அத்தியாயம் 13 :

திகைத்து நின்றவனை பார்த்த விவேக் ”அதி நமக்கு டைம் அதிகம் இல்லை” என்று உலுக்க, திகைப்பில் இருந்து மீண்டவனின் கண்கள் அந்த திரையையே பார்த்திருந்தது.

“கேமரா நம்பர் த்ரீயை ஜூம் பண்ணுங்க” என்றவன் எதையோ ஆழ்ந்து நோக்க,

“என்னாச்சு அதி?”

“விவேக் இங்க பாரு..! மொழி லிப்ட்கிட்ட போன டைமும், ரூம்க்கு போன டைமும்..” என்று காட்ட, பார்த்த விவேக் அதிர்ந்தான்.

“எஸ் அதி! லிப்ட்ல இருந்து ரூம்க்கு போக ஜஸ்ட் மூணு நிமிஷம் தான ஆகும். ஆனா இங்க என்னடான்னா பத்து நிமிஷம் டிபரன்ஸ் இருக்கு” என்ற விவேக்கும் எதுவும் புரியவில்லை.

“எஸ்..! இடையில எங்கயும் மொழி வெளிய வந்ததா எந்த கேமரா ரெக்கார்ட்லயும் பதிவாகலை. இதுல இருந்து என்ன தெரியுது?” என்றான் தீரன்.

“புரியலை அதி” என்றான் விவேக்.

“லிப்ட்ல  மொழி கூட கண்டிப்பா யாரோ இருந்திருக்காங்க. அந்த பத்து நிமிஷம் மொழி லிப்ட்ல தான் இருந்திருக்கணும். எல்லா கேமராவையும் பாரு. அந்த பத்து நிமிஷம் லிப்ட் எந்த ப்ளோர்லயும் ஸ்டாப் ஆகலை. லிப்ட்ல இருந்து யாரும் வெளிய வந்த மாதிரியும் இல்லை.சோ, லிப்ட் பத்து நிமிஷம் ஆப்ல இருந்திருக்கு” என்றான் தீரன்.

“அதுக்கும் மொழி அந்த ரூம்க்கு போனதுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும் அதி?” என்றான் விவேக் புரியாமல்.

“நல்லா பாரு விவேக்! கார்ல இருந்து இறங்கிப் போகும் போது மொழியோட நடையையும், லிப்ட்ல இருந்து போகும் போது மொழியோட நடையையும் கொஞ்சம் குளோசா வாட்ச் பண்ணு” என்றான் தீரன்.

தீரன் சொன்னதைப் போல் சற்று கூர்ந்து கவனித்த விவேக்கிற்கு தெளிவாய் புரிந்து போனது.

“மை காட் ! அதி அவங்க லைட்டா தள்ளாடி நடக்குற மாதிரி தான் இருக்கு” என்றான் விவேக்.

“கரெக்ட் விவேக்! அதாவது அந்த ரூம்க்கு போற வரைக்கும் கொஞ்சம் நிதானம் இருந்திருக்கும். இது என்னோட கெஸ்ஸிங் தான். இது தப்பாவும் இருக்கலாம். பட், லிப்ட்ல வச்சு ஏன் மொழிக்கு ட்ரக் இன்ஜெக்ட் பண்ணியிருக்கக் கூடாது?” என்ற தீரனின் கேள்வியில் விவேக்கிற்கு இப்போது தான் புரிந்தது.

“இப்படியும் இருக்கலாம் அதி. பட் கார்ல இருந்து மொழி நார்மலா தான வந்தாங்க. அது தான் புரியலை” என்றான்.

“அதுக்கான பதிலை மொழிகிட்ட தான் கேட்கணும் விவேக். அது மட்டுமில்ல, இந்த சிசிடிவி புட்டேஜ அப்படியே விட்டு வச்சிருக்காங்கன்னா  என்ன அர்த்தம்? மொழிக்கு எதிரான ஆதாரங்களை அவங்களே கிரியேட் பண்றாங்கன்னு அர்த்தம். உண்மையா கடத்துறவன் இப்படி வீடியோ புட்டேஜ் வரைக்கும் க்ளூ குடுத்து கடத்த மாட்டான். சோ அவங்க நோக்கம் மொழியையை கடத்துறது இல்லை” என்றவன் ஆழ்ந்து சுவாசித்தான்.

“இப்போ என்ன பண்றது அதி? நாம அந்த ரூம்க்கு போய் பார்க்கலாமா?” என்று விவேக் கேட்க,

“இது முழுக்க முழுக்க மொழிக்கு விரிக்கப்பட்ட வலையா இருக்கலாம் விவேக். இந்த ட்ரக்ஸ் கேஸ்ல அவங்களை ஸ்ட்ராங்கா சிக்க வைக்கணும்னு நினைச்சு பண்ணியிருந்தாலும் ஏன் ஹோட்டல் ரூம்க்கு வர வைக்கணும்?” என்று விரல்களால் தலையைத் தேய்த்துக் கொண்டவனுக்கு, சட்டென்று புத்தியில் உரைத்தது.

