எஸ்ஸாம் ஹாலில் நல்ல முறையில் எஸ்ஸாமை எழுதி முடித்த மதி, பேப்பரைக் கோடுத்து விட்டு வெளியே வந்தவன், கைகளைத் தூக்கி நெட்டி முறித்தவன்
“ப்பூ…. பைனலி தலைவலி ஓவர்…” என்று திரும்பியபோது, அங்கே இவனது நண்பர்கள் சாதிக் மற்றும் வினோ இவனுக்காகவே காத்திருந்தனர்.
“என்ன இவனுங்க இங்க நிக்குறானுங்க?” என்று சந்தேகமாக இருவரும் அருகில் செல்ல
“எஸ்ஸாம் எப்படிடா எழுதின?” என்ற சாதிக்கை யோசனையாகப் பார்த்த மதி
“இவன் போதையில தான வாயைத் திரப்பான், இன்னைக்கு என்ன ஸ்டெடியா இருக்கும் போது பேசுறான் என்ன அதிசயம்!”
என்று மனதோடு பேசியவனுக்கு எங்க தெரிய போகிறது அவன் மதுவில் இருந்து அதை விட அதிக போதை தரும் வேறு ஒன்றிற்கு தாவி விட்டான் என்று.
இப்போது இவனுடன் போசுவதும் அந்த போதையில் தான்.
“ம்ம்ம் நல்லா தான் எழுதியிருக்கேன், நீங்க எப்படி பண்ணிருக்கீங்க?”
“அதெல்லாம் நல்லா தான் பண்ணிருக்கேன். ஆமா, உன் புது தோழன் அவன் எங்க?” என்றதும் தான் த்ருவ் நினைவு வந்தவனாக மதி சாதிக் பக்கம் திரும்பி
“அவன் உன் கிளாஸ் தான முடிச்சிட்டான் எஸ்ஸாம்?” என்று அந்த ஹால் பக்கம் செல்லப் போனவனைத் தடுத்த வினோ
“மொதல்ல அவன் தான் முடிச்சான், முடிச்சதும் அவன் வேலையைப் பார்க்க சரியா போயிட்டான்.”
“என்னடா பேசுற நீ? சரி…. நீ எதுவா இருந்தாலும் அப்புறமா பேசு, எனக்கு ஒரு வேலை இருக்குடா.” என்று நகர போனவனை கைவைத்து மறைத்த வினோ
“அந்த அன்வீதா கிட்ட ப்ரோபோஸ் பண்ணப் போறத பத்தி சொல்றியா மதி ? அதுவா இருந்தான் நீ போக வேனா, உனக்கு பதிலா உன் புது தோழன் அதை நல்லா பத்து வச்சிருக்கான்!”
“என்னது பிரனாவா நான் லவ் பண்றத சொல்லிட்டானா…? அச்சோ…. அவன…. அவ கிட்ட நானே சொல்லணும்னு நினைச்சேன். சரி, இப்போ ரெண்டு பேரும் எங்க இருக்காங்கடா? என்ன கூட்டிட்டு வரச் சொன்னாங்களா?”
“அவங்க ஏன் இனி உன்னத் தேடப் போறாங்க? அதான் ரெண்டு பேரும் இப்போ ஜோடி ஆகிட்டாங்களே! இப்போ எங்க எந்த இடத்துல ஜோ…டியா…..இருக்காங்களோ?” என்று பேசிய வினோவின் காலரை பிடித்து அவனை அவன் உயரத்திற்கு தூக்கி
“பிரனாவ் பத்தி இப்படித் தப்பா பேசாதன்னு எத்தனை வாட்டி சொல்ல…”
“டேய்… மதி என்ன இறக்கி விடுடா! நான் சொல்றதக் கேளுடா, நான் உண்மையாவே தான் சொல்றேன்!”
என்று கத்தியவனைத்தான் அனைவரும் சுற்றி நின்று பார்த்தனரே தவிற யாரும் உதவிக்கு செல்லவில்லை.
வினோவை பற்றி அனைவருக்குமே தெரியும் எப்போதும் போதையில் அடி தடி என்று சுற்றுபவனை காப்பாற்ற முன் வர யாருக்கும் விருப்பம் இருக்க வில்லை.
மதியே அவன் கத்துவது பிடிக்காது அவனை கீழே விட்டு,
“என்னொரு தடவ இப்படிப் பேசுன உனக்கு அவ்வளவு தான்!”
என்று அய்யனார் கணக்காக கத்தி கொண்டிருந்தவனை பார்த்து பயமாக இருந்தாளும்
“நீ நான் சொன்னத நம்ப மாட்டன்னு தெரியும், அதான் உனக்காக எவிடன்ஸ் வச்சிருக்கேன்” என்றவனை குறையாத கோபத்துடன் மதி பார்க்க
“இங்க வேணாம் அங்க கிரவுண்டுக்கு வா காட்டுறேன்” என்று மதியை இழுத்துக்கொண்டு மூவரும் தனியாகச் சென்றனர்.
