“இல்ல அன்னைக்கு நான் விட்ட பூவ தான் நீங்க பிடிச்சு எனக்கு தந்தீங்க, அப்படி எல்லாம் கிடையாது அதே கோயில் வாசல்ல நீங்க பூ வாங்கி, அதே இடத்தில் வைத்து தரணும்”, என்று சொல்லவும்.

   “அதே டிரஸ், அந்த மாதிரி எதுவும் ஆப்ஷன் இருக்கா”, என்று கேட்டான்.

    “அப்படி எல்லாம் இல்ல”, என்று சொன்னவள். அவனைப் பார்த்து “அந்த ஷேட்” என்றாள்.

    “ஏன்”, என்றான்.

     “அது ஒன்றும் இல்லை, இன்னொரு நாள் சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

    அவனோ சிரித்துக்கொண்டே, “வேற எதுவும் வேண்டாமா”என்றான்.

    “மற்றது தான் சொல்லி இருக்கேனே, உங்க கூட தான் நான் இங்க மதுரையில பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு அப்படின்னு நினைச்சிருந்தேன்., அது எல்லாமே உங்க கூட தான் வரணும். திருப்பரங்குன்றம் போகனும், பழமுதிர்ச்சோலை போகனும்”, என்று சொல்லவும்.,

  அவன் சிரித்தபடி பார்க்கவும்,

   “இல்ல, உங்கள வடபழனியில் பார்த்துட்டு இரண்டு பேரும் சேர்ந்து வரும்போது என் மனசுல தோணுச்சு., மதுரைக்கு வந்தால் நம்ம ரெண்டு பேரும் திருப்பரங்குன்றமும் பழமுதிர்சோலையும் போகனும் ன்னு”, என்றவுடன்., சத்தமாக சிரித்தவன், வாயை பொத்திக் கொண்டான்.

    “நல்ல வேளை ம்மா கோயில் கோயிலா சுத்தணும்னு நினைக்கிறியே”, என்று சொல்லவும்.,

       எல்லா இடமும் உங்க கூட தான், ஆனா அதுக்கெல்லாம் காலம் வரும், இப்ப அங்க போக வேண்டாம்., ஆனா வடபழனியில் இருந்து ரெண்டு பேரும் வரும்போது எனக்கு இது தான் தோணுச்சு”, என்று சொன்னாள்.

   “பின்னாடி இருந்த ராகவனும், அவன் குடும்பமும்”, என்று கேட்க,

   “எல்லா இடத்துக்கும் அவங்கள கூட்டிட்டு போக முடியாது., இதுக்கு வேணா கூட்டிட்டு போலாம்”, என்று சொல்லவும்.

     சிரித்துக்கொண்டவன் “இரு  ராகவன் ட்ட சொல்றேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    பின்பு, “சரி நாளைக்கு நான் கிளம்பிடுவேன், வேற எதுவும் உனக்கு சொல்லனுமா”, என்று கேட்க.,

     “இடைல வராமல் இருந்த மாதிரி இருக்காதீங்க., அட்லீஸ்ட் 10 டேஸ் ஒன்ஸ் ஆவது வந்து தரிசனம் கொடுத்துட்டு போங்க., நான் பாவம் இல்லையா”, என்றாள்.

    “வாறேன்”, என்றான். பின்பு வீட்டினரை பற்றியும் வீட்டில் உள்ளவற்றைப் பற்றியும் அவன் பேச இவளும் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

   ராகவன் சென்ற போது மாடிப்படியில் அமர்ந்திருந்தவன்., இப்பொழுது எழுந்து மாடி கைப்பிடி சுவரின் ஓரமாக நின்றவன், அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.,

    “என்ன அப்படி ஒரு பார்வை”, என்றாள்.

    “இல்ல இதெல்லாம் ஓகேவா அப்படின்னு யோசிக்கும் போது தோன்றாதது எல்லாம் இப்ப தோணுதே., என்ன பண்ணனு யோசிச்சேன், அது மட்டும் இல்ல, நம்ம ஒரு கமிட்மெண்ட், இத கமிட்மெண்ட் கூட சொல்லலாம் இல்ல., இதுதான் நமக்கானது அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் முடிவு பண்ணதுக்கு அப்புறம், இதிலிருந்து விலக நினைக்க கூடாது, அது முக்கியம்.,  நீ சொன்ன மாதிரி தான், வாழ்க்கை ஒரு தடவை தான், அதுக்கப்புறம் ஏண்டா அப்படின்னு பீல் பண்ற மாதிரி எதுவும் ஆயிரக்கூடாது ., அது மட்டும் தான்”, என்று சொன்னான்.

    “அவ்வளவு பயமா இருக்கா உங்களுக்கு”, என்றாள்.