“மை காட்..! விவேக், சம்திங் பிஷ்ஷி. நாம உடனே அந்த ரூம்க்கு போயாகனும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குமரன் அவனுக்கு அழைத்திருந்தான்.

“சொல்லுங்க குமரன்”

“சார் எங்க இருக்கீங்க?விஷயம் நம்ம கையை மீறி போய்டுச்சு” என்றான் குமரன் பதட்டத்துடன்.

“என்ன சொல்றிங்க குமரன்?” என்ற தீரனுக்கு மனம் அடித்துக் கொண்டது.

“எல்லா நியூஸ் சேனல்லையும் மொழி பத்தின நியூஸ் தான் சார்” என்ற குமரன், தீரனின் மனநிலையை எண்ணி கவலை கொண்டான்.

“வாட்..!!” என்ற தீரன் அழைப்பை துண்டித்து விட்டு வேகமாய் அலைபேசியில் பார்க்க,

“அமைச்சரின் மகளின் உல்லாச வீடியோ என்று ஒரு சேனலிலும், அமைச்சர் ராஜ ராஜனின் மகள் நட்சத்திர சொகுசு விடுதியில்  ஆண் நண்பருடன் உல்லாசம்” என்று ஒரு சேனலிலும் செய்திகள் ஓட, அறையில் எடுக்கப்பட்ட ஒரு ஒரு நிமிட வீடியோவும் ஓடிக் கொண்டிருந்தது. மொழியுடன் இருந்த ஆணின் முகம் தெரியாமல், மொழியின் முகம் மட்டும் தெளிவாய் தெரியும் படி எடுக்கப்பட்டிருந்தது அந்த வீடியோ. அதில் மொழியோ போதையில் உளறியபடியும், உடம்பை வளைத்து நடனமாடியபடியும் இருக்க, அவள் தன் துப்பட்டாவை எடுத்து வீசியவுடன் வீடியோவும் முடிந்திருந்தது. அதற்கு கீழ் அத்தனை விமர்சனங்களும் இருந்தது.

அடுத்த வீடியோ எப்போது வரும் என்ற அநாகரிக கேள்விகளும் இருக்க, தீரனின் முகமும் உடலும் ஒரு சேர இறுகிப் போனது.

அவன் கையில் இருந்த அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க,

“சா..சார்” என்றான் தீரன்.

“அங்க என்ன நடக்குது தீரன்? உங்களை நம்பித்தானே மொழியை உங்க கூட அனுப்பி வச்சேன். ஆனா நியூஸ்ல..நியூஸ்ல” என்ற ராஜ ராஜன் அழுதே விட்டார்.

“அங்கிள் பிளீஸ்..! இங்க என்னென்னவோ நடந்திருச்சு. இப்போ எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண நேரமில்லை. பட் என்னை  நம்புங்க. நடக்குற எல்லாமே உங்க பொண்ணுக்கு எதிராவே இருக்கு. இதுக்கு பின்னாடியிருந்து யார் பிளே பண்றாங்கன்னு தெரியலை” என்றான்.

ராஜன் பேச முடியாதவராய் அழைப்பை துண்டித்திருந்தார். வெண் மொழியின் வீடே அதிர்ச்சியில் இருந்தது. அதுவரை வீட்டில இருந்த யாருக்கும் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை.

“அண்ணா என்னண்ணா நடக்குது? மாப்பிள்ளை கூட தான பாப்பாவை அனுப்பி வச்சிங்க? ஆனா..” என்று கேட்கத் தயங்கியவராய் ஆனந்தராஜன் அமைதி காக்க,

இனி சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் அனைத்தையும் ஒரு வேதனையுடன் சொல்லி முடித்திருந்தார் ராஜன். சொல்லி முடித்தவர் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்ள, வீட்டில் இருந்த அனைவரும் தலையில் இடி விழுந்ததைப் போல் இருந்தனர்.

