மதியம் உணவை செய்து வைத்துவிட்டு சாப்பிடுவதற்கு முன்பாக தான் போட்டோ எடுத்து அனுப்பினாள், பிறகு வந்து சாப்பிடலாம் என்று அனைத்தையும் மூடி வைத்துவிட்டு அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவன் அறைக்கு சென்றவள்., கதவை தட்டி விட்டு கதவை திறக்க அப்போது தான் எழுந்து அமர்ந்திருப்பான் போலும்.,
தூக்க கலக்கம் முகத்தில் தெரியத்தான் செய்தது., “நல்ல தூங்கினீங்களா” என்று கேட்டாள்.
“ம்ம் ம்ம்” என்று சொன்னவன், ஒரு பெருமூச்சு விட்டபடி “இந்த கட்டு எத்தனை நாளைக்கு போடணும்”, என்றான்.
“அந்த கைய வச்சு நீங்க கொஞ்சம் வேலை செய்யாம இருப்பீங்கன்னா., ஒரு ரெண்டு நாள் கட்டு போட்டுட்டு அதுக்கப்புறம் மருந்து அப்ளை பண்ணிக்கணும்., புண்ணுல எதுவும் படாமல் பாத்துட்டீங்கன்னா ஓகே தான்” என்று சொல்லும் போதே.,
அவன் அம்மா மதிய உணவை எடுத்துக் கொண்டு வர, இவளிடம் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா மா”, என்றார்.
“இல்லத்த செஞ்சு வச்சிருக்கேன்”, என்று அவரிடம் சொன்னவள்,
“ஏன் கேக்குறீங்க” என்று அவனிடம் கேட்டாள்.
அவனும் “இல்ல நாளைக்கு நான் ராகவனோட போயிடுவேன்., என்னென்ன மெடிசன் எடுக்கிறேன், என்ன இன்ஜெக்ஷன் இது எல்லாம் லெட்டர் மாதிரி கொடுக்கறீயா, அங்க உள்ள டாக்டர்ஸ் ட்ட காமிச்சு மருந்து போட்டுக்குறேன்”, என்று சொல்லவும்.
ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தவள், பின்பு “ஓகே நீங்க கிளம்புவதற்கு ஒரு ஒன் ஹவர் முன்னாடி எனக்கு சொல்லிருங்க., நான் எழுதி தர்றேன்”, என்று சொன்னாள்.
அவனுடைய அம்மா தான், “என்னடா அதுக்குள்ள கிளம்புறியா”, என்று கேட்டார்.
“இந்த கையில் படக்கூடாது அவ்வளவு தானே., நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லவும்.
“ராகவன் எப்ப வருவான்”, என்று அவர் கேட்க.
“வருவான் மா., ஏன்? என்று கேட்டான்.
“இல்ல கூட ஒரு நாள் இருந்துட்டு போயேண்டா., இந்த கைய வச்சிட்டு என்ன பண்ணுவ”, என்று சொல்லவும்.
“அதெல்லாம் பாத்துக்குவேன்”, என்று இவன் அதட்டலாக சொல்ல.,
இவள் தான், “பெயின் வராம இருக்கணும்., கை வீங்காம இருக்கணும், அது மட்டும் பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு வெளியேற செல்லும் போது.,
அவன் அம்மா ஏதோ சொல்ல, பதிலுக்கு இவன் ஏதோ சத்தமாக பேச பாதி தூரம் சென்றவள் மீண்டும் வந்தாள்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு இப்போ”, என்று அவனிடமே கேட்க.,
அவனும் “ஒரு பிரச்சனையும் இல்ல, இப்ப என்ன உனக்கு, எங்க அம்மா கிட்ட தான் நான் பேசிட்டு இருக்கேன்”, என்று சொல்ல.,
“இவ்வளவு டென்ஷனா இருந்திங்கனா புண்ணு சீக்கிரத்துல ஆறாது., போன வலி திரும்பி தான் வரும்”, என்று சொன்னாள்.
