“சர்வா. இந்த வயசுல இப்படி தான் இருக்கும். கொஞ்ச வருஷம் போகட்டும். நாம பேசலாம்” தந்தை சொல்ல,

“தாராளமா பேசலாம் டாட். ஆனா நீங்க ஒன்னை மறந்துட்டீங்க. எங்க இரண்டு பேரோட பேரண்ட்ஸும் லவ் மேரேஜ் தான், சோ எங்க லவ் தப்பா போகாது” என்று முடித்துவிட்டான் மகன்.

அதன்பிறகும் தேவைக்கு அதிகமாகவே பேசியாகிவிட்டது. மகனும் அவன் முடிவிலே உறுதியாக நின்றுவிட்டான்.

ஒரு கட்டத்தில் சிவப்பிரகாசம், தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார்.

வசுந்தரா மகனின் விருப்பத்தை சில நாட்களிலே ஏற்று கொண்டதில்,  “நீ மட்டும் எப்படி சீக்கிரம் அக்சப்ட் பண்ணிக்கிட்ட?” என்று சிவப்பிரகாசம் மனைவியிடம் கேட்டார்.

வசுந்தரா சில நொடிகள் மௌனம் காத்தவர், “எனக்கு சில காரணங்கள் இருக்கு” என்றார்.

“என் மகன் மேல் எக்கச்சக்க நம்பிக்கை இருக்கு. இதுநாள் வரை நாம தலைகுனிய மாதிரி அவன் தவறான வழிக்கு போனதில்லை”

“கஷ்டப்படுத்தி இருக்கான். அதுவும் ஒரு நியாயமான காரணத்துக்காக மட்டுமே! அதைத்தவிர என் மகன் என்ன செஞ்சுட்டான். நான் ஜட்ஜ், நீங்க பிசினஸ்மேன். பணம், பவர்ல தான் அவன் வளர்ந்தான். ஆனாலும் என் மகன் பார்டரை கிராஸ் பண்ணதில்லை” என்றார் வசுந்தரா தெளிவாக.

“என் மகன் சரி தான். ஆனா அந்த பொண்ணு”

“ம்ஹ்ம். சம்யுக்தாவை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டதும் ஒருவகையான சுயநலத்துல தான்” என்றார்.

“சம்யுக்தாவோட ஆறு வயசுல நானே தான் அவளோட பொறுப்பை எடுத்துக்கிட்டேன், ஆனா நான் என் பொறுப்புல இருந்து தவறிட்டேன். அவ ஹோம்ல நல்லபடியா வளரலை” என்றார் வருத்தத்துடன்.

சர்வாச்சார்யா அதை கொண்டு கேட்ட கேள்வி இப்போதும் வசுந்த்ராவை குத்தும்.

“மாம். உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை” என்று வெளிநாட்டில் இருந்த மகனை பார்க்க சென்ற போது, அவ்வளவு அதிருப்தியுடன் சொன்னான் மகன்.

சம்யுக்தா, குருமூர்த்தியின் கடந்தகால வரலாற்றை முழுவதுமாக தெரிந்து கொண்டிருந்த நாட்கள் அது.

அதில் சம்யுக்தா ஹோமில் வளர்ந்த விதமும் அடங்கும்.

“நீங்களே தான் அவளோட ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்திருக்கீங்க, ஆனா ரொம்ப மோசமா அதுல தோத்து இருக்கீங்க” என்று கோவமாக சொன்னான் சர்வாச்சார்யா.

நல்லவனுக்கு மனதே ஆறவில்லை. சின்ன குழந்தைடா! அவளை போய் கஷ்டப்படுத்தி இருக்கீங்க?

இருட்டு அறையில் தூக்கம், தனிமை, இரண்டு வேலை உணவு, சிறு சிறு குற்றத்துக்கும் தண்டனை! ஏன்? ஏன் இப்படி? சொகுசுக்காரனுக்கு எல்லாம் கேட்ட நேரமே கண்கள் கலங்கிவிட்டது.

