அதை பார்த்து சிரித்த மதி, அந்த சிரித்த முகத்துடனே கீழே சரிந்தான். “என் அனுமதி இல்லாம என் மூச்சு காத்தை கூட தொட முடியாது” என்ற கர்வ சிரிப்பில் கண்களை மூடியவன் காதில்,
“மதி….” என்று த்ரூவின் குரல் கேட்க கண்களைத் திறக்க முயன்று தொற்றவன் , மனதில் “சாரி டா… பிரனாவ்” என்று நினைத்துக் கொண்டானே தவிர அதை வாய் திறந்து சொல்ல முடியவில்லை.
“டேய்….. மதி… மதி… எந்திரிடா….” என்ற த்ரூவின் குரல் தெளிவாகக் காதில் கேட்டது. அதைத் தொடர்ந்து சாதிக்கின் கத்தும் குரல், அதற்குத் த்ரூவ் அவனைத் துப்பாக்கி வைத்து மிரட்டி விட்டு,
இவனைத் தோளில் சாய்த்து கூட்டிச் செல்லும் குரல் என்று அனைத்தும் கேட்டது. அனால் அதற்கு பதில் தான் சொல்ல முடியாத நிலையில் இருந்தான்.
மதியை எப்படியோ காரில் ஏற்றியவன், காரை எடுக்கப் போகும் நேரம் சரியாக போலீஸ் உள்ளே நுழைந்தனர்.
த்ரூவ் அவர்களை உள்ளே சென்று பார்க்கும்மாறு சொல்லிவிட்டு, இவன் கார்டையும் கோடுத்து விட்டு மருத்துவமனையை நோக்கி வேகமாகச் சென்றான்.
ஒரு நாளில் எத்தனை தான் கடந்து வர என்று புரியாமல் அத்தனை வேகமாகச் சென்று சேர்ந்தான்.
காரில் செல்லும் போதே மதிக்கு உடல் தூக்கி போட தொடங்க , அதில் பயந்த த்ருவ், தருணுக்கு போன் செய்து அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனைத்தையும் தயாராக வைக்கச் சொல்லியிருக்க, இவன் சென்றதும் வாசலில் ஸ்டெட்சர் தயாராக இருந்தது.
அதில் மதியை படுக்க வைத்தவன் வேகமாக அவர்களுடன் தள்ளிக்கொண்டு ஐசியூவிற்குச் சென்றான். டாக்டர் இவனை வாசலிலேயே தடுத்து விட்டு மதியை மட்டும் உள்ளே அழைத்து செல்ல , மதிக்காகப் பதட்டத்துடன் அங்கேயே நின்றான் த்ரூவ்.
ஒரு பக்க வெள்ளைச் சட்டை முழுக்க மதியின் இரத்தத்தால் நனைந்து இருக்க, அதை பார்த்து முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டான்.
ஒரு மணி நேரம் கழித்தே டாக்டர் ஒருவர் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். வந்தவர் த்ரூவ் அருகே வந்து
“சார்,…” என்ற சத்தத்தில் பதறி எழுந்தவன் “ சொல்லுங்க டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சி “
“அந்த டிரக்ஸ் நாள தான் இப்படி கை கிளிச்சிட்டு இருக்கான டாக்டர்.”
“ இல்ல சார் அந்த டிரக்ஸ் அதுக்கு காரணம் இல்ல , டிரக் டெஸ்ட் படி அது உணர்ச்சிய அதிகமா தூண்டி பயங்கரமான போதைய கொடுக்கற டிரக் மட்டும் தான் சார் அது. அதை கண்ட்ரோல் பண்ண தான் கைய கிளிச்சிருக்காரு ன்னு நினைக்குறன் சார்.”
என்றதை கேட்டு பதட்டமாக ட்ரூவ், “இப்போ அவன் எப்படி இருக்கான் டாக்டர்?”
“டூ டேஸ் ஆவது இங்க இருக்கணும் சார். டென்ஜர் எதுவும் இல்லா நாளும் அப்சர்வேஷன்ல தான் அவரு இருக்கணும். அப்புறம் இது டிராக் கேஸ் வேர, சோ போலீஸ் கிட்ட இன்பார்ம் பண்ணணும்.”
“ ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிடன் டாக்டர், இப்போ நான் அவனை பார்க்கலாமா?”