மதியும் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள் என்று பார்ப்பதற்காக சென்றான்
அங்கே ஒரு மரத்தடியில் இவனை நிற்க வைத்த வினோ, “இதோ பாருடா, எனக்கு உன்னை அவன் கிட்ட இருந்து பிரிக்க ஒன்னும் ஆசை இல்லை.
“ஆமா டா மதி, கொஞ்சம் நாங்க சொல்ல வர்றத கேட்டுட்டு அப்புறமா எங்கள அடிக்கலாமா இல்ல வேணாம்னு யோசி”.
மொவனே எடாகுடமா எதவது காட்டுங்க…. இன்னைக்கு உங்கள வெளுக்குற வெளுல நீங்க திரும்பி அவன் பேற சொல்லவே பயப்படனும் டா என்று ஒரு முடிவுக்கு வந்தவன் அமைதியாக அவர்கள் காட்டுவதை பார்க்க காத்திருந்தான்.
“நாங்க ரெண்டு பேரும் எஸ்ஸாம்ஸ் சீக்கிரம் முடிச்சிட்டு ஒரு தம் போடலாம்னு கிரவுண்ட் பக்கம் வந்தோம், அப்போ அங்க அதே இடத்துக்கு அன்வீதாவைக் கூட்டிட்டுத் த்ரூவ் வந்தான்.
எதோ திருட்டு தனமா சுத்து பாத்துட்டே வந்தான். எங்களுக்கு அவன் பார்வை சரியா படல டா, சோ அவன் பின்னாடியே அவனுக்குத் தெரியாம போய் மரம் பின்னாடி மறைஞ்சு நின்னுட்டு, என்ன பண்றான் இவன்னு பாத்துட்டு இருந்தேன்.
சடனா அன்வீதாக்கிட்ட லவ் சொல்லிட்டான் டா” என்று சொல்லிவிட்டு மதி முகத்தைப் பார்க்க, அவன் ம்ம்ம்…..மேல சொல்லு அப்பறம் என்று நின்றவனை பார்த்து மனதிற்குள் கடுப்பான வினோ மேலும் தொடர்ந்தான்.
“அதை கேட்டுட்டு அந்த பொண்ணு திகச்சி போச்சிடா. உன்னைப் பார்க்கும் போதே நீ நம்பலன்னு தெரியுது. வேணும்னா இந்த வீடியோவைப் பாரேன்” என்று அவன் போனில் இருந்த வீடியோவை ஓட விட்டான்.
அதில் த்ரூவின் பின் புறமும் அன்வீதாவின் முகமும் தெரிந்தது,
“அன்வி, டூ யூ லவ் மீ?” என்று பிரனாவ் கேட்ட கேள்விக்கு அன்வீதா மறுப்பாகத் தலையசைப்பதும், பின் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்வது போல அந்த வீடியோ முடிந்திருந்தது.
“பார்த்தியா டா அவன் பண்ணிருக்க வேலைய? நைஸா அவகிட்ட லவ் சொன்னதும் இல்லாம, இது மதிக்குத் தெரிய வேணாம்னு சொல்லி வேற அனுப்பிருக்கான்”
என்று வினோ பேச பேச, மதியின் முகம் குழப்பத்தில் மாறுவது தெரிந்து வினோ மேலும் தொடர்ந்தான்.
“அவன் இது வரை எல்லா பொண்ணுங்க கிட்டயும் சீக்ரெட்டா லவ் பண்ணலாம்னு சொல்லி சொல்லியே எல்லோரையும் ஏமாத்திட்டு இருக்கான்டா. அப்படியே அப்பன் புத்தி. இப்போ அடுத்து உன் அன்வீதா மேலேயும் கை வைச்சிட்டான்”.
என்று வினோ பேச பேச, மதிக்கு ஒன்று தெளிவாக புரிந்தது இதில் எதோ தவறு இருக்கிறது என்று. அனால் இந்த வீடியோ அதில் பிரனாவ் கேட்டது என்று அவற்றை போட்டு தலையில் குழப்பியவனுக்கு தலை வலி அதிகமாக.
நெற்றியில் கைவைத்து யெசித்தபடி இவன் இருக்க.
அப்போது சாதிக் அவன் தோளில் கைவைத்து, “ரொம்ப டென்ஷனா இருக்கியா டா? இந்தா இந்த சிகரெட்டைப் பிடி, தெளிவா யோசிப்ப”.
என்று கொடுக்க, மதியும் இவர்கள் பேசுவதை நம்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அதை புகைத்தால் நன்றாக இருக்கும் போல இருக்க
அதை வாங்கிப் பற்றவைத்து எப்போதும் போல ஆழமாக இழுக்க, தலையில் சுர் என்று ஏறியது.
“என்னடா இது ஒரு மாதிரி இருக்கு…”
என்று அதை புகைப்பதை நிறுத்தி விட்டு கீழே போட போனவனை தடுத்த வினோ
“ரொம்ப நாள் கழிச்சுப் பிடிக்கிறலடா, அப்படித்தான் இருக்கும். என்னும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாரு ”
என்றதற்குத் தலையை அசைத்தபடி சிகரெட்டை அடித்தவனுக்கு, த்ரூவை யோசிக்க யோசிக்க தீடீரென்று அத்தனை கோபம் தான் வந்தது.
