இடம் மாறும் மனங்கள்!

24

மது அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் எல்லோருடனும். விஜயா எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தாள். 

வர்ஷினி, சர்வேஷ் பக்கம் திரும்புவதாக இல்லை.. தந்தைக்கு பெண்ணின் நிலை புரிய.. “வர்ஷினி, நீ முகம் கழுவி வா.. ஏதாவது சாப்பிடு” என்றார்.

அப்போதுதான் எல்லோருக்கும் எதோ புரிய.. துர்கா “மாமா, சர்வேஷ் வர்ஷினியோடு கொஞ்சநேரம் மொட்டைமாடியில் சென்று பேசி வரட்டுமா” என்றாள்.

சிவகுமார் மனையாளை பார்த்தார்.. இருவருக்கும் மறுக்க முடியவில்லை. தலையசைத்து “ம்.. சீக்கரமா வா வர்ஷினி” என்றார் தகப்பன்.

சர்வேஷ், அக்காவை நன்றியோடு பார்த்தான். அவனுக்கு தூரமாக இருந்தவரை தெரியவில்லை.. இப்படி கையருகே பெண் நிற்க.. அவளை தொடக்கூட முடியாத நிலையை சர்வேஷ் சபித்துக் கொண்டிருந்தது.. அக்காவின் காதுகளில் கேட்டுவிட்டது போல.. அதுதான் இந்த நன்றி  பார்வை. 

லக்ஷ்மி “பார்த்துடா.. உருகிடாத.. போ போய் பேசிவிட்டு வா” என்றாள் கிண்டலாக.

லக்ஷ்மியின் கிண்டல் மொழிகள் அவனை பாதிக்கவேயில்லை.. அவன்தான் இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறானே.. எனவே, நிதானமாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. மேலே சென்றான். 

வர்ஷினி முகம் கழுவி.. தலையை ஒதுக்கிக் கொண்டு.. மொட்டைமாடி வந்தாள்.

இருள் சூழ்ந்த வானை பார்த்துக் கொண்டிருந்தவன்.. அவள் வருவது தெரிந்து திரும்பி நின்று அவளையே பார்த்தான். பெண்ணவள் அவனின் பக்கவாட்டில் வந்து நின்றுக் கொண்டாள். நிதானமாக அவளை ரசித்தான்.. மெரூன் வண்ண சல்வார்.. அவளின் பிரத்யேக மணம் அவனின் நாசியில் கலந்தது.. அவளின் நிலாமுகம்.. இருளில் பளிச்சென ஒளிர்ந்தது. செல்ல கோவம் அவளுக்கு. அது முகத்தில் நன்றாக தெரிய.. தன்னவனை பார்க்காமல் வேடிக்கை பார்க்கும் படி திரும்பி நின்றாள்.

தெருவில் நியான் விளக்கின் ஒளி.. அதன் அருகே அடர்ந்த மேமர பூக்கள் சிவப்பு வண்ணத்தில்.. காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது.. வர்ஷினியின் பார்வை அங்கே நிலைக்க.. சர்வேஷ் புன்னகையோடு திரும்பி அவளை ஒட்டி உரசி.. காதோரம் “கோவத்தில் அழகா இருக்க..” என்றான் ரகசிய குரலில்.

வர்ஷினிக்கு உடலெல்லாம் சிலிர்க்கத் தொடங்கியது.. ஆனாலும், தன்னவனை முறைத்தாள்.. இல்லை, முறைக்க முயன்றாள்.. ஆனால், அவனின் அருகாமையில் அவளின் கன்னங்கள் சிவந்து போகிற்று.

சர்வேஷ் அதை கண்டுக் கொண்டவன்.. தன்னிரு கைகளால் அவள் கைகளை பற்றிக் கொண்டு.. “இந்த முகத்தை பார்க்கத்தான் வந்தேன்.. இப்படி கோவப்படுற”  என்றான்.

வர்ஷினிக்கு அழுகை, அவனின் கண்களை பார்த்துக்  கொண்டே “எவ்வளோ பயந்தேன் தெரியுமா.. ராக்கிக்கு போன் செய்து கேட்டு.. அத்தனை முறை ட்ரை பண்ணி பார்த்து.. ரொம்ப படுத்தி வைக்கிற நீ” என சொல்லிக் கொண்டு நின்றாள்.

காதலனும் “சாரி.. சாரி..” என்றான்.

அவளின் நேற்றும் இன்றும் கலக்கத்திலேயே கரைந்ததால் வர்ஷினி விடாமல் பேசினாள் “இப்போ எதுக்கு வந்தீங்க சர்வா.. அப்பா இன்று ஈவினிங் உங்களிடம் பேசுகிறேன்னு சொல்லியிருந்தார் தெரியுமா.. எதற்கு அவசரம்.. எங்கிட்ட சொல்லவேயில்ல.. ஈஸியாக நடந்திருக்கும்.. எதுக்கு இவ்வளோ தூரம்” என்றாள் அவனிடமிருந்து தள்ளி நின்று.. கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள்.

சர்வேஷின் பார்வை அவளையே தழுவிக் கொண்டிருந்தது.. அந்த தொலைதூர காதலனுக்கு இன்னமும் நெருங்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.. பெண்ணவள் இன்னமும் அவனை கவனிக்கவில்லை. 

