யுகாவின் அறையில் இருந்த மொழிக்கு முகம் சற்று வெளிறியிருந்தது. நிச்சயம் விமலை அதுவும் இப்படி ஒரு நிலையில் பார்ப்பாள் என்று அவள் நினைக்கவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்திருக்க, எதுவும் முடியாமல் அப்படியே தான் இருக்கிறது என்று நடப்பு அவளுக்கு புத்தியில் உரைத்தார் போல் கூறியிருந்தது.
“ஹேய் மொழி! ஆர் யு ஓகே” என்ற படி வந்த தாராவைப் பார்த்தவள்,
“ஐ ஆம் ஓகே டாக்டர்” என்றாள் சற்று பிசிறிய குரலில்.
“ஐ திங்க்..! சம்திங் ராங். உங்க முகமே நீங்க ஏதோ பிரச்சனையில இருக்கிங்கன்னு சொல்லுது” என்ற தாராவை பார்த்தவளின் பார்வையில் நிச்சயம் ஆச்சர்யம் இருந்தது.
“பிரிலியண்ட் டாக்டர் நீங்க. சம் பெர்சனல் இஷ்யூஸ்” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனால் தாராவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.
“நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா?” என்றான் மொழி.
“தாராளமா மொழி” என்று தாரா கூறியவுடன், வேகமாய் சென்றவளை புருவம் நெறியப் பார்த்திருந்தாள். அதே யோசனையுடன் எழுந்து அகனைத் தேடி செல்ல, அவர்களும் அப்போது தான் வந்திருந்தனர்.
தீரனின் முகத்தையே அவள் பார்த்துக் கொண்டிருக்க,
“என்கிட்ட ஏதாவது சொல்லனுமா டாக்ட்டர்?” என்றான் தீரன்.
“வெண்மொழி உங்களுக்கு என்ன வேணும் சார்?” என்றாள் எடுத்த எடுப்பில்.
“அப்படி இருக்குறவங்க எப்படி இருப்பாங்க? எப்படி பிகேவ் பண்ணுவாங்கன்னு உங்களையும் என்னையும் தவிர நல்லா தெரிஞ்சவங்க யார் இருக்க முடியும் அகன்? ஐ திங்க் இது ஸ்டாட்ர்டிங் ஸ்டேஜா கூட இருக்கலாம். பட் இப்படியே விட்டா ரொம்ப டேஞ்சரஸ் ஆகிடும்” என்றாள் தாரா.
“இப்போ என்ன பண்ணனும் டாக்டர்?” என்றான் தீரன்.
“அவங்களுக்கு இப்போ தேவை ஸ்ட்ராங் சப்போர்ட். என்ன நடந்தாலும் அவங்க கூட ஒருத்தவங்க இருக்காங்கன்ற சப்போர்ட் அவங்களுக்கு வேணும். அன்ட் அதிகப்படியான அன்புமும், மன அமைதியும் அவங்களுக்குத் தேவை” என்றான் அகன்.
தீரன் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைப்புடன் விஷயத்தை உள்வாங்கிக் கொண்டிருக்க,
“இந்த அகனுக்கு யுகா கிடைச்ச மாதிரி” என்று மனைவியை அவள் தோளோடு அணைத்துக் கொண்டான் அகன். இருவர் கண்களிலும் தெரிந்த காதலை தீரனும் விவேக்கும் சற்று பொறாமையுடன் பார்த்திருந்தனர்.
குமரனுக்கு நதியின் ஞாபகம் வந்திருக்க வேண்டும். தன் சிகை கோதி தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவனின் அலைபேசி சரியாக அந்த நேரத்தில் ஒலித்தது. நதி தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“நதிமா” என்றான் குமரன்.
“எங்க இருக்கீங்க உதய்? எப்போ வருவிங்க?” என்றாள்.
“தெரியலை நதி. கிளம்பும் போது இன்பார்ம் பண்றேன்” என்று பேசிக் கொண்டே சென்றவனைப் பார்த்து விவேக் சிரித்திருந்தான்.
“இப்போ எதுக்குடா சிரிக்கிற?” என்றான் தீரன்.
