14

ஏனடா, இது ஏனடா?

கள்வனே, பதில் கூறடா

சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே

சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே

அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே

எதற்கு இடைவெளி என்றுதான் இதயம் கேட்கிறதே

    மனது சந்தோஷமாக இருந்தால் முகம் அழகாக இருக்கும் என்பது இதுதான் போல என்று தன் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டவள்,

    ‘மதியத்திற்கு இப்போதே சமைத்து விடுவோமா’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளோடு ட்ரெயினியாக இருக்கும் மற்றொரு பெண் மருத்துவர் இடமிருந்து அழைப்பு வந்தது.

      என்னவென்று கேட்கும் போது அவர்களுடைய குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர்களுடைய காலை 10 மணி வேலையை இவளை பார்க்கும் படியும் இவளுடைய மதிய வேலையை அவர்கள் எடுத்துக் கொள்வதாகவும் சொன்னார்கள்.

    இவளும் யோசித்து விட்டு சரி நீங்க குழந்தையை பாருங்க என்று சொல்லிவிட்டாள். பின்பு அவசரமாக சமையலை முடித்தவள்., குளித்து உடை  மாற்றியவள் சித்துவிற்கு மெசேஜ் மட்டும் செய்துவிட்டாள்.

  பின்பு தனக்கான காலை உணவை முடித்துக் கொண்டு அவனுக்கு கைக்கு மருந்து இடுவதற்கு எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள்., நேராக அறைவாசலில் நின்று கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள்.

    ராகவன் தான், “என்னம்மா கிளம்பிட்ட”, என்றான்.

    “இல்ல ண்ணா,  மார்னிங் டூட்டி டாக்டர்  அவங்க கிட்டுக்கு உடம்பு சரியில்லை ன்னு சொன்னாங்க, சோ என்னோட ஆஃப்டர்நூன் டியூட்டி அவங்க எடுத்துக்குவாங்க”, என்று சொல்லிவிட்டு சித்துவிற்கு  நேர் எதிராக வந்து அமர்ந்தவள்.,

அவன் கைகளில் கட்டை பிரிக்க தொடங்கினாள். அதே நேரம் ராகவன் தான், “அவன் கிளம்பிட்டான் மா, நான் போய் குளிச்சு கிளம்பி வரேன்” என்று சொல்லி அவன் அறையில் இருந்த பாத்ரூம்  சென்று கதவை அடைத்தான்.

  “வெளிய கிளம்பிட்டீங்களா”, என்றாள்.

    “ஆமா உன்னோட மெசேஜ் பார்த்தேன், எப்படியும் நீ பகல்ல இருக்க போறதில்ல., சரி நானும் அவன் கூட போனேனா தேவையானது கொஞ்சம் பாக்கலாம் இல்ல”, என்று சொல்லவும்,

     “கையில் எதுவும் பட்டு விடாமல் பார்த்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு கைகளில் அடிபட்டு இருந்த இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

மீண்டும் துடைத்து மருந்து கட்டிவிட அவனும் சிரித்தபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

   பார்த்தது மட்டுமல்லாமல் அவளிடம் “ஃபர்ஸ்ட் நீ என் கைய புடிக்கும் போது எனக்கு அப்படி ஒரு டென்ஷன் தெரியுமா”, என்று கேட்க.,

    “தெரிஞ்சுச்சு தெரிஞ்சுச்சு” என்றாள்.

     “ஏன் தெரியுமா”, என்றான்.

    “என்ன உங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் இருக்காங்க னா”, என்று சொல்லவும்.,

    “அது மட்டும் இல்ல,  நீ வேற அவ்ளோ பக்கத்துல உட்கார்ந்து இருந்த., எங்க என்னை அறியாம உன் தோளில் சாஞ்சிருவேனோ ன்னு பயம் இருந்துச்சு”, என்று சொல்லவும்.,

    சிரித்தபடி அவனை பார்த்தவள், “சாய்ந்து இருக்க வேண்டியது தானே,  கேட்டா மயக்கம் வந்துருச்சுன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே”,  என்று சொல்லவும்.,

    “அப்புறம் அவ்வளவு தான்”, என்றான்.

