அனல் – 23

சிந்துவை பார்த்த த்ரூவ், “அக்காவோட இடத்துல இங்க நீ வேலைக்கு வந்திருக்க அன்னைக்கு நைட்டும் உன் அக்கா மாதிரி என் கிட்ட நடிச்சிருக்க, அப்போ அன்னைக்கு கடத்த வந்தவங்களாம் எல்லாம் செட்டப் தான், ரைட்?”

என்று அனைத்து உண்மையும் சரியாகச் சொன்னவனை நிமிர்ந்து திமிர் பார்வை பார்த்தவள்.

“எஸ், எனக்கு இந்த ஆபிஸ்ல ஜாயின் பண்ணணும், அதான் பண்ண.”  என்று இவள் தோள்களை உலுக்க

“யார் சொல்லி இத்தன பண்ண சிந்து?”

“யார் சொல்லியும் இல்ல, நல்ல பே இங்க கிடைக்கும்னு சொன்னாங்க, அதான் இப்படி பண்ண.”

“சரி, வேலைக்காகனா டேட்டா ஸ ஏன் லீக் பண்ண?”

“அது தெரியாம கை பட்டு லீக் ஆகிடுச்சு,” என்று உதடு பிதிக்கி வாய் கூசாமல் பொய் சொன்னவளை சலனம் இல்லாமல் பார்த்தவன்.

“ஓ… கை பட்டு லீக் ஆயிடுச்சா?” என்று அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்தவன்,

“வேற ஏதாவது சொல்லணுமா சிந்து?” என்றான்.  அவன் பேச்சில் இருந்த அழுத்தத்தில் திக் என்று இருந்தாலும்,

“எதுவும் ஆகாது, நான் பார்த்துக்கிறேன்” என்று வாக்கு கொடுத்தவனை நினைத்து உறுதியாகவே நின்றாள்.

“தப்பு பண்ணிட்டு என்ன அலுத்தமா நிக்கிறா பாரு,” என்று தருணுக்கு கோபம் தான் வந்தது. பாவம், இரண்டு பிள்ளைகளை வைத்து இந்த வயதில் கஷ்டப்படுகிறாளே என்று அனைத்தையும் நிறுத்தி நிதானமாக, எளிமையாகச் சொல்லி எடுத்துச் சொன்னது அனைத்தும் வீண் போலத் தோன்ற, அவன் மீதே கோபம் வந்தது.

இப்படி ஒருத்தியிடம் எமாந்து அனைத்து ரூம்களுக்கும் இந்த குறுகிய நாட்களில் அனுமதி கோடுத்ததை நினைத்து மிகவும் வருந்தினான் .

சிந்துவின் உறுதியைக் கண்டு புருவம் உயர்த்தியவன், பின் அவளை அழைத்து வந்தவனிடம் தலையசைக்கவும், அவன் வெளியே சென்று அவளை அழைத்து வந்தான்.

சீதா என்ற பெயருக்கு உரியவள் சிந்துவின் அக்கா. அவளை அழைத்து வரக் கண்டு அதிர்ந்து போன சிந்து, “அக்கா…..” என்று அவளிடம் செல்ல முயல, அவளை விடாமல் இருவர் பிடித்து நிறுத்தினர்.

“என்ன விடுங்க, அக்கா… அக்கா… நீ எப்படி அக்கா… இங்க?” என்பதற்குப் பாவமாகத் தன் தங்கையை அவள் பார்த்து, எதுவும் பேசாமல் மௌனமாக நின்று விட்டாள்.

இங்கு இவர்களைப் பார்த்திருந்த தருண், ஐந்து வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கும் புதிர் போலத்தான் இருவரையும் பார்த்து வைத்தான்.

 “என்ன ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்காங்க, ட்வின்ஸா? ஆனா சீதா வயசு அதிகம் இருக்கும் போலயே,” என்று தான் பார்த்தான்.

என்னதான் முகம் ஒரே போல இருந்தாலும், சீதா மிகவும் ஒல்லியாகவும், முகத்தில் ரத்த பசையின்றி நாற்பது வயதுக்கு மேலாகும் பெண் போலவும் தான் காட்சியளித்தாள்.

“யார கேட்டு என் அக்காவ கூட்டிட்டு வந்தீங்க? அவ பேருல நான் தான் ஃபோர்ஜரி பண்ணேன், அவள ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்று எகிறுவளைக் கண்டு கொள்ளாதவன்.

“சொல்லுங்க சீதா, டேட்டா எப்படி லீக் ஆச்சு?” என்ற த்ரூவை அதிர்ச்சியுடன் பார்த்த சிந்து.

“சார்…… டேட்டா லீக் பண்ணது நான்! அவ இல்ல!”

“நான் என் கம்பெனில வேலைக்கு வச்சது சீதாவ தான, அப்போ அவ கிட்ட தான கேட்க முடியும்.”

