மது வாயைப் பிளந்தபடி பார்த்திருக்க, ஆதிஷ் மார்பில் கையைச் கட்டிய படி கதவில் சாய்ந்து சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

“ஏம்மா…… என்னம்மா இப்படிப் பாடுற… வாவ் என்ன மாதிரி வாய்ஸ் மா உனக்கு. திருப்பி ஒரு வாட்டிப் பாடேன், ரூத் நீ பாடுரத கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு“ என்று மது பேசியதைக் கேட்டு வெட்கப்பட்டு சிரித்தவள்.

“தாங்க்ஸ் க்கா…” என்றாள்.

“உண்மையாவே தான் சொல்றேன், உனக்கு டான்ஸ் விட  பாட்டு சூப்பரா… வருது டி. ப்ளீஸ், இன்னும் ஒரு வாட்டி பாடி காமியேன்?“ என்ற மதுவிடம் ஆதிஷ்.

“சீனியர்…. நானே பர்மிஷன்ல தான் வந்திருக்கேன், உங்க ஃபேன் மொமென்ட( moment ) நாளைக்கு கண்டினியூ பண்ணுங்களேன்“ என்றவனை முகம் சுளித்து பார்த்தவள்.

“நாளைக்கு கண்டிப்பா பாடிக் காமிக்கணும் ரூத்“ என்று அன்பு கட்டளையிட்டு அவர் கீழே இறங்கிச் சென்றார். செல்லும் மதுவை பார்த்த ரூத்

“அச்சோ…அக்கா நீங்க எங்க போறீங்க டான்ஸ் சொல்லி தறாம?“ என்று மது பின்னே செல்லப் போனவளைக் கைபிடித்துத் தடுத்தவன்,

“ஹே….. பொம்மை, உனக்கு என்ன பார்த்த டான்ஸ் சொல்லித் தர வந்தவன் மாதிரி தெரியலயா டி?“ என்றவனை மேலும் கீழும் பார்த்தவள்.

“உங்களப் பார்த்தா டான்ஸ் சொல்லித் தர வந்தவர் மாதிரி இல்ல, ஏதோ வேலைக்கு ஆள் எடுக்க வந்தவர் மாதிரி தான் இருக்கீங்க“

 என்று அவன் டைய் மற்றும் பார்மல் உடையைப் பார்த்து இவள் சொல்லவும், ஆதிஷ் டை மற்றும் சட்டை பட்டன், காலர் பட்டன் என்று ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டே

“அது ஒரு பெரிய மீட்டிங், அதான் இப்படிப் போக வேண்டியதா போச்சு“ என்று பட்டன்களையும் கழற்றிக் கொண்டே இருக்க, அதில் பதறிய ரூத்,

“ஹே… ஆதி என்ன பண்ற?“ என்று திடுக்கிட்டதையும், இவள் முகத்தில் தெரிந்த சிவப்பையும் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவன். அவளிடம் விளையாட எண்ணி

சட்டை பட்டனைத் கழற்றியபடி அவள் அருகே நெருங்க, “ஆதி…. என்ன பண்றீங்க? நான் வேணா, வெளிய போறேன், ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடுங்க“ என்று சொல்லி வேகமாக வெளியே சென்றவளை, முடியைப் பிடித்து இழுத்து அவன் மீது மோதி நிற்க வைக்கவும்,  ரூத் முடியை பிடித்து இழுத்த வலியில்

“ஆ…. அம்மா…” என்று கத்தியபடி அவன் மீது மோதி

“எதுக்கு ஆதி முடியைப் பிடிச்சு இழுத்த?“ என்று திரும்பி அவனிடம் சண்டைக்குப் போக போனவலின் பின்னல் அவனின் சட்டை பட்டனில் சிக்கிக்கொண்டதால் திரும்ப முடியாது.

“ஆ….“ என்று மீண்டும் வலியால் கத்தினாள். அதில் ஆதிஷ்

“ஹே… பொம்மை, அசையாத டி, நான் எடுத்து விடுறேன்“ என்று அவன் அவள் முடியை மெல்ல விடுவிக்கப் பார்க்க, ரூத் வலியில் ஒரு இடத்தில் இல்லாமல் நெழிந்த படியே இருக்க, அது அவளுக்கு மேலும் வலியைத் தந்தது.

ரூத்தின் வலியைப் பார்க்க முடியாத ஆதிஷ், “பொம்ம அசையாத சொல்றேன்ல டி” என்று கத்தியவன், அவளை அசைய விடாமல் இறுக அணைத்துக்கொண்டான்.