   “இன்னும் பயப்படுறீங்களா என்ன”, என்றாள்.

    “இல்ல இல்ல, இப்போ எனக்கு அந்த பயம் எல்லாம் இல்ல., ஆனா பஸ்ட் இருக்கத்தான் செஞ்சது, அதுக்கப்புறம் ஒரு கோபம் தான் வந்துச்சு”, என்று சொல்லவும்.,

   “சோ கோவத்துல தான் இப்ப எனக்கு சரி சொல்லி இருக்கீங்க, அப்படித்தானே”, என்றாள்.

   அவனும், “அப்படி எல்லாம் இல்லம்மா, கோபத்தில் எல்லாம் சரின்னு சொல்லல, இனிமேல் எது வந்தாலும் பாத்துக்கலாம் என்கிற எண்ணம் தான்”, என்று சொல்லவும்.,

       “ம்ம் ம்ம்”  என்று கேட்டுக் கொண்டே மருந்துட்டு முடித்தவள்,  “சாப்பிடலையா”, என்றாள்.

     “கீழே போய் சாப்பிடணும்”, என்று சொன்னான்.

     “நான் எடுத்துட்டு வரவா”, என்று கேட்டாள்.

      “நீ ஊட்டி விடுவ னா , எடுத்துட்டு வா”, என்றான்.

    “நான் ஊட்டி விட்ருவேன், நீங்க சாப்பிடணும்”, என்று சொன்னாள் .

    “அவனும் இந்த தடவை வேண்டாம், நெக்ஸ்ட் டைம் நான் வருவேன்ல, அப்போ நீ செஞ்சு தா, நான் சாப்பிடுறேன்., ஏன்னா நீ சமைக்கிறத நானும் சாப்பிடணும்., அதே நேரத்துல என் கையால உனக்கும் கொடுக்கணும்.,  இப்ப இந்த கைய வச்சிட்டு நான் எப்படி உனக்கு கொடுக்கிறது”, என்று சொல்லவும்.,

     “நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க இல்ல., ஒரு வகைல இது கூட நல்லது தான் இல்ல”, என்று அவன் கையை பிடித்து கேட்க .,

   “எது எனக்கு அடிபட்டதா”, என்று கேட்டான்.

      இவளோ, “ஆமா அடிப்பட போய் தானே கூட இரண்டு நாள் இருக்குறீங்க., இப்ப என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க., ரெண்டு பேரும் பேசி இருக்கோம்”,  என்று சொன்னாள்.

   அவளை பார்த்து சிரித்தவன், “ஆமா இல்ல”, என்றான்.

   ” ஆமா தான், இல்ல எல்லாம் இல்ல., எப்பவுமே நிறைய விஷயங்கள் இப்படித்தான் நடக்கும்., ஐயோ இப்படி ஆயிருச்சுன்னு நினைப்போம்., ஆனா அதுக்கப்புறம் நடக்கிற விஷயம் எல்லாம், சே இப்படி நடந்தது நல்லது தான் இல்ல., அப்படின்னு யோசிக்க வைக்கும்., அந்த மாதிரி தான் இதுவும்”, என்று சொல்லவும்.

   சிரித்தபடி “ஓஓ ஓகே” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    “சரி கீழே போய் சாப்பிடுங்க., நான் கிளம்புறேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவனும் வந்துவிட.,

     “ஓகே அண்ணா, நீங்க சாப்பிட்டு கிளம்புங்க., நானும் இப்ப கிளம்புவேன்”, என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தவள்.,

    “கையில் ஏதும் பட்டுறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”, என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.

  இவள் தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு., மிஷினில் போட்டிருந்த துணியை எடுத்து காய போட்டு விட்டு கீழே வரும் போது, அவர்களும் சாப்பிட்டுவிட்டு கிளம்புவதற்காக வெளியே வந்து நின்றனர்.

