16

அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல்

இந்த நெஞ்சில் நிற்கிறது

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு

என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக

உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

பின்பு மோகனப் பாட்டெடுத்தோம்

முழு மூச்சுடன் காதலித்தோம்

   ரயில் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் அவன் கையை கோர்த்துக்கொண்டு அவன் புஜத்தில் தலை சாய்த்தவள், அப்படியே உறங்க தொடங்கி இருந்தாள். அவள் உச்சந்தலையில் கன்னம் பதித்தவன் உறங்கிப் போயிருந்தான்.

    இருவரும் அதிகாலையிலே கிளம்பியதால் தூக்கத்தில் இருக்க, அவர்களை ஒரு முறைக்கு இருமுறையாக கடந்து சென்ற ஒருவனின் பார்வை அடிக்கடி சித்தார்த்தை பார்த்து சென்றது.

    “இது ரவியோட அண்ணன் இல்ல”, என்று சொல்லி சரிகாவின் அண்ணன் பெயரை சொல்லிக் கொண்டிருந்தான்.

   அவன் சரிகாவின் அண்ணன் உடன்படித்தவன், ‘கல்யாணம் ஆயிடுச்சா நமக்கு சொல்லவே இல்ல’, என்று யோசித்தவன்.

     தன் தோழனுக்கு மெசேஜ் செய்தான்,  ‘அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, எங்களை எல்லாம் கூப்பிடவே இல்ல’, என்று கேட்டான்.

    “டேய் அது எப்படி உன்கிட்ட சொல்லாம இருப்பேன், தங்கச்சிக்கே கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் முடியல”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்.,

    “அப்ப உங்க அண்ணன் கூட இருக்கிற பொண்ணு”, என்று மெசேஜ் செய்ய.,

    “என்னது, அண்ணன் கூட பொண்ணா” என்று அவனும் பதில் மெசேஜ் செய்தவன். உடனே அழைத்து விட்டான்.

       “ஆமாடா டிரெயின்ல பார்த்தேனே, இப்ப கூட அவங்கள கிராஸ் பண்ணி தான் வந்தேன்”, என்று அழைப்பில் பேச,

     “சரி எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணு, முடிஞ்சா மெதுவா போட்டோ எடுத்து அனுப்பி வைக்கிறியா., பொண்ணு யாருன்னு பாத்துரலாம்”, என்று சொல்ல.,

    “டேய் கல்யாணம் ஆகலையா, என்னடா சொல்ற” என்று இங்கிருந்து கேட்க.,

     “கல்யாணம் ஆகல டா, இப்பதான் பொண்ணு பாத்துட்டு இருக்காங்க., எங்க அம்மா அப்பப்ப என்னத்தையாவது பிரச்சனை கிளப்பி விட்டுடுமா., அதனால இப்ப ஸ்டாப் பண்ணி வச்சிருக்காங்க., பெரியம்மா சொல்லிட்டு தான் இருக்காங்க., பாட்டியும்  தான்., ஆனா எங்க அம்மா தான் அப்பப்ப ஏதாவது குட்டயை குழப்பி விடுமே”, என்று சொல்ல.,

     “இல்லடா பார்க்க இரண்டு பேரும் கப்புல் மாதிரி இருக்காங்க., மேரேஜ் ஆகல லவ் பண்றவங்கன்னு கூட சொல்ல முடியாது டா”, என்று சொல்லவும்.,

     “அப்படியா சொல்ற, சரி போட்டோ எடுத்து அனுப்பு”, என்று சொல்ல.,

    “சரி”, என்று சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டு

      மீண்டும் அவ்விடத்தை கிராஸ் செய்யும்போது முடிந்த அளவு யாரையும் கவறாத வண்ணம் போட்டோ எடுத்தான்.,

    லேசாக முகம் தெரிந்தாலும் போதும் என்று அவன் அனுப்ப முயற்சி செய்ய., அப்போது பார்த்து அவனது செல் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட.,  சார்ஜரில் போட்டவன்.

