அந்த நாளின் சிறப்பாக எல்லாம் முடிந்து அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தனர்.

   திருமணத்திற்கு வந்தவர்கள் போக., அருகில் உள்ள வராத வயதானவர்கள் வந்து பார்த்து சென்றனர்.

    அனைவரும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து திருநீர் வைத்தே சென்றனர்.

      பின்பு அன்றைய இரவிற்காக அவளை தயார் செய்ய சொல்ல.,

     சரிகாவோ “அண்ணி” என்று வந்து நின்றாள்.

    “ஒன்னும் வேண்டாம் போயிருங்க”, என்று சொல்லவும்.

    அவளோ “என்ன பண்ண போறீங்க”,என்றாள்.

        “குளித்து டிரஸ் மாற்ற சொன்னாங்களே”, என்று சரிகா சொல்ல.,

    “மாடியில் அந்த ரூம் நீட்டா இருக்கா”, என்று கேட்டாள்.

    சித்தர்த்தனின் அம்மா தான்., “ஆமாமா ரெண்டு நாளைக்கு முன்னாடியே கிளீன் பண்ணி வச்சிட்டேன்,  நீ எல்லாம் வச்சிட்டு போயிருந்தியா., அதனால கிளீன் பண்ணிட்டு அடைத்து வைத்து மட்டும் வச்சிருக்கு”, என்று சொல்ல.,

     “நான் அங்க போய் குளிச்சு டிரஸ் மாத்திக்கிட்டா”, என்று கேட்க.,

    “சரி”, என்றனர்.

     இவளோ மாடிக்கு தன்னறைக்கு சென்றவள், நீண்ட நாளுக்கு பிறகு தன்னிடம் வந்ததை போல உணர்ந்தாள்.

    பின்பு அந்த அறையில் அவர்கள் கொடுத்திருந்த உடையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றவள்., குளித்து உடைமாற்றி வந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.,

   கதவை திறக்க சித்தார்த்தனின் அம்மாவும் சரிகாவும் நின்றிருந்தனர்.

    அப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தாள். “கீழே வாம்மா, சாப்பிட்டு அதுக்கு அப்புறம் மேல வரலாம்”, என்று சொல்ல.,

     இவளோ “கீழையா” என்று தயங்க.,

      “எல்லாரும் வெளியே தான் உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்காங்க., நீ இப்படி கூடி வா”, என்று உள் வழியாக அவளை அழைத்து சென்றனர்.

    இவள் கீழே செல்லும் போது சித்துவும் அங்கு தான் ராகவனோடு அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க.,

    அதன் பின்பு இருவருக்கும் உணவு பரிமாறினர்., சித்தார்த்தன் சாப்பிட்டு விட்டு வெளியே எழுந்து சென்று விட்டான்.

    இவளும் உணவை முடித்துக் கொண்டு இருக்க.,  வீட்டின் பெரியவர்களாக இருவீட்டு பாட்டிகளும் வந்து அவளுக்கு திருநீர் பூசி விட்டு ஆசீர்வாதம் செய்துவிட்டு “இப்படியே மாடிக்கு போ”, என்று சொல்ல.,

“சித்தார்த்தன் அறையில் விட்டு வா”  சரிகாவிடம் சொல்லி விட்டுட்டு அனைவரும் கீழே இருந்து கொண்டனர்.

  சரிகாவோ மேலே வந்து., “அண்ணி அண்ணனும் நீங்களும் ஏற்கனவே பழகினவங்க தான்,  அண்ணா ரூம்  தான் ரெடி பண்ணி இருக்காங்க., நீங்க அந்த ரூமுக்கு போறீங்களா”,என்றாள்.

    “இல்ல இல்ல, நான் அந்த வீட்டிலேயே இருக்கிறேன்., எனக்கு கொஞ்சம்  ஃப்ரீயா இருக்கணும் ப்ளீஸ்”, என்று சொல்லவும்.

