சர்வேஷ் ஸ்வீடன் கிளம்பினான். இந்தமுறை வர்ஷினியை ஏர்போர்ட் வர அனுமதிக்கவில்லை அவன். தனக்கும் அவளுக்கும் அது வலியாக இருக்கும் என உணர்ந்து.. போனில் விடைபெற்று கிளம்பிவிட்டான்.
இருவரும் ஆனந்த காதலை அனுபவித்தனர் தூரத்திலிருந்து. சர்வேஷ் வர்ஷினி இருவரும் எந்த தடையுமில்லாமல் போனில் பேசிக் கொண்டனர். ஊரில் உள்ள எல்லா கதைகளை பற்றி பேச கூட நேரமிருந்தது இவர்களுக்கு. ராக்கி மஞ்சரி சண்டை வரை தீர்த்து வைத்தனர்.. பேச பேச காதல் வளர்ந்தது. இடையில் ஹரிணி வந்து சேர்ந்துக் கொண்டால்.. ‘நான்தான் உங்க கல்யாணத்திற்கு காரணம்’ என. ம்.. அடிக்கடி குட்டி பெண் ஹரிணி பேசினாள் இருவரோடும்.. மூவருக்கும் நேரங்கள் வேறுபட்டதால்.. அடிக்கடி முட்டிக் கொண்டது, சேர்ந்தார் போல பேசிட முடியாமல் போனது. விடுமுறை தினங்களில் கண்டிப்பாக மூவரும் பேசிக் கொண்டனர்.
சர்வேஷ், ஸ்வீடன் சேர்ந்ததும் முதல் வேலையாக உமரிடம்தான் பேசினான். உமர், நேரடியாக வர்ஷினி பற்றி ஏதும் அவனிடம் தகவல்களை பகிர்ந்ததில்லை என்றாலும்.. பள்ளியில் தொடங்கி.. வர்ஷினியின் சொல்லிக் கொள்ளாத நண்பன் அவன். அவளை நிறைய பாதுக்காத்தான்.. அதனாலேயே அவளை ஏதாவது தான் சொன்னால்.. திட்டினால்.. பார்த்தால்.. முறைத்துவிடுவான். அத்தோடு இப்போதும் கூட.. வர்ஷினி வீட்டில் பிரச்சனை எனவும் முதல் அழைப்பு அவனுடையதாகவே இருந்தது.. ‘பொறுமையாக பேசு சர்வா.. தர்ஷன் மட்டும்தான் ஏதாவது முறைப்பான்.. மற்றபடி எல்லோருக்கும் பிடிக்கும்’ என ஆறுதலாக பேசினான்.
எனவே, உமர் சர்வா வர்ஷினி மூவரும் நீண்ட நேரம் நடந்ததை சொல்லி பேசிக் கொண்டிருந்தனர். உமர் “என்ன டா.. ஒரு வருஷம் ஆகுமா நீ கல்யாணம் பண்ண!.. வர்ஷினிக்கு வேலை கிடைக்கலைன்னா.. இன்னமும் டைம் எடுக்கும் போலவே.. நீ கல்யாணம் செய்துக் கொண்டு வேலை தேடியிருக்கணும் மச்சான்.” என்றான்.
வர்ஷினி “அவனே நல்லவானாக இருந்தாலும் நீங்கதான்டா அவனை கெடுக்குறீங்க” என்றாள்
“ஆமாம் கெடுக்குறாங்க.. நீ பாவமேன்னு சொன்னேன்.” என்றான்.
“நானெல்லாம் பாவமில்ல.. நிம்மதியாக லவ் பண்ணுவோம்.. என்ன சர்வா” என்றாள்.
மூவரும் இப்படியே பேசி முடித்து வைத்தனர்.
நாட்கள் வேகமாகத்தான் ஓடியது.
உறவுகளிடம் சிவகுமார் தம்பதி வர்ஷினி சர்வேஷ் திருமணம் பற்றி எடுத்து கூறினார்.