“ம்ம்ம், பார்க்கலாம் சார். ஆனா அவர் கண்ணு முழிக்க ரெண்டு மணி நேரமாவது ஆகும் சார்,” என்று அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
டாக்டர் சென்றதும் சோர்வாக சேரில் த்ரூவ் அமர்ந்து விட, அங்கு வந்த தருண்,
“சார்….” என்று அதிர்ந்து , அவனின் கோலத்தை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“சார் என்ன ஆச்சு உங்களுக்கு? உங்களுக்கா அடிபட்டுருக்கு?” என்ற தருனை திரும்பி பார்த்தவன்,
“ஐ அம் ஃபைன் தருண், உள்ள மதி இருக்கான். நீ கொஞ்சம் நான் வர வரை அவனை இங்க இருந்து பார்த்துக்கோ. டாக்டர் எது சொன்னாலும் உடனே எனக்கு கால் பண்ணு,”
என்று சொன்னவன் நேராக கமிஷனர் ஆபீஸிற்கு சென்று அங்கு நடந்தவை அனைத்தையும் புகாராகக் கொடுத்தவன்.
பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான். அங்கு போலீஸ் உள்ளே கிடைத்த போதை பொருட்கள் மற்றும் அனைத்து சட்டவிரோதமான பொருட்களையும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு இப்போது சாதிக்கை மட்டும் கைது செய்திருந்தனர்.
வினோவை இப்போதைக்கு தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். வினோவும் கிடைத்து விட்டான் என்றாள் கண்டிப்பாக இருவருக்கும் பரோல் இல்லாத ஆயுள் கால சிறை தான் என்று அவர்கள் கொடுத்த உறுதியை நம்பி வீட்டுக்கு சென்றான்.
அங்கே சென்று வேறு உடை அணிந்தவன் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான். காலை ஓட ஆரம்பித்தது, இரவு ஆகியும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றான்.
மருத்துவமனை முன் காரை நிறுத்திவிட்டு உள்ளே மதி இருந்த அறைக்கு சோர்வாக நடந்து சென்றான். அங்கு அவனை அணுமதித்திருந்த அந்த ஹால் முழுக்க ஆட்களால் நிறைந்து இருந்தது. அதை பார்த்து ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவன்,
சுற்றி அவன் வந்திருக்கும் அறை சரிதானா என்று ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்துவிட்டு, திரும்ப அங்கே ஒரு மூளையில் கன்னத்தில் கை வைத்தபடி ஒருவர் அருகே பாவமாக தருண் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்துவிட்டு அவனை நோக்கி சென்ற த்ரூவ், “தருண்….” என்று அழைக்க, அவன் சத்தம் கேட்டு முகம் பிரகாசிக்க தருண்,
“சார் கடைசியா வந்துட்டீங்களா சார்?” என்று மகிழ்ச்சியாக அவன் அருகே சென்று நின்றவனை, கேள்வியாக பார்த்த த்ரூவ்,
“தருண் இது ஐசியு தான? ஏன் இங்க இவ்ளோ கூட்டம்?” என்று அனைவரையும் சுற்றி பார்த்து கேட்க, அதற்கு தருண் பதில் சொல்லும் முன்
“ஹலோ, நாங்க கூட்டம் இல்ல, மதி ரிலேஷன்ஸ்,”
என்று கேட்ட சத்தத்தில் த்ரூவ் திரும்பி பார்க்க, அங்கே மதி முக ஜாடையுடன் ஒரு வாலிபன் மதியை போலவே கடினமான தோற்றத்தில் நிற்பதை பார்த்து,
“நீங்க…” என்று இவன் இழுக்க, “நான் சந்திரா மதியோட தம்பி,” என்றவனை யோசனையாக பார்த்து சுற்றி இருந்தவர்களை பார்க்க, அனைவரும் இவனை தான் குறு குறுவென பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு தருணை பார்க்க, தருண் பாவமாக, “எப்படி என்ன கொத்து விட்டுட்டு போய்றுகீங்களே சார்,” என்பது போல பார்த்தவனை பார்த்து,
“நான் யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணலையே அப்பறம் எப்படி உங்களுக்கு தெரியும்.”