    “சரி சரி போங்க” என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்து விட்டு.,

    கீழே ஏற்கனவே பெரிய வீடு தான் என்பதால் அனைவரும் கீழேயே தங்கிக் கொண்டனர்.

     அனாமிகாவின் அம்மா அப்பா பாட்டி தாத்தா மட்டும் வெளியே ஹோட்டலில் அறை எடுத்து இருக்க, அங்கு சென்று விட்டனர்.

       அனாமிகா உறவினர்கள் ஏற்கனவே அந்த ஹோட்டலில் தான் தங்கி இருக்க., இவர்களும் சென்றுவிட வீட்டினர் மட்டுமே இருந்தனர்.

     ராகவனும் அவன் மனைவியும் கூட வெளியில் தங்கி இருக்க, அவர்களும் சென்று விட்டனர்.

    அதன் பின்பு சித்தார்த்தன் கிளம்ப போக.,  சரிகா தான் “அண்ணி இந்த ரூம்ல இல்ல, அவங்க ரூம்ல இருக்காங்க”., என்று சொல்லிவிட,

   அவனும் சிரித்துக்கொண்டே மேலே செல்ல, பாட்டி தான், “எப்பவும் கதவை மூடிட்டு போவியே பூட்டிட்டு போ”, என்று சொல்ல.,

     “பாட்டி” என்றான்.

    “இல்ல, எப்பவும் புது மாப்பிள்ளை மாதிரி கதவை பூட்டிட்டு பூட்டிட்டு போவ., இப்ப என்ன கதவை திறந்து வச்சிட்டு போற., பூட்டிட்டு போ”, என்று சொல்லிவிட்டு சென்றார்.

  இவனோ பாட்டியை முறைத்தபடி கதவை பூட்டிவிட்டு மேலே ஏறி வந்தான்.  வந்தவனுக்கு வீட்டினரின் சிரிப்பும் பார்வையும் தான் தாங்க முடியவில்லை.,

    மேலே வர அவனறை அழகான அலங்காரத்தோடு வாசனை திரவியங்களின் உதவியுடன் ரம்மியமான வாசனை அறையை நிறைத்து இருந்தது.

    இவனோ வெளியே வந்து பார்க்க, அங்கு அவள் தங்கியிருக்கும் வீட்டில் விளக்கு எரிவதை பார்த்தவன்.,

    ‘அங்க தான் இருக்கா போல, போய் கூட்டிட்டு வரணுமா’, என்று சொல்லி விட்டு அங்கு வந்து கதவை தட்டினான்.

   மெதுவாக கதவை திறந்து எட்டிப் பார்த்தாள்.

பார்த்தவுடன் “என்ன ஆச்சு” என்றான்.

   “ஒன்றுமில்லை”, என்று கண்ணை சிமிட்டி எப்போதும் போல சிரிக்க.,

     “சரி வா, மொட்டை மாடிக்கு போலாம்”, என்று சொல்ல.

    “சரி” என்று வேகமாக தலையாட்டினாள். அவளும் விளக்கணைத்து கதவை பூட்டிவிட்டு வர.,

    நேராக தன்னறைக்கு கூட்டி வர,

     “இங்க வரீங்க, மொட்டை மாடி சொன்னீங்க”, என்று சொல்ல.

    “கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு, அப்புறமா போலாம்”, என்று உள்ளே அழைத்து வந்து கதவை சாத்திவிட்டான்.

    இவள் தான், “நீங்க என்னை ஏமாத்துறீங்க இல்ல”, என்றாள்.

    “கண்டிப்பா, மொட்டை மாடிக்கு போறோம், ஆனா அப்புறமா”, என்று சொன்னவன்.

