‘பிரபஞ்சத்து கிட்ட கேட்டதெல்லாம் கிடைக்குமாம், என் தேவதை எனக்கு  சொல்லிக் கொடுத்தா”  என்று சொல்லி மனதிற்குள் பேச தொடங்கியவன்.,

    ‘எங்களோட கல்யாண வாழ்க்கையும்., நிம்மதியா சந்தோஷமா இதே மாதிரி போகனும்’ என்று மட்டும் அந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்தவனும் உறங்கி விட்டான்.

      அதிகாலையில் எப்போதும் போல நாலு மணிக்கு அலாரம் அடிக்க, முதலில் எழுந்தவன், பின்பு அவளை மெதுவாக எழுப்பினான்.

    “மணி 4 ஆயிடுச்சு, இறங்கி ரூமுக்கு ஓடிப்போயிரு பார்ப்போம்”,  என்று சொல்ல.,

   மீண்டும் திரும்பி படுத்து அவன் தோளில் தலையை வைத்தவள், “அப்ப நீங்க”, என்றாள்.

    அவனோ, “நான் ஆறு மணிக்கு எந்திரிச்சு வந்தாலும் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க., நீ இன்னும் ஒரு மணி நேரம் யாரும் எழுந்து வாசத்தொளிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா, நீ மாடியில் இருந்து இறங்கி போறத பார்த்தா ஏன் என்னன்னு பேச்சு வரும், இறங்கி ஓடு”, என்று சொல்லி அவளை இறங்கி போக சொன்னான்.

    அவளும் அவனிடம், “ஓகே நல்ல தூங்கி எந்திரிங்க, இன்னைக்கு காலையில பிரேக்ஃபாஸ்ட் நான் செஞ்சு உங்க ரூம்ல வச்சிர்றேன்., கதவை திறந்து வையுங்கள்”, என்று சொல்லிவிட்டு சென்றாள்.

    அவனும் “ஓகே  வச்சிட்டு போ “, என்று சொன்னான்.

     இறங்கி சென்றவள், சற்று நேரம் உறங்கி விட்டு, அவனுக்கு பிடித்த மாதிரி உணவுகளை தயார் செய்து அவன் அறையில் மூடி வைத்துவிட்டு அவளும் வேலைக்கு கிளம்ப தொடங்கினாள்.

அவன் சாப்பிட்ட பாத்திரத்தை எப்போதும் போல இவள் வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு பை வைத்திருப்பாள், அதில் வைத்து விட்டு சென்று விடுவான்.

      இது அங்கு யாருக்கும் தெரியாது, இவர்களுக்கான நாட்கள் ஓட., காதல் பெருக இருவருக்குமான புரிதல்கள் அதிகமாகியது,

   இவர்களது காதல் தொடங்கி 8 மாதம் முடியப்போகும் சமயத்தில், அவள் அண்ணிக்கு ஆறாவது மாதம் முடிந்து ஏழாவது மாதம் பாதியில், செக்கப்பிற்காக இவளும் கூட சென்றாள்.

    ஏனென்றால் அந்த மாத இறுதியில் வளைகாப்பு வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர். அல்லது ஒன்பதாவது மாதம் வைக்கலாம் டாக்டர் சொல்வதை பொருத்து மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர்.

      இவளும் செக்கப்பிற்காக செல்ல, அந்த முறை சித்தர்த் அவனுக்கு ஒரு வேலை இருப்பதால் அவனும் சென்னை வந்திருந்தான்.

    இருவரும் சேர்ந்துதான் ட்ரெயினில் வந்தார்கள். மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ரிட்டன் போகலாம் என்று முடிவு செய்து டிக்கெட் எடுத்து வைத்திருந்தனர்.

      “இவளோ ஓகே பாத்துக்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அவனும் “வீட்ல கேட்டா என்ன சொல்றது ன்னு யோசிக்கிறீயா”, என்று கேட்டான்.

     “அதெல்லாம் பாத்துக்கலாம், நான் சொல்லிக்கிறேன்., நீங்க சீட் நம்பர் மட்டும் சொல்லுங்க., மீதிய நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லவும்.

       ஏனென்றால், இருவரும் ரிட்டன் டிக்கெட் போட்டு வைத்திருந்தது அதிகாலையில் கிளம்பும் சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி செல்லக்கூடிய அதி விரைவு ரயிலில் சீட் புக் செய்து வைத்திருந்தனர்.

