அனல் – 16

“ஸ்டெல்லா மாதிரி ஒரு பொண்ண ஒருத்தன் லவ் பண்றானா, அதுவும் அந்த ஒருத்தன் என் பாஸா?” என்று அதிர்ந்து நின்றவனின் கையை பிடித்து அமர வைத்த தருண்.

“டேய் ஏன்டா இப்படி கத்துற? ஆபிஸே உன்னத்தான்டா பாக்குது.”

“அத விடுடா, உண்மையாவே நம்ம சார் ஸ்டெல்லாவ லவ் பண்றாரா?”

“ப்ச், உண்மையாவே தான் சொல்றேன் டா. ஏன் நீ நோட் பண்ணல? ஈவ்னிங் ஆனா போதும் மேம்-அ பாக்க அந்த ஆபிஸ்க்கு போறது.”

“இல்லையே, நான் கவனிச்சது இல்ல டா.”

“ஏன், இப்போ கூட மார்னிங் அங்க தான் போய்டு மேம்-அ பாத்துட்டு வராங்க.”

“ப்ச், நீ ஏன் இப்போ ஸ்டெல்லாவ மேம்னு கூப்பிட்டு இருக்க? பேர் சொல்லியே பேசு,” என்று எரிச்சலாக ஆதிஷ் சொல்ல,

“நீ வேற, பேர் சொல்லி கூப்பிட்டு சார் முறைச்சது வர போதும், நான் மேம்னே சொல்றேன்.”

“நம்ம சாரும் அவளும் லவ் பண்றாங்கல?”

“என்னது லவ் பண்றாங்களா வா காது ஒழுங்கா உனக்கு கேக்குதா இல்லையா? இது ஒன் சைடு லவ், சார் மட்டும் தான் பண்றாரு.”

“ம்க்கும்…. அதன பாத்தேன், கல்லுக்குள்ள ஈரமான்னு, இவ மாறிட்டா உலகம் அழிஞ்சிராது,” என்று எண்ணியவன்,

“சார்க்கு லவ் எப்படி வந்துச்சு? பாத்ததும் லவ்வா?”

“அப்படிதான் நினைக்கிறேன், இவங்கள பாத்த நாள்ல இருந்தே சார் இப்படி தான் இருக்கார்.”

“ஓ…” என்றவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தவன்

“நீ ஏன் சாரையும் ஸ்டெல்லாவையும் சேர்த்து வைக்க கூடாது டா?” என்றவனை ஷாக் ஆகி பார்த்த தருண்.

“நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா டா?”

“நீ நல்லா இருக்கறத பாக்கணும்னு , தான் இப்படி சொல்றேன்.”

“எப்படி மேம் கையால நான் நல்ல அடி வாங்குறத பாக்குறதையா?”

“டேய் தருண்….., நான் சொல்றத முழுசா  மொத கேளு. இப்போ சார் இந்த ஆபிஸ் கும் அந்த ஆபிஸ் கும் அலஞ்சி எதுக்கு கஷ்டப்படுறாரு?”

“வேற எதுக்கு, மேம் காக தான்.”

“ம்ம்ம்… அதே தான். இப்போ நீ மட்டும் சாரையும் ஸ்டெல்லாவையும் சேர்த்து வைக்க ஹெல்ப் பண்ணினா, சார் உன்ன எங்க வைப்பாருன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. நாளைக்கு பின்ன அவங்களுக்கு மேரேஜ் ஆனா கூட, சேர்த்து வச்ச உன்ன எப்படி பாத்துப்பாங்கன்னு யோசிடா.”

என்று ஆட்டை வெற்றி கரமாக ஆசை என்னும் குழியில்  தள்ளி விட்டான் ஆதிஷ்.

“உண்மையாவா டா சொல்ற ஆதிஷ்? நான் சார் க்கு ஹெல்ப் பண்ணா எனக்கு இன்கிரிமெண்ட் நிறைய தருவாரா?”

“இன்கிரிமெண்ட் மட்டும் இல்ல, அதுக்கு மேலையும் தருவாருடா.”