   எப்போதும் போல அவள் கன்னத்தை பிடிக்க, அவளோ அவன் நெற்றியில் முத்தமிட போகிறான் என்று நினைத்து “எத்தனாவது” என்று சொல்லி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.,

    இப்போது அவன் பார்வையும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்க, “டேய் நீங்க இன்னைக்கு சரியில்ல”, என்று சொல்லும் போதே.,

பொடு பொடு என்று பேசும் அந்த வாயை மூடி இருந்தான். அதன் பிறகான நேரங்கள் அவனுக்குள்ளதாக மாற., முதலில் தயங்கினாலும் அதன் பிறகு அவனுக்காக இவளும் மாறிப் போனாள்.

    இரவு இரண்டு மணிக்கு மேலே, தூக்கம் வராமல் இருவரும் மொட்டை மாடிக்கு செல்ல., எப்போதும் போல பாய் விரித்து அவன் படுக்க., அவன் அருகிலேயே அவன் கையில் தலை வைத்து படுத்தவள்., வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களை பார்த்து அவனிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்.

   அவனும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, திரும்பியவள்,

    “என்னாச்சு ஏன் ஏதோ மாதிரி யோசிச்சிட்டு இருக்கீங்க, பேசவே மாட்டேங்கிறீங்க”, என்று கேட்டாள்.

     “இவ்வளவு நேரம் நடந்ததை யோசிச்சிட்டு இருக்கேன்”, என்று சொல்லவும்.

    அவன் மார்பில் ஒரு அடியை போட்டவள், வாய்க்குள் முனங்கிக் கொண்டே அவன் மார்போடு முகம் பதித்துக் கொண்டாள்,

    “இப்ப ஏதாவது சொன்னியா”, என்று கேட்டவன், “இல்ல கீழ இருந்தா சரிப்பட்டு வராது., அதனாலதான் மொட்டை மாடிக்கு கூட்டிட்டு வந்தேன்”, என்று சொல்லவும்.,

     அவன் மார்பில் இருந்து முகத்தை எடுத்து அவன் முகத்தைப் பார்த்தவள் சிரித்துக்கொண்டாள்,

   இருவரும் பேசிய பொழுதே ஓட்டினர், அரை தூக்கமும் பேச்சுமாக நேரம் கழிய, சரியாக நாலு மணிக்கு அவனுடைய செல் அலாரம் அடிக்க.,

    இவள் தான், “எந்திரிச்சி அந்த வீட்டுக்கு போய்டவா”, என்று கேட்கவும்.,

    அவனும் “அந்த வீட்டுக்கு எதுக்கு போகனும், இப்ப 6 மணி வரை ஆனாலும் இங்கே இருக்கலாம்”, என்று சொல்லிவிட்டு.,

   ” சரி இப்ப என்ன பண்ணலாம், எந்திரிச்சி நம்ம பிளான் படி கோயிலுக்கு கிளம்பிடுவோமா”, என்றான்.

   இருவருக்கும் ஏனோ தூக்கம் வராமல் இருக்க,  பின்பு குளித்து கிளம்பி அவள் அறைக்கு சென்றவள்., இருந்த துணியை எல்லாம் எடுத்து மிஷினில் போட்டு,  ஆன் செய்துவிட்டு தான் இருவருக்கும் காபி கலக்க தொடங்கினாள்.

    அவளிடம் எப்போதும் பால் பவுடர், காபி பொடியும் இருக்கும். அதை வைத்து காபி கலக்கியவள் அவனுக்கும் கொண்டு சென்று கொடுக்க.,

    அவனும் அப்போதுதான் குளித்துவிட்டு வந்தான்., பின்பு ரூமில் எல்லாம் சுத்தம் செய்து விட்டு நேரத்தை பார்க்க மணி 5:15 என்று காட்டியது.,

   “கிளம்புவோமா, சரியா இருக்கும் சாமி கும்பிட்டுட்டு உடனே வந்துரலாம்”, என்று சொல்லவும்.,

   “சரி”, என்று இருவரும் கிளம்பினர்.