அதில் உடல் தூக்கிப் போட அதிர்ந்து அசையாமல் நின்றுவிட்டாள் ரூத். ரூத்தின் உடலில் கண்ட அதிர்வில்தான், ஆதிஷ் அவளை அணைத்துக்கொண்டு நிற்பது அவணுக்கு உணரவே செய்தது.

அதில் உள்ளிருந்து வெகுநாட்களாகப் பூட்டு போட்டு வைக்கப்பட்ட காதல் மற்றும் காமம் இரண்டும் வெளியே வரத் துடிக்க; அதை அடக்கத் தெரியாமல் கண்களை இறுக மூடி மூச்சை ஆழமாக உள்ளிழுத்தவன்,

“ப்ளீஸ் பொம்ம, அசஞ்சி என்ன டெம்ட் பண்ணாத டி, ப்ளீஸ் டா… அப்புறம் கண்ட்ரோல் இல்லாம போயிடும்” என்று முனகியது அவள் காதிலும் தெளிவாக விழுந்தது.

ஏற்கனவே அவன் அணைப்பில் பயந்து அசையாமல் உள்ளே ஒருவித பயத்துடன் இருந்தவள், ஆதிஷின் முனகலை கேட்டு இடி விழுந்தாலும் அசைய மாட்டேன் என்பது போல நின்றுவிட்டாள்.

இங்கு ஆதிஷ் மூச்சை இழுத்து விட்டு அவனை இயல்பாக்கியவன், மெல்ல ரூத்தைச் சுற்றியிருந்த தன் கைகளை விடுவித்து, அவளை விட்டு நகராமல்

“அசையாத டி…” என்றபடி அவளின் முடியை தன் பட்டனில் இருந்து எடுத்துவிட்டான். பின் சற்று தள்ளி நின்று ரூத்தைப் பார்க்க, அவள் இன்னும் அசையாமல் தான் நின்று கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து சிரித்தவன், “ரூத், இன்னும் எவ்வளவு நேரம் ஸ்டேச்சு போல நிக்கப் போற?” என்றவனின் சிரிப்புச் சத்தத்தில் தெளிந்தவளாக,

அவன் பக்கம் கோபமாகத் திரும்பி, “என்ன ஆதிஷ் விளையாட்டு இது? யாரைக் கேட்டு என் முடியில கை வச்சீங்க?” என்று இவள் கத்த, அவளைக் கை காட்டி அமைதியாக இருக்கச் சொன்னவன்,

அவன் சட்டைக்குள் போட்டிருந்த கையில்லா டீ-சர்ட்டைக் காட்டி, “தனியா இருக்க பொண்ணு முன்னாடி சட்டை இல்லாம நிக்குறது தப்பு ன்னு கூடவா எனக்குத் தெரியாது ரூத்?”

என்றவன், உள்ளே போட்டிருந்த சட்டையைப் பார்த்தவள், “உள்ள ஒரு ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா ஆதிஷ்? நான் ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன்!” என்று அவள் நெஞ்சில் கைவைக்க

“சட்டை இல்லாம நான் இருக்குறத நீ பார்த்தாலும் தப்பு இல்லை தான்” என்று முனகியபடி அவன் சட்டையைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்தான்.

“இப்படி டான்ஸ் பிராக்டிஸ் இருக்கும் போது எல்லாம் இப்படித்தான் உள்ள ஒரு ட்ரெஸ் போட்டுட்டு கம்பெனிக்குப் போய் எனக்குப் பழக்கம். டான்ஸ் சொல்லித் தரப் போறேன், இப்படி டையோட பரதம் ஆடினா நல்லா இருக்காதுல?”

என்று கண் அடித்துச் சிரித்தவன், அவனுடைய பேண்ட்டில் கை வைக்க, மீண்டும் பயந்து கைகளால் கண்களைப் போர்த்திக்கொண்ட ரூத்.

“அச்சோ, இப்போ என்ன பண்ணப் போறீங்க?” என்று அவள் பதறவும், அதற்கும் சிரித்த ஆதிஷ், “இப்படியே கண்ணை மூடிக்கிட்டே இரு, டான்ஸ் ஆடுற மாதிரி தான்”

என்றவனின் குரலில் மெல்லக் கண்களைத் திறந்து இவள் பார்க்க, த்ரி ஃபோர்த் அணிந்து நின்றிருந்த ஆதிஷைப் கண்களை விரித்துப் பார்த்து.

“ரெண்டு பேண்ட் போட்டுருந்தீங்களா? உங்களுக்கு உள்ள அவியல,” என்றவளை பார்த்து முறைத்தவன்

“அவியலும் இல்ல, போரியலும் இல்ல, எல்லாம் பலகிடுச்சு” என்றபடி இவன் உடைகளை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு வந்தவன்,

“ரெடியா ரூத், ஆரம்பிக்கலாமா?” என்று சொன்னவன், ரூத்தை பெண்டு நிமிர்த்திவிட்டான்.