என்பதை கேட்டு அதிர்ந்த சிந்து, “சார், அவ பேர்ல நான் தான் வந்தேன், இதுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்ல சார்!”

“அது எனக்கு தெரிஞ்சாலும்…. நான் போலீஸ் கிட்ட இத தான சொல்லுவேன்!,” என்றவனை முகம் சிவக்கப் பார்த்தவள்.

“உனக்கு மனசாட்சியே இல்லையா? தப்பே பண்ணாத என் அக்காவ ஜெயிலுக்கு அனுப்பணும்னு சொல்ற?”

“அதையே தான் நானும் கேட்கிறேன், எவனோ பண்ண தப்புக்கு, தப்பே பண்ணாத நீங்க ரெண்டு பேரும் ஏன் தண்டனை அனுபவிக்கனும் சிந்து….?”

என்று அவளை அழுத்தமாகப் பார்க்கவும், கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தேம்பித் தேம்பி அழுதவளைச் சலனம் இன்றி தான் பார்த்தான் த்ரூவ்.

சிந்துவின் அழுகையைத் தாங்காது, அவள் அருகே வந்த அவளது அக்கா சீதா அவளை அணைத்துக்கொண்டு, அவள் முதுகை நீவி தடவிய படி தழுவிக்கொண்டாள்.

“போதும்டா… எனக்காக நீ இவ்ளோ பண்ணதே போதும்டா… சொல்லிடுடா, இதுக்கு மேல எதுவும் வேணாம் டா நமக்கு” என்ற அக்காவை இறுக அணைத்து வாய் விட்டு அழுதவள்.

“நான்…. உண்மைய சொல்லிட்டா எங்க அக்காவ விட்டுடுங்க, அவ பாவம், அவளுக்கே உடம்பு சரியில்ல” என்று த்ரூவை பார்க்க, அவனும் சம்மதத்துடன் தலையசைக்கவும், பேசத் தொடங்கினாள் சிந்து.

“நான் வினோ சார் கம்பெனில தான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போ எனக்கு கொஞ்சம் பணம் தேவை பட்டது, சோ என்னோட பி.எஃப்-ல இருந்து பணம் எடுக்க ரெக்வஸ்ட் அனுப்பியிருந்த.”

அதுக்கு வினோ சாரே நேர்ல என்ன கூப்பிட்டு போனாரு, என்ன பத்தி எல்லாம் கேட்டாரு. நான் அக்கா கூட இருக்குறது, அக்கா டைவர்ஸ் வாங்குனதுன்னு எல்லாம் கேட்டுட்டு, என் கிட்ட “

என்று இவள் தயங்கி நிற்க, த்ரூவ் அடுத்து என்ன சொல்லு என்பது போல அவளைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“அவர் தான் மதி சார் கிட்ட கூட்டிட்டு போனாரு. அவர் தான் என்னை உங்க கம்பெனில வேலைக்கு சேர பிளான் போட்டும் தந்தாரு.”

“உன்ன சேர சொன்னாரே…? இல்ல உங்க அக்காவையா?” என்று த்ரூவிற்குத் தலை குனிந்தபடி,

“அக்காவ தான் சேர சொன்னாங்க. நீங்க பேக்ரவுண்ட் செக் பண்ணுவீங்க ன்னு, அக்கா ன்னா இறக்கப் பட்டு சேஃபான்னு சொன்னாங்க.”

“அப்பறம் எப்படி உன்ன அந்த பிளான்ல சேர்த்துக்கிட்டான்?”

“அது வந்து அக்காக்கு உடம்பு சரியில்ல சார், அதான் நானே பண்றேன்னு சொன்னா, நானும் அவளும் ஓரே மாதிரி தான இருக்கோம் சோ… பேரு மாத்தி ஜாயின் பண்ணலாம்னு ப்ளேன் போட்டோம்…“

“ஓ…. ஓகே…..சரி, உங்க அக்காக்கு என்ன பிரச்சனை?”

“அது… அது… அக்காக்கு கிட்னி ஃபெயிலியர், சோ புது கிட்னி வைக்கணும்.”

“சோ… உனக்கு காசு அதுக்கு தான் தேவை பட்டிருக்கு. உன்னோட கூட பிறக்காத பெரியம்மா பொண்ணுக்காக ரிஸ்க் எடுக்க ரெடியான?”

“என்னது பெரியம்மா பொண்ணா..” என்று தருண் அதிர, தலையை நிமிர்ந்து த்ரூவை பார்த்த சிந்து.

“கூடப் பிறந்தா தான் அக்கான்னு இல்ல, எனக்கு பாசம் காட்டி என்ன கூடவே வச்சிருக்க இவ தான் எனக்கு அக்கா” என்றவளை நிமிர்ந்து பார்த்த த்ரூவ்.

