அதனால் “எங்க பொண்ணு சொல்றதும் சரி தான். இப்ப தான் உங்க பையன் எங்க பொண்ணைப் பாத்துருக்கார். அதனால உடனே சம்மதம் சொல்லணும்னு இல்லையே. நீங்க வீட்ல போய் யோசிச்சிட்டு எங்களுக்கு முடிவு சொல்லுங்க”, என்றார் குல்கர்னி.
“சரிங்க சமபந்தி. நாங்க வீட்டுக்கு போன அப்புறம் என்னனு சொல்றேன். ஆனா வீணா எங்க வீட்டு மருமக. அது என்னைக்கும் மாறாது”, என்று சொல்லி தீனா எழுந்து கொள்ள மற்றவர்களும் எழுந்து கொண்டார்கள்.
எல்லாருடைய முகமும் ஒரு மாதிரி களை இழந்தது போல மாற சத்யாவுக்கே ஒரு மாதிரி இருந்தது. சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையில் இருந்த உணர்வு என்னவென்று அவனுக்கு தெரிய வில்லை.
முதல் ஆளாக அவன் வெளியே வந்து விட்டான். மற்றவர்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு காருக்கு வந்தார்கள். கார் கிளம்பிய பிறகு அங்கே மௌனமே ஆட்சி செய்தது. ஊரை விட்டு தான்டி பை பாஸ் வந்ததும் “சத்யா காரை நிறுத்து”, என்றார் தீனா.
“இங்க எதுக்கு பா? வீட்டுக்கு போகலாம். எனக்கு வேலை இருக்கு”
“இப்ப நாம ஒண்ணும் ஊர் சுத்தப் போகலை. கொஞ்சம் உன் கிட்ட பேசணும், நிறுத்து”, என்று சொல்ல சரி என்று சொல்லி நிறுத்தி விட்டான்.
“அந்த பொண்ணு கிட்ட என்ன சொன்ன?”, என்று நேரடியாகவே கேட்டார்.
“அது.. அது வந்து..”, என்று அவன் திணற “எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும் சத்யா. சொல்லு அவ கிட்ட என்ன சொன்ன?”, என்றார் மீண்டும்.
“எனக்கு இந்த பொண்ணு பிடிக்கலை. அதை தான் அவ கிட்டயும் சொன்னேன்”
“ஏன்? எதுக்கு? அந்த பொண்ணு அவ்வளவு அமைதியா இருந்தா. எதுக்கு பிடிக்கலைன்னு சொல்ற?”
“அவளா அமைதி? திமிர் பிடிச்சவ”, என்று சொன்னதும் “சத்யா”, என்று அரட்டினாள் சத்யபாமா.
“இப்ப முடிவா என்ன தான் சொல்ற சத்யா. உன் வாழ்க்கையை நீயே பாத்துக்குறேன்னு சொல்லுறியா? எதுனாலும் ஓப்பனா சொல்லிரு. இனி உன் விஷயத்துல தலையிடாம இருப்போம்ல? நீ எங்க மகன்னு நாங்க உரிமையா பொண்ணு பாத்து இன்னும் வேற இடத்துலயும் எங்க மூக்கு உடைய கூடாதுல்ல?”, என்று தீனா சொல்ல அவர் பேச்சு கஷ்டமாக இருந்தாலும் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.
“இனிமே உன் வாழ்க்கையை நீயே பாத்துக்கோ சத்யா. நாங்க இனி உன்னை எதுவும் கேக்க மாட்டோம். ஆனா ஒரு அப்பாவா நான் சில முடிவுகளை எடுத்து தான் ஆகணும். நாளைல இருந்து ஆபீஸ் வறதுனா வா. இல்லைன்னா நான் வேற ஏற்பாடு பண்ணனும்?”, என்றார்.
“என்னங்க என்ன ஆச்சு?”, என்றாள் சத்யபாமா.
“தரகர் கிட்ட சொல்லி ஸ்ரீக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்கச் சொல்லணும். அவளுக்கு வரப் போற புருஷனுக்கு தான் இந்த கம்பெனியைக் கொடுக்கணும். என்னால இனி இதை பாக்க முடியாது”, என்றார். ஸ்ரீக்கும் திக்கென்று தான் இருந்தது.
“அப்பா, என்ன விளையாடுறீங்களா? இந்த கம்பெனியை அவளுக்கு கொடுக்குறது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா அவளுக்கு இப்பவே கல்யாணம் பண்ணனுமா? அவ இன்னும் படிச்சு கூட முடிக்கலை. அவளுக்கு கல்யாணம்னு என்னை பிளாக் மெயில் பண்ணுறீங்களா?”, என்றான் எரிச்சலாக.
