அவள் மகிழ்ச்சியே அவள் முகத்தை மேலும் அழகாக காட்டியது, அவள் காரில் ஏறப் போகும் போது பாட்டி வந்தவர், “அழகா இருக்குமா இந்த சேலை உனக்கு, நீயும் இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்க”, என்று சொன்னார்.
பாட்டியின் அருகில் சென்றவள், தன் செல்லை எடுத்து பாட்டியோடு சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டு, “இப்ப இன்னும் அழகா இருக்கா பாட்டி”, என்று கேட்டாள்.
சிரித்தபடி அவர் கன்னம் வழித்து திஷ்டி எடுத்தவர்., “பார்த்து போயிட்டு வாம்மா”, என்று சொன்னார்.
சந்தோஷமாகவே திருமணத்திற்கு கிளம்பி சென்றாள்.
அந்த போட்டோவை தன் குடும்பத்திற்கு குரூப்பில் அனுப்பிவிட்டு கல்யாண வீட்டை நோக்கி காரை செலுத்தினாள்.
மூணாரில் சித்தார்த்திடம் ராகவன் தான், “டேய் கிளம்புறியா இல்லையா., தேனில வேலை முடிச்சிட்டு மதுரைக்கு போறோம்., மதுரையில் பர்ச்சேஸ் பண்ணிட்டு நாளைக்கு ஈவினிங் இங்க ரிட்டன் வரலாம், என்ன சொல்ற”, என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
ஏனென்றால் அவர்களின் ரெசார்ட்க்கு தேவையான சில பொருட்களை மதுரையில் வாங்குவதாக இருந்தது. அதற்காக கிளம்பி கொண்டிருந்தவர்கள் தேனியிலும் வேலையும் முடித்துவிட்டு வரலாம் என்ற நோக்கில் கிளம்ப., இவன்தான் யோசித்துக் கொண்டே இருந்தான்.
பின்பு ராகவன் தான், “டேய் நான் சொல்றத கேளு, தேனில வேலை முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ன்னு தெரியாது, காலையில் நீ என் கூட கொஞ்ச நேரம் இரு., நான் வேலையை முடிச்சுட்டு வரேன்., நீ என்ன பண்ற காலையில வேலையை முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு போயிடுற., நான் என்ன பண்றேன் வேலைய முடிச்சுட்டு சாயந்திரம் உங்க வீட்டுக்கு வந்துடறேன்., ரெண்டு பேரும் நைட் அங்க ரெஸ்ட் எடுத்துட்டு காலையில கிளம்பி மதுரையில நமக்கு தேவையான திங்ஸ் எல்லாம் பர்ச்சேஸ் பண்ணிட்டு ஈவ்னிங் ரிட்டன் மூணார் வந்து சேர்ந்திடலாம் சரியா., நைட் இங்க வந்து சேர்ற மாதிரி பிளான்ல கிளம்புவோம், ஒருவேளை நம்மள திங்க்ஸ் அலைய வச்சுடுச்சு னா, லேட் ஆயிருச்சுன்னா நாளை கழிச்சு மார்னிங் கிளம்பி வருவோம் என்ன சொல்ற”, என்று சொல்லவும்.
அமைதியாக யோசித்துக் கொண்டவன், “நான் தேனியில் ஒர்க் எல்லாம் பாக்குறேன், நீ போய் பர்சேஸ் பண்ணிட்டு வரியா”, என்று சொல்ல.,
“அடி தான் தருவேன் பாத்துக்கோ, அம்மாட்ட நேத்து பேசினேன், அம்மா எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா, நீ எதுக்கு வரமாட்டிங்கன்னு என்கிட்ட கேக்குறாங்க, சொல்லவா., அந்த பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டான், அதனாலதான் வரமாட்டிக்கான் னு சொல்லவா”, என்றான்.
“டேய் லூசு மாதிரி பேசாதடா, அதுக்காக எல்லாம் போகாம இல்ல”, என்றான்.
“அப்புறம் எதுக்கு போகாம இருக்க”, என்று கேட்கவும்,
“சரி வா கிளம்புவோம்”, என்று சொல்லி ஒரு முடிவாக அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் தேனி வந்து பாதி வேலை முடித்த பிறகு முதலில் சித்தார்த்தை, “நீ வீட்டுக்கு போ, எனக்கு இன்னும் கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேர்றேன்”, என்று சொல்லி அனுப்பி வைத்தான் ராகவன்.
