அடிக்கடி வீட்டிற்கு அழைத்து சரிகா எப்படி இருக்கிறாள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
மதிய நேரத்திற்கு பிறகு சரியாக நித்திலனும் வந்து சேர்ந்திருக்க.,
சரிகா தான், “என்ன ஆச்சு உங்களையும் அண்ணி பயங்காட்டி விட்டுட்டாங்களா”, என்று சொல்ல.,
“இல்ல இன்னைக்கு நாளைக்கு டெலிவரி இருக்கும் ன்னு சொன்னா”, என்று சொல்ல.,
“ஆமா அப்படி தான் காலையில சொன்னாங்க”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்.,
பாட்டியும் சொன்னார், “அவ அப்பவே இருந்து பாத்ரூம் அடிக்கடி போயிட்டு வாரா., நான் அதை சொல்லிட்டேன் பேத்தி பொண்ணுட்ட., அவ வர்றேன்னு சொன்னா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சித்தார்த்தனும் வர.,
“ஏன் ண்ணா, உனக்கும் பயம் காட்டிட்டாங்களா அண்ணி”, என்று சொல்ல..,
“எனக்கு என்னவோ மாதிரி இருக்கு பாட்டி”, என்று சொல்லும்போதே பாட்டிக்கு புரிந்து போனது.,
‘இவளுக்கு அதிகமான வலி எதுவும் இல்லாமல் இருக்கிறது’, என்று பாட்டியும் அவரைவிட வயதான அருகில் இருப்பவரை கூட்டி வர.,
அவர் தான், “அம்மாடி குழந்தை தலை இறங்கி இருக்கே”, என்று சொல்ல.,
பாட்டியோ, “அவ காலையில பார்க்கும் போது பார்த்தாளா”, என்று கேட்டார்.
“ஆமா அண்ணி பார்த்துட்டு தான் சொல்லிட்டே இருந்தாங்க., எங்கேயும் போகக்கூடாது, நடக்கக்கூடாது, பாத்ரூம் போனா கூட யாரையாவது துணைக்கு வெச்சுக்கணும்னு சொல்லிட்டு தான் போனாங்க”, என்று சொல்ல.,
“சரி சரி கிளம்புங்க”, என்று சொல்லி அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல.,
அனாமிகாவிற்கு சித்தார்த்தன் போன் செய்து சொன்னான்.,
“உன்னோட கெஸ்ஸிங் சரியா இருக்கும் ன்னு சொன்னதுக்கு வீட்ல எல்லாரும் கிண்டல் பண்ணாங்க., இப்ப எல்லாம் ஆஸ்பத்திரி போயிட்டு இருக்காங்க, நீயும் வந்துரு”, என்று சொல்ல.,
அவளோ, “இப்பதான் ஒரு டெலிவரி முடிஞ்சது, அவங்களுக்கான மெடிசின்ஸ் கொடுத்துட்டு மத்தத சிஸ்டர் ட்ட பார்க்க சொல்லிட்டு இப்ப வரேன்”, என்று சொன்னாள்.
அவர்கள் முன்பு செல்ல, அதற்குள் மருத்துவருக்கு இவளும் அழைத்து சொல்லி இருக்க., அங்கு டெலிவரிக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்தது.
இவளும் சற்று நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தாள்.
முகம் வாட்டமாக இருக்க., “வந்துட்டியா, எங்க உன்னை இன்னும் காணுமே நினைச்சேன்”, என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்க.,
“இப்ப போறேன் பாட்டி”, என்று சொல்லும் போதே.,
“நீ உள்ள போய் பாத்துட்டு வா, வந்துட்டு அதுக்கப்புறம் போகலாம்”, என்று சித்து சொல்லவும்.,
இவளும் “சரி” என்று சொல்லி சென்றாள்.
நித்திலன் தான், ‘எதற்கு அழைக்கிறான்’, என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
உள்ளே சென்றவள் அவளுக்கு தேவையானவை எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை பார்த்தவள்., “அண்ணி பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல., நான் கூடவே தான் இருப்பேன்., அண்ணனையும் பிடித்து இழுத்துட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு,
டாக்டரிடம் சென்றவள், “அண்ணனை கூட்டிட்டு வரலாம் இல்ல”, என்று கேட்டாள்.
“உங்க அண்ணன் பயப்பட மாட்டார்னா கூட்டிட்டு வாங்க”, என்று டாக்டரும் சொன்னார்.