“அப்போ சரி, இப்போவே நான் போய் சார் கிட்ட பேசுறேன்,” என்று எழ போனவனின் கையை பிடித்து அமர வைத்த ஆதிஷ்.

“டேய் டேய், இத போய் சார் கிட்ட பேசி கிசி வச்சுடாத டா!”

“அப்புறம்….. சார் கிட்ட பேசாம எப்படி நான் ஹெல்ப் பண்ண?”

“மண்டையில மசாலா இல்லாதவன் மாதிரி பேசாதடா. இப்போ….. நீ சார் கிட்ட போய் இப்படி இப்படி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னா, அவர் என்ன பண்ணுவாருன்னு நினைக்கிற?”

“என்ன பண்ணுவாரு?”

“ஹா… உன் மண்டையிலயே கொட்டி, உன் வேலைய மட்டும் பாருன்னு சொல்ல மாட்டாரு.”

“அட….ஆமா, அப்போ என் பெர்சனல்னு சொல்லிட்டா நான் என்ன பண்ண?”

“அதுக்கு தான் சொல்றேன், சார் கிட்ட சொல்லாம ஹெல்ப் பண்ணுடா. நீ பண்ற ஹெல்ப்ல சார் வந்து நன்றி சொல்லி உன்ன பாராட்டணும்?”

“ஓ… நீ அப்படி சொல்றியா? அப்போ ஓகே, அனா நான் என்ன பண்ணனும் டா ஹெல்ப் பண்ண?” என்று கேட்டவனை முறைத்தவன்

“மண்டையில மூளைன்னு ஒன்ன வச்சிருக்க தான டா?”

“அது இருந்தா மட்டும் போதுமா டா? நீயே சொல்லு,” என்றவனுக்கு சில ஐடியாக்களை ஆதிஷ் சொல்லி அவனை சந்தோஷமாக அணுப்பி வைத்தான்

“பாவம் பையன், இவ்ளோ சந்தோஷமா போறானே, என்ன ஆக போறானோ… ம்ஹூம்…” என்றவனும் அவன் இடத்திற்கு சென்றான்.

தருணை பயன்படுத்தி தான் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான் ஆதிஷ்.

இங்கு ரூத் வீட்டில் மதிய உணவை உண்டு விட்டு வாட்சப்பில் பார்த்தவள், ஆதிஷின் மெசேஜ் பக்கத்தை திறந்தாள்.

நேற்று முழுவதும் ஸ்டெல்லாவுடன் இருந்ததால், ஆதிஷிற்கு மெசேஜ் அனுப்ப மறந்திருந்தாள் ரூத்.

இன்றும் காலை வீட்டு வேலை என்று அனைத்தையும் முடித்து விட்டு, போனை இப்போது தான் கையில் எடுத்திருக்கிறாள்.

ஆதிஷிடம் இருந்து வந்த ‘என்ன பண்ணிட்டு இருக்க?’ என்ற நேற்று மெசேஜைப் பார்த்தவள்.

“சாரி நேத்து கொஞ்சம் பிசி, அதான் போன் பார்க்கல” என்று ரிப்ளை அனுப்பி வைத்துவிட்டு, அவன் அதை பார்க்கும் வரை ஸ்டேட்டஸ் பார்ப்போம் என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அதில் ஆதிஷ் விதவிதமான மியூசிக்கு நடனம் ஆடிப் போட்டிருந்தான். அதை பார்த்து வாயைப் பிளந்தவள்.

“வாவ் சூப்பர் வேற லெவல்” என்று மெசேஜ் அனுப்ப, இவள் மெசேஜை எல்லாம் பார்த்திருந்தானே தவிர ரிப்ளை எதுவும் செய்யாமல் இருந்தான் ஆதிஷ்.

“என்ன ப்ளூ டிக் காட்டுது ஆனா ரிப்ளை எதுவும் வரல” என்று கட்டிலில் உருண்டபடி சிறிது நேரம் அவன் ரிப்ளைக்காக காத்திருந்தவள் மீண்டும்

“ஓய்….” என்று அனுப்ப, அதுவும் உடனே ப்ளூ டிக் ஆனது.

