட்டு மிரட்டி ,திட்டி, நீ அடிப்பேன்னு பயந்து போய் சாப்பிட்டான்., அங்க பாரு அவ என்ன சொல்வாளா தெரியலை, இரண்டும் சிரித்துக்கொண்டே வாயில வாங்குது பாரேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“அவங்க இரண்டு பேருக்கும் ஊட்டப் போயி தான் இவன் போகலை இல்லைனா இவனும் அத்தை ன்னு அங்கே போயிருப்பான்”, என்று சொன்னாள்.
“அதுவும் ரெண்டு பாட்டியும் சேர்ந்து இவன்கிட்ட சொல்லி வச்சிருக்காங்க., அத்தை ரெண்டு பேரை பார்க்கணும்., நீ அத்தையே தொந்தரவு பண்ணக்கூடாது ன்னு “, என்று நித்திலன் சொன்னான்.
பின்பு, “பேசாம என் தங்கச்சிட்ட கொஞ்சம் டிரெய்னிங் ஏடேன் பிள்ளை வளர்ப்பது எப்படி என்று ன்னு”, என்று சொல்லவும்.
இவளோ, “அண்ணிட்ட தான் கேட்கணும், புருஷனை கைக்குள் போடுவது எப்படின்னு”, என்று சொல்ல.,
இவனோ, “அவ கூட பிறந்தவன் நானு, எனக்கே எப்படி உன்னை கைக்குள் போடுவது என்று தெரியவில்லை”,. என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
அவளோ, “நமக்குள் சண்டை போட்டோம் னா, நம்ம பழக்கம் என்னன்னா ரெண்டு பேருமே கொஞ்ச நேரத்துக்கு டென்ஷனா இருப்போம், நம்ம சண்டை போடுறது வெளிய தெரியுது, ஆனா அண்ணா அண்ணி சண்டை போடறது வெளியவே தெரிய மாட்டேங்குது”, என்று சொல்ல.,
“இன்னைக்கு நைட்டு பாரேன், எல்லாரும் ஒண்ணா உக்காந்து கதை பேசும் போது நான் வாயை கிண்டறேன்., வெயிட் பண்ணி பாரு”, என்று சொல்லவும்.,
” சண்டை இழுத்து விட்டுறாதீங்க”, என்று சொன்னாள்.
“சண்ட இழுத்து விடுறதா., சண்டை இழுத்து விடுவதற்கு வாய்ப்பே கிடையாது., வெயிட் பண்ணி பாரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இரவு உணவுக்கு பிறகு அனைவரும் சேர்ந்து இருக்க, அனாமிகாவின் மடியில் ஒரு குழந்தை படுத்திருக்க., இன்னொரு குழந்தையோ சித்தார்த் அம்மா மடியில் படுத்திருந்தது., இருவரும் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க.,
அவர்களும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே தூக்கத்திற்கு சென்று கொண்டிருக்க., “தூங்குதா பாரேன், எல்லாரும் சேர்ந்தாச்சுனா., இதுங்க தூங்குறதுக்கு தான் நேரம் ஆகுது”, என்று சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.,
அப்போது தான் ரவிக்கு பெண் பார்க்கும் விஷயமாக சரிகாவின் அம்மா பேச்சை தொடங்க.,
சித்துவோ அனாமிகா வை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக இருந்து விட்டான்.
