மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு சரிகாவையும் குழந்தையும் கவனிப்பது வீட்டினருக்கு சரியாக இருந்தது.
சென்னையில் இருந்து டெலிவரிக்கு என்று வந்தவர்கள் அனாமிகாவோடு தங்கி இருந்து, சரிகா வீடு வரும் வரை இருந்து விட்டு பின்பு திரும்பி சென்றனர்.
மீண்டும் குழந்தை பிறந்த 16 வது நாள் பெயர் வைக்கும் விழாவும், வீட்டுக்குள் எடுக்கும் விழாவும் சேர்த்து சிறப்பாக செய்துவிட்டு சென்றனர் அனாமிகா வீட்டினர்.
திருமணத்திற்கு முன்பு அவளையும் பிள்ளையும் அழைத்து செல்வதாக பேசிக் கொள்ள, திருமண தேதியை அதன் பிறகு முடிவு செய்தனர்.
இரண்டு மூன்று தேதிகளை கணக்கிட்டுச் சொல்ல, அனாமிகா தான், “அண்ணி பேபியோட ஹெல்தியா அட்டென்ட் பண்ற மாதிரி இருக்கணும், அதனால அவங்க கிட்ட கேளுங்க., எனக்கு எந்த தேதி வச்சாலும் ஓகே தான்”, என்று சொன்னாள்.
பின்பு அவளிடம் கேட்க சென்றனர், சரிகாவோ, “நான் ஓகேவா இருக்கேன், இவன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஏனென்றால் அவள் அம்மாவின் குணம் தெரியும் என்பதால், பாட்டியோ சரிகாவின் அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்க., அவரோ வாயில் விரல் வைக்காத குறையாக இருந்தார்.
அதற்குள் இவளுக்கும் ட்ரைனிங் முடிய இங்கிருந்து அவள் மட்டுமே சென்றாள்.
அவளுடைய பொருட்கள் அதே அறையில் அப்படியேதான் இருந்தது.
வீட்டினர் தான் ‘எப்படியும் வாழ இங்க தானே வரப்போறா, அவளுக்கு இங்க வந்து வேற புது திங்ஸ் வாங்கலாம்’, என்று நினைத்துக் கேட்டனர்.
அவளோ “இது இப்ப வாங்கியது தானே இது போதும்” என்று சொல்லிக் கொண்டிருக்க.,
சித்தர்த்தனோ, “எதுவும் வேண்டாம், எனக்கு அவ மட்டும் போதும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நாள் மூணாறில் இருப்பதாக பேசி முடிவெடுத்திருந்தனர்., அங்கும் மருத்துவமனைகள் இருக்கிறது., கொஞ்ச நாள் அங்கு பார்த்துவிட்டு அதன் பிறகு தேனீக்கு வரலாம் என்று அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.
பத்திரிகை அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர், பின்பு புடவை எடுப்பது என்று பலவற்றை கலந்து பேச, இப்போதும் அவன் “அவளுக்கு பிடித்தது போல தறியில் நெய்ய கொடுத்து விடலாம் ” என்று சொன்னான்.
நிச்சயதார்த்தத் தன்று அவள் கட்டிய புடவையே அத்தனை பேரும் “பார்த்து பார்த்து எடுத்து இருக்கான் பா” என்று சொல்லிக் கொண்டிருந்திருந்தனர்,
இப்போதும் அவன் “அவளுக்கு பிடித்தது போல”, என்று சொல்ல.,
சரிகா தான் நித்திலனிடம், “நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கீங்களா”, என்று கேட்க.,
அவனும், “ஐயோ நீ எப்ப இந்த வேலையெல்லாம் ஆரம்பிச்ச”, என்றான்.
“இல்ல எங்க அண்ணனை பாருங்க, எப்படி பார்த்து பார்த்து வாங்கி கொடுக்கிறான்” என்று சொல்ல.,
“ஓஹோ அரேஞ்ச் பண்ணா இப்படித்தான் பண்ணுவீங்களோ”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன உனக்கு., உனக்கும் தரியில நெய்ய கொடுத்துடுவோம்”, என்று சொன்னவன்.
