“அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி..
இவைதானே இவள்இனி..
இமை இரண்டும் தனித்தனி..
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி….”
என்ற வரிகளுக்கு ஏற்ப ஸ்டெல்லா த்ரூவின் அணைப்பில் அழகாக பொருந்தி போய் நின்றிருந்தாள்.
லிஃப்ட்டில் ஏறியவர்கள் கீழ்தள பட்டனை அழுத்திவிட்டு அமைதியாக இருவரும் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் இருப்பது அந்த பில்டிங்கின் பத்தாவது மாடி; அதிலிருந்து லிஃப்ட் இரண்டு தளத்தை கடந்த நிலையில், சிறு குழுங்களுடன் லிப்ஃட் நின்றுவிட,
அந்த அதிர்வில் தடுமாறிய ஸ்டெல்லாவை த்ரூவ் உடனே கீழே விழாமல் அவளின் தோள்களைப் பற்றி அவளை அணைத்தபடி நின்றுவிட்டான்.
த்ரூவின் அழுத்தமான பிடியில் தோள்கள் வலிக்க அவனைத் திரும்பிப் பார்க்க, அதே நேரம் பதட்டமாக அவனும் அவள் பக்கம் திரும்பினான்.
பதட்டமாக இவளை இவன் ஆராய, இவளோ துளி பதட்டம் இன்றி அவன் கண்ணில் இவளுக்காக தோன்றிய பதட்டத்தையும், அவனின் அன்பிலும் மயங்கி கொண்டு இருந்தாள்.
நெருப்பாகத் தகித்துக் கொண்டிருந்தவள் இவனிடம் மட்டும் தன்னை மறந்து தனிந்து, தளர்ந்து, நெகிழ்ந்து போய் அவன் கையில் அணைந்து போய் இருந்தாள்.
முதலில் பதறித் தான் அவளைப் பார்த்தான் த்ரூவ்; பின் அவன் கண்கள் சிறிது சிறிதாகத் தன்னவளின் அருகாமையில் பதற்ற பார்வை போய் ரசனைப் பார்வை வந்து ஒட்டிக்கொள்ள, அவள் முகத்தையே ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் இருக்கும் இறுக்கம் அவளிடம் இப்போது இல்லை; அதேபோல எப்போதும் அவனிடம் இருக்கும் பயம் இப்போது அவனிடம் இல்லை.
தயக்கம் இன்றி, தடுமாற்றம் இன்றி, ஒரு அணைப்பு இதமாக, பதமாக, அதே சமயம் அழுத்தமாக.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எவ்வளவு நேரம் நின்றார்களோ; அவர்களின் அமைதியை கலைக்கவே த்ரூவின் நெற்றியில் இருந்து வியர்வை துளி மெல்ல உருண்டு,
ஸ்டெல்லாவுடன் இணைந்தே தீருவேன் என்று ஆழகாக அவளின் நுனி மூக்கின் மீது விழுந்து வைரமாக மின்னியது.
இவனை விட அவனின் வியர்வை துளி அவளுடன் ஒட்டி இருந்தது பிடிக்கவில்லை போலும். அதை உதடு கடித்துப் பார்த்தவன், என்ன நினைத்தானோ, அவன் உதட்டை குவித்து அந்த வியர்வை துளி மீது ஊத அது மெல்ல உருண்டு கீழே தெருத்தது.
த்ரூவின் சூடான காற்று முகத்தில் பட கண்களை மூடி திறந்தவள் நினைவு வந்தவளாக , உடல் அதிர கனவில் இருந்து கலைந்தவள் போல அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு நகர்ந்து
இவள் முகத்தை மறுபுறம் திருப்பி அவள் சிவந்த முகத்தை மறைத்தபடி,
“உங்க பீஏக்கு கால் பண்ணி என்னன்னு கேளுங்க த்ரூவ்” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு “இல்ல சார்…” என்று திருத்தவும், குறளை சிரிமியவன் உதட்டில் தொன்றிய சிரிப்புடன் த்ரூவ்,
“ம்க்கும்…. அப்படியே கூப்பிட்டாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று சிரித்தபடி போனை எடுத்து தருணுக்கு அழைத்தான்.