“அதுக்காக என்ன வேணா பண்ணலாம்னு முடிவு பண்ணிட…” என்றதும் அவள் மீண்டும் தலைகுனிந்து கொண்டாள். அதில் பெருமூச்சு ஒன்று விட்டவன்,

“இப்போ மதி எங்கன்னு உனக்கு தெரியுமா? அவன் கிட்ட தான் ஒரிஜினல் காப்பி இருக்குதா?”

“ம்ம்ம் சார், அவங்க கிட்ட தான் போய் கோடுத்துட்டு வந்தேன். அவங்க தான் அக்கா ட்ரீட்மென்ட் சேஃப்டிக்கு லாம் நான் பாத்துக்குறேன்னு சொன்னாங்க” என்று சிந்து சொன்னதை கேட்டு எழுந்தவன்,

“அவன் சொன்ன மாதிரி நீ பயப்படாத, உங்க அக்காக்கு ட்ரீட்மென்ட் நல்லபடியா நடக்கும், அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு” என்று சொன்னவன் காலிலே அப்படியே விழுந்து விட்டாள் சிந்து

“மன்னிச்சிருங்க சார், உண்மையா எனக்கு அப்போ வேற வலி தெரியல சார்” என்று அழுதவளை கண்களை மூடி திறந்து பார்த்தவன்.

சீதாவிடம் தலையசைத்து அவளைத் தூக்கச் சொல்ல, அவளும் அவளைத் தூக்கி நிற்க வைத்தால்,

“என்ன ஜெயிலுக்கு கூட அனுப்புங்க சார், ஆனா அக்காவ மட்டும் பத்திரமா பாத்துக்கோங்க சார், அவ பாவம்” என்ற சிந்துவை கண்ணீர் வழிய பார்த்த சீதா.

“நான் இங்க வந்தா தங்கச்சிய விட்டுறேன்னு சொன்னிங்களே சார். அவளுக்கு பதிலா அவ பண்ண தப்புக்கு நான் போறேன் சார், அவள விட்டுடுங்க சார், வாழ வேண்டிய புள்ள!”

என்று சீதாவை மறுப்பாகத் தலையாட்டி பார்த்த சிந்து, “இப்படி பேசாத சீதா… நீ போயிட்டா பசங்கல யார் டி பாத்துப்பா?”

என்று அழுதவளைப் பார்த்த த்ரூவ், “தருண், இவங்கள நீ பாத்துக்கோ. கம்பலெயின்ட் எதுவும் வேண்டாம், நம்ம ஹாஸ்பிட்டல்ல சேத்து ட்ரஸ்ட் மூலமா அப்பரேஷன் பண்ண சொல்லு”

 என்று எழுந்தவன் சிந்திவிடம் சென்று “மதி எங்க…” என்று கேட்டு நின்றவனுக்கு, அவள் இருக்கும் இடத்தைச் சொல்லியவள்

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்று கைகூப்பியவளைத் திரும்பி கூடப் பார்க்காமல்,

“உனக்கு உதவின்னு என் ட்ரஸ்ட்க்கு வந்திருந்தினா, நானே இதெல்லாம் பண்ணி கொடுத்துருப்பேன். ஏன் இங்க ஜாயின் பண்ண பிறகு கூட என்கிட்ட சொல்லிருக்கலாமே நீ!

இந்த கம்பெனி அண்ட ட்ரஸ்ட் இது ரெண்டையும் நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? உன்ன மாதிரி இல்ல, உன்ன விட மோசமான நிலையில இருக்க பெண்கள் எல்லாம் அந்த ட்ரஸ்ட நம்பி தான் இருக்காங்க.

இத்தனை பேரோட பொறுப்பு என் கிட்ட தான் இருக்கு, அதை ஒரே நாள்ல கீழ தள்ளி விட பாத்திருக்க.  உனக்கு புரியுதா?, உன் அக்காக்காகப் பாத்திருக்க, ஆனா அதுக்கு நீ கொடுக்கத் தயாரா இருந்தது எத்தனையோ பேரோட வாழ்க்கை.

ஏன், படிச்ச பொண்ணு தான நீ, சுயமா யோசிக்க மாட்டியா? அக்கான்னா எந்த எல்லைக்கு வேணா போவியா?”

என்று அவளை ஒரு பார்வை பார்த்தவன், தருணிடம் அவர்களை அனுப்பும் மாறு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

அலுவலகம் விட்டு வெளியே வந்தவன், காரை எடுத்துக்கொண்டு மிகக் கோபமாக மதியைத் தேடித் தனியாகச் சென்றான்.

மதி இருப்பதாகச் சொன்ன இடம் வினோவின் கடற்கரை மாளிகை; அது தான் வினோ எப்போதும் பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் இடம்.