சிரித்துக்கொண்டே வெளியே வந்தவள்.,
‘எவ்வளவு நேரம் ஆகும்’ என்று டாக்டர் இடம் கேட்டு விட்டு தான் வந்திருந்தாள்.,
“அவங்களுக்கு வலி வரல., ஆனா பேபி இறங்க ஆரம்பிச்சிருச்சு., இப்ப வலிக்கான மருந்து தான் டிரிப் ல கொடுக்கிறோம்., மே பி சீக்கிரம் இருக்கும்”, என்று சொன்னார்.
இவளும் அதை சொல்வதற்காக வெளியே வந்தவள்., “நான் கூப்பிடும் போது உள்ள வரணும் அண்ணா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சித்தார்த்தன் வந்து சேர்ந்தான்.,
“எங்க போனீங்க”, என்று அவனிடம் கேட்டாள்.
“இந்தா முதல்ல ஒரு கப் பாலைக் குடிச்சிட்டு அதுக்கப்புறம் உள்ள போ”, என்று சொல்லவும்.
அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நித்திலேனோ, “உள்ளே என் பொண்டாட்டி கஷ்டப்பட்டுட்டு இருக்கா”, என்றான்.
” ஹலோ உங்க பொண்டாட்டிய நல்லபடியா காப்பாத்தணும் னா, என் பொண்டாட்டி ஹெல்த்தியா இருக்கணும்”, என்று இவன் பதிலுக்கு சொல்ல.,
இவள்தான், “அய்யோ இருங்க இருங்க, நான் வாரேன்”, என்று சொல்லி அவன் ஊற்றி வைத்திருந்ததை வாங்கி குடித்து விட்டு அதன் பிறகு அவனை பார்த்து சிரித்தபடி உள்ளே சென்றாள்.
அதற்குள் சென்னையில் இருந்து அவர்கள் கிளம்பி விட்டதாக தகவல் வந்தது.
நித்திலன் மனமோ நிறைவாக உணர்ந்தது., ‘என் தங்கையை இவனை விட யாராலும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியாது’, என்ற எண்ணம் மட்டும் அழுத்தமாக பதிந்தது.
சரியாக இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறக்கும் என்ற நிலையில், அவசரமாக மருத்துவ உடையோடு வெளியே வந்தவள்.,
நித்திலனை பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள்.
“எனக்கு பயமா இருக்கு பாப்பா”, என்று சொல்ல.,
“கூட நில்லு அண்ணா., அண்ணி கைய புடிச்சிட்டு, நீ அந்த பக்கமா நில்லு., உன்னை யாரும் இங்க வர சொல்லல”, என்று சொல்லவும்.,
நல்லபடியாக நார்மல் டெலிவரியில் நித்திலன் சரிகாவின் மகன் பிறந்தான்.
அவள் கையில் வாங்கி அவன் தொப்புள் கொடியை கட் செய்து எடுத்தவள்., குழந்தையை தன் கையாலே துடைத்து எடுத்தாள்.
எத்தனையோ டெலிவரி பார்த்திருந்தாலும், இது தன் அண்ணன் மகன்., தன் மருமகன் என்ற எண்ணம் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.,
சரிகாவையும் நித்திலனையும் பார்த்து சிரித்தபடி அவர்கள் கையில் கொடுக்க வந்தாள்.,
அவனும் “வெளியே கொண்டு போய் குழந்தையை காட்டு”, என்று சொன்னான்.
“நீ எடுத்துட்டு போ ண்ணா”, என்று சொன்னாள்.
“பயமா இருக்கே” என்றவனுக்கு தூக்குவதற்கு சொல்லிக் கொடுத்து வெளியே அனுப்பினாள்.
வெளியே வந்தவன் முதன் முதலில் சித்தார்த்தன் கையில் தான் கொடுத்தான்.
கொடுக்கும் முன் அவள் சொல்லிக் கொடுத்தது போல சொல்லியே கொடுத்தான்.
பாட்டியோ, “ஏம்பா நாங்க எல்லாம் இருக்கிறோமே, உன் மாப்பிள்ளை கையில் தான் குடுப்பியா”, என்று கேட்டார்.
“தப்பா நினைக்காதேங்க பாட்டி இவர் மாதிரி, ஒரு நல்ல மனுஷனா என் புள்ள வளரனும்”, என்று சொல்லி அவன் கையில் வைத்திருந்த, தன் மகனின் கையை பிடித்துக் கொண்டான் நித்திலன்.