சித்துவும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்க., அப்போது தான் சாப்பிட்டு முடித்துவிட்டு அமரவும்., தற்செயலாக அன்று மதிய உணவிற்கு பெரியவர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.
“அதிசயமா இருக்கு, எல்லாரும் ஒரே நேரத்துல சாப்பிட வந்து இருக்கீங்க”, என்று பாட்டி கேட்டார்.
சும்மா தான் வந்தோம் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க.,
சித்தார்த்தின் சித்தி தான், “எல்லாரும் வந்தது நல்லது தான்”, என்று சொன்னார்.
பாட்டிதான் ‘இவ என்ன திடீர்னு சொல்லுறா, என்ன விஷயம் ன்னு தெரியலையே’, என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
“என்ன மருமகளே, என்ன விஷயம் எல்லாரும் வந்தது நல்லதுன்னு சொல்லுத”, என்று தாத்தா கேட்டார் .
“அது ஒன்னும் இல்ல மாமா, எங்க வழியில ஒரு சொந்தம்” என்று சொல்லி பாட்டியிடம் “எங்க அம்மாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சி இருக்காங்க இல்ல அத்தை”, என்று ஆரம்பித்து அவர்கள் வழியில் உள்ள சொந்தத்தை சொல்ல.,
பாட்டியும் “ஆமா” என்று சொன்னார்.
“அதுல எனக்கு ஒன்னு விட்ட அண்ணன் இருக்காங்களா”, என்று சொல்லி ,அவரைப் பற்றி பேச
“ஆமா அவங்களுக்கு என்ன இப்போ”, என்றார்.
“இன்னைக்கு காலையில போன் பண்ணி இருந்தாங்க, அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு, பெரிய மச்சான் மகனுக்கு பொண்ணு பார்க்குறதா இருந்தா, எங்க வீட்டு பொண்ண சொல்லேன்னு சொன்னாங்க, அதுதான் நல்ல வேளை எல்லாரும் வந்தீங்களா, எல்லாத்தையும் சொல்லிடலாமேன்னு நினைச்சேன், அதுதான் அத்தே”, என்று சொல்லவும்.,
‘இவ இப்படி எல்லாம் பொண்ணு பாக்குற ஆளு கிடையாத’ என்று பாட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,
சித்தார்த்தோ, ‘இல்லையே இவங்க பொண்ணு பார்க்க மாட்டாங்களே, பாக்குற பொண்ண கெடுத்து தான விடுவாங்க’, என்று யோசித்துக் கொண்டிருந்தவன்.,
“எனக்கு இப்போ கல்யாணத்துக்கு பார்க்காதீங்க பாட்டி, கொஞ்ச நாள் போகட்டும் ஒரு வருஷம் டைம் கொடுங்க, அதுக்குள்ள என்னோட ஒர்க்க இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணிக்கிறேன், அப்புறமா கல்யாணத்தை பத்தி பேசலாம்”, என்று சொல்லும் போதே
அவன் சித்தி தான், “பொண்ணு கிராமத்தில் வளர்ந்திருந்தாலும், நல்ல கட்டு சட்டுமா குடும்பம் நடத்தும், வேலை வெட்டி எல்லாம் நல்ல செய்யும், ஹோட்டலுக்கு தேவைக்கு சரியா போகும் இல்ல”, என்று இழுத்து இழுத்து பேச.,
இவனோ அமைதியாக இருந்தான். அப்போது சித்தார்த்தின் அப்பா தான், “பொண்ணு என்ன படிச்சிருக்குமா”, என்று கேட்டார்.
“பிளஸ் டூ முடிச்சுச்சு, காலேஜுக்கு ஒரு வருஷம் தான் போனா, அதுக்கு அப்புறம் போகல”, என்று சொல்லவும்.,
சித்தார்த்தின் அப்பா தான், “அது சரிப்பட்டு வருமான்னு யோசிக்கணுமா, அவனும் எம்பிஏ படிச்சிருக்கான், ஒரு டிகிரியாவது படிச்சிருக்க வேண்டாமா”, என்று சொன்னார்.
