“பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களே, மாடியில போய் கதவை பூட்டிட்டு உக்காந்துக்குவான்., அவனைப் பார்க்க வெளி படி வழி தான் வரணும்” என்றாள்.
“உனக்கு கிண்டலா தெரியுது”, என்றான்.
“அது எல்லாம் இல்ல, அப்படி என்ன தனிமை விரும்பி அப்படின்னு யோசிப்பேன்., இப்ப என்கிட்ட பேசுறதுக்காக பூட்டிட்டு வந்தீங்க., அப்ப மத்த நாளெல்லாம் எப்படி”, என்று கேட்டாள்.
“ஓ சந்தேகம்”, என்றான்.
“சந்தேகம் எல்லாம் இல்ல, பொசசிவ்னஸ்”, என்று சொல்லி சிரிக்கவும்.,
அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், “நீ உறுதியா இருக்கியா” என்று கேட்டான்.
“எதுல”, என்றாள்.
” இல்ல நீ இப்ப வந்து கேட்டு., சொல்லிட்டு இருக்கியே அதுல”, என்று சொல்லவும்.,
“இதுல நான் யோசிக்க எதுவுமே இல்லை., நான் தான் சொன்னேன் இல்ல, கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகப்போகுது., நான் உங்களை முதல் முதல்ல பார்த்தது இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது., நிச்சயமா நீங்க அண்ணியோட அண்ணா ன்னு எல்லாம் எனக்கு தெரியாது., முதல்ல அங்க வச்சு நான் பார்த்தது., எனக்கு அப்படியே மனசுக்குள்ள நிக்குது., பட் நான் நிறைய யோசிச்சிருக்கேன். எங்க வீட்ல கல்யாணம்னு சொல்லும் போது.,இப்படி இருக்கணும் , அப்படி இருக்கணும், எனக்கு இந்த மாதிரி எல்லாம் ஃபீல் வரணும்., அப்படி எல்லாம் சொல்லி இருக்கேன்”, என்று சொல்லவும்.
“அந்த மாதிரி எல்லாம் வந்துச்சா”, என்று அவன் கேட்டான்.
“அந்த மாதிரி எல்லாம் வரல, ஆனா மைண்ட் என்னவோ ஒரே இடத்தில் பிடிவாதமா நிக்குது., அந்த இடத்தை விட்டு நகலவே மாட்டிக்குது”., என்றாள்.
“எந்த இடம்”, என்றான்.
“மீனாட்சி அம்மன் கோவில் வாசல்., உங்க மேல மோதுனது, அதுதான் நிக்குது”, என்றாள்.
அவனும் அவளை பார்த்தபடி, “உனக்கும் எனக்கும் பொருத்தமே இருக்காது தெரியுமா”, என்றான் மெதுவாக.,
“யார் சொன்னா, அழகா இருக்கும், பொருத்தமா இருக்கும், இங்க வாங்க ஒரு செல்பி எடுத்துக்காட்டுறேன்”, என்று சொல்லவும்.
“ஓவர் தைரியம் உனக்கு”, என்று சொன்னான்.
பின்பு “வீட்டில் ஓவர் செல்லமோ”, என்று கேட்டான்.
“ஓவர் செல்லம் எல்லாம் இல்ல, ஆனா நான் சொன்னேன்ல, இதுதான்., நாம வாழ போறது ஒரு லைஃப், அத நமக்கு புடிச்சவங்க கூட இருக்கணும்., நமக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் அவ்வளவுதான், நமக்கு புடிச்ச ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா.,
ஒருவேளை ரெண்டு பேருக்குள்ள ஆர்கியுமெண்ட்ஸ் வரலாம்., பிரச்சனைகள் வரலாம், குடும்பம் இருந்தா எல்லாம் வரத்தான் செய்யும்., ஆனா புடிச்சவங்களை கல்யாணம் பண்ணா விட்டு கொடுத்து போக தோணும்., அவங்களுக்காக எது வேணாலும் செய்யலாம் ன்னு தோணும்., அப்படி இருந்தா அந்த லைஃபை எவ்வளவு பிரச்சனை வந்தாலும், ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் , நல்ல மெமரிஸோட வாழ்ந்திடலாம்.,
ஆனா புடிக்காத லைஃப்னா, சின்ன சின்ன பிரச்சனைகள் கூட நமக்கு பூதகரமா தெரியும், அந்த மாதிரி ஒரு லைஃப் எனக்கு வேண்டாம் அப்படின்னு தோணுச்சு., அதனாலதான் நான் பிடிவாதமா இருந்தேன்., எனக்கு புடிச்ச மாதிரி ஒரு லைப் வேணும் அப்படின்னு., இப்ப எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அவ்வளவுதான்”, என்று சொல்லவும்.