ரவியோ, “உங்ககிட்ட இப்ப பொண்ணு பாருங்க ன்னு நான் சொன்னனா., தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்காதீங்கம்மா”, என்று சொல்ல.,
“ஏண்டா, உனக்கு நான் பார்க்க கூடாதா, அவனுக்கு பொண்ணு பார்க்கும் போது அவனும் அப்படி தான் சொன்னான்”, என்று சொல்ல.,
“அம்மா”, என்று சத்தமாக பேசிய ரவி., “எனக்கு பொண்ணு எப்படி வேணும்னு நான் சொல்றேன்”, என்று சொல்லவும்.,
“சரி சொல்லுடா, தேடுவோம்”, என்று பாட்டி சொல்ல.,
“இல்ல பாட்டி, எனக்கு அண்ணி சொன்ன ஒரு விஷயம் தான், இப்ப எல்லாம் அடிக்கடி யோசிக்கிறது., அதுவும் அண்ணனை அண்ணியும் பார்த்ததுக்கு அப்புறம் என்னோட மைண்ட் செட் எப்படி இருக்குன்னா., அண்ணி சொல்லுவாங்க இல்ல பார்த்த உடனே இவங்க தான் வேணும் அப்படின்னு தோணும், மனசு படபடன்னு அடிச்சுக்கணும்., வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கணும்., இந்த மாதிரி எல்லாம் ஃபீல் வரணும் பாட்டி அப்படி வந்தா தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணுவேன்”, என்று சொல்ல.,
சித்தார்த்தின் குடும்பம் ஆவென்று வாயை பிளந்து பார்த்திருக்க, அனாமிகாவின் வீட்டிலோ எல்லாரும் சிரிக்க.,
நித்திலனோ, “இங்கேயும் வந்து ஒரு ஆளை மாத்தி விட்டுட்டியா”, என்று அனாமிகாவை பார்த்து கேள்வி கேட்க.,
“நீங்க எல்லாம் சொல்லிக் கொடுக்கல, ஆனா மனசுக்குள்ள உங்களையும் அண்ணனையும் பார்க்கும் போது இப்படி ஒரு லைஃப் வேணும், அப்படி னா இந்த மாதிரி தான் செலக்ட் பண்ணனும் தோணுது”, என்று சொன்னான்.
சிரித்தபடி அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த சித்து தான்., “ஆசைப்படுவதெல்லாம் சரிடா, எவ்வளவுதான் ரெண்டு பேருக்குள்ள லவ் இருந்தாலும், வீட்ல ஆர்கியுமண்ட்ஸ் வரும்., சண்டை வரும்., பிரச்சினை வரும்., குடும்பம்னா சில விஷயங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போக கத்துக்கணும்., அந்த அளவுக்கு உனக்கு பொறுமையும் விட்டுக் கொடுக்கிற தன்மையும் இருந்தா., தாராளமா வெயிட் பண்ணு., கண்டிப்பா உனக்கு புடிச்ச பொண்ணு கிடைக்கும்”, என்று சொன்னான்.
“எனக்கு என்னவோ உங்க அளவுக்கு அமையும் என்று தோணல”, என்று ராகவன் சொல்ல.,
இவனோ “அப்படி எல்லாம் இல்ல, உனக்கு தெரியாதா நாங்க ரெண்டு பேரும் ஆர்க்யூ பண்ணதே இல்லையா., எத்தனை நாள் ரெண்டு பேருக்குள்ள கடுமையான வாக்குவாதம் வந்து நீயே பார்த்து இருக்க”, என்று சொல்ல.,
அதைக் கேட்ட ராகவனோ., “ஆமாடா அது உண்மைதான்., ரெண்டு பேரும் ஆர்க்யூ பண்ணுவாங்க, அவ்வளவு சண்டை போடுவாங்க., ரெண்டு பேரும் வேகமா பேசுறத பாத்தோம்னா சண்டைதான் வரும் ன்னு நம்ம பயந்து போயிடுவோம்., ஆனா அடுத்த நிமிஷம் ரெண்டு பேரும் அப்படி டோட்டலா மாறிடுவாங்க., ஏன்னா இவங்க ரெண்டு பேரோட கேரக்டர் அது., ஒருத்தரால ஒருத்தரை விட்டுக் கொடுக்கவே முடியாது., ஒருத்தர் கிட்ட பேசாம ஒருத்தரால இருக்கவே முடியாது., அதுதான் உண்மை., கரெக்டா மச்சி”, என்று சித்தார்த்தனை பார்த்து ராகவன் கேட்க.,
இவனும் “டேய் கிண்டல் பண்ணாதே”, என்றான்.