      அது 11 மணி அளவில் மதுரையை அடைந்து விடும் அதனால் இருவரும் அவரவர் வேலை பார்க்க சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி போட்டு வைத்திருந்தனர்.

    எப்படியும் காலைல அண்ணன் தான் கொண்டு வந்து விட வருவார். அண்ணன் கண்ணுல மாட்டாம இருங்க,

    “அப்ப நீ எப்ப சொல்லுவ”, என்றான்.

    “வளைகாப்பு டேட் பிக்ஸ் பண்ணின உடனே சொல்லுவேன்”, என்று சொல்ல ,

     அவனும் ,”அப்போ ரெண்டு வீட்டிலும் ஒரு பிராப்ளம் கிரியேட் ஆகும்னு சொல்ற”, என்றான்.

    “ஏன் ப்ரோப்ளம் ன்னு நினைக்கிறீங்க, இரண்டு வீட்டு சம்மதத்தோட மேரேஜ் பேசி முடிப்பாங்க ன்னு நினைங்க”, என்று சொல்லவும்.

    அவனோ,  “உனக்கு இன்னும் மூணு மாசம் தானே ஸ்டடிஸ் இருக்குது”, என்றான்.

   “மூணு மாசம்தான் இருக்குது, அதுக்குள்ள அண்ணிக்கும் பாப்பா எல்லாம் பிறந்துடும் இல்ல, அப்புறம் பார்க்கலாம்”, என்று சொல்லவும்.

    “அப்படி தான் பிக்ஸ் பண்ணுவாங்க, பார்க்கலாம், ஆனா எனக்கு இன்னும் மனசுல யாராவது டிஸ்டர்ப் பண்ணி விடுவாங்களோ அப்படின்னு தோணுது”, என்று சொன்னான்.

“ஏன் டிஸ்டர்ப் பண்ணிடுவாங்க, ன்னு தோணுது”, என்றாள்.

    “ம்ம் ம்ம் பேக் அடிச்சா ரெண்டு பேரும் ஓடி போயிரலாம்”, என்றான்.

    அவளோ, சிரித்தபடி”ஓவர் தைரியம் தெரியுமா”, என்றாள்.

   “யாருக்கு, உனக்கா? எனக்கா?”, என்று கேட்டான்.

    “நமக்கு தான்”, என்று சொல்லி  இருவரும் பேசியபடி வர.,

அப்போது தான் அவன் சொன்னான்.

    “எனக்கென்னமோ நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்னு தோன்றத விட.,  யூ ஆர் மை வைஃப் அப்படின்னு தான் தோணுது., கல்யாணம் அப்படின்னு சொல்லும் போது தான், நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலையோ அப்படின்னு ஒரு ஃபீல் வருது”, என்று அவன் சொல்லவும்.

     “நீங்க சொல்லிட்டீங்க எனக்கு நான் உங்களை பார்த்த நாளில் இருந்தே அப்படித்தான் இருக்கேன்”, என்று சொல்லவும்.

    அவள் தலையை பிடித்து ஆட்டியவன், “வீட்டுக்கு போய் சேரு, யாராவது பார்த்து வீட்ல போய் போட்டு கொடுத்துட போறாங்க”, என்று சொல்லவும்.

    “கூப்பிடறதுக்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க, நான் வரவேண்டாம் ன்னு சொல்லி இருக்கேன், நான் இப்போ ஒரு ஆட்டோ புக் பண்ணி போயிடுவேன், நீங்க போய்டுவீங்களா”, என்றாள்.

     “நான் பார்த்துக்கிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

   இவளும் வீடு செல்ல, வீட்டில் தான், “என்ன இந்த தடவையாவது சொல்லுவியா”, என்று பாட்டி கேட்க.,

    “சொல்லிட்டா போச்சு” என்று சொல்லி சிரித்தபடி சுத்தி கொண்டு இருந்தாள்.

   அவள் இப்போது எப்போதும் மகிழ்வாக தெரிவதாலோ என்னவோ, அவள் முகம் சற்று பளபளப்பாக ஆனது போல இருக்க,

    பாட்டி தான்,அவள் அறைக்கு சென்று விட்டாளா என்பதை சோதித்து விட்டு,  வீட்டில் உள்ளவர்களிடம் “அவ உண்மையிலே ரொம்ப லவ் பண்ற போல”, என்று சொன்னார்.

    சரிகா சிரித்தபடி அமர்ந்திருக்க, “நீ எதுக்கு சிரிக்கிற”, என்றான் நித்திலன்.

