“இவர் பேரன்களுக்குன்னு தனியா சமைச்சு கொடுக்கிறது எனக்கு தெரியாதா என்ன? ஒரு நேரத்துக்கு என்னமோ ரொம்பதான். நான் இல்லாமலா அவனுங்க வந்துட்டானுங்க” என்று பொறுமியபடி உண்டான் நல்லவன்.
“சாப்பிடும் போது கோபம் வேணாம். நான் தெரியாம சொல்லிட்டேன். நீ நல்லா சாப்பிடு” என்று குருமூர்த்தி அவர் உண்ணுவதை விட்டு, அவனுக்கு வைக்க,
“ப்பா. நீங்க சாப்பிடுங்க. நான் அவருக்கு பரிமாறுறேன்” என்றாள் சம்யுக்தா.
“நீ சரியா வைக்க மாட்ட. பாரு இந்த கிரேவி எங்க வைச்சிருக்க நீ?”
‘சரிதான் எனக்கேவா? எப்படியோ போங்க!’
‘எப்படியும் நைட் என்னை தூங்க விட மாட்டார். நல்லா சாப்பிட்டு தெம்பு ஏத்திக்க வேண்டியது தான்’ சம்யுக்தா உஷராகிவிட்டாள்.
குருமூர்த்தி உண்டு முடிக்கவும், மூவரும் டேபிளை விட்டு எழுந்தார்கள்.
கிட்சன் நிலைய பார்த்து, “கற்பகம் பாட்டி காலையில வந்து பார்த்து டென்சன் ஆக போறாங்க” என்றாள் சம்யுக்தா.
“நான் கிளீன் பண்ண சொல்லிடுறேன். நீங்க தூங்க போங்க” என்ற குருமூர்த்தி, “சம்யுக்தா. அவர் கோவத்துல ஸ்வீட் சாப்பிடலை. இந்தா எடுத்துட்டு போ” என்று பவுல் நிறைய கொடுத்தார் தந்தை.
இவ்வளுவா? பெண்ணுக்கு இப்போதே தொண்டை குழி ஏறி இறங்கியது.
“ப்பா. கொஞ்சம் எடுத்துட்டு”
“எடுத்து போம்மா”
“சரிப்பா” பெண் முனகி கொண்டு சென்றாள்.
“ஏசி ரிமோட் எங்க?” என்று கேட்டபடி வந்தான் சர்வாச்சார்யா.
குருமூர்த்தி எடுத்து கொடுத்தவர், “டேய் தம்பி” என்றார்.
சர்வாச்சார்யா நிற்க, “சாதிச்சுட்ட. சந்தோசம்” என்று அவனை அணைத்து கொண்டார்.
ம்ஹ்ம். ஒரு வழியாக வாழ்த்திவிட்டார்!
அவரின் அணைப்பு எல்லா நேரமும் கிடைத்து விடுவதில்லை.
சர்வாச்சார்யா கைகள் உயர்ந்து அவரை அணைத்து கொண்டது.
அதன் பின் என்ன இருவரும் ரசகுல்லாவாக மாறி போனார்கள்.
“குட்டி இடுப்பை பெருசாக்க என்னடி பண்ணனும்? இது பெருசாகிடுச்சு. இடுப்பு தான் என்னை படுத்தது” என்று முனகினான் பேராசைக்காரன்.
“இப்போ ப்ரொபோஸ் பண்ணவா?” என்று வில்லங்கமான நேரத்தில் இமை சிமிட்டி கேட்டான் சேட்டைக்காரன்.
“மலைமாடு அடங்க மாட்டியா நீ?” சம்யுக்தாவிற்கு அவன் உதடுகளை அடைப்பதே வேலையாகி போய்விட்டது.
விடியலில் தான் இருவரும் குளித்து வர, சர்வாச்சார்யா மனைவியை தன் கை மேல் படுக்க வைத்து கொண்டான்.
கணவன், மனைவிக்குள் அமைதி!
எந்த இரைச்சலும் இல்லை. ஆர்ப்பரிக்கும் அலையும் இல்லை.
தூக்கம் இல்லாத இரவாக இருந்தாலும், முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். மலர்வு!
அகம் நிறைந்த வாழ்க்கை சிறு சிறு குறைகளை தூசியாக தட்டி செல்கிறது.
குருமூர்த்தி, சம்யுக்தாவின் கடந்த காலம் இப்போதும் சர்ச்சையை கிளப்பாமல் இல்லை.
ஆனால் அதை தங்களின் வெற்றியால் ஈடுகட்டுகிறார்கள்.
குருமூர்த்தியின் தொழில் எண்ணிக்கை கூட, சம்யுக்தாவை அவர்கள் தொழிலுக்குள் இழுத்து விடுகிறார் சிவப்பிரகாசம்.
என் மருமகளுக்கான உரிமை இது! நான் கொடுப்பேன்! என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
சம்யுக்தாவும் மாமனார் நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்கிறாள்.
சர்வாச்சார்யா உதவி அவளுக்கு நிச்சயம் இருக்கும் என்றாலும் சம்யுக்தா இயல்பிலே போராடும் குணம் கொண்டவள் தானே?
இதிலும் வெற்றி பெறுவாள் பெண்!
சர்வாச்சார்யா மனைவி பக்கம் திரும்பி படுத்தவன் அவளின் உதட்டில் முத்தம் வைத்தான்.
சம்யுக்தா பதிலுக்கு கொடுக்க, அவனும் கொடுக்க என்று முத்தம் தொடர்ந்தது.
இருவரின் கண்களும் மற்றவர் பிம்பத்தை ஆழ்ந்து உள்வாங்கி கொள்ள, வன்மையாக மாறியது முத்தம்! பின் தானே மென்மைக்கு தாவினார்கள்.
தொழிலால் அடிக்கடி பிரிந்து இருக்கும் நிலை. போதாத இரவு தான். ஆனாலும் நீட்டிக்காமல் மற்றவரை வருடி கொடுத்தார்கள்.
சம்யுக்தா கணவன் மீசையை மெலிதாக இழுத்து, அவன் மூக்கை கடித்து, கன்னத்தில் முத்தம் வைத்து, தலை முடியை இறுக்கமாக பற்றி, அவனை தன்னுடனே இறுக்கமாக பிணைத்து கொண்டாள்.
சர்வாச்சார்யா கரம் முன்பே அவளை இறுக்கமாக தான் பிணைத்திருந்தது.
இந்த விடியல் மட்டுமில்லை எல்லா விடியல்களும் அவர்களுக்கான விடியல் தான்.
கடந்த காலத்தை காதலால், அன்பால் மட்டுமே கடந்து வந்தவர்கள் இவர்கள்!
கடந்த கால துயரங்களை தூக்கி சுமக்க அதிக பலம் வேண்டும்!
இன்பமோ, துன்பமோ எதுவாக இருந்தாலும் அது கடந்து தான் விட்டது.