ஊட்டியில் நான் ஒரு நேரம் சாப்பாடு இல்லாமல் இருந்ததுக்கே, அவ அப்பாகிட்ட சண்டை போட்டு எனக்கு சாப்பாடு கொடுக்க வைச்சா!

அந்த இரவு, அவள் அறையில் உண்மையை ஒத்துக்கொண்டு, அவனுக்காக இனிப்பை நீட்டி கலங்கிய சம்யுக்தாவை  எப்படி மறப்பான்?

அன்று அவள் சாய்ந்த தன் மார்பை,  தடவி விட்டு கொண்டான் நாயகன்.

எனக்கு அவர் சாப்பாடு கொடுக்காம இருந்தது சரிதான். என் மாம் அவங்க பொறுப்புல இருந்து தவறிட்டாங்க!

“மாம், ஒருவேளை பெருமைக்காக அவளோட பொறுப்பை எடுத்துகிட்டீங்களா?” என்று நறுக்கென  கேட்டுவிட்டான் சர்வாச்சார்யா.

“சர்வா. என்ன பேசுற நீ?” வசுந்தராவிற்கு தாளவில்லை.

“நான் தப்பா கேட்டுட்டேனா? எனக்கு அப்படி தோணலை மாம். செய்ய முடியாதவங்க பொறுப்பேத்திருக்க கூடாது. அட்லீஸ்ட் கடமைன்னு நினைச்சாவது அவளை நீங்க நல்லா பார்த்திருக்கணும்” என்றான் மகன்.

“நான் சம்யுக்தாவை மீட் பண்ணும் போதெல்லாம், நல்லா இருக்கிறதா தான் சொல்வா சர்வா. அந்த ஹோம் ரொம்ப நல்ல ஹோம் தான். என் பதவிக்கான பயம் இருக்கும். அந்த நம்பிக்கையில”

“போதும் மாம். உங்க விளக்கம் எனக்கு தேவையில்லை. நீங்க ஒரு முறை அந்த ஹோம்ல விசாரிச்சிருந்தாலே  உங்களுக்கான பதில் கிடைச்சிருக்கும். ஆனா நீங்க செய்யலை. அவ்வளவு தான் விஷயம். உங்க அஜாக்கிரதையால ஒரு குழந்தை பசியோட வளந்திருக்கு, அதை மாத்த முடியாது”

“சர்வா, நான்”

“ப்ளீஸ் மாம். இனி யார் பொறுப்பையும் நீங்க எடுத்துக்காதீங்க. அதுக்கான ஜஸ்டிஸ் உங்களால செய்ய முடியாது” என்றுவிட்டான் மகன்.

வசுந்தராவிடம் அதன் பின் அவன் முகம் கொடுத்து பேசவே பல மாதங்கள் ஆகிவிட்டது.

அவனுடைய குணத்துக்கு அவன் நிச்சயம் மறந்திருக்க மாட்டான்.

“இவ்வளவு நடந்ததா? ஏன் என்கிட்ட சொல்லலை நீ?” என்று சிவப்பிரகாசம் கேட்டவர்,

“அதனால தான் அந்த பொண்ணை அக்சப்ட் பண்ணிட்டியா என்ன?” என்று கேட்டார்.

“தப்புங்க. அதுக்கான குற்ற உணர்ச்சி எனக்கு உண்டு, ஆனா நம்ம மகனுக்காக அவளோட உயிரை கூட அவ மதிக்கல. அந்த அன்பு என் மகனுக்கு வாழ்க்கை முழுக்க வேணும்” என்றார் வசுந்தரா.

“ம்ஹ்ம். நம்ம மகனுக்கு முன்னாடி அப்பாவும், மகளும் கேடயமா நிப்பாங்க” என்றார் சிவப்பிரகாசமும்.

“நம்ம மகனுக்கு நல்லது தான். ஆனா சம்யுக்தாவுக்கு எந்தளவு நல்லதுன்னு தெரியலை” என்றார் வசுந்தரா.