“அய்யோ ஆதிஷ், இன்னைக்கு இது போதும், பேலன்ஸ் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று ரூத் கேட்டும் அளவு வைத்துவிட்டான்.

மது கூட இவளுக்கு முடியவில்லை என்றாள், “விடு நாளை அதை பார்த்துக்கலாம்” என்று விடுவாள்,  ஆனால் ஆதிஷ்,

ஆடியே தீற வேண்டும் என்று முழு ஆசிரியராக உருவெடுத்து நின்றவனை வியந்து தான் பார்த்தாள்.

கடைசியாக அவள் வியர்த்து விறுவிறுக்க இடுப்பை பிடித்து கொண்டு நிற்பதை பார்த்தவன்,

“போனா போகட்டும், சரி பேலன்ஸ் நாளைக்கு சீனியர் சொல்லி தருவாங்க” என்று சொன்ன அடுத்த நிமிடம், தரையில் கால் நீட்டி அமர்ந்து விட்டாள்.

அவளின் களைப்பை உணர்ந்தவனாக தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டியவன், அவள் கால் அருகே அமர்ந்து அவளின் வலித்த காலை பிடித்து விடவும்,

பதறி காலை இழுக்க போனவளின் காலை இறுக பிடித்து கொண்டு ஆதிஷ் முறைக்க, இவனிடம் இருந்து காலை இழுக்க முடியாது என்று அமைதியாகி விட்டாள்.

தண்ணீரை குடித்து முடித்து விட்டு மூச்சு வாங்க அமர்ந்து, “இதுக்கு அப்புறம் எப்போ திரும்ப நீங்க சொல்லி தர வருவீங்க ஆதி?”

“எப்போ வரணும் சொல்லு ரூத், டெய்லி நானே வரணும்னாலும் எனக்கு ஓகே தான்” என்றவன் சொன்னதை கேட்டு கைகளை கூப்பியவள்,

“அச்சோ, தேய்வமே முடிஞ்சா அளவு இந்த பக்கமே வந்துறாதிங்க, நான் மது அக்கா கிட்டயே கத்துக்கிறேன்” என்றவளை பாவமாக பார்த்தபடி அவள் பாதங்களை பிடித்து விட்டவன்.

“ரொம்ப கஷ்ட படுத்திடானா ரூத்” என்றவன் சோகமான முகத்தை பார்த்தவள்,

“நல்லா தான் சொல்லித்தரிங்க ஆதி, பட் எனக்கு தான் அந்த பாஸ்ட் வரல, சீக்கிரம் டயர்ட் ஆகிடுறேன்”

“சரி அப்போ சீனியர் கிட்டயே கத்துக்கோ எதவது டவுட் னா என் கிட்ட கேளு “ என்றவன், ருத் கேட்டுக்கொண்டபடி, அதன் பிறகு இங்கு ரூத் நடனத்தை பார்க்க வந்தாலும், அவளுக்கு சொல்லி கொடுக்காமல் பார்த்து மட்டும் செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டான்.

எல்லாம் அவள் கேட்டால் என்பதற்காக மட்டும், அவளுக்காக மட்டும், அவள் இவனை புரிந்து இவன் அவள் மீது வைத்த நேசம் அவளும் இவன் மீது வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் இத்தனை முயற்சி.

இப்போதே ரூத்திடம் இவன் காதலை சொல்லிவிட்டான் என்றாள் ரூத் இப்போது இருக்கும் நிலையில் தலையை ஆட்டி சரி என்று ஒற்று கொள்வால் தான் . ஆனால் அப்படி வரும் காதல் வெறும் உணர்ச்சியின் வேகத்தில் வந்ததாக மட்டுமே இருக்கும், அது அவனுக்கு வேண்டாம்.

இவனை போலவே, அவள் இவனை கண்டு உருகி, இவனை காணாது வருந்தி, இவனுக்காகவே அவள் என்று அவள் வர வேண்டும் என்று காத்திருக்கிறான்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றாள் ஸ்டெல்லாவை விட அவள் இவன் மீது பாசம் அதிகம் வைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். அது ஏன்? அப்படி என்ன ஸ்டெல்லா மீது இவனுக்கு கோபம்?

அனைத்தும் ஆதிஷின் சிறு வயதில் தொடங்கியது இவர்களின் கதை அன்று தொடங்கி இன்று வரை, இருவருக்கும் நடக்கும் பணி போர் முடிவுக்கு வருமா?

ஆதிஷ் நினைத்தது போல, ஸ்டெல்லாவை விட அதிகமாக இவனை நேசிப்பாளா ரூத்.