தெளிவாக எதுவும் யோசிக்க முடியாமல் போகவும் அப்படியே நெற்றியை பிடித்து கொண்டு நின்றவனை எதேதோ பேசி தப்பு தப்பாக அவனை சிந்திக்க வைக்க உள்ளே சென்ற போதை அருமையாக வேலை செய்தது.
ஆம் போதையில தான் மதி புகைக்கும் சிகரெட்டில் சிறிதளவு கலந்து கொடுத்து விட்டனர். அந்த போதையில் அவனின் உணர்ச்சி கண்ட மேனிக்கு தூண்டிவிட அது அனைத்தும் கோபமாக த்ருவ் புயம் திரும்பியது.
“ ஏன்டா…. இப்படி பண்ண…. நான் என்ன….. பண்ண டேய் பிரணவ்….” என்று அங்கும் இங்கும் நடந்தபடி ஏதோ பிதற்றியவன், கண்கள் சிவக்க வெறிபிடித்தவன் போல்.
“எங்கடா…. அவன்?” கேட்டு நின்றவனை பார்த்து சிரித்த இருவரும்
“கேண்டீனில் இருக்கான்டா” என்று வழிகாட்ட, கேண்டீன் நோக்கி இவன் நடக்கத் தொடங்ககினான், வினோ மற்றும் சாதிக் மகிழ்ச்சியில் துள்ளாத குறையாக.
“சூப்பர்டா! செம சரக்கு போலயே டா! ஒரு நிமிஷம் நம்ம மதியை இப்படி ஆக்கிடுச்சு.”
“ம்ம்ம்…. நல்ல ஐடமா தான் இருக்கு. இதை டெய்லி சப்ளைக்கு டீல் பேசணும் டா. இதை வச்சு தான் இந்த மதியை நம்ம கூடவே வச்சுக்க முடியும்”
என்று வினோ சிரித்தபடியே, அதில் இருந்த அடுத்த சிகரெட்டைப் அவன் வாயில் பற்ற வைத்தான்.
இங்கு கோபமாக வந்த மதியைத் த்ரூவ் அமர வைத்துப் பேசும் போதுதான், மூளை மழுங்கிய நிலையில் மதி வார்த்தையை விட்டது.
“எல்லோரும் உன் குடும்பம் மாதிரி இருப்பாங்கன்னு நினைக்காத டா! ஒருத்தி இல்லனா இன்னோருத்தி ன்னு நீங்க போற மாதிரி என்ன நினைச்சியா டா?” என்று மதி பேசியதை கேட்டு அதிர்ந்த த்ரூவ்.
“மதி….” என்று கத்த, அந்த கேண்டீனே இவர்களைத்தான் பார்த்தது அந்த சத்தத்தில்.
“என்ன மதி…. என் பேரைச் சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லடா! பணத்துக்காக மூணாவதா போனவங்க தான உங்க அம்மா, அவங்க பையன் நீயும் அப்படி தான இருப்ப?” என்று மதி பேசியதை கேட்க முடியாத த்ரூவ், அவன் கழுத்தைப் பிடித்து நெரித்திருந்தான்.
“என்ன தைரியம் இருந்தா என் மேல கைவைப்ப? உங்க அப்பன கொன்ன மாதிரி என்ன கொள்ள போறியா டா?” என்று பேச முடியாமல் பேசியவன் பேச்சைக் கேட்டு அவனை கீழே தள்ளியவன்
“மதி ஸ்டாப் இட்!” என்று காதை பிடித்துக் கத்தியவன் கண்கள் செவ்வனமாக சிவந்து கலங்கியிருந்தன.
உயிராக நினைத்த நண்பனின் வாயிலிருந்து வரும் இந்த விஷச் சொற்களைக் கேட்க முடியாது என்று த்ரூவ் துடிக்க, அதை உணரும் நிலையில் மதி இல்லை.
த்ரூவ் கத்திய பிறகும் ஏதோ பிதற்றித் திட்டியவன், என்ன செய்கிறோம் என்று உணராமல் த்ரூவின் பின்னங்கழுத்தைப் பிடித்துச் செவிற்றில் முட்டத் தொடங்கினான்.
மதி அவன் அவனாக இல்லை என்று மட்டும் த்ரூவால் உணர முடிந்தது. ஏதோ பேய் பிடித்தவன் போல் அவனைச் செவிற்றில் மோதியவன், “என்ன எமத்திட்ட, என் கிட்ட பொய் சொல்லிட்ட, என்ன எமத்திட்ட நீ….”
என்ற தொடர்வார்த்தைகளைக் கேட்ட த்ரூவ்,
“என்ன பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டியா டா? அதான் மத்தவங்கள மாதிரி உன்னாலயும் என்ன ஏத்துக்க முடியலையா?”
என்று கசப்பாக எண்ணியவன், “என்னை என்னமோ செய்துக்கொள்” என்று மதியை தடுக்காமல் நின்றுவிட்டான்.