“அத்த நீங்க சாப்பாடு குடுத்துட்டு போங்க., அவங்க டேப்லெட் போடட்டும்., இப்ப எதுவும் பேசாதீங்க”, என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து ஒரு முறைப்போடு வெளியே சென்றாள்.
இவனும் பதிலுக்கும் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவர் சாப்பாட்டை ஊட்ட தொடங்கும் போது, “ஏன்டா இவ்வளவு கோபப்படுற எதுக்கெடுத்தாலும், இப்படி கோபப்பட்டா, என்ன செய்ய, உங்க சித்தி சொன்னா அப்படியே நடந்து விட போகுதா, நானும் அப்பாவும் எதற்கு இருக்கோம் பேசமாட்டோ மா., அதுக்கு எதுக்கு அவ்ளோ கோவப்பட்ட., இப்ப பாரு நீ தானே வலில கஷ்டப்படுற”, என்று சொல்லி இரண்டு வாய் தான் கொடுத்து இருப்பார்.
இவனோ “சாப்பாட வச்சிட்டு நீங்க இடத்தை காலி பண்ணுங்க, அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதா இருந்தா நீங்க என்கிட்ட பேசவே வேண்டாம்., குடும்பம் ஒற்றுமை, இதையே சொல்லி சொல்லி என்னை சின்ன வயதிலிருந்து எனக்கு மட்டும் தான் பிரஸர், அதையே சொல்லி வளர்க்கிறீங்க., வேற யாராவது அதை பண்றாங்களா இல்ல தானே,
அவங்க அவங்க பிள்ளைகளுக்கு தேவையானதை அவங்க பண்றாங்க இல்ல., ஏன் உங்களால உங்க பிள்ளைக்கு இதுதான் வேணும்னு சொல்ல முடியல., வீட்டிலேயே தங்க வைக்க முடியல”., என்று சொல்லவும்.
பதிலே பேசாம, “சரிடா சாப்பிடு, நான் பேசல போதுமா”, என்று சொல்ல..,
“இதுதான் மா எனக்கு உங்கட்ட பிடிக்கல, எல்லாருக்காகவும் விட்டுக் கொடுத்து கடைசில என் வாழ்க்கையில எல்லாத்தையும் முடிச்சி வெச்சாச்சு., இனிமேலாவது நிம்மதியா இருக்கணும்னு நினைங்க, இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா., நாளைக்கு வரப்போற மருமக உங்கள மெச்சிக்க மாட்டா., அப்போ உங்களுக்கும் அவளுக்கும் சண்டை வரும். இல்ல னா குடும்பம் பிரியும், இந்த குடும்பம் வேணுமா., அவ வேணுமான்னு கேட்டா., நான் பேசாம அவ பின்னாடி போயிடுவேன்., ஏன்னா எனக்கும் இந்த குடும்பத்துக்கும் ஏற்கனவே ஒட்டு இல்லாம தான் இருக்கு., அப்புறம் ஒரேடியா பிரிஞ்சுடும் பாத்துக்கோங்க”, என்று சத்தம் போடவும்.,
அவன் அம்மாவுக்கு ஒரு நிமிடம் மனம் கலங்கி தான் போனது., எதுவும் சொல்லாமல் அவனுக்கு உணவை எடுத்துக் கொடுத்தவர் அமைதியாக அவனுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிட்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கீழே செல்ல.,
அவரையே பார்த்தவன் ‘இவங்க எப்ப தான் மாறுவாங்கன்னு தெரியலையே’, என்று பார்த்திருந்தான்.
மாலை நேரம் வெளியில் இருந்து மொட்டைமாடிக்கு செல்லக்கூடிய மாடி படியில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனை.,
ஜன்னல் வழியாக பார்த்தவள், ‘மத்தியானம் ஏதோ ஆர்க்யூமென்ட் ஓடுச்சு, இப்ப ஏதோ திங்கிங்ல இருக்காங்க போவோம்., இல்லனா மனச மாறி விடக்கூடாது’, என்று யோசித்துக் கொண்டே அவனிடம் வந்தவள்,
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, பெயின் ஏதும் இருக்கா,என்ன யோசனை”, என்றவளை பார்த்தவன்.
