தலையில் யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலிக்க, உடலே பாறமாக அழுத்த கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தவள்.
உடலை அசைத்து பெட்டை விட்டு எட்டிப் பார்க்க முயல, அதற்கு அவள் உடல் ஒத்துழைக்காமல் போக மீண்டும் கண்களை மூடிப் படுத்துவிட்டாள்.
எப்போதும் ஐந்து மணிக்கு எழும் ஸ்டெல்லா, அன்று மணி எட்டைத் தொட்ட போதும் அவளால் எழுந்திருக்க முடியவில்லை.
ஸ்டெல்லா விழிக்கவில்லை என்றதும் ரூத்தும் அவளுடன் சேர்ந்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். எட்டரை மணி போல ரூத்திற்கு முழிப்பு வரக் உடலை நெழித்து சோம்பல் எடுத்த படி எழுந்து அமர்ந்தாள்,
“செம தூக்கம்…..” என்று அமர்ந்த வளுக்கு அருகில் சூடு தெரிந்து திரும்பிப் பார்த்தவள்,
“என்னது! ஸ்டெல்லாக்கு முன்னாடியே முழிச்சிட்டோமா…… வாவ், வாட் அ அதிசயம்!” என்று அதிர்ந்து நேரத்தைப் பார்த்தபோது மணி ஒன்பதைத் தொடத் தயாராக இருந்தது.
“என்னது இவ்வளவு நேரமா தூங்கிருக்கோம் அச்சோ, ஸ்டெல்லா அவ வேலை?” என்று நினைத்து ஸ்டெல்லாவைத் எழுப்ப அவள் உடம்பே நெருப்பாய் தகித்தது.
“அய்யோ ஸ்டெல்லா, என்ன உனக்கு இப்படிச் சுடுது…..” என்று பயந்து போனவள் என்ன செய்வது என்று புரியாமல், “ஸ்டெல்லா….. ஸ்டெல்லா…..” என்று எழுப்ப அவளிடம் இருந்து முனங்களாக
“ம்ம்ம்……….. ஜோசப்……” என்று பதில் வர ரூத்திற்கு கை, கால் எல்லாம் நடுங்கிவிட்டன.
இத்தனை ஆண்டுகளில் ஸ்டெல்லாவை இப்படி ஒரு நாளும் இவள் பார்த்ததே இல்லை. உடல் சரியில்லை என்றாள் அவளே, மருத்துவமனை சென்று மாத்திரை வாங்கிப் போட்டுவிட்டு
“லைட்டா தான் ஃபீவர் ஜோசப்” என்று சிரித்த முகத்துடன் வேலைக்குச் செல்லும் ஸ்டெல்லாவைத்தான் இவள் பார்த்திருக்கிறாள்.
இப்படிப் பேசக் கூட முடியாது படுத்தப்படுக்கையாக இருப்பவளைப் பார்த்து மிகவும் பயந்து தான் போனாள் ரூத்.
மன வலிமை இல்லாத நேரத்தில் சாதாரணக் காய்ச்சல் கூட உடலின் வலிமையை இலக்க வைத்துவிடும். அதுதான் இங்கு ஸ்டெல்லாவிற்கும் நடந்திருக்கிறது.
எத்தனை உடல் வலி வந்தாலும் அதைச் சிரித்தபடி கடந்து செல்பவளால், இந்த மனதின் சோர்வைத் தாங்க முடியாமல் போய்விட்டது.
உடலோடு மனத்தையும் போட்டு குழப்பிக்கொண்டு பயந்து போனதால் தான், ஸ்டெல்லா இப்படிப் படுத்திருக்கிறாள் என்று அறியாது.
“என்ன பண்ண இப்போ நானு…. ஸ்டெல்லா…. எழுந்திரி பயமா இருக்கு….” என்று கலங்கி நின்றவள், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் இரவு உடையோடு பக்கத்து வீட்டிற்கு மணியம்மாவைப் பார்க்க ஓடிச் சென்றாள்.
என்னதான் மணியம்மாவோடு நன்றாக ரூத் பேசினாலும், அவர் வீட்டிற்கு இதுவரை சென்றதே இல்லை. ஸ்டெல்லா வேலைக்குச் செல்லும் நேரத்தைக் கவனித்து அவரே வந்துவிடுவார்.
அதனால் இவளுக்கு அவரைச் சென்று அங்கே பார்க்க வேண்டும் என்ற தேவை இது வரை இருந்தது இல்லை. ஆனால் இன்று ஸ்டெல்லா இப்படிப் படுக்கையில் இருந்து எழாமல் போனதால், பயம் பிடித்துக் கொள்ள மணியம்மாவைத் தேடி கால்கள் தானாகச் சென்றன.