      “ஐயோ பேசாம அண்ணன் கிட்ட நேர்ல போய் பேசிடுவோமா”.,  என்று யோசித்தவன்.,

       “இல்ல வேண்டாம் வேண்டாம்., கண்டிப்பா ரவிக்கு சொல்லியிருப்பேன்னு தெரிஞ்சுரும்.,  வேண்டாம் அவர்களே பேசட்டும்,  நம்ம இங்கேயே இருந்துக்குவோம்” என்று சொல்லி அவனிடத்திலேயே அமர்ந்து கொண்டான்.

    பின்பு சார்ஜ் ஏறியதும் அவன் புகைப்படத்தை அனுப்பி வைக்க., இவர்கள் அதற்குள் மதுரையிலேயே இறங்கி இருந்தனர்.

   அவன் தான், “இப்படியே ஹாஸ்பிடல் போறீயா, இல்ல வீட்டுக்கு போறியா”, என்று கேட்டான்.

     “வீட்டுக்கு போயிட்டு உடனே ஹாஸ்பிடல் கிளம்பி வரணும்”, என்று சொன்னாள்.

    “அப்போ ஹாஸ்பிடல் ஒர்க்க முடிச்சுட்டே போக வேண்டியது தானே”, என்று கேட்டான்.

   “லக்கேஜ் எல்லாம் வச்சுட்டு ஹாஸ்பிடல் போக முடியாது., கொஞ்சம் டயர்டா இருக்கு, போய் ஒரு குளியல் போட்டுவிட்டு கிளம்பி வரேன்., ஒன் ஓ கிளாக் டியூட்டி தானே”, என்று சொன்னாள்.

    “சரி ஓகே பார்த்து”, என்று சொல்லவும்.,

      இவளோ, “நீங்க வீட்டுக்கு வரலையா”, என்றாள்.

  “தேனில வொர்க் இருக்கு, இப்ப நேரா அங்கதான் போகனும், காரை இங்க தான் விட்டுட்டு போயிருக்கேன்,  எடுத்துட்டு  போயிடலாம்”, என்று சொன்னான்.

இவளோ “சரி” என்று சொல்லவும்,

      அவன் தான், “நான் வேணும்னா, உன்ன வீட்ல விட்டுட்டு போகட்டா”, என்றான்.

    “வரீங்களா”, என்று சிரித்தபடி கேட்க.,

      “போனா, இன்னைக்கு இரண்டு பேரும் மாட்டிருவோம்”, என்று சொல்ல.,

       “மாட்டுவோம்” என்று சந்தோசமாக சொல்லவும்.,

      “உனக்கு நல்லா ஜாலியா இருக்கு”, என்றான்.

     “ஜாலியா இருக்கு தான், ரெண்டு பேமிலியும் எப்படி பேசுவாங்கன்னு எக்ஸ்பெக்ட்ஷனோட இருக்கேன்”, என்று சொல்லவும்.

   அவனும் சிரித்துக் கொண்டே, “சரி நான் தேனி போயிட்டு அப்புறமா வரேன், உனக்கு ஆட்டோ புடிச்சு தந்துட்டு போறேன்”, என்று சொல்லி ஆட்டோ பிடித்து அவளை அனுப்பி வைத்து விட்டு, அதன் பிறகு அவன் கிளம்பினான்.

    அதற்குள் ரவி வேலையாக இருக்க போட்டோவை பார்க்கவில்லை,

     மதியம் போல பார்த்தவன் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்., ‘இது சரிகாவோட நாத்தனார்’ என்று நினைத்தவன்., ‘வீட்டுக்கு தெரியுமா, தெரிய வாய்ப்பே இல்லை’ என்று நினைத்துக் கொண்டான்.

      அவன் வேலையாக இருந்ததால், ‘எப்படி வீட்ல சொல்ல’ என்று யோசித்தவன்., ‘வேற வழி இல்ல சொல்லிருவோம்’ என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான்.

    அவளோ அப்போது தான் கிளம்பி காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

    “ட்ரெயின்ல பார்த்தோம் னா”, என்று யோசித்துக் கொண்டே அவன் உள்ளே சென்றான்.