வசுந்தராவின் பிறந்த வீடு வசதியானது தான். ஆனால் பெரும் பணக்காரர்கள் இல்லை. அந்த ஒரு குறைக்காகவே சிலதை வசுந்தராவும் கடந்திருக்கிறார்.

சம்யுக்தாவிடம் பெரிதான கண் உறுத்தல்கள் அதிகம் உண்டு. அவள் எப்படி சமாளிப்பாள்?

வசுந்தரா மகனிடம் பேசினார். சம்யுக்தாவிற்காக பேசினார். “சாதாரண இடத்துல அவளோட கல்யாணம் நடந்தா எல்லாம் சாதாரணமா போயிடும். ஆனா உன்னோட அவ சம்மந்தப்பட்டா, பல விஷயங்களை தோண்டி துருவுவாங்க. நம்ம சொசைட்டி, மீடியா எல்லாம் அவளை கஷ்டபடுத்த பார்ப்பாங்க. சம்யுக்தா அதை எப்படி ஹாண்டில் பண்ணுவா? யோசி சர்வா?” என்றார்.

“மாம். நாந்தான் இருக்கேனே? அப்புறம் எப்படி அவ கஷ்டப்படுவா?” என்று மகன் ஒரேடியாக முடித்துவிட்டான்.

இனியும் மறுக்க என்ன இருக்கு? பெற்றவர்களும் மகன் விருப்பத்தை ஏற்று கொண்டுவிட்டனர்.

இல்லையென்றால் சர்வாச்சார்யா வெளிநாட்டில் இருந்து வந்ததில் இருந்து அவன் நடவடிக்கைகளை கண்டு பெற்றவர்கள் கோவம் கொண்டிருக்க வேண்டுமே?

இப்போது ஏற்று கொள்ள  வேண்டியது அப்பாவும் மகளும் மட்டும் தான்.

இருவரும் முடியாது என்று சொன்னாலும் கேட்க நாயகன் தயாராக இல்லை.

சர்வாச்சார்யா வேகத்தில் அருகிலே இருந்த சம்யுக்தா மிரண்டு விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

குருமூர்த்திக்கு பேசி வைத்தவன், அடுத்து உடனே வசந்தரா தம்பதிக்கு அழைத்து பேசிவிட்டான்.

சம்யுக்தா அவனிடம் பேசவே நேரம் கொடுக்காமல், அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான்.

“ராகவ். ட்ரெஸ்க்கு இவங்களை புக் பண்ணு. இன்விடேஷனுக்கு இவங்களை புக் பண்ணு, கேட்டரிங்குக்கு அப்பாகிட்ட பேசு” என்றவன்,

“ஈவென்ட் மேனேஜர் அவரை பார்க்க போயிட்டாரா?” என்று கேட்டான்.

“சார் செக் பண்ணலை” என்று ராகவ் சொல்ல, அதற்கு காதே தீய்ந்து போகும் அளவு வறுத்து எடுத்துவிட்டான்.

“சார். சார். ஒன் மினிட். கேட்டு சொல்லிடுறேன்” என்று போனை எடுத்தவன்,

“குருமூர்த்தி சார் மீட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாராம். பிளாட்டுக்கு கீழே தான் இருக்கார்” என்றான் ராகவ்.

சர்வாச்சார்யா புருவங்கள் இடுங்க, “கார் எடு” என்றான் ஓர் முடிவுடன்.

சம்யுக்தா அவன் வேகத்தில் திணறி போனாள். அவள் கரத்தை இறுக்க பற்றி கொண்டு விறுவிறுவென காருக்கு நடந்தான்.

திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டதை சர்வாச்சார்யாவின் குடும்பம் தெரிந்து கொண்டு விட்டிருந்தது.

ஆகாஷ் அதை பற்றி கேட்க வேகமாக வர, “நாட் நவ்” என்று அவன் தோளில் தட்டி, சம்யுக்தாவுடன் கிளம்பிவிட்டான் நாயகன்.