இப்போது மதியும் அங்கே தான் இருக்கிறான் என்றான் என்று அவன் யோசிக்கும் போதே, த்ரூவின் முகம் சிவந்து கோபமாக மாற, அத்தனை வேகமாகச் சென்றான்.

நேரில் மதியைப்பார்த்து அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கோபத்தில் செல்பவனுக்கு, அங்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியவில்லை.

அந்த கடற்கரை மாளிகை முன் ஹாரனை அழித்துக்கொண்டே நின்றவனை நோக்கி, வீட்டின் வாட்ச்மேன் ஓடி வந்து

“சார் சொல்லுங்க, நீங்க யாரு? யாரைப் பார்க்கணும்?” என்றவரை பார்க்க கூட செய்யாது ஹாரனை அடித்த படி

“போய் கேட்டைத் திறக்கிறியா இல்ல உடைக்கவா?” என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவனின் தொவொனியில் பம்மிய வாட்ச்மேன்

“சார்….” என்று அவன் இழுத்து தயங்கி நின்றதைக் கண்டு, இவன் தயங்காமல் காரை நன்றாகப் பின்னே எடுத்துச் சென்றவன், வேகமாக கேட்டை நோக்கி ஓட்ட, அதை பார்த்து பயந்தவன், பட்டனை அமுக்கி வேகமாக கேட்டைத் திறந்தான்.

கார் சீறிக்கொண்டு வாசலில் நின்றது. கார் நின்ற வேகத்தில் காரை விட்டு இறங்கியவன், கையில் இருந்த பிஸ்டலை லோட் செய்தபடி உள்ளே சென்றான்.

அதைப்பார்த்து பயந்த அந்த வாட்ச்மேன் உள்ளே போன் போட, அதை அங்கே எடுக்கும் அளவுதான் யாருக்கும் சுயநினைவு இல்லாமல் போனது.

உள்ளே நுழைந்த த்ரூவ் கண்டது, ஹாலில் இரு பெண்களுடன் இருந்த சாதிக்கை தான், அவனை பார்த்து முகம் சுளித்தவன்.

அதை பார்க்காது திரும்பி நின்றவன், வாயில் வந்த நல்ல வார்த்தையைச் சொல்லித் திட்டியப்படி அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்.

வெளியில் வெயில் பல்லைக்காட்டித் அடிக்க, உள்ளே துளி வெளிச்சமும் இன்றி இருளாகவே இருந்தது. அதில் எது படி எது ரூம் என்று வித்தியாசம் தெரியாமல் போக, அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸைக் கண்டு பிடித்துப் அதை போட்டான் த்ரூவ்.

வீட்டில் இருந்த அனைத்து லைட்டையும் போட்டுச் சுற்றிப் பார்த்தான்; ஆங்காங்கே இருந்த பாட்டில்களையும் சில, சொல்ல முடியாத போருட்களைப் பார்த்து முகத்தைச் சுளித்தான்.

“ஹே…. லைட் ஆஃப் பண்ணுடா… “ என்று உருண்டு கொண்டிருந்தவனைக் கண்டுக் கொள்ளாது தயங்காமல் உள்ளே நகர்ந்தான்.

உள்ளே ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்த்தபடி மதியைத் தேடியவன், அந்த அறைகளில் இருந்த பொருட்களை எல்லாம் பார்த்து அதிர்ந்து தான் போனான்

“மதி…..” என்று பல்லை கடித்தவன், போலீஸ்க்கு அழைத்து அங்கு நடப்பவை அனைத்தையும் சொல்லிவிட்டான்.

“ரொம்ப கை மீறிப் போயிட்டடா நீ!” என்றவன், அடுத்தடுத்த அறைகளையும் திறந்து பார்க்கப் பார்க்க, அங்கிருந்த அனைத்தையும் பார்த்துத் தலையில் கை வைத்து நின்றுவிட்டான்.

அப்போது திடீரென்று கேட்ட ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் திடுக்கிட்டுப் பார்த்தவன், அந்தச் சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினான்.

அந்தச் சத்தம் வந்த அறையில் இருந்து ஒரு பெண் அரை நிர்வாண நிலையில் பயந்து, இவனைக்கூடப் பார்க்காமல் ஓட, அந்தப் பெண் வந்த அறையை நோக்கிச் சென்றான்.

அறை கதவு பாதி சாத்திய நிலையில் இருக்க, உள்ளே முனகலாக மதியின் குரல் கேட்கவும், வேகமாகச் சென்று கதவைத் திறந்தான்.

கதவைத் திறந்தவன், உள்ளே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் நடுங்கித் போய்விட்டான்.

தரைமுழுக்க ரத்தம் சூழ, அதன் நடுவில் இரண்டு கையிலும் ரத்தம் வழிய ஏதோ முனகியபடி இருந்தான் மதி.