வீட்டிற்குள் சென்ற சற்று நேரத்தில் எல்லாம் அவள் காலையில் சொன்னது போல தன்னுடைய வேலையை தொடங்கினாள், பிஹெச் ல் பார்த்த வேலைகள் எல்லாம் நோட்ஸ் எடுத்து வைத்திருந்தது அதைப்பற்றிய குறிப்புகள் எழுதி., இப்போது ஜி ஹெச் இல் ஜாயின் செய்த பிறகு இங்கு உள்ள கேஸ் பற்றியும் சிறுகுறிப்போடு நேற்று வரை உள்ள அத்தனை விஷயங்களையும் குறிப்புகள் எடுத்து., தன் புரபசருக்கு மெயில் செய்து விட்டவள்.,
அப்போது தான் நேரத்தை பார்த்தவள், ‘இரவு உணவு இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடலாம்., ஏழு தானே ஆகுது’, என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.
பின்பு பாடலை ஒலிக்க விட்டு மறுநாள் சமையலுக்கு தேவையானவற்றை யோசித்துக் கொண்டிருக்கும் போதே., அவளுடைய போனில் அழைப்பு வர., ‘யார்’ என்று பார்க்கும் போது ராகவனிடம் இருந்து அழைப்பு., போன் எடுத்தவள்.,
“அண்ணா” என்றாள்.
“கொஞ்சம் வருவீயாமா”, என்று சொல்லவும்.,
‘சரி’ என்று சொல்லி பாடலை ஆப் செய்துவிட்டு வெளியே வந்தாள்.,
வந்தவள் எப்போதும் போல கைப்பிடி சுவரில் சாய்ந்து நிற்க.,
ராகவன் தான், “இங்க பாருங்கம்மா., அவன் எல்லாம் சொன்னான், சோ ரெண்டு பேரும் பேசிக்கோங்க., உன் நம்பர் இவனுக்கு தெரியாது., அவன் நம்பர் உனக்கு தெரியாது., போன் நம்பர் வாங்கிக்கோங்க., வேற என்ன சொல்ல, நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கொஞ்சம் பேசி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்., பேசிக்கோங்க நான் இப்படியே வீட்டுக்குள்ள போறேன்., யாரும் மேல வராத மாதிரி பார்த்துக்கிறேன்., டின்னர் டைம்க்குள்ள பேசி முடிச்சிட்டீங்கன்னா., கொஞ்சம் நல்லா இருக்கும்”, என்று சொல்லவும்.,
இவளோ, சிரித்தபடி “அண்ணா”, என்றாள்.
அவனும் சிரித்துக்கொண்டே சென்றவன், திரும்பி வந்து “இவன் நாளைக்கு என் கூட வரேன்னு சொன்னான் மா, எனக்கு இன்னும் கொஞ்சம் ஒர்க் முடிய வேண்டியது இருக்கு., ரெண்டு பேரும் போற மாதிரி இருக்கும் ஓகே வாமா”, என்று கேட்டான்.
“இல்ல ண்ணா கொஞ்சம் புண்ணு இருக்கும், நாளைக்கு காலைல ஒரு கட்டு மாற்றி விடுறேன், நாளை மறுநாள் நீங்க கிளம்புறதா இருந்தா அப்பவும் கையில் ஒரு கட்டு மாற்றிவிடுறேன், மருந்து எல்லாம் தந்துடறேன்., டேப்லெட் முடிஞ்சுரும், பெயின் வந்தா போட்டுக்கிற மாதிரி டேப்லெட் மட்டும் எழுதி தரேன்”, என்று சொன்னவள்.,
“அங்க போய் நீங்களே கூட மருந்து போட்டு கட்டிக்கலாம் , பேண்டட் கிளாத் ஃபீஸ் எல்லாமே நாளைக்கு தரேன், அதை மட்டும் கட்டி விட்டுக்கோங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல, கொஞ்ச நாளைக்கு இந்த கையில ரொம்ப ஈரம் படாமல் பாத்துக்கோங்க அவ்வளவுதான்., அதுக்கு மேல பெயின் இருந்தாலோ இல்ல, குத்தல் வலி இருந்தாலும், டாக்டர் கன்சல் பண்ணிக்கலாம்”, என்று சொன்னாள்.
அவன் கிளம்பி செல்லவும்.,
இவளோ, “என்ன பேசணும் ன்னு கூப்பிட்டிங்க”, என்றாள்.
அவனோ “முதல்ல போன் நம்பர் தா” என்றான்.