அந்தபுறம் போனை எடுத்த தருண் த்ரூவ் பேசுவதற்கு முன்பே “என்ன சார், என்ன வேணும் சொல்லுங்க… எல்லாம் ஓகேவா?” என்று கிசுகிசுப்பாக, அதே சமயம் ஆர்வமாக கேட்டவனின் குறளில் அதிர்ந்தவன்,
“அட பாவி, இதுவும் உன் வேலையா…” என்று எண்ணியவன், அதை வெளிக்காட்டாது ஒன்றும் தெரியாதது போல,
“இங்க லிஃப்ட்ல மாட்டிக்கிட்டோம், என்னன்னு செக் பண்ண சொல்லு தருண்.”
“என்ன சார் சொல்றீங்க, மாட்டிக்கிட்டீங்களா?” என்று பயத்துடன் அதிர்வது போல பாசாங்கு காட்டியவன்
“இதோ உடனே என்னன்னு பார்க்கிறேன் சார்” என்று போனை வைத்துவிட்டான்.
“பேசாம ஆக்டிங் ஸ்கூல் ஒன்னு ஓப்பன் பண்ணிருங்க, உங்க ரெண்டு பேருக்கும் சரியா இருக்கும்” என்ற ஸ்டெல்லாவை கண்களை சிமிட்டி பாவமாக முகத்தை வைத்துப் பார்த்தவன்
“என்ன சொல்ற ஸ்டெல்லா, எனக்கு புரியல” என்றவனை,
“அடேய்… அவன் பேசுனது பாத்தாலே தெளிவா அவன் வேலைன்னு தெரியுது. இருந்தும் ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற பாத்தியா, உன்ன…” என்று மனதில் நினைத்துக் கொண்டவள்.
தலையை மறுப்புடன் அசைத்து அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, திரும்பி வெளியில் அந்த இரவின் அழகை ரசிக்கத் தொடங்கினாள்.
அது ஒரு கண்ணாடி லிஃப்ட், உள்ளே இருப்பது வெளியிலும், வெளியில் இருப்பது உள்ளேயும் நன்றாகத் தெரியும்.
அதில் வெளிப்பக்கமாக பார்த்து மார்பில் கை கட்டி நின்றவள், இரவில் சிறு சிறு மின்மினி போல மின்னிக்கொண்டிருக்கும் பில்டிங்கை ரசித்துப் பார்த்தபடி லிஃப்டில் தலைசாய்த்து நின்று கொண்டிருந்தாள்.
அவளுக்குப் பின்னாலேயே சிறு இடைவெளி விட்டு நின்றவன், அவள் சாய்ந்து நிற்பது போலவே இவனும் சாய்ந்து நின்றவன்.
அவளின் தோளில் துளிர்த்து நின்ற வியர்வை மொட்டுகளை வாய் குவித்து ஊதவும், ஸ்டெல்லாவின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்க, அவனை லேசாகத் திரும்பிப் பார்த்து முறைக்கவும்
“இல்ல வேர்த்திச்சி….” என்று அவள் பார்வையில் ஏதோ பிதற்றவும், அவள் மீண்டும் முகத்தைத் திருப்பித் கொட்டாள்.
அவள் முகத்தை திரும்பிய உடன் நெஞ்சில் கை வைத்து ஆஸ்வாசம் ஆனவன் அமைதியாக அவளையும் அவளது நேர்த்தியையும் அவளை தொந்தரவு பண்ணாது நல்ல பிள்ளை போல ரசிக்க தொடங்கினான்.
குர்தி டாப், ஜீன்ஸ் அணிந்திருந்தவள் மேக்கப் எதுவும் இன்றியே அத்தனை அழகாக இருந்தாள். என்ன அந்த அழகிய முகத்தில் புன்னகைக்கு மட்டும் இடம் இல்லாமல் போய்விட்டது என்று யோசித்த படியே அவள் முடியை பார்த்தான்.