“நீ என்ன பண்ணு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு., ஒருவேளை என்னை விட பெட்டரா யாரையாவது பார்த்தனா”, என்று சொல்லும் போதே,
“பார்த்து பார்த்து எல்லாம் கிடையாது சரியா., அந்த மாதிரி தோன்றுவதற்கு பெயர் வேற., நமக்கு இவங்கள தான் புடிக்குது அப்படின்னு தோன்றது வேற., ஏன் இதுவரைக்கும் உங்களுக்கு அப்படி எல்லாம் நிறைய தோணி இருக்கா”, என்று கேட்கவுமே.,
“ஏய்ய்”, என்றான் சத்தமாக.,
“தெரியுதுல, அந்த ஏய் எவ்வளவு சவுண்டா வருது”, என்று சொன்னாள்.
“சரி இப்ப என்ன பண்ணலாம்னு நினைக்கிற”, என்று அவன் கேட்க.,
“நீங்க ஓகே சொன்னீங்கன்னா ஓகே., இல்ல முறைப்படி மேரேஜ் தான், எனக்கு இந்த லவ் எல்லாம் நம்பிக்கை இல்லை அப்படின்னு சொன்னீங்கன்னா”, என்று இழுத்தாள்.,
“சொன்னா என்ன பிளான் வச்சிருக்க, ஆல்ரெடி பிளான் பண்ணி வச்சிருக்க அப்படித்தானே”, என்று சொல்லவும்.,
இவளோ எங்கேயோ பார்த்து சிரித்துக் கொண்டே., பிளான்ல தான் இருந்தேன் ஒருவேளை நீங்க எனக்கு லவ் வரல, என்னால லவ் பண்ணலாம் முடியாது அப்படின்னு சொன்னீங்கன்னா., நான் நேரா போய் எங்க ஃபேமிலில சாஷ்டாங்கமா சரண்டர் ஆயிடுவேன்., எனக்கு அவரை புடிச்சிருக்கு பேசி முடிங்கன்னு சொல்லிடுவேன்., எப்புடி”, என்று கேட்டாள்.
கண்ணைச் சிமிட்டி எப்போதும் சிரிக்கும் அதே சிரிப்போடு
இவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். “சோ, முடிவா தான் இருந்திருக்க”, என்றான்.
“எனக்கு நீங்க அன்னைக்கு சொல்லும் போது கஷ்டமா இருந்துச்சு, ரொம்ப பீல் பண்ணனேன், ஜஸ்ட் ஒரு ஒன் வீக் பிஃபோர் தான் எப்படினாலும் நடக்கும் அப்படின்னு மனசுல ஒரு நம்பிக்கை வந்துச்சு.,
அதுக்கப்புறம் நேத்திக்கு மார்னிங் தான் வீட்ல போய் சொல்லிடலாம் அப்படின்ற மைண்ட் செட்டுக்கு வந்தேன்., யோசிச்சு பார்த்துட்டு ஜஸ்ட் இப்ப சொன்னா உடனே மேரேஜ் வச்சிருவாங்க., டிரைனிங் இருக்கு., நீங்க இருக்குற இடத்துக்கு என்னால வர முடியாது., அப்பவும் நான் இங்க இருக்கிற மாதிரி இருக்குமே., அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன்”,என்றாள்.
“வேற என்னவெல்லாம் யோசிச்ச”, என்று அவன் சிரிப்போடு கேட்க.,
இவளோ, “அதனால தான் என்ன யோசிச்சேன்னா., கரெக்டா ஸ்டெடிஸ் முடியறதுக்கு டூ மந்த்ஸ் பிஃபோர் வீட்ல சொன்னானா பேசி முடிக்கிறதுக்கு சரியா இருக்கும்., என்னோட பிராக்டிஸ் முடியும் போது மேரேஜ் பண்ணிக்கலாம் அப்படின்னு நினைத்து இருந்தேன்”., என்றாள்.
“சோ நான் சம்மதிக்க வேண்டாம்”, என்று சொல்ல.
“அதெல்லாம் இல்ல நீங்க சம்மதிப்பீங்க என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு”, என்று சொல்லவும்.
“ஏன்”, என்றான்.
“நீங்க அம்மா பிள்ளை, உங்க அம்மாவுக்காக நிறைய விஷயங்கள் நீங்க அட்ஜஸ்ட் பண்ணி போறத நான் பார்த்து இருக்கேன்., அதனால உங்க அம்மா சொன்னா, நீங்க ஓகே சொல்லுவீங்க”, என்றாள்.
“ஓஹோ அப்புறம் ஒரு சித்தி இருக்காங்களே., நேத்து பிரச்சினை கிரியேட் பண்ணவங்க அவங்கள பத்தி யோசிக்கலயா”, என்றான் .