“உனக்குத் தெரியாதுலல அதி. குமரன் சீனியர் வாழ்க்கையில வாங்காத அடியே இல்லை. ஆனா இப்போ அவரை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு” என்றான் விவேக்.
“எஸ்..! டிப்பார்ட்மென்ட்ல குமரனுக்குன்னு ஒரு பேர் இருக்கே. பக்கா ஜென்டில்மேன்” என்றான் தீரன்.
அதற்குள் வெண்மொழியும் வந்துவிட, அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் அதிதீரன். நிச்சயம் அழுதிருக்கிறாள் என்று அவளின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. மனம் கனத்துப் போனது அவனுக்கு. வெளியே சொல்ல முடியாத வேதனை அவனுக்குள்ளும். அவள் மாட்டியிருப்பது சாதாரண பிரச்சனையில்லையே. அனைவரின் முன்னிலையிலும் தன்னை நிதானமாய் காட்டிக் கொள்ள அவன் வெகு பிரயத்தனப்பட்டான்.
ராஜ ராஜன் வேறு அவனுக்கு விடாமல் அழைப்பு எடுத்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று புரியாத இக்கட்டான நிலை அவனுக்கு. கையில் அலைபேசியுடன் அவன் விவேக்கைப் பார்க்க,
“வாங்க மிஸ். வெண்மொழி. நாம காருக்கு போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான் விவேக். அவளோ தாராவைப் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்புடன் விடை பெற்றாள்.
வெளியே வந்த தீரனின் முகத்தில் இருந்த சிந்தனை ரேகைகள் குமரனுக்கும் புரிந்தது.
“சார் கேஸ் கொஞ்சம் சிக்கல் தான். பார்க்கப் போனா நீங்க மினிஸ்டர் பொண்ணை உங்க கஸ்ட்டடியில எடுத்து விசாரிக்க வேண்டியது வரும்” என்றான் சற்று சங்கடத்துடன். அவனும் வந்ததில் இருந்து மொழியின் மேல் விழும் தீரனின் பார்வையைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
கரங்களால் முகத்தைத் தேய்த்து தன் டென்ஷனை குறைத்துக் கொண்டவன்,
“எஸ் குமரன்..! இதோ மினிஸ்டர் லைன்ல வந்துட்டே இருக்கார். இப்போ நான் கடமையை செய்றதா? இல்லை” என்று வேகமாய் சொல்ல வந்த வார்த்தையை தனக்குள் புதைத்துக் கொண்டான்.
“கண்டிப்பா அவங்க மேல தப்பிருக்காது சார். இதுக்கு பின்னாடி பெரிய நெட்வொர்க் இருக்க வாய்ப்பிருக்கு. யாரோ கிளவரா காய் நகர்த்தியிருக்காங்க” என்றான் குமரன்.
“உண்மை தான் குமரன். ரொம்ப கிளவரா எல்லாமே மொழிக்கு எதிரா இருக்குற மாதிரி பண்ணியிருக்காங்க. கால் டீட்டெயில்ஸ்ல இருந்து இதோ இப்போ விமல் வாக்கு மூலம் வரைக்கும் எல்லாமே மொழிக்கு எதிரா தான் இருக்கு” என்றவனுக்கு தன் டென்ஷனை குறைக்க முடியவில்லை.
“சார் கொஞ்சம் நிதானமா யோசிங்க”
“முடியலை குமரன்..! இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு முடிவு பண்ணாலும், உள்ளுக்குள்ள முடியலை. அவ்வளவு ஈசியா கடந்து போகவும் முடியலை. விடவும் தோணலை. இறுக்கிப் பிடிக்கவும் விருப்பமில்லை” என்றவனின் நிலை கண்டு குமரனுக்கு வருத்தம்.
மீண்டும் ராஜ ராஜன் அழைக்க அதற்கு மேல் எடுக்காமல் இருந்தால் நன்றாய் இருக்காது என்பதால் அழைப்பை ஏற்றிருந்தான்.
“போன விஷயம் என்னாச்சு தீரன்?” என்றவரின் குரலில் அப்படி ஒரு படபடப்பு.