சித்தார்த்தன் சித்தியோ சும்மா இருக்காமல், “ஹோட்டல் தான வச்சிருக்கான், ஹோட்டல் வச்சிருக்கறதுக்கு இது போதாதா”, என்று கேட்கவும்.,
இவனுக்கு கோபம் வர, “நீங்க எனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம், எனக்கு அம்மா அப்பா இருக்காங்க, அவங்க பார்ப்பாங்க”, என்றான்.
“அப்போ நீ குடும்பத்தை பிரிச்சு பேசுறியா” என்று மீண்டும் அவர் பேச்சை தொடங்க.,
“நான் குடும்பத்தை பிரிச்சு பேசல, எனக்கு நீங்க பார்க்க வேண்டாம், அவ்வளவு தான் சொன்னேன்”, என்று சொல்ல.,
“ஏன் அந்த பொண்ண கட்டிக்கிட்டா என்ன?, உனக்கு என்ன ஊர்ல இல்லாத மகாராணியா வந்து கட்டிக்க போறா., ஏதோ இங்க சுத்தி மதுரைக்குள்ள இருக்குற பொண்ண தான் பார்க்கப் போறாங்க, உங்க அப்பா சொன்ன மாதிரி வேணா ஒரு டிகிரி முடிச்சிருப்பாளா., இவளையும் வேணா படிக்க சொல்லுவோம், அதுதான் வீட்டில் இருந்தே படிக்கலாமாமே, அந்த மாதிரி படிக்க சொல்லுவோம்”, என்று சொன்னார்.
இவனோ, “எனக்கு தான் வேண்டாம்னு சொல்றேன்ல, நீங்க பார்க்க வேண்டாம், எங்க அப்பா, அம்மாக்கு தெரியும், தாத்தா பாட்டி இருக்காங்க., அவங்க பார்ப்பாங்க., நீங்க பார்க்க வேண்டாம்., நீங்க சொல்ற பொண்ணு எனக்கு வேண்டாம், அவ்வளவு தான்., நீங்க எப்பவுமே குறை சொல்றவங்க தான், நீங்க ஒரு பொண்ண பார்த்து சொல்றீங்கன்னா., அங்க ஏதோ ஒரு பிரச்சனை இருக்குனு அர்த்தம்”, என்று சொன்னான்.
“என்ன பொல்லாத பிரச்சனை, உனக்கு என்ன ஒரு ரதி மாதிரியா பொண்ணு வரும், சாதாரண பொண்ணு பத்தாதா”, என்று கத்த தொடங்கவும்.,
இவனும் கோபத்தில் தன் வலது கையை வைத்து வேகமாக அருகில் இருந்த சுவரில் அடிப்பதாக நினைத்து ஓங்கி அடிக்க., அருகில் இருந்த அந்த காலத்து போட்டோ உடைந்து அவன் கையை கிழித்து பதம் பார்த்தது.
ரத்தம் வடிவது கூட உணர்வில்லாமல், இவனோ வீட்டினரிடம் கத்திக் கொண்டிருந்தான்.
“எனக்கு அவங்க பொண்ணு பார்க்க கூடாது., எங்க அப்பா அம்மா பார்த்தா போதும், அதுவும் இப்ப பாக்கணும்னு அவசியம் இல்ல, நான் தான் சொல்றேன் இல்ல, ஒரு வருஷம் கழிச்சு நானே சொல்றேன்., சொன்னதுக்கு அப்புறம் பாருங்க சொல்றேன்ல, இவங்க எதுக்கு தேவையில்லாம, ஏன் விஷயத்துல தலையிடறாங்க., இவங்களுக்கு இதே வேலையா போச்சு., இவங்களால தான் நான் இந்த வீட்டுக்கு வரவே இல்லாமல் இருக்கேன்., அது எல்லாருக்குமே தெரியும்., திரும்ப திரும்ப என்னை கோபப்படுத்தாதீங்க”, என்று அவன் கத்திக் கொண்டிருக்கும் போதே,
அவன் மீண்டும் சொன்னது, “நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை, நீங்க அடக்கி அடக்கி வைக்க, உங்க புள்ளைகளை நீங்க அடக்கி வச்சிக்கோங்க., என்னை அடக்குவதற்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது”, என்றான் கோபமாக,