சுருள் சுருளான கருங்கூந்தல் இடுப்பிற்குச் சற்று மேலே வரை நீண்டு இருக்க, அவை அனைத்தையும் ஒன்றாக அடக்கி பேண்ட்டில் குதிரைவாலாகப் போட்டிருந்தாள்.
லிஃப்டில் மாட்டப்பட்டிருந்த அந்த சிறிய எக்ஸாஸ்ட் வழியே வந்த மெல்லிய காற்றில் நடனமாடிக்கொண்டிருந்த அந்த மயிரிழைகளுடன் இவன் விரல்களும் நடனமாட ஆசைப்பட்டது போல.
அமைதியாக ஸ்டெல்லாவைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்து ஐந்து நிமிடம் கூட கடந்திருக்காது; அதற்குள் அவன் கை,
‘நான் உன் பேச்சைக் கேட்க மாட்டேன் போடா’ என்று அடம்பிடிக்கத் தொடங்கிவிட, அவனால் அவனையே அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
த்ரூவ் மெல்லக் அவன் கைகளை உயர்த்தி அவளின் குதிரைவாலில் கை நுழைத்தவன், அதனுடன் விளையாடத் தொடங்கிவிட்டான்.
இவள் முறைத்து விட்டு திரும்பியதில் த்ரூவ் அமைதியாகி விடவும்
“என்ன திடீர் அமைதி…” என்று யோசனையாக இவள் நின்று கொண்டிருந்த நேரம் தான், அவள் முடியுடன் விளையாடத் தொடங்கினான் த்ரூவ்.
அதில் கண்களை விரித்து அதிர்ச்சியில் அவள் டாப்பை பிடித்தபடி நேராக நின்றவளுக்கு, வேறு என்ன செய்ய என்று ஒன்றும் தோன்றாமல் போனது தான் அதிசயம்.
‘அவனை பிடித்து தள்ளி அறைந்து விட சொன்ன மூளையை அதட்டி கட்டி போட்டு வைத்த மனது இவளையும் அசைய விடாது செய்து விட்டது.
ஸ்டெல்லாவின் உடல் நடுக்கத்தில் மெல்ல சிரித்தவன், மெல்ல அவன் முகத்தை அவளின் முகம் அருகே கொண்டு சென்று காதோரம் குனிந்து
“ரொம்ப சாஃப்டா சென்சிட்டிவ்வா இருக்கு ஸ்டெல்லா…… உன் முடி…” என்றவன், அவளின் பின் கழுத்தின் கீழே இருந்த சிறு முடிகளைத் வருடியபடி, மெல்ல நகர்ந்து அவள் காதின் அருகே இருந்த முடிகளைத் வருடி அவளின் காது பின்னே தள்ள
அதில் அவள் முகம் மேலும் சிவந்து போகவும், அதை பார்த்து ரசித்தவன் அவன் கட்டுபாட்டை முழுதும் இழந்தான்.
ஸ்டெல்லாவின் சிவந்த முகத்தை பார்த்தவன் மெல்ல அவளின் முகம் அருகே நகர்ந்து அவளின் சிவந்த கன்னத்தில் மிக, மிக மென்மையாக அவனின் உதடுகள் தொட்டும் தொடாமல் இவன் மீசை முடி உரச அவளின் கன்னத்தில் இவன் உதடு மென்மையாக தீண்டி செல்லவும்
அதில் உடல் கூச, காலின் விரல்களை அழுத்தி கீழே ஊன்றி நின்றவள், அவளின் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
த்ரூவ், ஸ்டெல்லா கசக்கி கொண்டிருந்த அவளின் டாப்பில் இருந்த, அவளின் இரு கைகளையும் அவனின் இரு கைகளுக்குள் கொண்டு வந்தவன்
அவளின் பின் இருந்தவாரே அவள் முன்னே அவள் கைகளை அவன் கைகளுக்குள் பத்திரமாகப் பிடித்து வைத்தபடி
“என் கைக்குள்ள உன் கை ஸ்டெல்லா, பாரு… எவ்ளோ அழகா பொருந்திப் போய்டுச்சு, பாருடி…” என்றவனின் கிசு கிசுப்பான குரல் அவனின் சூடான மூச்சுக்காற்றோடு அவள் காதில் தீண்ட, மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.
