அவன் தான், அவள் போனை வைத்த பிறகு., “அவங்க வீட்ல கூட யாரும் ஊசி போடறதுக்கு நான் வரலையானு கேக்க மாட்டாங்க போல., நீ கரெக்டா அங்க போ, இங்க போ ங்க”, என்று சொல்ல.,
“நாளைக்கு நானும் இதே சித்துட்ட எதிர்பார்ப்பேன் தானே , அதே மாதிரி தானே அண்ணிக்கும் , அதற்கு தான் சொன்னேன்”, என்று சொல்லவும்.,
“இப்ப நீ அவங்க வீட்டு ஆளா பேசுற., நம்ம வீட்டு ஆளா பேசல”, என்று நித்திலன் சொல்ல.,
“அப்படி எல்லாம் இல்லை ண்ணா, எல்லா லேடிஸுக்கும் உள்ள எக்ஸ்பட்டேஷன் அ தான் சொல்றேன்., அவங்களுக்கும் ஒரு எண்ணம் இருக்கும்ல., அது மட்டும் இல்லாம இன்ஜெக்ஷன் போட்டு வந்ததுக்கப்புறம் பேபிக்கு ஃபீவர் வரும்., அவங்களே எவ்வளவு நேரம் பார்ப்பாங்க, வீட்டில் இருக்கிற எல்லாரும் ஆளாளுக்கு பார்த்தாலும்., நீ கூட இருந்தா, அது ஒரு சப்போர்ட்டிவா இருக்கும்ல., அப்படி யோசிச்சு பாரேன்., ஏன் எல்லாரும் பிலைண்டாவே மைண்ட் வச்சிருக்கீங்க., கொஞ்சம் ஃபேமிலி யும் யோசிங்க”, என்று சொல்லி அவனுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டியோ, “சொன்னா எல்லாம் புத்தி ஏறாது, சரி சரின்னு மண்டைய ஆட்டுவாங்க, அப்புறம் கண்டுக்கவே மாட்டாங்க”, என்று சொல்லவும்.,
இவளோ தாத்தாவை பார்த்தபடி, “அப்படியா தாத்தா”, என்று கேட்க.,
“ஏமா வயசான காலத்துல என்னை வம்பு இழுக்க”, என்றார்.
அவள் அம்மாவும், “எல்லாம் உண்மைதான்”, என்று சொல்ல.,
“அப்பா நீங்களுமா”,என்றாள்.
“சும்மா இரும்மா, நாங்க எல்லாம் பேரனே எடுத்தாச்சு, இன்னும் வம்பு இழுத்து, மறுபடி சண்டை கிளப்பி விடாதே”, என்று மகளை சொன்னார்.
“அம்மா, அந்த டோனுக்கு அர்த்தம் என்னம்மா”, என்றாள்.
“அது கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தெரியும்”, என்று சொல்ல.,
இவளோ, “இல்லம்மா எனக்கு அது தெரியவே வேண்டாம்., என் சித்து இப்படியே இருக்கட்டும்”, என்று சொல்லவும்.
அவரும் சிரித்துக்கொண்டு, “இப்ப உள்ள பிள்ளைகள் எல்லாம் புத்திசாலிங்கடி, பொழச்சுக்குவீங்க”, என்று சொன்னார்.
“அப்படி எல்லாம் இல்ல, இப்ப உள்ள பசங்களும், கொஞ்சம் ஓரளவுக்கு எல்லாத்தையும் அண்டர் ஸ்டாண்ட் பண்ணி போறாங்க., அதனால தான் இல்லாட்டி எல்லா ஆம்பளையும் ஒரே குட்டையில உறின மட்டை தான்”, என்று இவளும் சொல்லிவிட்டு சென்றாள்.
நித்திலனை பார்த்து, “ஒழுங்கா இன்ஜெக்ஷன் டேட் கேட்டு கிளம்பு”, என்று சொல்லி விட்டு போனாள்.
” அம்மாடியோ அப்படியே, அந்த வீட்டு ஆளா மாறிட்டாமா”, என்று நித்திலன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளோ தன் அறைக்கு சென்ற பின் சித்துவிற்கு வீடியோ கால் செய்து பேசிக்கொண்டிருந்தவள்., அவள் அம்மா சொன்னதை பற்றி சொல்ல.,
அவனும் “வேலை டென்ஷன் எல்லாம் மாறும் இல்ல., ஃபேமிலி என்று வரும் போது அதற்கும் டைம் ஸ்பென்ட் பண்ணனும் இல்ல., இப்போ நான் எப்பவாவது வாரேன், அதனால உன் கூடவே டைம் ஸ்பென்ட் பண்றேன்., ஒன்னா இருக்கும் போது அது கொஞ்சம் சேஞ்ச் ஆகும் இல்ல”, என்று சொன்னான்.
“ஓ அப்படி ஒன்று இருக்கோ”, என்று சொல்லவும்.,
அவனும் அவளிடம் அதே தான் கேட்டான்., “உனக்கு ஒர்க்குன்னு வரும் போது நீ அதுல தான் கான்சன்ட்ரேஷன் பண்ணனும்., அதே நேரத்துல வீட்ல சும்மா வெட்டியா நான் இருந்தேனா., நீ என்னை கவனிப்பியா., உன் வேலையை பார்ப்பியா”, என்றான்.