“உனக்கு சும்மாவே இருக்க முடியாதா, எனக்கு வலிச்சா, நானே சொல்றேன் போ., இப்படித்தான் எல்லா பேஷண்ட் டையும் நீ கேட்டுட்டே இருப்பியா”, என்று கேட்டான்.
“எல்லார்ட்டையும் கேட்க மாட்டேன்., உங்ககிட்ட கேட்பேன்”, என்று சொன்னாள்.
அவனும் அவளை முறைத்தப்படி பார்க்க.,
அவளோ, “நான் எந்த மாற்றமும் இல்லை, அப்படியே தான் இருக்கேன் உங்க கிட்ட ஏதாவது மாற்றம் வந்துச்சா”, என்று கேட்டாள்.
அவன் அவளைப் பார்த்து “உனக்கு அன்னைக்கு சொன்னது புரியலையா”, என்றான்.
“எத்தனை தடவை சொன்னாலும், எனக்கு இந்த விஷயம் மட்டும் புரியாது”, என்றாள்.
“நீ என்னை விரும்புறேன்னு சொல்லுற, நான் பதிலுக்கு சரின்னு சொல்லிட்டு , அதுக்கப்புறம் உன்னை ஏமாத்தி விட்டுட்டு போயிட்டா”, என்று கேட்டான்.
“நீங்க அப்படியெல்லாம் விட்டுட்டு போக மாட்டீங்க”, என்றவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் .,
“ஒரு நிமிஷம் இரு வர்றேன்”, என்று சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்று கீழிருந்து மாடிக்கு ஏறி வரக்கூடிய அந்த முக்கியமான பாதையில் உள்ள கீரில்லை இழுத்து சாத்திவிட்டு மேலே ஏறவும்.,
அவன் அம்மா தான்., “கீழ வரைக்கும் வந்து கதவை பூட்டிட்டு போற”., என்று கேட்டார்.
“சும்மா நொய் நொய்யின்னு ஒவ்வொருத்தரா வந்து நிக்காதீங்க., எனக்கு வேணும்னா நானே கீழே இறங்கி வாறேன்., அல்லது ராகவன் இப்போ வருவான், அவனும் நானும் சேர்ந்து கீழ வந்து நைட் சாப்பிடுகிறோம்., தூக்கிட்டு அலையாதீங்க”, என்று சொல்லிவிட்டு சென்றான்.
“கொஞ்சம் சரியா ஆன உடனே அவன் பேசுறத பாத்தியா”, என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
அவன் வரும் போது, அவள் நின்ற இடத்தில் தான் இருந்தாள்.
அவன் வந்து மீண்டும் மாடிப்படியில் அமர.,
“என்ன”, என்றாள்.
“நீ வேணா, வீட்டில் உள்ளவங்கள பத்தி யோசிக்காம இருக்கலாம்., ஆனா எங்க வீட்ல உள்ளவங்க, நான் இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறதை பார்த்தாலே எதுவும் நினைச்சிருவாங்க”, என்று சொல்ல.,
“மற்றவங்களுக்காகவே வாழனும்னு முடிவு பண்ணி இருக்கீங்களா., இப்போ உங்களோட கஷ்டம் உங்களோட வலியை நீங்கதான் அனுபவிக்க முடியும்., அடுத்தவங்க யாரும் அனுபவிக்க முடியாது., அதே மாதிரி தான் வாழ்க்கையில எந்த ஒரு விஷயமும் நமக்கானத, நம்ம தான் அனுபவிச்சு ஆகணும்., நல்லதோ கெட்டதோ அடுத்தவங்களுக்காக பார்த்தோம்னா லைஃப்ல எதுவுமே நம்ம கூட நிக்காது”,., என்று சொல்லிவிட்டு.,
“சரி கீழே போய் கதவெல்லாம் பூட்டிட்டு வந்துட்டீங்களா”, என்று கேட்டாள்.,
அவன் லேசான இதழ் பிரியாத சிரிப்போடு, “ஆமா அந்த இடம் எப்படி உனக்கு தெரியும்., நான் பூட்டுவேன்னு யார் சொன்னா”, என்று கேட்டான்.