வழி நெடுக சம்யுக்தா பேசவே வாய்ப்பளிக்கவில்லை.

கார் சம்யுக்தா வீட்டின் முன் நிற்கவும், இறங்க போன சர்வாச்சார்யா கரத்தை இறுக்கமாக பற்றி கொண்டாள் சம்யுக்தா.

“நாம பேசணும்” என்றாள் பெண்.

காரில் அவர்கள் மட்டும் இருக்க, சர்வாச்சார்யா கண்கள் கையில் இருந்த டேப்’பில் பதிந்துவிட்டது.

பெண்ணிற்கு மெலிதான புன்னகை.  “என்னை பார்க்க கூட மாட்டீங்க ஆனா என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்கணும் இல்லை?” என்று கேட்டாள்.

பதிலில்லை.

“ஒருத்தருக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துறது தப்பு. அதை நீங்க செய்ய கூடாது” என்றாள் பெண்.

“என்கிட்ட எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனா உங்களுக்கு நான் அப்படி இருக்க மாட்டேன். எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு, உங்க வழியில நீங்க போங்க. அதுதான் உங்களுக்கு நல்லது”

“நான் பேசினதுல கோவம். எனக்கு தெரியும். சுயநலம்ன்னு சொன்னதுக்காக ஸாரி கேட்டுக்கிறேன். அதுக்காக கல்யாணம் அதிகம். ஒருவேளை எனக்காக அந்த முடிவை எடுத்திருந்தா வேண்டவே வேண்டாம். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இனியும் இருப்பேன்” என்றவளின் கன்னம் அழுத்தத்துடன் பற்றப்பட்டது.

சம்யுக்தா கண்களை விரிக்க, சர்வாச்சார்யா தன் உதடுகளுடன், அவளின் உதடுகளை தீயாக பற்றி கொண்டான்.

தணியவே தணியாத காட்டு தீயாக அவளின் உதடுகளை பற்றி எரிய வைத்தான்.

சம்யுக்தா அவனின் இதழ் முத்தத்தில் அதிர்ந்து தெளியவே நேரம் கொடுக்க மாட்டேன் என்று திரும்ப, திரும்ப கவ்வி கொண்டான்.

அவனின் கைகள் பெண்ணை இழுத்து தன் மடிக்கு மாற்றி கொண்ட பின்னும் இன்னும் இன்னும் வேகம்.

சம்யுக்தா அவனின் நெஞ்சு சட்டையை இறுக்கமாக பிடித்து கொள்ள, அவனின் கை பெண்ணின் பின் கழுத்தை தன்னுடன் வளைத்தே வைத்து கொண்டது.

சர்வாச்சார்யாவின் மற்றொரு கரம்  சம்யுக்தாவின் இடையில் அலைந்து, எங்கெங்கோ பரவ ஆரம்பித்தது.

ம்ஹூம் என்று மறுப்பாக தலையசைத்த சம்யுக்தா, அவனிடம் இருந்து விடப்பட முயல, நெருக்கத்தை கூட்டிவிட்டான் கள்ளன்.

இந்த மலைமாடு என்ன இவ்வளவு ஸ்ட்ராங்கா மாறிட்டான்?

சம்யுக்தா கடுப்பாகி அவன் உதட்டை மெலிதாக கடித்து வைக்க, அவன் கரம்  எங்கேயோ அழுத்தமாக பதிந்து பெண்ணை மிரள வைத்துவிட்டது.

“மலைமாடு வலிக்குதுடா” சம்யுக்தா நொடி இடைவெளியில் அலற,

அவ்வளவு தானே என்று பூப்போல் அவளின் உதடுகளை களவாட ஆரம்பித்துவிட்டான்.

நீ என்கூட இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்! என்று அவளுக்கு புரிய வைத்து கொண்டிருந்தான் நாயகன்.

சம்யுக்தா புரிந்து கொண்டாளோ? அவனுள் அடங்கிவிட்ட பெண்ணை, மார்புடன் தழுவி கொண்டான் காதல்க்காரன்!