போன் ஒன்று இருப்பதையே மறந்தவளாக, செருப்பு கூட அணியாமல் ஓடிச் சென்றாள் பக்கத்து வீட்டுக்கு.
இங்கு ஆதிஷ் வீட்டில், அனைவரும் ஹாலில் தான் உணவை உண்டு கொண்டிருந்தனர்.
ஆதிஷ் அப்பா கண்ணப்பன் கையில் காலித் தட்டோடு, அடுத்து தோசை நமக்கு வருமா இல்லை அதுவும் பிள்ளைக்குக் கொடுத்து விடுவாளா? என்ற கவலையில் கிட்சனையே பார்த்துக் கொண்டிருக்க,
ஆதிஷோ அவன் தோசை தீர்ந்தது கூடத் தெரியாமல் போனில் ரூத்திற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவள் எப்போது ரிப்ளை செய்வாள் என்று ஆர்வமாகக் காத்திருந்தான்.
இவர்கள் நடுவில் மணியம்மா டீவியில் காலைச் செய்தியில் மூழ்கிப் போய் பசி இன்றி உட்கார்ந்திருந்தார்.
அந்நேரம் பார்த்து கையில் தட்டில் தோசையோடு வாணி வரவும், ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்த கண்ணப்பன்
“எவ்வளவு நேரம் வாணி ஒரு தோசை சுட? சீக்கிரம் வா…. தட்டுல போடு” என்று தட்டை நீட்டியவரை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்து வைத்தவர்
“ஏ… வாணி, என்னம்மா மூணு தோசை தான கொடுத்த, அதுக்குள்ள கணக்கு எப்படி முடியும்? இதுல இன்னைக்கு நீ சுட்ட தோசை பூராவே குட்டி தோசை வேற, என்னும் ஒன்னு கொடு வாணி?”
“ப்ச்.. பொய் கணக்கு என் கிட்ட போடாதீங்க….” என்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்க, வாணி
“யாரு…. இத்தன காலைல வந்திருக்கது…” என்று கதவைச் சென்று திறக்க, அங்கே மூச்சு வாங்க, தலை கலைந்து, முகம் முழுக்க சிவந்து போய், அழும் நிலையில் நின்ற ரூத்தை பார்த்து அதிர்ந்தவர்
“எ… பொண்ணு, என்னம்மா இப்படி வந்து நிக்குற? என்ன ஆச்சு?”
“அது… அது… ஸ்….ஸ்டெல்லாக்கு உடம்பு சரியில்ல, எழுப்புனா எழுந்திருக்க கூட முடியல, கொஞ்சம் பாட்டிய கூப்பிடுங்க…” என்று மூச்சு வாங்க பேச
“இதோ ம்மா கூப்பிடுறேன்…” என்றவர் திரும்பி அங்கிருந்தே “அத்தை…. அத்தை….” என்று கத்தி அழைக்க, மணியம்மாள்
“என்னடி…. யாரு அது வந்திருக்கது? என்ன தேடியா வந்திருக்காங்க?” என்று மெல்ல எழுந்து வர,
“ஆமா அத்தை, இந்த பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு தான் வந்திருக்கா” என்றதும், ஆதிஷ் தலை, வாசல் புறம் திரும்ப அங்கே பதட்டமாக நின்று கொண்டிருந்தவளை பார்த்து,
புருவம் சுருக்கியவன் “இவ இப்படி இங்க வர மாட்டாளே… என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசித்தவன், எழுந்து மணியம்மாள் உடன் அவனும் சென்றான்.
ரூத்தை அந்த நிலையில் பார்த்த மணியம்மாள் “ஏ..ரூத் என்னடி ஆச்சி? இப்படி வந்து நிக்குற? உங்க அக்கா…. அவ எங்க? அவ வீட்டுல இல்லையா?” என்று கேட்டவரை, இறுக அணைத்துக் கொண்டவள் சிறு பெண் போல தேம்பிய படி.
“பாட்டி, ஸ்டெல்லா எழுந்திரிக்க மாட்டேங்குறா அவளுக்கு ஓரே ஜூரமா இருக்கு” என்று அவள் சொன்னதை கேட்டு, அதிர்ந்து தான் போனவர்.
அடுத்த நிமிடம் எதுவும் பேசி நேரம் கடத்தாமல் அவள் கையை பிடித்துக்கொண்டு ஸ்டெல்லாவை பார்க்க சென்று விட்டார்.
