சர்வேஷ் தன்னவளையே பார்த்திருந்தான்.. புன்னகையோடு நெற்றியில் குங்குமம்.. கன்னங்களில் சந்தனம்.. தோளில் வழியும் மல்லிகை சரங்களோடு.. நின்றாள்.

சர்வேஷ் துர்க்காவிடம் ‘செயின் எங்கே’ என ஜாடை காட்டினான்.

லக்ஷ்மி “இரு டா.. பூஜை ரூமில் இருக்கு.. நம்ம பெரியவர்கள் எடுத்து வராங்க..” என்றாள்.

சர்வேஷ் ‘மறந்துட்டீங்கலோன்னு நினைத்தேன்’ என்றான் சின்ன குரலில்.

எல்லோருக்கும் அது கேட்டது, ஐஸ்வர்யா “இல்ல மறக்கவில்லை.. இதோ உங்க அம்மா கையில் இருக்கு பாருங்க” என்றாள்.

பேச்சினை கேட்டுக் கொண்டிருந்த சர்வேஷ்ஷின் அன்னை.. செயின் எடுத்து அவன் முன் காட்டினார். அவரே வர்ஷினிக்கு அணிவித்தார். சர்வேஷ் புன்னகையோடு கைதட்டினான் அங்கிருந்து.. எல்லோரும் அதை பார்த்து, அதன் பிறகுதான் கை தட்டினர். சர்வேஷ் பறக்கும் முத்தம் ஒன்றினை அனுப்பினான்.. தன்முன் திரையில் நின்றிருந்தவளை பார்த்து. 

வர்ஷினியும் அதனை பிடித்துக் கொண்டாள் சட்டென.

இருவரையும் நினைத்து.. எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

வர்ஷினி திரையின் அருகில் வந்து நின்றாள்.. ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து போட்டோ எடுத்தாள் தன் போனில்.. சர்வேஷ் “இருங்க” என சொல்லி.. எழுந்து நின்றுக் கொண்டான். வர்ஷினியும் அவன் அருகில் நிற்பது போல நின்றாள்.. பொறுமையாக இருவரும் தெரியும்படி புகைப்படம் எடுத்தாள் ஐஸ். அடுத்து ஆதி வந்து அத்தையின் அருகே நிற்க.. எல்லா பிள்ளைகளையும் வர்ஷினி அருகே அழைத்து தன்னோடு நிறுத்திக் கொண்டாள்.. பிள்ளைகளோடு இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அடுத்து மஞ்சரி ராக்கியோடு எடுத்துக் கொண்டனர்.

வர்ஷினி எல்லா பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.. சர்வேஷ் அதையும் விடவில்லை… அங்கேயே நின்ற இடத்திலிருந்தே விழுந்து வணங்கினான். முதலில் சிறு புன்னகை. அதன்பின், முத்து நாயகி திரையின் முன் வந்து நின்றார்.. வர்ஷினி நமஸ்கரிக்க.. அதே நேரத்தில் சர்வேஷ்ஷூம் நமஸ்கரித்தான். இருவரும் தம்பதிகளாய் ஆசீர்வாதம் வாங்கினர். அடுத்து அடுத்து சிவகுமார் விஜயா தம்பதி.. சர்வேஷ்ஷின் மாமா அத்தை.. வர்ஷினியின் அத்தை மாமா என எல்லோரும் திரையின் முன் வந்து நின்று தங்களின் ஆசீவாதங்களை வழங்கி சென்றனர். பார்க்க.. விநோதமாக இருந்தாலும்.. எல்லாம் சாத்தியம்தான் மனமிருந்தால்.. டெக்னாலஜியிருந்தால் என்ற எண்ணம்தான் எழுந்தது பெரியவர்களுக்கு.

ஜோதிடர் வந்திருந்தார்.. நாள் குறிக்க.. பெரியவர்கள்  எல்லோரும் டைனிங் ஹாலில் அமர்ந்துக் கொண்டனர் வசதியாக.

ஹாலில் குட்டி பசங்க மட்டும்தான் இருந்தனர்.. வர்ஷினி திரையின் முன் நின்று.. தன் செயினை எடுத்து பார்த்து “சூப்பர்.. அத்தை நீங்கதான் செலக்ட் செய்ததாக சொன்னாங்க.. வெயிட்லெஸ்சாக இருக்கு.. இந்த முகப்பு அழகா இருக்கு..  என்னிடம் சொல்லவேயில்ல சர்வா நீ” என்றாள். அழகான முகப்பு செயின்.. முதலில் சிவப்புகள்..  நடுவில் வைரம்.. இறுதியில் மரகதபச்சை கல்.. என சின்னதாக மின்னியது.

