மொட்டை மாடியில் ஒரு முழுநிலவு இரவு நாளில் அவன் பாய் தலையணையோடு சென்றிருக்க.,
அவன் சென்ற சற்று நேரத்தில் எல்லாம், இவள் அறையில் விடி விளக்கை மட்டும் எரிய விட்டுவிட்டு மெதுவாக கீழே எட்டிப் பார்த்தாள்.,
விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருப்பது தெரிந்தவுடன், மெதுவாக மடியேறி சென்றாள்.
அவனும், “என்ன ஆச்சு இன்னைக்கு இவ்வளவு மெதுவா வர்ற”, என்றான்.
“எப்பவும் நீங்க கீழ லைட்டெல்லாம் ஆப் பண்ணதுக்கு அப்புறம் தான் மாடிக்கு போவீங்க., இன்னைக்கு என்னமோ அதிசயமா சீக்கிரம் வந்துட்டீங்க”, என்று சொன்னாள்.
“கீழே எல்லாரும் அப்பவே படுக்க போயாச்சு, அப்பாவும் தாத்தாவும் தான் வெளியே பேசிட்டு இருந்தாங்க, கண்டிப்பா அப்பாவும் தாத்தாவும் மொட்டை மாடிக்கு வர மாட்டாங்கன்னு தெரியும்., உள்ள வர்ற ஸ்டெப்ஸ் கதவு பூட்டிட்டேன்., அதனால மேல யாரும் வர மாட்டாங்கன்னு தெரியும்., வெளிய அப்பா நாய் எல்லாம் அவுத்து விட்டுட்டாரு, அதனால யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க ன்னு தைரியம், அதுதான் மாடிக்கு வந்துட்டேன்”, என்று சொன்னான்.
இவளும் அவன் அருகில் போய் அமர்ந்து கதை பேச தொடங்கி இருந்தாள். அவன் வாங்கிக் கொடுத்த புடவை பற்றி பேசிக் கொண்டிருந்தவள், “அந்த புடவை அழகா இருக்கு, எப்படி செலக்ட் பண்ணுனீங்க”, என்றாள்.
“தற்செயலா போயிருந்தேன், நீ காட்டன் சாரி சொல்லிட்டு இருந்தியா., அதனால பார்க்கும்போது அந்த கலர் உனக்கு அழகா இருக்கும்னு தோணுச்சு., அதனால எடுத்துட்டேன்., புடிச்சிருக்கு தானே”, என்றான்.
“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு”, என்று சொன்னவள்.,
அவன் வலது கையை தலைக்கு கீழே வைத்து, இடது கையை நீட்டி இருக்க., அவன் கையில் தலை வைத்து படுத்தாள்.
அவன் மார்பில் கை போட்டபடி, அவனை பார்த்து திரும்பி படுத்து கதை பேச தொடங்கி இருந்தாள்.
அவனோ எப்போதும் போல அவள் நெற்றியில் முத்தம் வைக்க., இவளோ சிரித்துக் கொண்டே, “கவுண்டிங் தான் தெரியல”, என்று சொன்னாள்.
