அகனின் அறைக்குள் நுழைந்தவள் ஏதோ ஒரு உணர்வில் ஆட்பட்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் காதோரத்தில் ‘யுகா’ என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, அதில் சிலிர்த்தவள்,
“அகன் இந்த வீட்ல நமக்கு இந்து மாதிரி நல்ல மெம்மரீசும் இருக்கு. சில வேண்டாத மெம்மரீசும் இருக்கு. பட் இந்த ரூம், அதுல நீங்க என்னை இப்படி யுகான்னு கூப்பிட்ட நாளெல்லாம் மறக்கவே முடியாது” என்றவளைத் தானும் ஆமோதித்திருந்தான்.
“இல்லையா பின்னே? இங்கதான் யுகான்னு ஒரு ஏஞ்சலை முதன் முதல்ல பார்த்தேன்” என்றான் அகனும் அமைதியான குரலில்.
உணர்வின் பிடியில் இருந்த இருவருக்கும் அன்றைய இரவு ஒரு மறக்க முடியாத இரவாகிப் போனது.
காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“ஆமால்ல..! நமக்கு இன்னைக்கு ஆனிவர்சரில” என்று தலையில் கை வைத்தவளைப் புரியாமல் பார்த்தவன்,
“என்னாச்சு யுகா?” என்றான்.
“என் லவ்வோதிக வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்ட நாள் இன்னைக்கு. அந்த கவலை தான்” என்று கண்ணடித்து சிரித்தவளை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தான் அகன்.
“மேடமோட லவ்வோதிக வாழ்க்கைக்கு இப்போ என்ன குறையாம்?” என்றான் கேள்வியாய்.
“எல்லாமே குறையாத்தான் இருக்கு” என்று அவள் முனுமுனுக்க,
“நைட் நீங்க வெட்கப் பட்டதை எல்லாம் பார்த்தா குறையா இருக்குற மாதிரி தெரியலையே?” என்றவனின் வாயை வேகமாய் இதழ் கொண்டு மூடியிருந்தாள். அவனோ திகைத்து நிற்க,
“ஹேப்பி ஆனிவர்சரி சிலுக்கு ஜிப்பா” என்றவள் அவனை வேண்டுமென்றே இடித்துவிட்டு செல்ல,
“அராத்து..! இவளை வச்சுகிட்டு” என்று அகன் தான் முகம் சிவக்க நின்றிருந்தான்.
குளித்து முடித்து வந்தவள் அவன் புடவையுடன் நிற்பதை பார்த்து,
“இன்னைக்கும் பொம்பளை வேஷமா?” என்றாள் சிரிப்புடன்.
“நாம முருகன் கோவிலுக்கு போறோம். அதான் புடவை” என்றான்.
கோவில் அடிவாரத்தில் பாத விநாயகரை கும்பிட்டவளுக்கு ஏற்கனவே அங்கு வந்த சம்பவம் நியாபகத்தில் வர தான் செய்த அலும்பை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
“என்ன பிளாஷ் பேக்கா?” என்றான் அகன்.
“மறக்கக் கூடிய பிளாஷ் பேக்கா அது” என்றவளுக்கு சிரிப்பு வந்திருந்தது. அதே மகிழ்ச்சியுடன் இருவரும் மலையேற, வழக்கம் போல் ஏறத் தொடங்கிய சிறிது தூரத்திலேயே மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் தாரா.
“நான் ஒவ்வொரு தடவை வரும் போதும் படியை எக்ஸ்டேர்ன் பண்ண மாதிரியே பீல் ஆகுதே? அது ஏன்?” என்றாள் பாவமாய்.
“படி எக்ஸ்டேர்ன் ஆகல. பாடி எக்டேர்ன் ஆகிடுச்சுன்னு அர்த்தம்” என்றான் நமட்டு சிரிப்புடன்.
‘பம்பரக்கட்டை மண்டையன், வர வர எனக்கு மேல டைமிங் ரைமிங் எல்லாமே பேசுறானே’ என்று முனுமுனுக்க,
“சேர்ந்த சேர்க்கை அப்படி ராஜ குரு. மாம்ஸ் இப்படி கூட பேசலைன்னா எப்படி?” என்றான் ஹரீஷ் பின்னால் சிரிப்புடன்.
“அரசே தாங்கள் எங்கே இந்த பக்கம்? படியில் ஏறினால் தங்கள் பாதம் நோகுமே? சமஸ்தானத்தின் அரசனின் பாதம் நோகலாமா?” என்றாள் நக்கலாய்.
“என்ன பண்றது ராஜ குரு? மனம் நொந்து போயிருக்கும் இவ்வேளையில் பாதம் நொந்தால் என்ன? எல்லாம் என் ஆண்டியப்பன் பார்த்துக் கொள்வான்” என்றான் ஹரீஷ்.