ஆம், அவன் சொன்னது போலவே இருந்தது; அவனின் கைகளுக்குள் இவளின் கை. அதைப்பார்த்ததும் இவளின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்க
முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிர்க்கத் கண்கள் படபடக்க வேகமாக மூச்சு விட்டவளை பார்த்த த்ரூவ்
“ஹே…. ஸ்டெல்லா…. என்னாச்சு? ஏன் இவ்வளவு பதட்டம்? ரிலாக்ஸ் டி…” என்று அவன் வாய் பேசினாலும், இவன் அவளின் கையைப் பிடித்தபடி தான் இருந்தான்.
“ஸ்டெல்லா…. ரிலாக்ஸ்…டி நான் தான உன்ன ஒன்னும் பண்ண மாட்டன் டி…” என்று அவளை பேசி பேசி இயல்புக்கு கோண்டு வந்தவன்.
அவளின் மூடியிருந்த கையை விரித்து, அவள் நகம், விரல் என்று அனைத்தையும் பிடித்து நசுக்கி விளையாடியவனை தள்ளி விடத் தோன்றாது, ஏதோ வசியம் செய்தது போல அவனுக்கு இசைந்து அசையாமல் நின்றாள்.
இங்கு இவனோ அவள் கைரேகைகளின் மீது அவன் விரலை வைத்து கோடிட்டு, அவளைக் கூசச் செய்ய, விரல்களைப் பட் என்று மூடிக்கொண்டாள்.
அதில் “ப்ஷ்…. ஸ்டெல்லா…. கையைத் திற…” என்றதும் அவன் குறளில் இவளும் மெல்ல கைகளை விரிக்கவும், மீண்டும் அவள் ரேகையைப் பார்த்தவன்
“எனக்கு இந்த கைரேகையெல்லாம் கொஞ்சம் கோஞ்சம் தெரியும் ஸ்டெல்லா…” என்று அவள் ரேகையை வருடியபடி
“இதோ… இதுதான் படிக்கிற ரேகையினு சொல்லுவாங்க, உனக்கு நல்லா நீலமா இருக்கு, நல்ல படிப்பியா டி..” என்றவன் அடுத்த ரேகையைத் தடவி,
“இது என்ன ரேகை தெரியுமா…..” என்றதற்கு மறுப்பாக இவள் தலையை ஆட்டவும்,
“இதை கல்யாணம் ரேகன்னு சொல்லுவாங்க, இது எவ்வளவு நீலமா இருக்கோ அவ்வளவுக்கு புருஷனை டார்ச்சர் பண்ணுவாங்களாம்” என்றவன் அதன் நீலத்தைச் சுட்டி காட்டி,
“என்ன டார்ச்சர் பண்ண மாட்டியா டி? இவ்வளவு சின்னதா இருக்கு, பரவால்ல நான் கொஞ்சம் லக்கி தான் போல இந்த விஷயத்துல என்று சிரித்தவனை
உதடு சுளித்து பார்த்தவள் அவன் அணைப்பிலிருந்தும் வெளிவந்து.
அவனை நோக்கி கை நீட்டி “சார், லிமிட் கிராஸ் பண்ணாதீங்க முதல்ல டி போட்டு பேசுறத நிறுத்துங்க ” என்று மிரட்ட முயற்றவளின் முகம் வெட்கத்தில் குங்கமாக சிவந்து இருந்தது,
அதை பார்த்து ரசித்தபடி அவளின் கையை மீண்டும் பற்றி அவன் பக்கம் இழுத்தவன்.