சர்வேஷ், அவள் தன்னை முழுதாக கண்டுக் கொள்ளாததால் “ஷூ.. கொஞ்சம் அமைதியாக இரேன்.. இப்போதான் உன்கிட்ட வர முடிந்தது” என சொல்லி மென்மையாக அவளை அனைத்தான். 

வர்ஷினி என்னமோ சட்டென பதறி விலகினாள்.. அனிச்சையாக.

வர்ஷினியின் பதட்டம் சர்வேஷ்ஷினையும் ஒட்டிக் கொண்டது இப்போது. இருவரும் விலகினர்.

அவளை இவ்வளவு அருகில் பார்த்ததும் காதலன் மனது அணைத்திடவே விரைந்தது.. அந்த வேகம் பெண்ணவளுக்கு பிடிபடாமல் போக.. ஒரு வேகத்தில் அவனிடமிருந்து விலகினால்.. அதை உணர்ந்தவள் முகம் லேசாக சிவந்து போனது.. இப்போது இருவருக்கும் காதலின் பதட்டம். 

பெண்ணவளின் கண்களில் ஒரு புன்னகை.. அதை ரசித்தவன்   “போகும் போதே.. யோசனையோடுதான் போனேன். வேலையே ஒடவில்லை தெரியுமா.. கொஞ்சம் நாம அப்போதே நம்ம லைப் பற்றி யோசித்து.. லவ் பண்ணியிருக்கலாம்.. எத்தனை வருஷம் வேஸ்ட் பண்ணிட்டோம்..” என்றான் பரபரப்பாக.

வர்ஷினி “ம்..” என்றாள் கதைகேட்டும் தொனியில்.. அவளுக்கு அவனின் அருமையின் தாக்கமே குறையவில்லை.. அதனால் பேச்சின் ஆழம் புரியவில்லை.

சர்வா “சாரி, நாம இப்போதே கல்யாணத்தை பற்றி பேசியிருக்க கூடாது போல.. கொஞ்சநாள் லவ் பண்ணிட்டு அப்புறம் பேசியிருக்கனும், ஆனால் அப்படியும் முடியாதுல்ல.. உனக்குதான் கல்யாணத்திற்கு பார்த்துட்டு இருந்தாங்களே.. ஆமாம் எப்படிதான் தனியாக இவர்களிடம் பேசினியோ.. எனக்கு இந்த ஒருநாளே ஹப்பா டான்னு இருக்கு” என பேசிக் கொண்டே இருந்தான்.

வர்ஷினி இப்போதுதான் உணர்ந்தாள்.. சர்வேஷ்ஷின் படபடப்பான பேச்சினை.. நிமிர்ந்து பார்த்தாள்.. நெற்றி வியர்த்திருந்தது.. கைகள் காற்றில் எதையோ தேடியது.. ஒருமாதிரி பரபரப்பாக இருக்கிறான் என கவனித்தாள்.

வர்ஷினி “சர்வா” என அவனின் கைபற்றினாள். லேசான நடுக்கம் அதில்.. அதனால் இறுக்கமாக பிடித்தாள் அவன் கைகளை..  தன் மற்றொரு கை விரலால்.. அவனின் நெற்றி வியர்வையை துடைத்தாள்.. “என்ன” என்றாள் காதலாக.

சர்வேஷ் நெற்றியை தேய்த்துக் கொண்டே அவளின் பார்வையை சந்தித்தான்.. அவளோ கண்களில் காதலோடு நின்றாள். தன்னவளின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டே அவளை தன்னுள் இழுத்துக் கொண்டான்.. “இப்படியே இரேன்” என்றான்.

வர்ஷினிக்கும், அந்த அணைப்பு வேண்டுமாக இருந்தது.. தானும் அவனோடு ஒன்றினாள். தேடலின் தாக்காத்தில் பெண்ணவளுக்கு கண்ணீர் பெருகியது.

தன் நெஞ்சில் ஈரம் உணர்ந்து.. பெண்ணவளின் கண்ணீர் துடைத்தான் தன் விரல்களால். நிமிர்ந்திருந்த முகத்தில் மலர்ந்திருந்த உதடுகள்.. அவனை அழைக்க.. காதலன், பிரிவின் கவிதையை அதில் அழுத்தி எழுதி.. பிரிவு சோகத்தினை தீர்த்துக் கொண்டான் சில நொடிகள். சர்வேஷ்ஷின் படபடப்பு குறைந்தது.. நிதானமானான். பெண்ணவளின் படபடப்பு தொடங்கியது. இருவருக்கும் முதல்முத்தம்.. மிக நீண்டதூரம் கடந்து வந்த காதலின் இளைபாறுதலாக மாறியது இந்த தருணம்.    

அழுத்தமான முத்தம் சிலநொடிகள் நீளவே செய்தது.. மூச்சுகள் எடுக்க இருவரும் சிரமப்பட.. காதலன் தன்னவளை விடுவித்தான். இருவருக்கும் மறக்க முடியாத முதல்முத்தம்.

அங்கேயே கீழே அமர்ந்தாள் பெண்.. அவளோடு அவனும் அமர்ந்துக் கொண்டான். வர்ஷினி மூச்சுகளை சீராக்கிக் கொண்டு “தேங்க்ஸ், வந்ததற்கு” என்றாள்.