ஸ்வீடனில், வர்ஷினிக்கு வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தங்களுக்கு தோதான வேலையாக.. இடமாக பார்த்து பார்த்து தேடினான் சர்வேஷ். ம்.. தன் கம்பெனியில், அதற்கு அருகில்.. தன் இருப்பிடம் அருகில் என.. பார்த்து பார்த்து அவளுக்கு அப்ளே செய்தான்.
சென்னையில் வர்ஷினி, தான் வேலை செய்யும் இடத்தில் தன் திருமணம் பற்றி சொல்லிவிட்டால் தனது சீனீயர்களிடம். அத்தோடு இந்த ப்ராஜெக்ட் முடிந்ததும் வேலையை விட்டுவிடுவேன் எனவும் சொல்லிவிட்டாள்.
பெண்ணவள் “அப்படிதான் என்னை மதிக்கனுமா.. எனக்கான வேலைக்கு மதிப்பு கொடுத்தால் போதும்” என கருத்து ஊசி போட்டால் தன் வருங்கால கணவனுக்கு.
வர்ஷினி எண்ணியது போல.. எல்லோரும் இருப்பார்கள் என இல்லையே சிலபலர்.. எப்போதும் போல இருந்தனர்.. சிலர் தங்களை முன்னிறுத்தி மட்டும் யோசித்தனர். வர்ஷினி, பெரிதாக அதை கண்டுக் கொள்ளவில்லை. தன் வேலையை இப்போது மிகவும் திருப்தியோடு செய்தாள்.
மூன்று மாதங்கள் கடந்தது.
இன்று காலையில் சர்வேஷ் வர்ஷினிக்கு திருமணதேதி குறிக்கின்றனர்.. அத்தோடு இன்று ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் விழா.
சர்வேஷ் அதிகாலையில் எழுந்து குளித்து தன்னிடமிருந்த வேஷ்ட்டி கட்டிக் கொண்டு.. நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு.. வீடியோ காலில் அமர்ந்திருந்தான். வெளியே -4 C.
தர்ஷன் ஐஸ்வர்யா.. இருவரும்தான் அவனை திரையில் பார்க்கும் படி ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தனர்.
வர்ஷினியின் வீட்டில் பெரியவர்கள் எல்லோரும் கூடி இருந்தனர். குறிப்பாக சர்வேஷ்ஷின் மாமா குடும்பம் வந்திருந்தனர். முறையாக அறிமுகம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது, வர்ஷிணியின் வீட்டாரிடம். வர்ஷினியின் அத்தை நன்றாக பேசினார் அவர்களிடம்.
சர்வேஷ் திரையில் இருந்தான். அவனின் மாமா வந்து பேசினார். சர்வேஷ் சில வருடங்களாக பேசவில்லை மாமா குடும்பத்தோடு.. அவன் குடும்பமே பேசவில்லை. முத்துநாயகி மட்டும் என்ன செய்வது என தெரியாமல் பேசுவார்.
சர்வா “எப்படி இருக்கீங்க மாமா” என்றான். இப்போது தன் திருமணம் அம்மா.. அழைத்திருக்கிறார்.. தனக்காக அம்மா தன் சொந்தத்தை இழக்க வேண்டுமா என யோசித்திருந்தான். எனவே பேசினான் மாமாவின் குடும்பத்தோடு.
அவனின் மாமாவிற்கு என்ன இருந்தாலும் ஒரு கலக்கம் இருக்குமல்லவா.. ‘அது இன்று தீர்ந்தது சர்வா’ என வாய்விட்டு சொன்னார்.. எல்லோரின் எதிலும்.
முத்துநாயகி “தம்பி விடுப்பா..” என தேற்றினார்.