    இவனோ, “பயம் ன்னு இல்லை, சரி என்ன வந்தாலும் பாத்துக்கலாம் அப்படிங்கற தைரியம் இருக்கு., அதை மீறி ஒரு சின்ன பதட்டமும் இருக்கு, ஆனா டீனேஜ் ல லவ் பண்றவங்களுக்கு இந்த பதட்டம் வந்தால் ஓகே தான்., ஆனா இந்த வயசுலயும் பதட்டம் வருமா”, என்று அவன் கேட்கவும்.,

   அவளோ, “பதட்டம் எல்லாம் கொஞ்ச நேரத்துல சரி பண்ணிக்கலாம்., ரிலாக்ஸா இருங்க, மைண்ட் ப்ரீயா வச்சுக்கோங்க., என்ன வந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் இருப்போம்னு நம்புங்க”, என்று சொல்லவும்.,

    அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., அடிபட்ட வலது கையை சுவர்மேல் வைத்துக் கொண்டிருந்தான்.

    இடது கையால் அவளை அருகே வருமாறு அழைக்க., இவளோ அவனை உத்து பார்த்துக் கொண்டே நின்றாள்.

    “என்ன ஆச்சு”, என்றான். கையை நீட்டியபடியே,

   “நெஜமாவே நீங்க தானா”, என்றாள்.

     “ஏன்”, என்றான்.

    ” இல்ல, ஒன் மன்த்க்கு முன்னாடி இதே இடத்துல வச்சு தான் நீங்க என்னை திட்டிட்டு போனீங்க”, என்று சொல்லவும்.,

    சிரித்துக் கொண்டே மீண்டும் வா என்னுமாறு தலையை மட்டும் அசைத்து அழைக்க.,

    அவன் அருகே சென்றவள், அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டாள்.

    அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன், “இதுதான், இது மட்டும் தான் சரியா, இப்போ இந்த நிமிஷத்திலிருந்து நீ என்னோட பொறுப்பு, இதுவரைக்கும் எப்படியோ தெரியாது., எப்போ உன்னை நான் கைக்குள் எடுத்துக்கிட்டனோ, இந்த நிமிஷத்திலிருந்து நீ என்னோட பொறுப்பு, எனக்கு மட்டுமே சொந்தமானவ”, என்று சொல்லவும்.

     அவன் கைகளுக்குள் நின்றிருந்தவள்., தன் கையை கொண்டு அவன் முதுகோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்.

    அவன் தோள் அளவில் இருந்தவள், நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்தான்.

       ஏனோ அந்த நிமிடம், அனாமிகாவிற்கு  மனதிற்குள் வந்த நிம்மதி மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

    அதுவரை இருந்த படபடப்பு பயம் எதுவும் இல்லை.,  இப்போது தான் மெதுவாக வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க தொடங்கியது., இதயத் துடிப்பு அதிகரிப்பது போல தோன்றியது., அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூச்சம் வேறு கண்களை மூடச் சொன்னது., சித்து என்றவள்,

    அவன் தோளில் முகம்  பதித்து கொண்டாள்.,

  “என்ன  டா”, என்றான்.

      “இல்ல அந்த பட்டாம்பூச்சி பறக்குற ஃபீல், அந்த லப் டப் எல்லாமே இப்ப வருது”, என்று சொல்லவும்.,

     “அப்ப வந்துருச்சு தானே”, என்று கேட்டான்.

  “வந்துருச்சு வந்துருச்சு”, என்று சொல்லி அவன் தோளில் முகம் பதித்திருந்தவள் மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்து.,

   அவனிடம், “நிஜமா இது, கனவு இல்ல இல்ல”, என்றாள்.

     அவளையே பார்த்து நின்றவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.

      “இப்போ ஓகேவா, இது கனவு இல்ல தானே”, என்றான்.

      அவனை கட்டிக் கொண்டவள், அவன் தோளில் அப்படியே சாய்ந்து இருக்க., அவள் கண்கள் மட்டும் கண்ணீரை சிந்தியது.,

     “என்ன இது”, என்றான். அவனை நிமிர்ந்து பார்த்து தலையை அசைத்தவள்.

    “இது சந்தோஷத்தில் வருவது, இந்த ஆறு மாசமா , எனக்குள் இருக்கிற இந்த பீல் கரெக்ட்டா அப்படின்னு குழம்பி குழம்பி., ரொம்ப பீல் பண்ணி அப்புறம் உங்ககிட்ட கண்டிப்பா சொல்லியே ஆகணும்னு சொல்லி., நீங்க வேண்டான்னு சொன்ன அன்னைக்கு நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா”, என்றாள்.