“வேலையும் பாக்கணும், உங்களையும் பாக்கணும்”, என்று சொல்லவும்.
“அதேதான் வேலை பார்க்கிற நேரம் வேலை., மீதி நேரத்துல ஃபேமிலி, அது தான் டைம் பிரிச்சுகிறது ல கரெக்டா இருந்துக்குவோம்., அப்படின்னா கரெக்டா இருக்கும்”, என்று சொல்ல.,
இவளும் “சரி” என்று சொல்லிக் கொண்டாள்.
அப்புறம் தான் இவள் அவனிடம், “அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய ஆர்கியூமெண்ட்ஸ் வருமா”, என்றாள்.
“ஏன் இதுவரைக்கும் பண்ணவே இல்லையா”, என்றாள்.
“அது நிறைய பண்ணி இருக்கோம்”, என்று சொல்லவும்.
“அப்புறம் என்ன , ஆர்க்கியூ பண்ணுவோம்., அடுத்த நிமிஷம் நம்ம ரெண்டு பேரும் நாமாவே இருப்போம் சரியா., நீ தான் ஏற்கனவே சொன்னியே., நம்ம ஒருத்தருக்காக ஒருத்தர் எப்பவும் இருக்கணும்னு., அத அப்படியே காப்பாற்றுவோம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதன் பிறகான நாட்கள் வேகமாக ஓட, திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு சரிகாவை இங்கு அழைத்து வந்திருந்தனர்.
திருமணத்திற்கு முதல் நாள், இவளை மதுரைக்கு கூட்டிக் செல்வதற்காக சொன்னது போலவே சித்துவின் சித்தி மகன்கள் உறவினரோடு வந்து சேர்ந்திருந்தனர்.
இவள் சிரிக்க, “ஏன் அண்ணி எங்க கூட எல்லாம் வர மாட்டீங்களா., எங்க அக்கா கூப்பிட்டால் தான் வருவீங்களா”, என்று கேட்டனர்.
“யாருடா சொன்னா, நீங்க கிளம்பி போனா கூட நான் பின்னாடியே கிளம்பி வந்துடுவேன்”, என்று சொல்ல.,
“மானத்தை வாங்குற நீ”, என்று பாட்டி சொல்ல.,
“உங்களுக்கு பொறாமை” என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
அதன் பிறகு கல்யாண காரியங்கள் வேகமாக நடந்தன, மதுரை சென்றவர்கள் நேராக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு பின்பு மண்டபத்திற்கு சென்றனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு, அன்று தான் சித்துவும், அனாமிகாவும் நேரில் பார்த்துக் கொள்கிறார்கள்.
நீண்ட இடைவெளி இருந்தது போல இருவருமே உணர்ந்தனர்.
அவன் அருகில் வர போக., அவன் நண்பர்களும் வீட்டில் இருந்தவர்களும் சேர்ந்து “பொறு பொறு இன்னும் கல்யாணம் ஆகல”, என்று சொல்லி அவனை பிடிக்க.,
அவளும் அவனை பார்த்துக் கொண்டே வர, “ஹலோ, பாதை இந்த பக்கம் இருக்கு., இப்படி போங்க”, என்று சொல்லி இங்கு கிண்டல் செய்ய.,
சிரித்தபடி அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தாள்.
திருமணநாள் காலையும் அழகாக விடிந்தது.
இருவருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி அக்னி சாட்சியாக அவன் தேர்ந்தெடுத்த பட்டில் தேவதை என வந்த அமர்ந்தவளுக்கு, மூன்று முடிச்சுட்டு தன் சரிபாதியாக மாற்றிக் கொண்டான்.
நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, அவள் உச்சியில் முத்தம் பதிக்க அவர்களை சுற்றி இருந்தவர்கள் ஓஓஓஓ என்று சத்தம் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க.,
அதை அழகாக கேமரா உள்வாங்கிக் கொண்டது.
அவனும் “கணக்கு வச்சுக்கோ”, என்று சொல்ல.,
அவளும் சிரித்தபடி அவனை தான் நிமிர்ந்து பார்த்தாள்.
அதன் பிறகு அவள் பாதத்தில் மெட்டி அணிவித்தது ஆகட்டும், ஒவ்வொரு காரியங்களிலும் அவளுடன் நின்று செய்தது, என பார்க்க அத்தனை பாந்தமாக இருந்தது.
ஏற்கனவே நிச்சயதார்த்தத்தின் போதே, இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து கண் வைக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அன்று அத்தனை அழகாக இருந்தது., அதுவே நிச்சயதார்த்த புகைப்படத்திலும் தெரிந்தது.
இன்றோ இன்னும் அழகாக இருக்க., இருவரும் கல்யாணம் பேசியதற்கு பிறகு அவர்களின் மகிழ்வே அவர்கள் முகத்தை இன்னும் அழகாக மாற்றி காட்டியது.