அவனும், “கணக்கு வச்சுக்கோ, அப்புறமா வாங்கிக்கிறேன்”, என்று சொல்லி மீண்டும் நெற்றியில் முத்தம் கொடுக்க., சிரித்துக் கொண்டே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவன் அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு., “இதை மட்டும் குடும்பத்தில் உள்ளவர்கள் பாக்கணும்”, என்று சொல்ல..,
“ஹலோ நாம ஒன்னும் டீன் ஏஜ் பிள்ளைங்க கிடையாது., நமக்கு எப்படி கட்டுப்பாடாக இருக்கணும்னு தெரியும்., அந்த அளவுக்கு மனசுல கட்டுப்பாடு இல்லாம நீங்களும் இல்ல., நானும் இல்ல, சரி இந்த நாலு மாசத்துல நீங்க நெத்தில கொடுக்கிற கிஸ், இந்த மாதிரி புடிச்சிக்கிறது., அப்புறம் கிளம்பும் போது ஒரு ஹக்., இது தவிர நமக்குள்ள ஏதாவது இருக்கா., ரெண்டு பேரும் பேசுறோம், நிறைய பேசுறோம் இல்லையா.,
எந்த டவுட்டா இருந்தாலும் கிளியர் பண்ணிக்கிறோம், நம்மளோட வாழ்க்கையில நமக்கானத நாம தான் பிளான் பண்ணனும்., மேபி பேரன்ட்ஸ் பார்த்து வைக்கிற கல்யாணத்துல இந்த அளவுக்கு பேசுவாங்களா அப்படிங்கறது எனக்கு தெரியல., எந்த ஒரு விஷயத்தையும் எனக்கான சந்தேகங்களை நான் உங்ககிட்ட மட்டும் தான் கேட்க முடியும், உங்களுக்கான டவுட்ஸ நீங்க என்கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும்., விருப்பு வெறுப்பு எல்லாத்தையுமே நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் ஷேர் பண்ணிக்க முடியும்., எவ்வளவு தான் பழகினவங்க தெரிஞ்சவங்கனாலும் எல்லாத்தையும் பேச முடியாது இல்லையா”, என்று சொல்ல.,
நிலவொளியில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆனா அந்த பொடு பொடு ன்னு பேசுற வாய் இருக்கு பார்த்தியா., நான் உன்னை முதல் நாள் பார்த்ததிலிருந்து என்னை டிஸ்டர்ப் பண்ணுது., ஆனா ரொம்ப கட்டுப்பாடா இருக்கேன்., என்னைக்கு அந்த வாய்க்கு தண்டனை கொடுக்க போறேன்னு தெரியல”, என்று சொல்லவும்.
இவளோ, “நீங்க மேரேஜ் பண்ணதுக்கு அப்புறம் யோசிப்பீங்கன்னு எனக்கு தோணுது”, என்று சொன்னாள்.
அவனும் “அப்ப நீ கொடுத்திட வேண்டியது தானே”, என்றான்.
“அதெல்லாம் முடியாது”, என்று சொல்ல.,
“ஆமா நான் நெத்தியில குடுக்குறதுக்கு, நீ அட்லீஸ்ட் கன்னத்துல, இல்ல நாடியில, கை விரல்ல., ம்ஹும் மாட்டேன்னு சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கியே”, என்று சொல்ல.,
“வீட்ல சொல்லிட்டேன் தான், ஆனாலும் அவங்க என் மேல வச்ச நம்பிக்கை இருக்கு இல்ல., அந்த நம்பிக்கையை நான் கடைசி வரைக்கும் காப்பாத்தணும்”,என்றாள்.
“எப்ப வரைக்குமா”, என்றான்.
“நீங்கதான், அப்படின்னு உங்கள கொண்டு போய் நிப்பாட்டுற வரைக்கும்., நிப்பாட்டி எல்லாரும் ஓகே சொல்லி., நிச்சயம் பண்ணதுக்கு அப்புறம் நான் உங்களுக்கு கொடுக்கிறேன்”., என்றாள்.
“எங்க கொடுப்ப கன்னத்திலா, உதட்டிலையா”, என்று கேட்டான்.
“யோசிக்கலாம், அது அப்ப என்ன தோணுதோ, அப்படி”, என்று சொல்லிவிட்டு அவனிடம் மீண்டும் பேச தொடங்கினாள்.
சிரித்துக் கொண்டவன், “நீ அப்போதும் கொடுக்க மாட்ட உன்னிடம் இருந்து திருமணத்திற்கு பிறகு தான் வாங்க முடியும்”, என்றான்.
அவன் புரிதலை நினைத்து சிரித்தபடி அவனைப் பார்க்க,
அவன் தான், “நீ டாக்டர் உனக்கு ஓரளவுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும், நீங்க அனாடமி எல்லாமே படிச்சு இருக்கீங்க, படிக்காத எனக்கு டவுட் வருவது ஓகே., உனக்கு ஏன் இவ்வளவு டவுட்ஸ் வருது”, என்று கேட்டான்.