“என்ன இது உடனே டிக் காட்டுது ஆனா ரிப்ளை வரல, ஏதாவது நெட்வொர்க் பிரச்சனையா?” என்று தலையைச் சொறிந்து கொண்டவள்.

எழுந்து ரூம் முழுக்க போனைத் தூக்கியபடியே சுற்றியும் பார்த்தாள், ரிப்ளையே வரவில்லை.

ஆதிஷ் மெசேஜிற்காகக் காத்திருந்து பார்த்தவள், பொறுமை போய் அவனுக்கு அழைப்பு விட்டாள்.

இங்கு ஆபீஸ் பார்க்கில் பெஞ்சில் அமர்ந்தபடி, ரூத்தின் அழைப்பைத் தான் உதட்டில் மலர்ந்த சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

ரூத்தின் அழைப்பு அடித்து கட் ஆகச் செல்லும் முன் போனை எடுத்தவன் குரலை கடுமையாக வைத்துக்கொண்டு

“சொல்லுங்க…” என்றான். அவனின் குரல் மாற்றத்தைக் கேட்டு ஒரு நிமிடம் இது இவன் தானா என்று போனை எடுத்து அவன் பெயர் நம்பர் என்று அனைத்தையும் உறுதிப்படுத்தியவள், மீண்டும் போனை காதில் வைத்து

“ஆதி….” என்று சந்தேகத்துடன் தான் அழைத்தாள்.

“ம்ம்ம்…. சொல்லுங்க ரூத், நான் தான் பேசுறேன்” என்று மரியாதையாக பேசியவன், பாங்கில் புரியாமல் முழித்தவள்

“என்ன ஆதி, என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுறீங்க?”

“வேற எப்படிங்க பேச? உங்களுக்கு நான் யாரோ தான, அப்போ மரியாதையா தான பேசணும்.”

“அச்சோ… ஆதி, நான் எப்போ உங்கள அப்படி சொன்னேன்?”

“சில விஷயங்களை சொல்லி தான் தெரிஞ்சுக்கணும்னு இல்லங்க.”

“சரி… சொல்லி இல்லனா வேற எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?” என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு ரூமில் இங்கும் அங்கும் பதட்டமாக நடந்தபடி பேச

“அதான் நேத்து எங்க வீட்டுக்கு வந்து என்ன திரும்பி கூட பார்க்காம போனீங்களே, அதை வச்சு தான்.”

என்றவன் கோபமாக எல்லாம் பேசவில்லை, உதட்டை கடித்து அடுத்து அவள் என்ன எப்படி பேசுவாள் என்று ஆர்வமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தான்.

ரூத் என்று அவள் பெயரைச் சொன்னாளே, அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி வந்துவிடும்; அப்படி இருக்க அவள் குரலைக் கேட்டு கோபம் வருமா என்ன.

இவனுக்காக இவள் போனில் அவனை அழைத்த மறுநொடியே  அனைத்தும் ஓடி போய்விட்டது, இருந்தும் அவளிடம் மேலும் நெருங்கவே இப்படிப் பேசிக்கொண்டு இருக்கிறான்.

இது தெரியாது ரூத் அவன் காட்டும் பாசம், நட்பு, இனக்கம் என்று எதையும் இழக்க விரும்பாதவள் நகத்தை கடித்தபடி

“அட ஆதி, நேத்து அக்காக்கு ரொம்ப உடம்பு சரியில்ல, என்ன பண்ணனும்னு தெரியல, தெரியுமா? அதான் பதட்டத்துல யார் நிக்கிறாங்கன்னு எதுவும் கவனிக்கல ஆதி.”

“ம்ம்ம் தெரியும், காச்சல்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க.”