சர்வேஷ் “இது.. தாலிகொடின்னு சொன்னாங்க அம்மா.. அதான் இங்கே வந்தாலும் உன் அவுட்பிட் மாறினாலும்.. நீ போட்டுக் கொள்ளுவது போல சிம்பிள்லாக எடுத்தேன்..” என்றான்.

பெண்ணவள் “ஹேய்.. சூப்பர் சர்வா..” என தன்னிரு கைகளையும் இதயவடியில் வைத்துக் “லவ் யூ” என்றாள்.

சர்வா “மீ டூ..” என்றான். அவனுக்கு அவளை பார்த்தே முடிவாகவில்லை.. இமைக்க மறந்தான்.. சுவாசிக் கூட மறந்தான்.. ஒரு மோனநிலையில் இருக்கிறான் காதலன்.

ஐஸ்வர்யா “வர்ஷினி ஹாலில்.. மறந்துட்டியா.. போனில் பேசுங்க” என்றாள்.

வர்ஷினி, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..  புன்னகையோடு “சர்வா.. பிக் ஸ்க்ரீன்னில்.. உன் வீட்டுக்கு வெளிலகாட்டு.. ஸ்நொவ் பார்க்கணும்” என்றாள். 

சர்வா கேமராவோடு  பெரிய விண்டோ முன் சென்று நின்றான்..  இவர்கள் அப்பார்மென்ட் அருகே இருந்த மரங்களில்.. செடிகளில்.. கார்களில்.. சில உயரமான கட்டிடங்களில் என நிறைய இடங்களில் பனி நிறைந்து இருந்தது. ரோடுகளில் அவ்வபோது கிளீன் செய்துக் கொண்டிருந்தனர் இயந்தரங்களை கொண்டு.. அதனால், பளீச்சென இருந்தது.

அந்த  டிவி திரையில்.. எதோ சினேரீஸ் பார்ப்பது போல.. ரம்யமாக இருந்தது.. ஐஸ்வர்யா “வாவ்..” என்றாள்.

வர்ஷினி “டெம்பர்சர் என்ன சர்வா..” என்றாள்.

“-4C” என்றான்.

தர்ஷன் மனைவியின் குரல் கேட்டு வந்தான்.. திரையில் தெரிந்தவைகளை ரசித்தான் “சில இடங்களில் அரோரா  வேவ்வேஸ் தெரியும்ன்னு சொல்றாங்க” என்றான் கேள்வியாக.

“ம்.. டிசம்பரில் தெரியும்.. அது நார்த் ஸ்வீடன்ல சம் டைம் தெரியும்” என்றான்.

பிள்ளைகள் வந்து பார்த்து சென்றது.. லக்ஷ்மி வந்து பார்த்தாள். வர்ஷினியின் அத்தையும் மாமாவும் வந்து பார்த்து அசந்து நின்றனர்.

திருமண தேதி குறித்தனர்.. சர்வேஷ் வர்ஷினியிடமும் தேதிகளை சொல்லி.. உறுதி செய்துக் கொண்டனர் பெரியவர்கள்.

மதிய உணவு வர்ஷினி வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் எல்லோரும் மாடிக்கு சென்றனர்.

சர்வேஷ், எல்லோரிடமும் விடைபெற்று அலுவலகம் கிளம்பினான்.

ஒன்பது மாதங்கள் சென்று..

சர்வேஷ் வீடு..

நாளை பந்தக்கால் போடுகிறார்கள். சர்வேஷ் இன்று வீடு வருகிறான். துர்காவின் கணவர் பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்தார் இப்போது. மணி இரவு ஒன்பது. எல்லோரும்  வரவேற்றனர் சரவணன் மாப்பிள்ளையை. துர்க்கா இரண்டுநாள் முன்பே மகனோடு வந்துவிட்டாள். லக்ஷ்மி இங்கேதான் இருக்கிறாள்.. வீடு நிறைந்து இருந்தது.

இரவு பத்துமணிக்கு சென்னை வருகிறான் சர்வேஷ். இந்தமுறை தர்ஷனும் கார்த்தியோடு  அவனை அழைத்து வர செல்லுகிறான். ம்.. தர்ஷன் தன் வீட்டு மாப்பிள்ளையை கவனிக்க வேண்டுமே.. அதனால் இந்த ஏற்பாடு. சிவகுமார் சொல்ல தர்ஷன் செய்கிறான்.  