நடந்த விஷயங்களை தீரன் சுருக்கமாய் சொல்லி முடிக்க, ராஜனுக்கோ தவிப்பு கூடிக் கொண்டே போனது.
“என் பொண்ணு அப்படி பண்ற பொண்ணு இல்லை தீரன்” என்றவரின் குரல் முதன் முறையாக உடைந்திருந்தது. எப்போதும் அதிகாரத்துடன் கேட்டு பழக்கப்பட்டவரின் குரலை அவனால் இப்படி கேட்க முடியவில்லை.
“சார் பிளீஸ்..! உணர்ச்சி வசப் படக் கூடிய நேரம் இது இல்லை. இப்போ நான் என்ன பண்ணனும்னு நீங்க தான் சொல்லணும்” என்றவனுக்கும் தர்ம சங்கடமான நிலை.
அவனின் சார் என்ற அழைப்பு அவருக்கு உள்ளுக்குள் உறுத்த,
“என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறிங்க தீரன்?” என்றார்.
“இப்போதைக்கு அவங்களை நாங்க அக்யூஸ்ட்டா தான் ட்ரீட் பண்ணனும் சார். எங்க கஸ்ட்டடியில எடுத்து விசாரிக்கணும்” என்றான் மனமேயின்றி.
“விஷயம் வெளிய தெரிஞ்சா?” என்றவருக்கு அதை யோசித்துப் பார்க்க கூட முடியவில்லை.
“என்னோட பதவி பேர் எல்லாம் பத்தி கூட எனக்கு கவலை இல்லை தீரன். ஆனா என் பொண்ணோட பேரையும் போட்டோவையும் போட்டு மீடியாவுல விஷயம் வெளிய வந்தா, வீட்ல யாரும் தாங்கிக்க மாட்டாங்க தீரன். இன்டர்நேஷனல் ட்ரக் டீலிங்னு சொல்றிங்க. என் பொண்ணு ஆயுசுக்கும் வெளிய வர முடியாது ” என்றவருக்கு நேர்மையை மீறி வேறு எதையும் கேட்கவும் தயக்கம்.
‘எனக்கு மட்டும் தாங்கிக்க முடியுதா என்ன?’ என்றவன் முகத்திலும் கசப்பான புன்னகை.
“நான் இன்னும் என்னோட ஹையர் ஆபீசர்ஸ்க்கு இன்பார்ம் பண்ணலை சார். பட் ட்ரஸ்ட் மீ.. கூடிய சீக்கிரம் இதை கண்டுபிடிக்கிறேன் சார்” என்றவன்,
“அது வரைக்கும்” என்று அவன் நிறுத்த,
“தீரன்” என்றவரின் அதிர்ந்த முகம் நேரில் இல்லாவிட்டாலும் அவனுக்கு தெளிவாய் தெரிந்தது.
“அங்கிள்! எனக்கு உங்க நிலை புரியுது. இன்பேக்ட் நானும் உங்க நிலமையில தான் இருக்கேன். இப்போதைக்கு சென்னை வர முடியாது அங்கிள். வந்தா எப்படியும் மொழியை ரிமாண்ட் பண்ணித்தான் ஆகணும். சோ இப்போதைக்கு அவங்க என்னோட பர்சனல் கஸ்ட்டடியில இருக்கட்டும். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க அங்கிள். இந்த ரெண்டு நாள்ல நமக்கு சாதகமா எதுவும் கிடைக்கலைன்னா, வேற வழியில்லை அங்கிள்” என்றான் உணர்வை விழுங்கி.
“தீரன்” என்றவருக்கு மேற்கொண்டு பேச வார்த்தைகள் இல்லை.
அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவனின் கண்களில் ஒரு தீர்க்கமும் தெளிவும் தெரிந்தது. விவேக் இவர்களை நோக்கி வர பதட்டத்துடன் வர,
“என்னாச்சு விவேக்?” என்றான் அவன் பதட்டம் புரிந்து.
“வாட்??” என்ற தீரனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.