“தெரிஞ்சும்… ஏன் கோபம் ஆதி…” என்று ராகம் இழுக்க, இவன் அதை கண்களை மூடி ரிசித்தவன்

“சரியான ஃப்ராடு, எப்படி ராகம் போட்டே மயக்குறா பாரு!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனக்குக் கோபமா தான் வருது. ஏதாவது பண்ணி என்ன சமாதானம் பண்ணு.” என்று கீழ் உதட்டை கடித்து சிரிப்பை முழுங்கிய படி இவன் பேச

“என்னது சமாதானமா? அதை எப்படிச் செய்ய?” என்று திருதிருவென முழித்தவள் ,

“அது… நான் வேணா போன்டா வாங்கித் தரட்டா?” என்று அவள் தோழி பிறையை, போன்டா வாங்கி கொடுத்துச் சமாதானம் செய்வதை நினைவில் வைத்து இவள் சொல்ல,

ஆதிஷ் பக் என்று சிரித்தே விட்டான். அவன் சிரிப்புச் சத்தத்தில் நின்மதி ஆனவளாக, “சமாதானம் ஆகிடுங்கலா ஆதி…”

“போன்டா வாங்கித் தந்தா சமாதானம் ஆகிடுவாங்கன்னு யார் சொன்ன உனக்கு?”

“அது என் பிரண்டு பிறை, அவளுக்கு நான் அப்படித் தான் சாரி சொல்லுவேன். அவளும் உடனே சிரிச்சிட்டே என் சாரிய அக்சப்ட் பண்ணிப்பா. ஏன் இப்படிச் சமாதானம் செய்யக் கூடாதா?” என்று பாவமாக கேட்டு வைத்தவளை,

ஏமாற்ற விரும்பாதவன், “இல்ல சமாதானம் ஆகிட்டேன், எனக்கும் போன்டா போதும், ஓகேவா?”

“ம்ம்ம்… அப்போ ஓகே, இன்னைக்கு ஆபிஸ் விட்டு வந்ததும் சொல்லுங்க, போன்டா தரேன்.”

“இல்ல இன்னைக்கு வேணாம், எனக்கு நான் சொல்ற இடத்துக்கு நீ வா, அங்க நான் சொல்ற கடையில போன்டா வாங்கித் தா.”

என்றவன் நைஸாகப் பேசி ரூத்தை படத்திற்கு அழைத்துச் செல்ல பிளான் போட்டுவிட்டான்.

ரூத் விஷயம் தெரியாது, மறுநாள் அவன் அனுப்பிய லொகேஷனில் இருந்த சினிமா தியேட்டரை வந்து பார்த்து,

“இங்க போன்டாலாம் இருக்குமா என்ன?” என்று குழம்பிப் போய் நின்றுவிட்டாள்.

குழப்பமாக நின்று கொண்டிருந்தவளைத் தோளில் தட்டி அழைத்தவன்,

“என்ன யோசிக்கிற ரூத்?” என்ற ஆதிஷை திரும்பிப் பார்த்தவள்,

“இல்ல, இங்க அக்கா கூட ஒரு வாட்டி வந்திருக்கேன், அப்போலாம் இங்க போன்டா விக்கிறத நான் பார்த்ததே இல்லையே!”

“பரவாயில்லையே, இந்த அளவு ஆவது என் பொம்மைக்குத் தெரியுதே! எங்க ஒன்னும்மே தெரியாம அந்த ஸ்டெல்லா வழத்துடாளோன்னு நினைச்சிட்டேன்,” என்று நினைத்துக் கொண்டவன்,

“இல்ல, இங்க போன்டாலாம் விக்க மாட்டாங்க ரூத்.”

“போன்டா விக்கலன்னா ஏன் இங்க வந்திருக்கோம்? போன்டா வாங்கித் தரது தான பேச்சு?” என்று உஷாராக இவள் பேச

“செம ரெஸ்பான்ஸ் போ” என்று நினைத்து கோண்டவன்

“ஏன் போன்டாக்கு பதிலா படம் பார்க்கலாம்னா ஒத்துக்க மாட்டியா ரூத்?” என்று இவளைப் பார்த்து நின்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து நிற்க, படம் தொடங்கும் நேரம் ஆனது.