“நன்பன் மேல இருந்தா பண்ணிருப்பீங்க நீங்களாம் என்ன பிரண்டோ!” என்றவனை நன்றாகப் பார்த்து த்ரூவ் முறைத்து
“உன் அண்ணா ஒரு நாளும் உங்க நம்பரயோ இல்ல உங்களைப் பத்தியோ எதுவும் பேசினது இல்லை.”
“எங்கள அவன் குடும்பமா நினச்சி இருந்தா தான, எங்களைப் பத்தி உன் கிட்ட சொல்லுவான் தம்பி?” என்ற சத்தத்தில் த்ரூவ் திரும்பிப் பார்க்க, அங்கே மஞ்சள் பூசிய முகத்தில் பெரிய சிவப்பு பொட்டுடன் புடவையை இழுத்துச் சொறுவியபடி வந்த மதியின் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தவன்
“வாங்கம்மா, எப்படி இருக்கீங்க?” என்று மரியாதையாக அருகே செல்ல,
“எங்களத் தெரியல, எங்க பெரியம்மா மட்டும் தெரியுதே?” என்று முனகிய சந்திராவைப் பார்த்து அவர் முறைத்து,
“இந்த புள்ளைய நான் காலேஜ்ல நேர்ல அவன் கூட பார்த்தது புள்ள அதை வச்சு நியபகமா பேசுது ,” என்றவர் அவன் கையைப் பிடித்து அங்கே அமர வைக்க, அங்கிருந்த அனைவரும் அவர்களை சுற்றி நின்று கொண்டார்கள்.
அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு மதியின் அம்மாவைப் பார்க்கவும் அவர்,
“எல்லாம் நம்ம குடும்பம் தான் தம்பி, நீ பயப்படாம என்னன்னு சொல்லு தம்பி. இந்த டாக்டர் சொல்றது ஒன்னும் புரியல, படிக்காதவங்களுக்குப் புரியாதப்ப பேசவே தெரியாது போல,”
“ஆமா தம்பி மதிக்கு என்ன அச்சி? தம்பிக்குக் கையில எப்படி அடிபட்டதுன்னு சொல்லு தம்பி. நீ விட்டுப் போன இவன் கிட்ட கேட்டா ஒன்னும் தெரியாதுன்னு சாதிக்கிறான்,”
என்று அவர் அவரின் நரைத்த மீசையை முறுக்குவதைப் பார்த்து தருண் பயந்து த்ரூவ் பின்னே பதுங்க, த்ரூவ்,
“அதுவா தம்பி, நம்ம சின்ன பாப்பா இங்கதான் டாக்டரா இருக்கா. அவதான் கால் பண்ணா, இங்க வந்த பிள்ளைக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டுப் போனா, அதான் எங்களுக்கு ஒன்னும் தெரியல,” என்று இன்னொருவர் கதை சொல்லச் சுற்றி ஒரு முறை பார்த்தவன் மனதில்,
“இத்தனை பேரையும் இங்க எப்படி விட்டாங்க?” என்று எண்ணியபடி சொல்லத் தொடங்கினான். போதைப்பொருளைப் பற்றிச் சொல்லாமல் தூக்க மாத்திரை என்று மாற்றிச் சொல்லியவன், எங்கு இவர்கள் போதை என்றாள் பயந்து விடுவார்களோ என்று எண்ணியே இப்படி சொல்லியிருந்தான்.
அதை கேட்டு அனைவரும் வினோவை வெட்டுவேன் குத்துவேன் என்று கிளம்பி விட, அதில் தருண் பயந்து த்ரூவ் அருகே ஒன்றிணைந்து கொண்டான்.
பின் அனைவரிடமும் பேசி விட்டு இவனும் வீடு திரும்பி விட்டான். அதன் பின் மதி முழித்து விட்டதை டாக்டருக்கு போன் செய்து கேட்டுக்கொண்டவன், மதியை பார்க்க செல்லவில்லை.
மதியை அவன் அம்மா மதுரைகே கூட்டி கொண்டு சென்று விட்டதாக கேள்விப்பட்டவன். அதோடு அவனை மறந்தவனாக வினோவை தேடும் பணியில் இறங்கியிருந்தான்.
இதில் ஸ்டெல்லாவை மறந்து வினோவை சுற்றித் திரிந்தவன், அதன் பின் அவளை மூன்று மாதத்திற்கு பிறகே, அவள் ஆதிஷை அடிக்கும் போது தான் பார்த்தான்.