அவளோ இல்ல, “அவங்க முகம் ரொம்ப அழகாயிட்டு, நான் அண்ணி வீட்டுக்குள்ள வரும்போது கவனிச்சேன்., அவ்வளவு பள பள ன்னு  இருக்காங்க., நம்மளே கண்ணு வச்சிடக்கூடாது., பாட்டி சுத்தி போடுங்க”, என்று சொல்லவும்.

   பாட்டியும், “நானும் அத தாண்டி நினைச்சேன்”, என்று சரிகாவிடம் சொல்ல.,

   அவள் அம்மாவோ, “எனக்கு தான் பயமா இருக்கு, மாப்ள யாருன்னு தெரியலையே, எப்படிப்பட்டவன் தெரியலையே, நல்ல பையனா இருந்து , இவ சந்தோஷமா இருந்தா ஓகே தான், ஆனாலும் ஒரு படபடப்பு இருக்குல்ல, அவங்க பேமிலி என்ன சொல்லுவாங்க, அப்படிங்கிற பயம் இருக்குல்ல”, என்று சொல்லவும்.,

     தாத்தா தான் அமைதியாக இருந்தார், பாட்டியோ “நீங்க என்ன பதிலே சொல்லல”, என்று கேட்டார்.

    “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, அவளுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா, அதான் டிபியா இப்ப வரைக்கும் மாத்தாம வச்சிருக்கா, இதுல இடையில ஒரு நாள் அவ ஸ்டேட்டஸ் பாத்தியா, ரெண்டு பேர் சுண்டு விரலும் பிடிச்சிருக்க மாதிரி போட்டோ வச்சிருந்தா., அப்போ எனக்கு பார்த்தவுடனே தோணுச்சு இவ ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ ன்னு யோசிச்சேன்., அன்னைக்கு பேத்தி பொண்ணுட்ட போன் பண்ணியே கேட்டுட்டேன்., அவ சொன்னா தாத்தா சும்மா போட்டோ எடுக்குறது எல்லாம் கல்யாணம் ஆயிட்டான்னு கேக்காதீங்க ன்னு சொல்லிக் கொண்டிருந்தா, ஆனா அவர்தான் என் ஹஸ்பண்ட் என்று சொன்னா”, என்று தாத்தா சொல்லவும்.

     எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.,  நித்திலனோ, அப்பாக்கு ஃபுல் விஷயமும் தெரியும், ஆனாலும் இப்ப வரைக்கும் நம்பவே இல்லம்மா.,  உண்மையாவா உண்மையாவா சொல்லிட்டு இருக்காங்க., அன்னைக்கே அவ எல்லாத்தையும் சொல்லிட்டா., ஆனாலும் நமக்கு இன்னும் ஒரு டவுட் இருக்க தானே செய்து., பொய் சொல்றாலோ ன்னு.,  தெரியல பார்ப்போம்”, என்று சொல்லவும் .,

   “அண்ணி எதுவா இருந்தாலும் சொல்லுவாங்க, அவங்க சந்தோஷமா இருக்காங்க இல்ல, அதுவரைக்கும் விடுங்க”, என்று சொல்லவும்.

    பாட்டி தான், “நீ வேணா மதுரையில் சொல்லி விசாரிக்கிறியா”, என்று சொல்ல.,

     பாட்டி , “அதெல்லாம் ரொம்ப தப்பு, அது அவங்களோட பர்சனல்., அதை நம்மட்ட நம்பி சொல்லி இருக்காங்க., இது நம்ம வீடு நம்ம வீட்டில் உள்ளவங்கள நம்பி சொல்லி இருக்காங்க., இதை எப்படி அவங்ககிட்ட போய் நான் போய் சொல்ல முடியும், அதெல்லாம் சொல்லக்கூடாது பாட்டி, அண்ணியோட பெர்சனல் அண்ணிக்கு மட்டும்தான்., அண்ணியா சொல்லும்போது பாப்போம்., ஒருவேளை அங்க வீட்ல யாருக்கும் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பாங்க., கண்டிப்பா வீட்ல யாருக்கும் தெரியல அப்படிங்கும் போது அத பத்தி பேச வேண்டாம்., வீட்டில் உள்ளவங்க கிட்ட எதுக்கு நாம வாலண்டியரா போய் குறை சொல்லணும்”, என்று சொல்லவும்.,

    பாட்டி தாத்தாவை பார்க்க, தாத்தா நித்திலனின் மனைவியை பார்த்துக்கொண்டார்.