இதில் ஆதிஷ் தான் அதிர்ந்து நின்று விட்டான். ரூத் ஒரு சிறு பார்வை ஏன் இவன் நிற்பதை கூட கவனிக்காமல் சென்றதில், மீண்டும் மனம் அடிவாங்கி தான் போனது
முன்பு என்றாள் கூட சரி, அவளுக்கு இவனை தெரியாது என்று விட்டுருப்பான்; ஆனால் இப்போது அவள் அவனிடம் காட்டும் நெருக்கம் குளைவு என்று இருவரும் நெருங்கி இருக்க, இன்று இவள் காட்டி சென்ற அலட்சியத்தில் நொந்துதான் போனான்.
இதில் அவன் எடுத்த முடிவில் மேலும் உறுதியானான் ஆதிஷ். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஸ்டெல்லாவிடம் இருந்து இவளை பிரித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினான் ஆதிஷ்.
இங்கு மணியம்மா வேகமாக ஸ்டெல்லா அறைக்கு சென்று அவளைப் பார்த்தார்.
“என்னடி ரூத்து…. இவ முகமே ஒரு மாதிரி வாடி போய் இருக்கு” என்று அவள் நெற்றி, கை, முகம் என்று தொட்டுப் பார்க்க.
“அது ஸ்டெல்லா நைட் வயிறு சரியில்லன்னு சரியாவே சாப்பிடல பாட்டி.”
“அவ சாப்பாடு வேணாம்னு சொன்னதும் நீ சரின்னு விட்டியா டி?” என்று அவளை முறைத்தவர் லேசாக ஸ்டெல்லாவை உசுப்பி,
“ஸ்டெல்லா……. ஸ்டெல்லா…. “ என்று அவளை அழைக்கவும் அவள் கண்கள் அசைய, லேசாக கண்களை திறந்து பார்த்தவள் பேச முடியாது
“ம்ம்ம்….” என்று சத்தம் மட்டும் எழுப்ப,
“என்னத்தா பண்ணுது…., ஆஸ்பிட்டல் போவோமாத்தா…. “ என்றதற்கு அவள் தலை மறுப்பாக அசைய, எச்சிலை கூட்டி விழுங்கியவள் மிக மெல்லிய குரலில்,
“இல்ல மாத்திரை சாப்பிட்டா போதும், கொஞ்சம் மாத்திரை எடுத்து தாங்க “ என்றதும் மணியம்மாள்,
“என்னடி மாத்திரை அது ரூத்? என்ன சொல்ற இவ?”
“அது ஜூரம் மாத்திரையா இருக்கும் பாட்டி, ஸ்டெல்லா எப்பவும் வீட்டுல வாங்கி வைப்பா “
என்று வேகமாக ஹாலில் இருந்த மாத்திரையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள், யோசிக்காமல் அதை பிரித்து தண்ணீர் எடுத்து ஸ்டெல்லாக்கு கொடுக்க போக
அவள் முதுகில் சுல் என்று அடித்த மணியம்மா, “கிறுக்கி கிறுக்கி என்ன டி பண்ணற?”
“அ…. பாட்டி ஏன் இப்போ அடிக்கிற? ஸ்டெல்லாவுக்கு மாத்திரை தான கொடுக்க போறேன்?”
“நைட்டும் சாப்பிடல, காலைலயும் சாப்பிடல, வெறும் வயித்துல மாத்திரை தர போறியா டி கிறுக்கி?”
“அச்சோ மறந்திட்டேன் பாட்டி …” என்று தலையில் அடித்துக்கொண்டு அவள் வேகமாக எழ,
“என்ன சமைக்க போற ரூத்?”
“மாவு இருக்கு பாட்டி, தோசை ஊத்த போறேன், நைட் சட்னி வேற இருக்கு “ என்றவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவர்,
“எழவே முடியாம இருக்க புள்ளைக்கு தோசை குடுப்பியா டி? உனக்கு புத்தி இருக்க?” என்றதற்கு ரூத் அழுதேவிட, அதில் மணியம்மா,
“இப்போ எதுக்கு நீ அழற?” என்று ஆயாசமாக அவர் பார்க்க,
“நான்…. எனக்கு… என்ன பண்ண தெரியல பாட்டி, பயமா இருக்கு. இதுக்கு முன்ன இவ இப்படி உடம்பு சரியில்ல ன்னு படுத்ததே இல்ல பாட்டி, அவளுக்கு ஒன்னும் ஆகாதுல “ என்று இவள் அழு குரல் ஸ்டெல்லா காதிலும் விழ தான் செய்தது.