“அது எப்படி முடியும் விவேக். நாம இங்க வந்தது யாருக்குமே தெரியாதே. தென் ஹவ்? அதுவும் ஹாஸ்பிட்டல் பார்க்கிங்ல இருந்து. நீ என்ன பண்ண?” என்றான் விடாமல்.
“சாரி அதி. அங்க இருந்தது நாம வந்த கார் இல்லை. அதே கார்,அதே நம்பர் பிளேட். மொழி நம்ம கார்னு நினைச்சு தான் ஏறினாங்க. அவங்க ஏறின அடுத்த செகேன்ட் சட்டுன்னு காரை மூவ் பண்ணிட்டாங்க” என்றான் விவேக்.
“உள்ள இருந்தது நம்ம டிரைவரான்னு கூட பார்க்க மாட்டியா? என்ன விவேக் இது? உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை” என்றவன், வேகமாய் சென்று கண்காணிப்பு கேமராவைப் பார்க்க, அதில் அவர்கள் வந்ததைப் போன்ற ஆச்சு அசலில் அதே மாதிரியான கார். அதே நம்பர் பிளேட். தீரனே அருகில் இருந்திருந்தாலும் கண்டு பிடித்திருக்க முடியாது.
“ஷிட்..! காணாமப் போனது அமைச்சரோட பொண்ணு. என் பாதுகாப்புல கூட்டிட்டு வந்த பொண்ணு. மொழிக்கு ஏதாவது ஒண்ணுன்னா” என்றவனின் இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.
“குமரன் கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணி, இந்த ரூட்ல இருக்க எல்லா சிக்னல் அன்ட் செக் போஸ்ட்டையும் அலார்ட் பண்ணுங்க. எவ்ரி சிங்கிள் ரோட் கூட மிஸ்சாகக் கூடாது. விஷயம் எக்காரணம் கொண்டும் வெளிய தெரியக் கூடாது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஹாஸ்பிட்டல் ரிஷப்ஷன் பெண் ஓடி வந்தாள்.
“சார்..சார். உங்க கூட வந்த மேடமோட பேக். டாக்டர் ரூம்லயே வச்சுட்டு வந்துட்டாங்க போல” என்று அந்த பெண் கொடுத்து விட்டு செல்ல, அதை வாங்கிய தீரன் வேகமாய் பேக்கை திறந்து பார்க்க அவளின் செல் போன் உள்ளே தான் இருந்தது.
“தேங்க் காட்” என்றவன் அதை ஒப்பன் செய்ய முயல, பாஸ்வேர்ட் தவறு என்றே காட்டியது. நிதானமாய் யோசித்தான். தன்னுடன் வரும் போது காரில் அவள் மொபைல் பயன்படுத்திய போது அவளைத் தானே பார்த்திருந்தான். அனைத்து வகைகளிலும் முயற்சி செய்தவன் இறுதியாக அதை ஓப்பன் செய்திருந்தான்.
“என்னாச்சு அதி?” என்றான் விவேக்.
“மொழி கையில இருந்தது அட்வான்ஸ் ஸ்மார்ட் வாட்ச். மொபைல் இங்க இருக்கும் போது மொழியை ட்ராக் பண்றது ஈசி” என்றவன், வேகமாய் மொபைலின் தொடு திரையை தட்டிக் கொண்டே,
“விவேக் கம் குயிக்” என்றபடி கிளம்பியவன்,
“குமரன் சம்திங் ராங். இது இங்க இருக்குற விமலுக்கு போட்ட ஸ்கெட்சா கூட இருக்கலாம். இங்க இருக்குற விமல் உங்க பொறுப்பு” என்றான் தீரன்.
“ஷ்யர் சார்! நானும் உங்க கூட வரவா?” என்றான் குமரன்.
“தேங்க்ஸ் குமரன். பட் இங்க யாராவது இருந்தாகணும். இங்க உங்களால தான் ஹேண்டில் பண்ண முடியும்” என்றவன் விவேக்குடன் வேகமாய் கிளம்ப, நின்று நிதானித்த குமரன் விமல் இருந்த அறையை நோக்கி சென்றிருந்தான்.
சிட்டியில் இருந்து விலகி பிரதான சாலையில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன்பு காரை நிறுத்தியிருந்தான் விவேக்.
“பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மொழியோட வாட்ச் ஆன்ல இருந்திருக்கு. இங்க தான் ஸ்டாப் ஆகியிருக்கு. ஒன்னு அவங்க இங்க தான் எங்கயோ மொழியை வச்சிருக்கணும். இல்லைன்னா வாட்சை இந்த இடத்துல ஆப் பண்ணியிருக்கணும்” என்றான் தீரன்.
“கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் விவேக்.நம்மளைப் பத்தி தெரிஞ்சிருக்குன்னா நம்மளோட வொர்க்கிங் ஸ்பீட் கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சிருக்கும். பட் மொழியோட மொபைல் அங்க இருந்தது நமக்கு பிளஸ். அவனுக்கு மைனஸ். நம்மளை எதிர்பார்த்தவன், இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்திருக்க மாட்டான்” என்ற தீரன் நொடியும் தாமதிக்காது, அந்த ஹோட்டலினுள் நுழைந்திருந்தான்.
“இப்போ என்ன பண்ண போறோம் அதி?” என்றான் விவேக்.
“கடத்திட்டு வந்தவன் ஏன் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரணும் விவேக்? மொழி இங்க இருக்குறது உறுதின்னா அவனோட நோக்கம் மொழியை கடத்துறது இல்லை. வேற ஏதோ ஒரு வகையில அவங்களை போட்ரேட் பண்ணக் கூட இருக்கலாம். இல்ல, இதை வச்சு இந்த கேஸ்ல இருந்து என்னை வெளிய எடுக்க நினைக்கலாம். ஜஸ்ட் என்னோட கெஸ்சிங் தான்” என்று தீரன் சொல்ல, விவேக்கிற்கும் அப்படித்தான் பட்டது.
அங்கிருந்த சிசிடிவி கண்ட்ரோல் அறைக்குள் நுழைந்தவர்கள், என்ட்ரன்சில் இருந்து அனைத்து கேமரா பதிவுகளையும் பார்க்க..
“அதி இங்க பாரு” என்றான் விவேக். அந்த பதிவில் வெண்மொழி தானாகவே இறங்கி ஹோட்டலுக்குள் சென்று கொண்டிருந்தாள். அவளுடன் யாரும் செல்ல வில்லை. அவளின் பின்னாலும் யாரும் செல்லவில்லை. அவள் வந்து இறங்கிய கார் மட்டும் வேறு காராக இருந்தது.
ஒவ்வொரு ஆதாரமும் மொழிக்கு எதிராகவே திரும்பிக் கொண்டிருப்பதைப் போன்றிருந்தது தீரனுக்கு.
“இங்க ஏதோ சம்திங் ராங்கா நடக்க வாய்ப்பு இருக்கு விவேக்” என்று கண்களை இறுக மூடி யோசித்தவனுக்கு, யோசனைக்குக் கூட மொழியை அப்படி நினைக்க முடியவில்லை.
மொழியின் சிரித்த முகம் அவன் கண் முன் வந்து செல்ல, எதுவுமே யோசிக்க முடியாத ஒரு நிலையில், அவனறியாமல் ஒரு துளி கண்ணீர் கண்ணோரத்தில் கசிந்திருந்தது. அவனின் மனநிலை விவேக்கிற்கும் புரிந்திருந்தது.
“அதி இது டவுன் ஆகுற நேரமில்லை. நாம இப்போ ஏதாவது பண்ணியே ஆகணும்” என்றான் விவேக்.
“எல்லா கேமராவையும் செக் பண்ணு விவேக். சந்தேகப்படுற மாதிரி யாராவது இருக்காங்களா? மொழி எந்த பிளோர்ல இருக்காங்கன்றதையும்” என்றான் தீரன்.
“தேர்ட் புளோர்..ரூம் நம்பர் டூ பிப்டி அதி” என்றான் விவேக். வேகமாய் அந்த பதிவை பார்த்திருந்தான் தீரன்.
அவள் கதவின் முன் நிற்க, கதவு திறந்தவுடன் அவளே அறைக்குள் சென்றாள்.