சர்வேஷ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை அவரை. அடுத்த சொந்தங்களிடம் பேசினான். அடுத்து வர்ஷினியின் அத்தை மாமா.. அவளின் சித்தி.. அண்ணன்கள் என எல்லோரிடமும் வணக்கம் சொல்லி நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் காபி பருகிக் கொண்டிருந்தனர்.
தர்ஷனின் மகன் ஆதி இப்போது பேசத் தொடங்கியிருக்கிறான்.. “ஹாய்.. ம்மாமா” என பேசியது தன் மழலை குரலில். உடனே ஓடிவிடுகிறான் தன் அத்தையிடம் “வர்ஷி.. ம்மாமா” என சொல்லிக் கொண்டே.. மீண்டும் அவளிடமிருந்து இங்கே ஓடி வருகிறான். இன்னமும் லக்ஷ்மி பிள்ளைகளோடு பழகவில்லை.. ஆதி. அவர்களும் ஆதி ஓடவும், கூடவே ஓடினர்.. துர்க்கா பையன் நின்று பேசினான்.. “ஆபீஸ் போகலையா மாமா” என்றான்.
சர்வேஷ் மனதுள் எண்ணிக் கொண்டான் ‘நான்தாண்டா மெயின் பிட்சர்.. என்ன செய்ய.. நீ கேட்க்கிற தூரத்தில் இருக்கேன்’ என எண்ணி உதடு கடித்துக் கொண்டு புன்னகையோடு ‘இல்லை’யென தலையசைத்தான்.
லக்ஷிமி வந்தாள் “அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் அய்யாசாமி..” என அவன் முகத்தின் பாவத்தை உணர்ந்து.
“ஒண்ணுமில்ல” என்றான் அதே புன்னகையோடு. சர்வேஷ் பரபரப்பில் இருந்தான், அதேநேரம்.. அதை காட்டிக் கொள்ள முடியாத சூழல், அதனால் புன்னகையோடு அமர்ந்துக் கொண்டான்.
அழைப்பு மணி ஒலித்து. சர்வேஷ் கதவு திருந்தான்.. ராக்கேஷ் மஞ்சரி இருவரும் வந்தனர்.. பையனை பள்ளியில் விட்டுவிட்டு.
மஞ்சரி தன்னுடைய பெரிய விளக்கினை எடுத்து வந்திருந்தாள். விளக்கேற்றினாள். சர்வா வைத்திருந்த ஒரு விநாயகர் படத்திற்கு பூ வைத்தாள். அங்கிருந்த சந்தனம் குங்குமம் எடுத்து வைத்தனர். தேங்காய் உடைத்து ஆப்பிள் பழம் வைத்தனர் தட்டில்.
துர்க்கா லக்ஷ்மி இருவரும் வந்து மஞ்சரியிடம் பேசினர்.. “கரெக்ட் டைமிங் மஞ்சு..” என்றாள் துர்க்கா.
மஞ்சு “சொன்னேனே ட்ராயிங் டே அதான் லக்ஷ்மி..” என்றாள்.
முத்துநாயகி விஜயா வந்து ராக்கி மஞ்சரியிடம் பேசினர். தர்ஷன் ஐஸ்வர்யா இருவரையும் அறிமுகப்படுத்தினர்.. மஞ்சரி ராக்கி இருவருக்கும். ஒருவாரம் முன்பே எல்லாம் பேசி வைத்துக் கொண்டனர்.. இவர்களுக்குள். அதன்படி நடந்தது.
சென்னையின் உறவுகள் வந்து.. மாப்பிள்ளையிடம் பேசி சென்றனர்.. டிவி அருகே நின்று.
அடுத்து சபையில் வர்ஷினி அமர வைக்கப்பட்டாள். நலங்கு வைத்தனர் பெரியவர்கள்.
அங்கே சர்வேஷ்க்கு, ராக்கி மஞ்சரி நலங்கு வைத்தனர்.
துர்கா லக்ஷ்மி இருவரும் சேர்ந்து பூ வைத்தனர் வர்ஷினிக்கு.