“உன்னை பிளாக்மெயில் பண்ண எனக்கு என்ன அவசியம்? எனக்கு என்ன தோணுதோ அதை தான் சொன்னேன். என் பொண்ணு நான் சொன்னா கேப்பா. அவ விஷயத்துல நீ தலையிடக் கூடாது. தனியா வீடு பாக்கணும்னா கூட பாத்து போயிரு”
“என்னங்க என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?”, என்று கேட்டாள் பாமா.
“நான் என் பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப் பட்டேன் பாமா. அதைக் கூட தப்புன்னு சொல்லுவியா? சரி இனி சொல்லலை. இனி யாரோட விஷயத்துலயும் தலையிட மாட்டேன். நிம்மதியா இருங்க. எனக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும்னு தோணுது. என் பிரண்ட் சோமு என்னை காசிக்கு கூப்பிட்டுட்டு இருக்கான். நான் இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறேன்”, என்றார் விரக்தியாக.
“அப்பா”, என்று அவர் கையைப் பற்றிக் கொண்டாள் ஸ்ரீ. “எப்பாடி பாத்தாலும் பாத்தேன் இப்படி ஒரு அழுகாச்சி சீனை படத்துல கூட பாத்தது இல்லை. இப்ப எதுக்கு காசி ராமேஷ்வரம்ன்னு சந்நியாசம் போகணும்? இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானே பொண்டாட்டி புருஷன் ரெண்டு பேரையும் ஆன்மீகச் சுற்றுலா அனுப்பி வைக்கேன். இப்ப என்ன நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அதானே? எனக்கு சம்மதம் போதுமா? அதுவும் நீங்க பாத்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்”, என்றான்.
“பரவால்ல உடனே சரின்னு சொல்லிட்ட? நான் கூட காசில போய் சாப்பாட்டுக்கு என்ன செய்யன்னு கவலைப் பட்டேன். சீக்கிரம் சம்மதிச்சிட்ட?”, என்று சிரித்தவர் ஸ்ரீ தலையில் வேறு முத்தம் கொடுக்க அவரை கடுப்புடன் பார்த்தான் சத்யா.
“நான் உண்மையிலே பயந்துட்டேன் மாமா”, என்றாள் பாமா.
“நானும் உன்னை பிரிஞ்சு இருக்கணும்னு பயந்துட்டேன் லட்டு மா”, என்றவர் மனைவியின் கன்னத்தை வருட “உங்க ரொமான்சை கொஞ்சம் நிறுத்துறீங்களா? பாக்க சகிக்கலை”, என்றான் சத்யா.
“உனக்கு பொறாமை, நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுவ. அப்ப நாங்களும் இப்படி சொல்லுவோம். அப்படி தானே பா?”, என்று கேட்டாள் ஸ்ரீ.
“ஆமா டா ஸ்ரீ குட்டி. அப்ப இவனை வச்சு செஞ்சிறலாம்”, என்றார் தீனா.
இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு காரை கிளப்பியவன் வீணாவை நினைத்துப் பார்த்தான். “அவ கூட ரொமான்ஸ் பண்ணிட்டாலும்”, என்று எண்ணிக் கொண்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
தன்னுடைய போனை எடுத்த தீனா குல்கர்னியை அழைத்தார். அந்த பக்கம் எடுத்ததும் “சம்பந்தி எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம். உங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம்னா நிச்சயத்துக்கு நாள் பாத்துறலாம்”, என்றார் தீனா.
“எங்களுக்கு சந்தோஷம் தான். நீங்க வாங்க. நாம நம்ம வீட்ல வச்சே எல்லாம் பேசி முடிவு பண்ணிறலாம்”, என்று சொல்லி போனை வைத்தார் தீனா. கையில் இருந்த போனைப் பார்த்த குல்கர்னி ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
“யாருங்க போன்ல? ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள் அம்சவேணி.
“மாப்பிள்ளை வீட்ல இருந்து கால் பண்ணினாங்க. கல்யாணத்துல சம்மதமாம். நாளைக்கு அவங்க வீட்டுக்கு நம்மளை எல்லாம் வரச் சொன்னாங்க”, என்று அவர் சொன்னதும் அம்சவேணி முகம் மலர்ந்தது.