அவனுடைய போன் நம்பரை சொல்ல., இவள் செல்லில் இருந்து அவனுக்கு அழைப்பு விட்டு கட் செய்தாள். இருவரும் நம்பரை சேவ் செய்து கொள்ள.,
இவளோ அவன் நம்பரை ‘மச்சி’ என்று சேவ் செய்தாள். அதை வேறு அவனிடம் காட்ட.,
“ஏன் யாரும் பார்த்தா கண்டுபிடிக்க கூடாது னா”, என்றவன். “இப்ப எல்லாம் பொண்ணுங்களே பிரண்ட்ஸ மச்சி ன்னு கூப்பிடுறாங்க”என்றான்.
“அதெல்லாம் யாரும் ஒன்னும் பார்க்க மாட்டாங்க., அப்படியே பார்த்தாலும், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொல்லவும்.
“நீ கொஞ்சம் ஓவர் தைரியம் தான்”, என்றான்.
“தைரியம் எல்லாம் கிடையாது, இது வீட்ல பெர்மிஷன் ஏற்கனவே இருக்குங்குற நம்பிக்கை., இதுல நான் பயப்படறதுக்கு எதுவும் இல்ல., நான் எந்த தப்பும் பண்ணலையே., தப்பு பண்ணா தானே பயப்படனும்., நான் ஏற்கனவே சொன்னது தானே”, என்று சொல்லவும்.
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்., தன் செல்லில் அவளின் பெயரை அவளை முதலில் வடபழனி யில் வைத்து நினைத்த விதமாகவே பதிவு வைத்தான்., ஆனால் அவளிடம் காட்டவில்லை.
பிறகு இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க., அவனுடைய தொழிலை பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
ரெஸ்டாரன்ட், ஹோம் ஸ்டே இதற்கு நடுவில் இருவருமான வீடு., தேனியில் இருக்கும் டிபன் சென்டர், அதைத்தவிர ஒரு ரெஸ்டாரன்ட் என்று விவரமாக சொன்னவன்,
ரெண்டு பேரும் இப்ப மூணாரில் தான் இருக்கிறோம்., அப்பப்போ ஒர்க் தேனியில் இருக்கும், பார்த்துட்டு திருப்பி போய்விடுவோம்., நான் தேனி வரும்போது தான் இங்க வருவேன்., சோ நாலு கடையுமே பொதுவா ரெண்டு பேருக்கும் சொந்தமானது., இது உனக்கு இது எனக்கு ன்னு நாங்க ரெண்டு பேருமே பிரிச்சுக்கல., ஏன்னா மூணாறுல சீசன் டைம்ல தான் நமக்கு பிசினஸ் நல்லா இருக்கும்., மத்தபடி தேனி தான் எப்பவுமே பிசினஸ் நல்லா இருக்கும்., அதனால பிரிக்க வேண்டாம் ன்னு சொல்லியே வச்சிருக்கோம்”, என்று சொன்னான்.
“அது உங்களோட சாய்ஸ்” என்று சிரித்தபடி சொன்னாள்.
“இந்த பிரண்ட்ஷிப் பிரியாம இருக்கணும்னா., எங்களுக்கு வர்ற வொய்பும் அதுக்கு ஏத்தாப்புல இருக்கணும்னு நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே பேசினது தான்”, என்று சொல்லவும்.
“அதான் சொல்லிட்டேன்ல உங்களோட சாய்ஸ்., கண்டிப்பா இதுல நான் எதுவும் சொல்ல போறது கிடையாது”, என்று சொல்ல.,
“பின்ன எதுல சொல்லுவ”, என்று கேட்கவும்.,
“அதெல்லாம் எதுலயுமே நான் சொல்ல மாட்டேன்., நீங்க நீங்களா இருங்க, அவ்வளவு தான்., உங்களுக்கு எப்படி இருந்தா சந்தோஷமா இருப்பிங்களோ அப்படி இருக்கணும்., எப்பவும் முகத்தில் ஒரு டென்ஷனோட சுத்த கூடாது”, என்று சொல்லவும்.,
அவளை பார்த்து சிரித்தவன், “ரொம்ப கவனிக்கிறியோ”, என்றான்.
“பின்ன”, என்று சொன்னவள், “என்னோட ஆசை சொன்னேன் இல்ல., அதுல முதல்ல மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கூட்டிட்டு போகனும் நீங்க”, என்று சொன்னாள்,
அவன் சிரித்தபடி., “அதே மாதிரி ஒரு மோதல் வச்சிக்கணுமா”, என்றான்.
“வேண்டாம், அது நான் இப்பவே கூட மோதிப்பேன் ஒன்னும் பிரச்சனை இல்ல., நீங்க பூ வாங்கி தரணும்”, என்று சொல்லவும்.
ஒரு நிமிடம் அவளை ஆச்சரியமாக பார்த்தவன்., “இது என்ன பூ வாங்கி தர்ற கதை”, என்றான்.