அன்று முழுவதும் அதிதீரனின் அறையில் தான் இருந்தாள் வெண்மொழி. உடன் தோழிகளும் இருந்தனர். அப்போது சென்றவன் மறுநாள் தான் அவளைப் பார்ப்பதற்காக அந்த அறைக்குள் சென்றான். அவனை வால் பிடித்த மாதிரி விவேக்கும் உடன் சென்றிருந்தான்.
“என்னாச்சு ப்ரோ? எதுவும் ப்ராப்ளமா? நான் தான் குடுத்தேன். இங்க ஆர்டர் பண்ணது தான்” என்றாள் டயானா.
அவர்களை யோசனையுடன் பார்த்தவன்..”இல்ல, சும்மாதான் கேட்டேன்” என்றான்.
வெண்மொழி தலையைப் பிடிக்க,
“என்னாச்சு பேபி, தலை வலிக்குதா?” என்ற தாரிக் அவளுக்கு இதமாய் தலை பிடித்து விட்டான்.
“இட்ஸ் ஓகே தாரிக். நான் பார்த்துக்கிறேன்” என்று அவள் கூறியது எல்லாம் அவன் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.
ஆனால் அவளுக்கு தலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தவனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் அதிதீரன். கையில் இருந்த காபி கப் அவனின் அழுத்தம் தாங்காமல் உடைந்திருந்தது. இது எதுவும் விவேக்கின் கண்களில் இருந்து தப்பவில்லை.
கப் உடைந்த சத்தத்தில் திரும்பியவர்கள், அவனின் கையைப் பார்த்து அதிர்ந்தனர்.
அவளின் பேச்சில் நிதானத்திற்கு வந்தவன்..” சாரி கப் உடைஞ்சுடுச்சு. பெருசா எதுவும் இல்லை. கேரி ஆன்” என்றவன் விவேக்கை ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையின் பொருள் புரிந்தவனோ,
“டேக் கேர் சிஸ்டர். நீங்க ரூம் மாறணும்னு அவசியமில்லை. இங்கயே இருந்துக்கோங்க. ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா கேளுங்க. இனி உங்களை பார்க்க முடியுமான்னு தெரியலை. பியூச்சர்ல எங்கையாவது மீட் பண்ணா பார்ப்போம், பை” என்றபடி அதியுடன் வெளியேறி விட்டான்.
அவர்கள் அப்படி சட்டென்று பேசி விட்டு சென்றது அவர்களுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“எங்க ரூம்க்கு கிளம்புறோம்னு சொல்ல வேண்டியது தானே நந்தி. வாய்ல என்ன வச்சிருக்க?” என்றான் தாரிக்.
“எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை, ஆனா, வொயிட்டி தான் அங்க வர யோசிக்கிறா. நீ எதைப் பேசுறதா இருந்தாலும் அவகிட்ட தான் பேசணும்” என்றாள் நந்திதா.
“இன்னும் ஒரு நாள் தான தாரிக். இங்கயே இருக்கோம். வேணும்னா அவங்களுக்கு அமௌன்ட் செட்டில் பண்ணிடலாம்” என்றவளிடம் தாரிக்கால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
பக்கத்து அறையில் நின்று கடலை வெறித்துக் கொண்டிருந்தவனைத் தான் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். அவன் ஏன் இப்படி இருக்கிறான்? ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எதுவும் புரியவில்லை அவனுக்கு. அவனறிந்த வரையில் அதிதீரன் எப்போதும் ஒரு சிரித்த முகத்துடன் தான் வலம் வருவான். ஆனால் சில நாட்களாக இப்படி இறுகிப் போய் இருப்பதற்கான காரணம் தெரிவில்லை. அதிலும் வெண்மொழியைப் பார்க்கும் போது அவன் கண்களில் வந்து போகும் பாவனைக்கான அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. இதோ இப்போது கப்பை உடைத்து கையில் காயமாக்கிக் கொண்டவனைப் புரியாமல் பார்த்திருந்தான்.
தன்னையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டவன்,
“என்னாச்சு விவேக்? எதுக்காக என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?” என்றான்.
“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. நமக்கு இடையில அப்படி எதுவும் இல்லை. உனக்குத் தெரியாத விஷயம்னு என்கிட்ட என்ன இருக்கப் போகுது?” என்றான் அதி.
“நிறைய இருக்கும் போலயே?” என்றான் கிண்டலாய்.