“ஹலோ தியரி கிளாஸ் மட்டும் தான் சொல்லி தருவாங்க, பிராக்டிகல் கிளாசுக்கு நான் எங்க போய் கத்துகிறது”, என்றாள்.
“அப்போ கத்துக்கிட்டா தெரியும் ங்கிற”, என்றான்.
” கத்துக்கிட்டா தெரியும், இப்ப அதனால தான் உங்களுக்கு டவுட்ஸ்”, என்று சொல்ல.,
“ஆமா”, என்று சொல்லி இருவரும் சிரித்துக்கொண்டனர்.
“ஆனாலும் நம்ம ரொம்ப யோசிக்கிறோம். இன்னும் வளகாப்புக்கே மூணு மாசம் இருக்கு, அதுக்கப்புறம் அவளுக்கு டெலிவரி ஆகணும்., உனக்கு படிப்பு முடியனும்., அதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பத்தி யோசிக்கணும்”, என்று அவன் சொல்லவும்.
“அதுவரைக்கும் இருக்கிற டவுட்ஸ் எல்லாம் பேசிப்பேசியே தீர்த்துக்கலாம்”, என்று சொல்லிவிட்டு., “கல்யாணத்துக்கு அப்புறம் பிராக்டிகல் கிளாஸ் மட்டும் வெச்சுக்கலாம்”, என்று அவள் சொல்ல.,
அவனும் அவள் நெற்றியில் முட்டி, “ஆனா அந்த வாய் இருக்கு பாரு, மத்தவங்க ட்ட எல்லாம் எவ்வளவு நல்ல பிள்ளையா அமைதியா பேசுது., என்கிட்ட மட்டும் இவ்ளோ பொடு பொடு ன்னு எவ்வளவு விஷயங்கள் பேசுது”, என்றான்.
“மத்தவங்க கிட்ட இந்த மாதிரி பேசி இதெல்லாம் சொல்ல முடியாது .,சொன்னா என்ன பார்த்து என்ன நினைப்பாங்க”, என்று அவன் டி-ஷர்டின் காலரை இழுத்துக் கொண்டே சொல்ல.,
“அப்ப நான் ஒன்னும் நினைக்க மாட்டேனா”, என்று கேட்டான்.
“நீங்க நினைக்க மாட்டீங்க, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியும் இல்ல”., என்றாள்.
“ஒருவேளை தெரியாமல் நான் நினைச்சுட்டேன்னா”., என்றான்.
” ஒன்னும் பிரச்சினை இல்ல, இன்னும் கொஞ்சம் நல்லா புரிஞ்சுக்கோங்க”, என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தவள், சற்று நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே உறங்கி இருந்தாள்.
அவன் தான் அவள் நெற்றியை, தலையை தடவி விட்டு ‘உண்மையிலேயே இத்தனை நாள் பழகுறோம் ஐந்து மாசம் தான் ஆகுது அப்படின்னு சொன்னா யாரும்., என்ன என்னாலயே நம்ப முடியாது., ஏன்னா ரெண்டு பேருக்குள்ள அவ்வளவு புரிதல்கள்., அவ்வளவு பேச்சு, வெளிப்படையான மனசு., என்னால அவகிட்ட எதையும் இப்ப வரைக்கும் மறைக்க முடியல., அவளாலும் என்கிட்ட எதையும் மறைத்து சொல்ல முடியல., ரெண்டு பேருக்குள்ள எந்த ஒழிவும் மறையும் இல்லாம பேசுகிற இந்த புரிதல்., எல்லா தம்பதிகளுக்கும் இடையில கிடைக்குமான்னு தெரியாது., ஆனா எனக்கு இவ என்னோட வரம்’, என்று நினைத்துக் கொண்டவன்.
அவள் ஆழ்ந்து உறங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகு தலையணையில் அவள் தலையை மாற்றி வைத்துவிட்டு., நிமிர்ந்து படுத்து நிலவை பார்த்துக் கொண்டிருந்தான்.