“சரி விடு, அதை அப்புறமா நம்ம பேசிப்போம். இப்போ வா, நம்ம படம் பார்க்கப் போகலாம்,” என்றவனை கைகள் பிசைந்தபடி பார்த்தவள்,

“அது… அக்கா இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கா,” என்று தயங்கியவளைக் கோபமாக ஆதிஷ் பார்த்து நிற்கவும், அவன் கோபத்தில் ரூத்,

“அது நான் சொல்றத மொதல்ல கோபப்படாம கேளுங்க ஆதிஷ், ப்ளீஸ்….,” என்று கண்கள் சுருக்கி இவள் கெஞ்சவும், ஆதிஷ் கைகளைக் கட்டி,

“ம்ம்ம் சொல்லு, கேக்குறேன்,” என்றதும் வேகமாகச் சொல்லத் தொடங்கினாள் ரூத்,

“எனக்கும் படம் பார்க்க ஆசை தான் ஆதி. அனா… அன்னைக்கு… ஒரு வாட்டி ஆசையா இங்க அக்காவும் நானும் படம் பார்க்க வந்தோம். இதே இடம் தான் வந்தோம்.

அக்கா மேலை பால்கனியில தான் டிக்கெட் வாங்கி, அங்கதான் உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தோம். அப்போ தியேட்டரில நாலு பசங்க படம் பார்க்கும் போது எங்களை கிண்டல் பண்ற மாதிரியே பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டே இருந்தாங்களா. அக்கா அதுல கோபப்பட்டு அவனை அடிச்சிட்டா.

அதுல எனக்கு பயம் வந்து ஜூரம் வந்திருச்சு ஆதி, அதுல இருந்துதான் அக்கா தியேட்டர்க்கே கூட்டிட்டு வரல.

படம் ஏதாவது பாக்கணும்னா டிவியில தான் பாக்கச் சொல்லுவா” என்று ரூத் சொன்ன விஷயத்தைக் கேட்டு பல்லைக் கடித்தவன்

“ஒரு இடத்துல பிரச்சனை ஆச்சினா உங்க அக்காவுக்கு எப்பவும் அப்படியே ஆகும்னு நினைப்பு ?” என்று சீரியவனைப் பயந்து இவள் பார்க்க, அவள் பயந்த பார்வையில் சிறிது நிதானமானவன்.

“பயப்படாத ரூத், நான் இருக்கேன்ல, ஒரு பிரச்சனையும் ஆகாம நான் பார்த்துக்கிறேன்டி.”

“அனா…. அக்கா!”

“ப்ச்…. என் மேல நம்பிக்கை இருந்தா வா…. ஏன் உனக்கு படம் பாக்க வேணாம்மா?”

“இல்ல இல்ல வேணும் தான்” என்று வேகமாகத் தலையசைத்தவளைச் சிரித்தபடி பார்த்தவன், அவள் தலையில் கை வைத்து ஆட்டிவிட்டு அவள் கரம் பிடித்தவன்.

“வா… டைம் ஆச்சு, படம் போட்டுருப்பாங்க” என்று அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்.

இன்றும் அதே போல பால்கனி சீட்டில் தான் அமர்ந்திருந்தாள். இன்றும் கூட்டமாகத்தான் இருந்தது, ஆனால் இன்று யாரும் இவளைக் கிண்டல் கேலி செய்யவில்லை.

அன்று இரு பெண்களாக வந்த போது இவர்களைப் பல பேர் பல விதமாகப் பார்த்திருக்க, இன்று அப்படி எந்தப் பார்வையும் தீண்டவில்லை. அதில் சிறிது நிம்மதி பெற்றாலும், ஏன் இத்தனை மாற்றம் என்று குழம்பித்தான் போனாள்.

என்னதான் பெண்கள் தனியாக பல இடத்திற்குச் செல்லும் அளவு நாடு முன்னேறி இருந்தளும், இன்றளவும் சில ஆண்கள் பெண்களைப் பார்க்கும் கண்ணோட்டம் மட்டும் மாறவே இல்லை.

பொது இடங்களில் தனியாக ஒரு பெண் நிற்கிறாள் என்றால் போதும், இதுதான் சமயம் என்று சில ஆண்கள் தவறு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்களைப் பாதுகாப்பின்றி உணர வைக்கும் அதே ஆண்கள் கூட்டத்தில் தான், பல ஆண்கள் அதே பாதுகாப்பை பெண்களுக்குத் தந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.