வர்ஷினியை வெளியே செல்லக்கூடாது என்றுவிட்டனர். அதனால் ஏர்போர்ட் செல்ல அவளுக்கும் வாய்ப்பில்லை. 

சர்வேஷ் வந்திறங்கினான்.. சென்னையில். 

அவனின் கார்த்திக் மாமா மலர்ந்த புன்னகையோடு எதிர்கொண்டார் சர்வேஷை. 

சர்வேஷ், தன் மாமனை கட்டி அன்பு பாராட்டிவிட்டுதான் தர்ஷன் பக்கம் திரும்பினான். 

தர்ஷன், கையில் சின்ன பூங்கொத்தோடு “வெல்கம் மாப்பிள்ளை” என்றான். 

“தேங்க்ஸ்” என சொல்லி, புன்னகையோடு வாங்கிக் கொண்டான், சர்வேஷ்.

அடுத்து இருவருக்கும் நலவிசாரிப்புகளை தவிர என்ன பேசுவதென தெரியவில்லை. 

கார்த்திக் இருவருடனும் சகஜமாக பேசிக் கொண்டே பார்க்கிங்  வந்தனர்.

தர்ஷன் பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டான். பேச்சுகள்.. சற்று தூரம் செல்ல செல்ல இயல்பாக தொடங்கியது. கார்த்திக் கேட்டேவிட்டார் “நீங்க ரெண்டுபேரும் ஒரே ஸ்கூல் தானே.. அவ்வளவாக பழக்கமில்லையோ..” என கேட்டேவிட்டார் இருவரின் ஒதுக்கத்தை பார்த்து.

சர்வேஷ் “தங்கச்சியை சைட் அடிச்சா.. எப்படி பிடிக்கும். என்ன மாமா நீங்க” என்றான் கார்த்திகை பார்த்து.

கார்த்திக் சத்தமாக சிரித்துவிட்டார்.

தர்ஷன் சங்கடமாக “அப்போது நானும் மதுவும் ஒரே ஏஜ்.. அவ பிரெண்ட்ஸ் தெரியும் பழக்கம். ஆனால், வர்ஷினி அதிகம் என்னோடு இருந்ததில்லை.. அப்புறம் எப்படி அவங்க பிரெண்ட்ஸ். பார்ப்பேன்.. கடை வீதிகளில்.. டியூஷனில் அவ்வளவுதான். உமர் ஷர்மி எல்லாம் பக்கத்துவீடு.. சோ.. பழக்கம்.” என்றான் நீண்ட விளக்கமாக.

கார்த்திக் “சரிதான் சரிதான்..” என்றார். அப்படியே சர்வேஷ் இயல்பாக பள்ளி கதைகளை பேசத் தொடங்கினான்.

சர்வேஷ் வீடு வந்து சேர்ந்தனர்.. வாசலில் எல்லோரும் நின்றிந்தனர்.. பெரிதாக  லக்கேஜ் ஏதும் இல்லை.. ஒரே ட்ராலி.. கையோடு அதை எடுத்துக் கொண்டுதான் இறங்கினான் சர்வா. கார்த்திக், காரினை பார்க் செய்தார்.

 மகனை நீண்டநாள் சென்று பார்ப்பதால்.. முத்துநாயகி உணர்ச்சிபெருக்கோடு மகனை அனைத்துக் கொண்டார். சமாதானம் செய்தனர் பிள்ளைகள் எல்லோரும்.

தர்ஷனை உள்ளே அழைத்தனர் எல்லோரும், பால் பருக கொடுத்தனர். தர்ஷன் சற்று நேரம் இருந்துவிட்டு கிளம்பினான், கால் டாக்ஸி புக் செய்துக் கொண்டு.

நாளை காலையில் விழா என்பதால்.. சர்வேஷ்ஷோடு அதிகம் பேசமுடியவில்லை. எல்லோரும் ‘நாளை பேசிக் கொள்ளலாம்’ என உறங்க சென்றனர்.

மறுநாள் காலை முகூர்த்த நேரத்தில்.. பந்தகால் போட்டனர். காலை உணவினை முடித்துக் கொண்டு சர்வேஷ் வர்ஷினியை பார்க்க வந்தான்.