   காரில் சென்றவளும் அவனை கவனிக்கவில்லை., அவனும் 12 மணி போல வீட்டிற்கு வந்திருந்தான். இவளும் அதே நேரத்தில் தான் வீட்டை விட்டு கிளம்பி இருந்தாள்.

     “எப்படி சொல்ல” என்று யோசித்துக் கொண்டே இருந்தவன், ‘சொல்லாமல் இருந்தாலும் பிரச்சனை., சொன்னாலும் பிரச்சனை’, என்று குழம்பிக் கொண்டிருந்தான்.

         இவள் வீட்டில் இருந்து கிளம்பும் போதே சித்து விற்கு ஃபோன் செய்து “ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன்” என்று சொன்னவள்.,

    ஏற்கனவே வீட்டிற்கும் தகவல் சொல்லி இருந்ததால்  பெரிதாக தோன்றவில்லை. எப்படியும்  பத்திரமாக சென்று இருப்பாள் என்ற எண்ணம் தான்.

     வீட்டிற்கு அமைதியாக  வந்தவன், “எல்லார்ட்டையும் பேசணுமே பாட்டி”,  என்றான்.

    பாட்டி தான், “என்னடா திடீர்னு பேசணும்ங்க, என்ன விஷயம்”, என்று கேட்டார்.

      அம்மா, சித்தி, பெரியம்மா, என்று இருப்பதை பார்த்தவன்.,  “தாத்தா எங்க பாட்டி “, என்றான்.

    அப்போது தான் தோட்டத்திற்கு சென்றிருந்தவர், வீட்டுக்கு வர, “அப்பா பெரியப்பா சித்தப்பா எல்லாம் எங்க”, என்றான்.

     “எல்லாரும் வெளியே வேலையா இருக்காங்க,  முக்கியமான விஷயமா கண்டிப்பா எல்லாரும் வர சொல்லனுமா”, என்று பாட்டி கேட்டார்.

     “இல்ல அண்ணாக்கு மேரேஜ்”, என்று பேச்சு எடுக்க.,

     “ஏண்டா சும்மா இருடா, அவன் அன்னைக்கு தான் ஒரு ஆட்டம் ஆடி இருக்கான்”, என்று பாட்டி சொல்லவும்.,

      பெரியம்மாவிடம் திரும்பியவன், “நீங்க அண்ணாக்கு ஏதும் பொண்ணு பாக்குறீங்களா”, என்றான்.

     “ஏன்டா”, என்று கேட்க,

    “அண்ணா ஒரு பொண்ண லவ் பண்றாங்கன்னு நினைக்கிறேன்”, என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றான், குடும்பம் அத்தனையும் அவனை தான் திரும்பி பார்த்தது.,

    “என்னடா சொல்ற” என்று தாத்தா பாட்டி கேட்க .,

    அவன் அம்மாவோ, “என்ன சொல்ற, தெளிவா சொல்லு”, என்று சொன்னார்.

    “அவனாவது லவ் பண்றதாவது”, என்று அவன் கடைசி சித்தி பேச.,

     “இல்ல, நீங்க அண்ணா கிட்ட கேளுங்க, இன்னைக்கு தான் அண்ணா மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்க, இப்பதான் தேனி போயிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்., என்னோட கெஸ்ஸிங் சரியா இருந்தா அண்ணா தேனிக்கு போயிட்டு இருக்கணும், வீட்டுக்கு வரல இல்ல”, என்று சொல்ல.,

     “இல்லையடா, ஏன்” என்று மீண்டும் கேட்டனர்.

     ” இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

     தாத்தா தான்,  “கொஞ்சம் இரு, நீ சொல்ற மாதிரி அவன் தேனிக்கு போயிட்டு இருந்தானா, இப்ப அவனை இங்க வர சொல்றேன்”, என்று சொல்லவும்.

      “தாத்தா இப்ப வர சொல்லாதீங்க., அண்ணா தேனிக்கு போயிட்டு இருக்காங்களான்னு மட்டும் கேளுங்க., அதுக்கு அப்புறமா பேசலாம்”, என்று சொல்லவும்.

     அவரும் அழைக்க,  உடனே போன் எடுத்தான்., “என்ன தாத்தா” என்றான்.