அனாமிகாவும் ராகவனை பார்த்து, “அண்ணா கிண்டல் பண்றீங்க”, என்று சொல்ல.,
“கிண்டல் இல்லம்மா, நிஜமா தான் சொல்றேன்., அடுத்த நிமிஷம் நீ மச்சி சாரி ன்னு முந்திருவ, இல்லாட்டி அவன் தங்கம்னு ஓடி வந்துடறான்., சோ உங்க ரெண்டு பேருக்குள்ள ஒருத்தரால ஒருத்தரை விட்டுக் கொடுக்க முடியல தானே”, என்று சொல்லவும்.,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி இருந்தனர்., அதே நேரம் இரட்டை குழந்தை என்று தெரிந்த பிறகு சித்து அவளை தாங்கிய விதத்தை பற்றி மற்றவர்கள் பேச.,
இவளோ, “குடும்பம் மொத்தமும் சேர்ந்து நம்மள கண்ணு வைக்குது மச்சி”, என்று சித்துவை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் “எவ்வளவு கண்ணு வச்சாலும், அவங்க கண்ணு அவங்க வச்சுட்டு போறாங்க., நமக்கு என்ன., நமக்கு அதெல்லாம் ஒன்னும் பலிக்காது”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதன் பிறகு நடந்த திருவிழா கொண்டாட்டங்களில், மதுரை சொக்கரும் மீனாட்சி எந்த அளவுக்கு திருவிழா கொண்டாட்டினார்களோ., அதே அளவிற்கு சித்துவும் அனாமிகாவும் பிள்ளைகளை பெரியவர்களிடம் விட்டுவிட்டு கோயிலை சுற்றி வந்தனர்.
இன்னும் அதே மீனாட்சியம்மன் கோயில் வாசல் மல்லிகை பூ., திருப்பரங்குன்றம்., பழமுதிர்சோலை., என்று சுற்றுவதை மட்டும் விடவில்லை.,
பிள்ளைகள் பிறந்த பிறகும் முதல் முதலாக அப்படிதான் சென்று வந்தனர்., பிள்ளைகள் உருவாகி இருப்பது தெரிந்த போதும் இருவரும் அதே தான் கடைப்பிடித்தனர்.,
அவர்களது ஒவ்வொரு மகிழ்ச்சியையும் மீனாட்சியின் பாதத்தில் சமர்ப்பிக்க இருவரும் தவறவில்லை.
அன்பு மட்டும் தம்பதியரை ஒன்று சேர்ப்பதில்லை., அவர்களுக்கான புரிதலும் விட்டுக் கொடுத்தலும் அவர்களின் வாழ்வை உறுதியாக்குகிறது.,
புரிதல் இல்லாத இடத்தில் எத்தனை அன்பு இருந்தாலும் அது மதிப்பெற்றதாகவே மாறிவிடும்., அன்பும் புரிதலும் இருக்கும் வாழ்க்கை அழகாக மாறிவிடும்.,
அடுத்தவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட்டு, நாம் மாற துவங்கினால் எல்லாமே நன்மையாகவே நடக்கும் இவர்களைப் போல.
இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.
கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் இருவரும் பதில் சொல்ல மாட்டார்கள்., ஆனால் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள தவறவில்லை.,
அனாமிகாவை பொறுத்தவரை அவளுக்கு இந்த பிரபஞ்சம் பரிசாக கொடுத்த மிகப்பெரிய பரிசு சித்து தான்., அது போலவே சித்துவுக்கும்.,
கடவுளை வணங்குவது என்று கோயிலுக்கு சென்றாலும் பிரபஞ்சத்திடம் அவர்கள் ஆசைப்பட்டதை சொல்ல மறுப்பதில்லை., நம் எண்ணங்கள் தான் நமக்கு வாழ்க்கையாகிறது., அதை புரிந்து கொண்டால் அனைவருக்குமே பிரபஞ்சம் வாரி வழங்க தான் செய்யும்.
அந்தக் குடும்பத்திற்கே அன்பையும் பாசத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் இந்த பறந்து விரிந்த உலகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் வழங்காமல் போய்விடுமா என்ன?.
ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.
குடும்ப வாழ்க்கை என்பது அன்பு, விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அழகான அமைப்பாகும். இது வெறும் கூடி வாழுதல் அல்ல; ஒருவருக்கொருவர் துணையாக நின்று இன்ப துன்பங்களைப் பகிர்ந்து, அடுத்த தலைமுறைக்கு நல்ல பண்புகளைப் புகட்டும் புனிதமான பயணம்.
இந்தக் குடும்பத்தின் பயணம் அழகானதாக மாறட்டும் நாமும் நம் பயணத்தை அழகானதாக மாற்றிக் கொள்வோம்.