“உனக்கு எந்த மாடல் பிடிக்கும், எந்த மாதிரி சாரி வேணும்னு சொல்லு., உங்க அண்ணன் நெய்ய கொடுக்கும் போது நானும் போய் நெய்ய கொடுத்துட்டு வரேன் மா., இல்லாட்டி அது வேற பிரச்சினையாயிரும்”, என்று சொல்லிக் கொண்டிருக்க.,
வீட்டினர் தான், “பொண்டாட்டிய எப்படி கவனிக்கணும் சித்தார்த்தன் கிட்ட போய் டியூஷன் எடுக்கணும்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த விதத்தில் சித்தார்த்தனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மகிழ்வு தான்., தங்கள் மகனை நல்லபடியாக வளர்த்திருக்கிறோம் என்று.,
‘தன் மனைவியை ஒருவன் எப்படி நடத்துகிறானோ., அது அவன் தாயின் வளர்ப்பை குறிப்பதாகும்., நல்ல தாயின் வளர்ப்பில் வந்த பிள்ளைகள் கண்டிப்பாக தங்கள் மனைவியை நன்றாக வைத்துக் கொள்வார்கள்’.
இவள் சென்னை சென்ற பிறகு அங்கு ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்த மருத்துவமனையில் தனக்கு ப்ராக்டிஸ் விட்டு விடக்கூடாது என்பதற்காக கேட்டு அதே மருத்துவமனையில் சேர்ந்திருந்தாள்.
இப்போது சித்துவும் அனாமிகா வும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும்., தினமும் போனில் பேசுவது தவறாது.
அன்று மருத்துவமனையில் இருந்து வந்தவள் குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர, போன் ஹாலில் இருந்தது., இன்னும் சரிகாவை இங்கு அழைத்து வரவில்லை,
திடீரென அவள் போன்,
“ஏல மச்சி மச்சி, தல சுத்தி சுத்தி, என் புத்தி கெட்டு போயாச்சு., என் முளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி பாக்குது என்ன ஆச்சு”, என்று பாடல் சத்தம் கேட்டவுடன் குடும்பமே அவளை தான் திரும்பி பார்த்தது.
அவ்ளோ சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், வைத்து விட்டு ஓடி வந்து போனை எடுக்க.,
நித்திலனோ, “மெதுவா, வாமா, உன் மச்சி போன் எல்லாம் வைக்க மாட்டாரு”, என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தான்.
அவளோ “போ” என்று சொல்லிவிட்டு போனை எடுத்து, “சொல்லுங்க” என்று பேச தொடங்கவும்.,
இவனும் “என்ன ஆச்சு”, என்றான்.
அவளது சிரிப்பான குரலை கேட்டு, அவளோ “உங்களுக்கு வச்ச ரிங்டோன் தான்”, என்று சொல்ல.,
அவனும் சிரித்தபடி, “ஏன் இன்னைக்கு தான் வீட்ல கேட்டாங்களா”, என்று சொல்ல.,
“ஆமா இன்னைக்கு தான் கேட்டு இருக்காங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
பின்பு இருவருக்குமான பேச்சுகள் நீள, யாரும் டைனிங் அறைப் பக்கமே செல்லவில்லை., ஏனென்றால் இவள் பேசிக்கொண்டே கொறித்துக் கொண்டிருக்க.,
இங்கிருந்து நித்திலன் தான், “நீ சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டேனா, நாங்க சாப்பிடணும், நீ பேசிக்கிட்டே எப்போ சாப்பிட்டு முடிக்க”, என்று இங்கிருந்து சத்தம் கொடுக்க.,
” நான் உங்களுக்கு அப்புறம் கூப்பிடட்டா., எல்லாம் சாப்பிடுவதற்கு வெயிட்டிங், நான் டைனிங் ஹால்ல பேசிட்டு இருக்கேன்னு யாரும் வர மாட்டேங்கிறாங்க”, என்று சொல்ல.,
அவனும் “சரி சரி” என்று சொன்னான். அதன் பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் சரிகாவிடம் பேசிவிட்டு குழந்தை எப்படி இருக்கிறான் என்பதை கேட்டு தெரிந்து கொண்டவள்., அவளுடைய உடல் நிலையை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“எதுக்கும் ஒரு தடவை டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு வந்துருங்க”, என்று சொன்னவள்.,
தடுப்பூசி போடும் தேதியை நினைவு படுத்திவிட்டு., அதை நித்திலனுக்கும் நினைவு படுத்தினாள்.