அதி அவனை முறைக்க,
“கடல்ல யாரோ விழுந்துட்டாங்கன்னு சொன்னேன். அப்போ கூலா பதில் சொன்ன. ஆனா, விழுந்தது அந்த பொண்ணுதான்னு தெரிஞ்ச உடனே ஒரு நிமிஷம் கூட யோசிக்காம குதிச்சுட்ட? இப்போ சூட் ரூமை அந்த பொண்ணுக்கு குடுத்துட்டு இப்படி இங்க வந்து இருக்கணும்னு என்ன இருக்கு?” என்றான் யோசனையுடன்.
“நான் இதை ஜஸ்ட் ஒரு ஹெல்ப்பா தான் பண்ணேன். அது உனக்கு ஏன் தப்பா தெரியுது விவேக்?” என்றான் அதி சற்று கோபமாக.
“இதை ஹெல்ப்ன்னு வச்சுகிட்டாலும் கூட, அன்னைக்கு அந்த பொண்ணுகிட்ட நடந்துகிட்டது ஐ மீன் அந்த பொண்ணை கிஸ் பண்ணது? அதை எந்த விதத்துல எடுத்துக்கிறது அதி?” என்றான் விவேக்.
“உனக்குத்தான் தெரியுமே விவேக். முதல் தடவை அன்னைக்கு பீர் அடிச்சேன். அதான் கொஞ்சம் நிதானம் தவறிட்டேன்” என்றவனை முறைப்புடன் பார்த்தவன்,
“நீ சொல்றது பொய்ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அன்னைக்கு வேற எந்த பிரச்சனையும் அந்த பொண்ணு பண்ணிடக்கூடாதுன்னு தான் அப்படி ஒரு பொய்யை சொல்லி உன்னைக் கூட்டிட்டு வந்தோம். மத்தபடி நீ குடிச்சது பீரே இல்லைன்னும் எனக்குத் தெரியும்” என்றவனுக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை அதிதீரனுக்கு. கேசத்தை கோதிக் கொண்டவன் மீண்டும் கடலை வெறிக்க ஆரம்பித்தான்.
“நீ காரணம் எதுவும் சொல்லலைன்னாலும் பரவாயில்லை. அந்த பொண்ணு மேல உனக்கு ஏதாவது அபிப்ராயம் இருந்தா அது வேண்டாம் அதி. அந்த பொண்ணு இன்னொரு பையனை லவ் பண்ணுது. இந்த விஷயத்தை எப்பவும் நீ மறந்துடாத” என்றான் விவேக் கவலையுடன்.
திரும்பி நண்பனை உக்கிரமாய் முறைத்தவன்,”என்னைப் பார்த்தா எப்படி தெரியுது விவேக் உனக்கு? அன்னைக்கு ஏதோ உணர்ச்சி வசப் பட்டுட்டேன். இனி அப்படி நடக்காது. இந்த பேச்சை இதோடு விடு. இனி இதைப் பத்தி எப்பவும் என்கிட்ட பேசக் கூடாது” என்றான் உறுதியுடன்.
விவேக்கிற்கு மனதிற்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் உறுதியானது. ஆனால் தன்னிடத்தில் எதையோ மறைக்கிறான் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
“நான் ஊர்ல இல்லாத சமயத்துல எதுவும் நடக்கலையே?” என்றான் சந்தேகத்துடன்.
அவனை முறைத்த அதி,
“உன்னை அமைதியா இருக்க சொன்னேன் விவேக். எதுக்கு வந்தமோ அந்த வேலையை மட்டும் பார்ப்போம். இடையில கொஞ்சம் மைன்ட் டைவேர்ட் ஆனது உணமைதான். இனி ஆகாது. என் வழிக்கு வராத வரைக்கும் நான் யாரையும் சீண்ட மாட்டேன். எனக்கு வேணும்னு நான் நினைக்கிற வரைக்கும் தான் அது எனக்கு பொக்கிஷம். வேண்டாம்னு முடிவு பண்ண பிறகு அது தங்கமாவே இருந்தாலும் எனக்குத் தேவையில்லை” என்றவன் வெளியேறி சென்று விட்டான்.
“இவன் என்ன சொல்லிட்டு போறான்? எனக்கு புரியக் கூடாதுன்னு பேசுறானா? இல்லை, நிஜமாவே எனக்குத் தான் புரியலையா?” என்று குழம்பி நிற்பது விவேக்கின் நிலையானது.