“விவேக் ட்ரக்ஸ் எடுத்துக்கிட்ட இருபதாவது நிமிஷத்துல இருந்து வேலையை காட்ட ஆரம்பிக்கும். இது அப்போ எடுத்த வீடியோவா இருக்கலாம். ட்ரக்ஸ் எடுத்துகிட்ட ஒரு மணி நேரத்துல இருந்து அடுத்த மூணு மணி நேரத்துக்கு அதோட உச்சகட்ட போதையைக் காட்டும். நியூஸ் இப்போ வெளிய வந்திருக்குன்னா, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள மொழிக்கு எதுவும் நடக்கலாம்” என்று நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன்,

“அங்கிருந்த மேனேஜரிடம் திரும்பியவன்,தேர்ட் புளோர் கேமராவை ஆப் பண்ணுங்க. நான் சொல்ற வரைக்கும் அதை ஆன் பண்ணக் கூடாது. அன்ட் இங்க நடக்குற எதைப் பத்தியும் வெளிய மூச்சு விடக்கூடாது நீங்க. ரூம் யார் பேர்ல புக் ஆகியிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்” என்று உத்தரவு பிறப்பித்தபடி,

“ரூம் நம்பர் டூ பிப்டியோட டூப்ளிகேட் கீ வேணும் விவேக். அந்த புளோர்ல புக்கிங் இல்லாம இருக்குற இன்னொரு  ரூமோட கீயும் வேணும், குய்க்” என்றவன் விவேக் வாங்கி வந்த அடுத்த நிமிடம் நொடியும் தாமதிக்காமல் மொழி சென்ற அதே அறைக்கு சென்றிருந்தான்.

“அதி ரூம்க்குள்ள கேமரா இருந்தா, அதுல நாமளும் பதிவாக சான்ஸ் இருக்கு” என்றான் விவேக்.

தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து அந்த கையடக்க போர்ட்டபிள் ஜாமரை வெளியே எடுத்தவன் அதை விவேக்கிடம் நீட்ட, தீரனை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான் விவேக்.

தேர்ட் புளோர் சென்று அந்த அறையின் முன் சென்றவனுக்கு ஏனோ காரணமின்றி இதயம் அடித்துக் கொண்டது.

“அதி உள்ள யார் இருக்கா? என்ன ஏதுன்னு தெரியாம போறது சேப் இல்லை” என்றான் விவேக்.

“நீ வெளிய இருந்து பார்த்துக்கோ விவேக்” என்று அடித்துக் கொண்ட மனதுடன் டூப்ளிகேட் கீயைப் போட்டு அவன் உள்ளே செல்ல, அறை முழுவதும் மெல்லிய வெளிச்சம் மட்டுமே சூழ்ந்திருந்தது.

அந்த போர்ட்டபிள் ஜாமரை முதலில் ஆன் செய்தவன், கண்களை இறுக மூடியபடி அந்த அறையின் லைட்டைப் போட, கண்ட காட்சியில் கண்கள் நிலைகுத்தி நின்றது. அரை நிர்வாணமாய் இருந்த மொழியையும், அதீத போதையில் அவளை முத்தமிட முயன்று கொண்டிருந்தவனையும் தான் அதிதீரன் பார்த்தது.

இப்படி ஒரு நிலையில் அவளைக் காண்போம் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

“யு ராஸ்கல்” என்று வேகமாய் சென்று அவனை அவளிடமிருந்து பிரித்தவன், அவன் முகத்தைப் பார்க்க அவனை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம். அவனும் அரை நிர்வாணத்துடன் தான் இருந்தான்.

“ஹேய்..யாரு மேன் நீ” என்று குளறியபடி பேசியவனைக் கண்டு அவனும் முழு போதையில் தான் இருக்கிறான் என்பது தீரனுக்கு தெரிந்து போனது.

வேகமாய் அங்கிருந்த  பெட்ஷீட்டால் அவளைப் பார்த்தியவன், அவளின் ஆடைகளைத் தேட, அந்த அறையில் அவள் ஆடைகள் கிழிந்து கிடந்தது.

“மை காட்..!” என்று பதட்டமடைந்தவன், மற்றொரு பெட்சீட்டால் அந்த ஆடவனைப் போர்த்தியவன், வேகமாய் இழுத்து சென்று..

“விவேக்..! இவனை உடனே அந்த ரூம்க்கு ஷிப்ட் பண்ணு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். ஏன்னா? இந்நேரம் நாம இங்க வந்தது எப்படியும் தெரிஞ்சிருக்கும். அவனுங்க பிளான் வேற மாதிரி இருக்கு” என்றான் பரபரப்புடன்.

“என்ன சொல்ற அதி?” என்ற விவேக் அந்த ஆடவனின் நிலையைக் கண்டவுடன் சூழ்நிலையைப் புரிந்து கொண்டான். வேகமாய் அவனை அதே புளோரில் இருந்த வேறொரு அறைக்கு மாற்றியவன், கதவைப் பூட்டிவிட்டு மீண்டும் இங்கு வந்தான்.

“விவேக் உள்ள வராத” என்ற தீரனின் குரலில் விவேக்கிற்கு மனம் அடித்துக் கொண்டது.

அந்த அறையில் இருந்த டேபிளில் அதி வீரியமான MDMA வகை போதை மருந்துகள், மாத்திரைகள் என்று அனைத்தும் கிடக்க, அதை வேகமாய் அங்கிருந்த டஸ்ட்பின் கவரில் சேகரித்தான் தீரன்.