என்று புருவம் உயர்த்தியவன், ஸ்டெல்லாவின் கைகளை விரித்து அதன் அருகே இவன் கையையும் இணைத்து வைத்தவன்
“ஒன்னு… ரெண்டு…. மூணு…. வாவ் ஸ்டெல்லா மூணு போதுமா….” என்று இருவர் கையில் இருந்த ரேகையை எண்ணியவன், புன்னகைத்து அவளை பார்க்க,
அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் மேனி கூசி சிலிர்க்க இதற்கு மேலே இப்படி இவன் முன் நிற்க முடியாது என்று உணர்ந்தவள்
அவனை தள்ளிவிட, அதே சமயம் லிஃப்டின் கதவுகள் திறக்கவும் வேகமாக வெளியே ஓடி சென்றவள்
நெஞ்சில் கை வைத்தபடி தூனின் பின்னே மூச்சு வாங்க நின்றவள். கண்களை மூடி அவளை அமைதிப்படுத்த முயன்றாள். வெளியே இங்கு வந்தும் த்ரூவ் அவளுடனே நிற்பது போல அவனின் பிரத்யேக பெர்ஃயூம் வாசனை இவள் மீது வீசும் பிரம்மை தொன்ற
அவளால் இயல்புக்குத் திரும்பவே மிகச் சிரமமாகத்தான் இருந்தது. இவளைப் போலவே தான் அங்கு த்ரூவின் நிலையும்; ஸ்டெல்லா சென்ற பிறகு கையை நெஞ்சில் வைத்துச் சாய்ந்து கொண்டவன்.
“ப்ரோ… பொறுமை பொறுமை… ஏன் இத்தனை வேகம்?” என்று அவன் இதயத்திடம் பேசியவன், மூச்சை இழுத்து விட்டுத் தலைமுடியைக் கோதி நிதானமாக வெளியே வந்தான்.
இங்கு த்ரூவ் வருவதைப் பார்த்த ஸ்டெல்லா அவனைப் பார்க்காது அவன் முன்னே வேகமாக வாசலை நோக்கிச் சென்றாள்; அங்கே தருண் த்ரூவுக்காகக் கார் அருகே நின்று கொண்டிருந்தான்.
தருணை அங்கே பார்த்ததும் எங்கிருந்த தான் கோபம் வந்ததோ அவளுக்கு வேகமாக அவன் அருகே சென்றாள்.
அலுவலகத்தில் இருந்து சிவந்த முகத்துடன் வரும் ஸ்டெல்லாவை எல்லாம் ஓகேவா என்று எதிர்பார்ப்புடன் இவன் பார்க்க
அவன் என்ன என்று உணரும் முன் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தால் ஸ்டெல்லா; அதில் அதிர்ந்து போய் தருண் அவளைப் பார்க்க, ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரித்தவள்,
“என்னொரு தடவை இப்படி ஏதாவது ஸ்டண்ட் பண்ணிட்டு இருந்த பிச்சிடுவேன் உன்ன?” என்று மிரட்டி விட்டு, அவளுக்காகக் காத்திருந்த காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.
இவற்றை பார்த்தபடி விசில் அடித்துக்கொண்டு வந்த த்ரூவ், “இது தேவையாடா உனக்கு? அவளைப் பத்தி தெரிஞ்சும் இப்படி பிளான் போட்டுருக்க? பரவலா தைரியம் தான் உனக்கு” என்றவன்.
ஸ்டெல்லா அடித்துச் சென்ற அதே கன்னத்தை லேசாகத் தட்டி,
“இருந்தாலும் நல்ல பிளான் போட்டுருக்க தருண், குட் ஜாப்!” என்று சொல்லிவிட்டு, விசில் அடித்துக்கொண்டே காரில் ஏறி அமர்ந்துவிட்டான்.
இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஸ்டெல்லாவின் முகம் எப்போதும் போல் இல்லாமல் மலர்ந்து போய் இருக்க, அவளுக்குள் எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
மலரத் துடிக்கும் உணர்வுகளை எத்தனை நாள் தான் மூடி போட்டு வைக்க முடியும் என்பதையும் பார்ப்போம்.