“அவங்களை பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்”, என்றாள்.
“அவங்க பிரச்சனை கிரியேட் பண்ணுவாங்க”., என்றான்.
“அவங்க யாரு கிரியேட் பண்றதுக்கு, அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு., இது எனக்கும் உங்களுக்குமானது., எங்க அம்மா அப்பாவும், உங்க அம்மா அப்பாவும் பேச வேண்டியது., மேக்சிமம் போனா தாத்தா பாட்டி தலையிடுவாங்க., மத்தபடி உங்க சித்திக்கு தலையிடறதுக்கு எந்த ரைட்ஸ் ம் இல்ல., அதுக்கு மேல அவங்க பேசினா., உங்க அம்மா மாதிரி அமைதியா எல்லாம் இருக்க மாட்டேன்., பதிலுக்கு பதில் கொடுத்து விடுவேன் யோசிக்கவே மாட்டேன்., எனக்கு என் குடும்பம் முக்கியம் அப்படிங்கிறதுல நான் ஸ்டெடியா இருப்பேன்., முக்கியமா எனக்கு அடுத்தவங்க தலையிடுவது பிடிக்காது”, என்று சொல்லவும்.,
அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். “இப்பவும் இவ்வளவு நம்புறீயா, நான் இப்பவும் சரின்னு சொல்லல”., என்று மெதுவாக சொன்னான்.
“அதான் சொல்லிட்டேனே, நீங்க சரின்னு சொல்லாட்டி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., ஸ்டடிஸ் முடிவதற்கு 2 மந்த் பிஃபோர் நான் போய் வீட்ல பேசிருவேன்., நீங்க இப்ப ஓகே சொன்னீங்கன்னா லவ் பண்ணலாம்., ஏன்னா எனக்கு நிறைய பேசணும் இந்த மாதிரி இல்ல., நிறைய இடத்துக்கு உங்களோட வெளியே போகணும்., அப்படி எல்லாம் ஒரு எண்ணம் இருக்கு., அதெல்லாம் லவ் பண்ணா செஞ்சுக்கலாம்., இல்லையா கல்யாணத்துக்கு அப்புறம் தான் போகனும் ன்னு விதிச்சிருந்தா., விதியை மாத்தவா முடியும்., வெயிட் பண்றேன்”, என்று சொல்லவும் .,
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “உனக்கு நான் சம்மதிக்கல, நீ சொல்லி நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு வருத்தம் இல்லையா”, என்றான்.
“அதான் நிறைய இருக்கே, அதெல்லாம் இப்ப யோசிக்க முடியுமா”, என்று சொல்லி அவனை பார்த்தவள் “இப்பவாது சரி சொல்லுவீங்களா”, என்றாள்.
“லவ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் இல்ல”, என்று அவன் கேட்க.,
“அதுதான் கிக்கே”, என்று சொல்லி சிரிக்கவும்.,
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்., “சரி லவ் பண்ற காலத்துல என்னென்ன ஆசை எல்லாம் இருக்கு சொல்லு”, என்று சொல்ல.,
அவள் பட்டியலை கேட்டவன் தான், “அம்மாடியோ”, என்றான்.
“ஏன் உங்க சம்பாத்தியம் எல்லாம் கரைந்து போய்விடும் ன்னு பயப்படுறீங்களா”, என்று கேட்டாள்.
இவனோ அவளைப் பார்த்து சிரித்தபடியே “மீதிய ராகவன் வந்தவுடன் பேசுவோமா”, என்றான்.
“அண்ணன் கிட்ட சொல்லப் போறீங்களா”, என்றாள்.
அவனும் “அவனுக்கு தெரியும், இப்ப வந்துருவான், முடிஞ்சா இன்னைக்கு, இல்ல நாளைக்கு பேசுவோம்”, என்று சொல்லவும்.,
சிரித்துக் கொண்டே, “போய் கதவை திறந்து விடுங்க., பாவம் பாட்டியும் அத்தையும்”., என்றாள்.
சிரித்துக் கொண்டே தன்னறைக்கு செல்ல திரும்பியவள், அவனைப் பார்த்து “அனாமிகா அர்த்தம் தெரியுமா, சித்தார்த்தன் க்கு அர்த்தம் தெரியுமா”, என்றாள்.
“ஏன்” என்றாள்.
“அப்புறமா சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு தன் அறை சென்றவளோ, குதித்துக் கொண்டு இருந்தாள்.
அத்தனை மகிழ்ச்சி, ‘அவன் வாய் வழியாக சொல்லாவிட்டாலும், நேரடியாக சம்மதம் என்று சொல்லாவிட்டாலும்., உன்னுடைய ஆசைகள் என்னென்ன’, என்று கேட்டதே அவளுக்கு பெரும் மகிழ்வாக இருந்தது.