“அட சில்லாட்ட நம்ம ஸ்டெல்லாக்கு என்ன ஆகிட போகுதுன்னு அழற? அவளுக்கு ஒன்னும் ஆகாது பாரு, மாத்திரை சாப்பிட்டு மதியமே எழுந்து உட்கார போறா “ என்று அவர் சொன்ன படி தான் நடந்தது.
மதியமே நல்ல தெளிவான மனதுடன் எழுந்து அமர்ந்தாள் ஸ்டெல்லா.
ரூத்திற்கு நாம் மட்டும் தான் அவளுக்காக உறுதியாக இருக்க வேண்டும் என்று ஜெபம் போல அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டவள், ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள் பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு ஹாலுக்கு வர, அங்கே மணியம்மாள் எப்போதும் போல ரூத்தை அருகே அமர வைத்து சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.
ரூத் தான் சீரியல் பார்க்காது, ஸ்டெல்லாவின் அறையையே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் ஸ்டெல்லா எழுந்து வருவதை பார்த்து மகிழ்ந்தவள், “ஸ்டெல்லா…“
என்று ஓடி சென்று அவளை இறுக அணைத்துக்கொண்டவள் அத்தனை பயந்திருந்தாள்.
ஸ்டெல்லா இவளுக்கு அக்காவாக இருந்ததை விட அம்மாவாகவும், அப்பாவாகவும், தோழியாகவும் என்று அனைத்தூமாக இருந்தது தான் அதிகம்.
பள்ளியில் இருந்து இன்று வரை இவளைக் கூட்டில் வைத்து அடை காப்பது போலக் காத்து வந்தவள். அவளுக்கு ஒன்று என்றால் அவ்வளவு தான், இந்த உலகமே வேண்டாம் என்பது போல தான் உயிரை வைத்திருந்தாள் ரூத்.
“ஏ…. ஜோசப் என்ன ஆச்சுடா? ஏன் இத்தனை அழுகை? எனக்கு என்ன ஆச்சு, ஜஸ்ட் ஒரு சின்ன ஃபீவர், அவ்வளவு தான.”
“அது தண்ணில மிளகாய்பொடி, மண்ணு, மாட்டுச் சாணம்னு நிறைய போட்டு கலந்து ஊத்திட்டேன் டி.” என்று தலையை குனிந்து கோள்ள
“அச்சோ…… பாவம் பாட்டி … அதான் இத்தன பயமா உன் மேல?” என்று ரூத் மேலும் சிரிக்க, ஸ்டெல்லாவும் அந்த நினைவில் அவளும் சிரித்தபடி நின்றாள்.
இப்படி இவள் இங்கே தெளிந்து விட, அங்கு ஆபீஸில் ஒருவன் இவள் வருகையின்றி குழம்பி இருந்தான்.
“என்ன சொல்ற தருண்? ஸ்டெல்லா இது வரை லீவ்னு போட்டதே இல்லையே? எமர்ஜென்ஸி ன்னா கூட முன்னாடியே சொல்லிடுவாளே! ஒழுங்கா விசாரிச்சியா? அவ உண்மையாவே ஆபீஸ்க்கு வரலையா?” என்று ஆச்சரியமாக அதே சமயம் குழப்பத்துடன் த்ரூவ் கேட்க
“நான் செக் பண்ண வர மேம், வரல சார் ஆபிஸ்க்கு. டிரைவர் வீட்டுக்கு போய்ருக்கார், அன மேம் அவரை ரிட்டன் போக சொல்லிடாங்களாம்.”
“ரீசன் எதுவும் சொல்லலையா?”
“இல்ல சார்” என்று தலையை அசைக்க, அங்கே த்ரூவ் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
எப்போதும் ஆபிஸ் வந்ததும் முதல் வேலையாக ஸ்டெல்லாவை கேமரா வழியில் ஒரு முறையாவது பார்த்து விட்டு தான் வேலையைத் தொடங்குவான்.
இன்றும் அதே போல கேமரா வழியே அவளைத் தேடி தோர்த்தவன், அவளைக் காணாது நேரத்தை பார்த்தான்.
நேரத்திற்கு ஆபிஸ்க்கு வருபவள் என்னும் வராமல் இருக்க, தருணை அழைத்து விசாரித்தான் அதற்கு அவன் சொன்ன பதிலில் கோபம் தான் ஏறியது.