    இவளும் கார் அருகில் வர. சரிகாவின் அம்மாவோ வேகமாக வந்தவர்., எந்த அழைப்பும் இன்றி,

    “கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா”, என்றார்.

    இவளோ “என்னது” என்றாள்.

   அதற்குள் பாட்டியோ, ‘ஏதோ வம்பு பண்ண போறா போலையே’ என்ற நினைப்போடு அங்கு வர.,

   சித்து விற்கும் அதே நினைவில் ராகவனை பார்த்து பேசிக்கொண்டே வந்தான்.

     இருவரும் அவர்கள் கார் அருகில் நிற்க., இவளோ மீண்டும் “என்னது” என்றாள்.

அதற்குள் பாட்டி வந்து, “என்ன விஷயம் எதுக்கு இப்ப இங்க வந்த” என்று மருமகளை அதட்டினார்.

    “ஒன்னும் இல்ல அத்தை” என்று தன் மகனைச் சொல்லி., “அவனுக்கு இடுப்பு பிடிப்பா இருக்கா., வந்ததுல இருந்து புடிச்சிருக்குன்னு சொல்லி படுத்திருக்கான்., அதான் வந்து  பார்க்க முடியுமான்னு கேட்டேன்”, என்று சொல்லவும்.

    பாட்டியோ, “அவன் வந்தத நீ சொல்லவே இல்லையே., எப்ப வந்தான்”, என்று கேட்டார் .

   “காலைல முத பஸ்க்கு வந்து இருக்கான் அத்தை, வந்தவன் முதுகு பிடிச்சிருக்குன்னு போய் படுத்துக்கிட்டான்., நானும்  அவனை பார்த்துட்டு இருந்தனா, அது தான் சொல்லல”, என்றார்.

    “வந்து எவ்வளவு நேரமாகுது, மணி என்ன ஆகுது இவ்வளவு நேரம் சொல்லாம இருந்துட்டு, இப்ப வந்து இங்க நிக்க”, என்று பாட்டி கேள்வி கேட்டபடி நிற்க.

     வீட்டில் உள்ளவர்களிடமும் “எப்ப வந்தான், எப்ப வந்தான்” என்ற கேள்வியே இருக்க.,

இவ்வளோ அமைதியாக காரைத்திறந்து தன் கையில் இருந்த கோட் மற்ற பொருட்களையும் முன் சீட்டில் வைத்து விட்டு அங்கு டேஷ் போர்டில் இருந்து ரைட்டிங் பேட் ம் பென் ம் எடுத்தவள், அதில் மருந்தை எழுதி கையில் கொடுத்தாள்.

“அதுல டேப்லெட் எழுதி இருக்கேன்., ஒரு செட் காலையிலும் நைட்டும்  ரெண்டு நேரத்துக்கு டேப்லெட் போட்டாலே சரியாயிடும்., ஒரு ஆயின்மென்ட் எழுதி இருக்கேன் தடவி விடுங்க சரியா போயிடும்”, என்று சொல்லிவிட்டு நோட்பேடை உள்ளே வைத்தாள்.

“ஏன் வந்து பார்க்க மாட்டியோ” என்று கேட்கவும்.

     இவளோ “அதுக்கு வேற டாக்டர் பாருங்க., உங்க இஷ்டப்பட்ட நேரம் எல்லாம் வந்து பார்க்க முடியாது.,

எனக்கு ஹாஸ்பிடல் டைம் ஆயிடுச்சு, நான் போகணும்”, என்று சொல்லவும்., மீண்டும் அவளை தடுத்து நிறுத்தியபடி.,

      “அவனுக்கெல்லாம் அன்னைக்கு பார்த்த”, என்று சொல்லவும்.

    இவளோ காரில் கையை வைத்தபடி, அதில் தலையை சாய்த்து கொண்டவள்.