“நேத்து நான் அவளப் பார்க்கப் போல ன்னு கோச்சி கிட்டாளோ…” என்று யோசித்தவன், மறுப்பாகத் தலையசைத்து,
“ச்சீ … இருக்காது அவ, எங்க நம்மள எதிர் பார்ப்பா?” என்று கசப்பாகச் சிரித்துக் கொண்டவன்.
வேறு எதுவும் யோசிக்காது அவள் போனிற்கு அழைத்து விட்டான். ரூத் தான் போனை எடுத்தாள்.
“ஹாலோ…. சொல்லுங்க…” என்ற குரலில்.
“ஸ்டெல்லா…. அவங்க எங்க …”
“அவங்களுக்கு உடம்பு சரியில்ல, படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க. முழிச்சதும் கால் பண்ணச் சொல்றேன்” என்று ரூத் வைத்துவிடவும்.
“உடம்பு சரியில்லையா ஸ்டெல்லாவுக்கு?” என்றவன் வேகமாக எழுந்து கார் கீயை எடுத்துக்கொண்டு கிளம்பப் போக தருண். “சார்..…எங்க சார் போறீங்க ”
“சார்….. என்ன இது? அங்க போய் என்னன்னு சார் உங்கள சொல்லுவிங்க” என்ற தருணின் கேள்வியில் நிஜம் புரிய சோர்ந்து போய் அம்ர்ந்து விட்டான்
மீண்டும் சேரில் வந்து அமர்ந்தவன்
“ஆமா, என்ன யார்னு சொல்லுவேன். நான் அங்க வந்து உன்ன யாரவது தப்பா பேசிட்டா…..உனக்கு ஒன்னுன்னா உன்னப் பார்க்கக் கூட வர முடியாத இடத்துல என்ன வச்சிட்டியேடி…”
என்று கண்களை மூடி அமைதியாகச் சேரில் சாய்ந்தவனுக்கு உடல் தான் இங்கு இருந்தது, மனம் முழுக்க அவளையே தான் சுற்றி வந்தது.
அப்போது பார்த்து இவன் போன் அலர, அதைச் சலிப்பாக எடுத்துப் பேசியவனின் முகம் சோகத்திலிருந்து நொடிப் பொழுதில் கோபமாக மாறியது.
அவன் முக மாற்றத்தைப் பார்த்த தருண், “சார் மூட் தெரியாம யாரோ தானா வந்து சிக்கிக்கிறாங்க போலயே” என்று எண்ணிக் கொண்டான்.
தருண் எண்ணியது சரிதான்; மனம் வாடி இருந்தவனைச் கோப படுத்துவது போல மதி தான் அவன் வேலையைக் காட்டியிருந்தான்.
த்ரூவ் கம்பெனி ப்ராடக்ட்டைக் போல டூப்ளிகேட் செய்து மார்க்கெட்டில் பரப்பியதும், இன்றி அதைப்பற்றித் தவறான கருத்துகளை மக்கள் மனதில் பரப்பி இருந்தான்.
இது கூட பறவாய் இல்லை என்று சொல்லும் விதமாக இவனின் பெண்கள் ஆஸ்ரமத்திற்கு இரவு நேரம் சில ஆண்களை வேறு அணுப்பி வைத்திருக்கிறான்.
அதில் சோகம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கோபமாக மதி புறம் திரும்பியது. நேரில் கிடைத்தாள் அவனை பிய்த்து எறிந்து விடும் கோபத்தில் இருந்தான்.
எப்போதும் த்ரூவ் தீவிரமாக வேலை செய்வான் தான், ஆனால் இன்று தண்ணீர் அருந்தக் கூட எழாமல் வேலை செய்தவனைப் பார்த்து அரண்டு தான் போனான் தருண்.
இதில் நடுவில் இவன் செய்த ஃபோன் கால்கள், அதில் இவன் கொடுத்த உத்தரவு என்று அனைத்தையும் கேட்டவன்,
“யார் சாப்ட்டரையோ திவ்யாமா முடிக்கப் போறாரு போலயே நம்ம சார், யார் அந்த ஆடுன்னு தான் தெரியல”
என்றவனுக்கு யார் அது என்று அடுத்த நாள் செய்தியில் தெரிய வந்தது.
“கே.எம்.பி ஹோட்டல்களில் எஃப்.டி.ஏ விலிருந்து உணவு சோதனை நடந்ததில் அங்கு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் அதன் நிர்வாகியான மதியழகனை போலீஸார் கைது” என்று நியூஸை பார்த்து வாயில் இருந்த காப்பியை துப்பியவன்.
“எங்க போய் சார் கை வச்சிருக்கீங்க…… ” என்று மிரண்டு தான் பார்த்தான் தருண்.