“எதை நீ ஆண்டியாகுறதையா?” என்றவள் சிரிக்க,
“ரைட் ரைட் வாங்க போகலாம். மாம்ஸ் என்ன பார்க்குறிங்க? இந்த நேரத்துக்கு அக்காவை நீ அப்படியே தூக்கியிருக்க வேண்டாம்?” என்றான்.
“அரிசி மூட்டையை தூக்கிட்டு வர்றேன்னு எனக்கு எந்த வேண்டுதலும் இல்லையே?” என்று அகன் சிரிக்காமல் சொல்ல,
“உங்களை” என்று ஓட்டமும் நடையுமாக முருகனை அடைந்திருந்தனர்.
முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்திருந்தனர். தாராவிற்கு மனம் முழுவதும் அமைதியும் நிறைவும் மட்டுமே. கண்ணெடுக்காமல் முருகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு இதுவே போதும், வேற என்ன கேட்கப் போறேன்” என்பதைப் போல் இருந்தது அவளின் முகம்.
வெளியே வந்து அமைதியாய் இருந்தவளின் அருகில் அமர்ந்த அகன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அழுத்திக் கொள்ள, ஹரீஷ் அவர்கள் இருவரையும் ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தான்.
“வேண்டுதல் பலமா ராஜ குரு?” என்றான் வேண்டுமென்றே.
“இல்லையா பின்னே? எனக்கு நல்ல முறைக்கு குழந்தை பிறந்தா உனக்கு மொட்டை போடுறதா வேண்டியிருக்கேன்” என்றாள் சிரிக்காமல்.
“நாம புதுசா குழந்தையோட தாய் மாமாவுக்கு போடுவோம்” என்றவளின் வார்த்தைகளில் சட்டென்று கண் கலங்கியிருந்தான் ஹரீஷ்.
“அக்கா” என்றவனுக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை.
“என்ன? என் குழந்தைக்கு தாய் மாமா சீர் செய்ய மாட்டியா?” என்றவளை உணர்ச்சிப் பெருக்கில் தோளோடு அணைத்துக் கொண்டான் ஹரீஷ்.
“நான் செய்யாம வேற யார் செய்வா?” என்றவனுக்குள்ளும் அப்படி ஒரு நிறைவு. அவர்கள் இருவரின் பிணைப்பையும் வழக்கம் போல் ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தான் அகன்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு….
அன்று வீட்டிற்குள் நுழையும் போதே, வீட்டில் இருந்த அமைதிக்கு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் அகன். நாற்பதை கடந்திருந்தவனின் தோற்றத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. முகத்தில் சற்று முதிர்ச்சி மட்டுமே வந்திருந்தது.
அவன் வருவதைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்ட மகளைப் பார்க்காதவன் போல்,
“யுகா பிரணவி பேபி எங்க?” என்றான் வேண்டுமென்றே.
“ஏன் என்னையெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா இந்த டாக்டருக்கு?” என்றவள் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தாள்.
“இவ்வளவு பெரிய உருவத்தை கண்ணுக்குத் தெரியாம இருக்குமா? இருந்தாலும் என் பேபி தான் எனக்கு பர்ஸ்ட்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் ஓடி வந்து காலோடு அணைத்துக் கொண்டது அந்த குட்டி வாண்டு. அகன் யுகாவின் செல்ல புதல்வி பிரணவிகா.
“சின்ன பேபிக்கும் பெரிய பேபிக்கும் என்ன பஞ்சாயத்து?” என்றான் இருவரையும் அணைப்பில் கொண்டு வந்த படி.
“மம்மி என்னை திட்டிட்டாங்க டாடி” என்றாள் பிரணவிகா உதட்டைப் பிதுக்கி.
“இது தப்பாச்சே? ஆனா, மம்மி திட்டுற அளவுக்கு பேபி என்ன பண்ணிங்க?” என்றான்.
“சொல்லுடி, என்ன பண்ணன்னு சொல்லு” என்றாள் தாரா கோபமாய்.
“ஹேய் யுகா கூல், குழந்தையை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாதா உனக்கு?” என்றான்.
“ஆமா எனக்கு எதுவுமே தெரியாது. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுமே. நீங்களே ஹேண்டில் பண்ணிக்கோங்க” என்று முகத்தைத் தூக்கி கொண்டு செல்ல,
“ஐ நோ அகன். பட் அவ என்ன பண்ணான்னு கேளுங்க” என்றாள்.
“பேபி என்ன பண்ணிங்க?”
“டாடி என் கிளாஸ்ல இன்னைக்கு நியூவா ஒரு பாய் வந்தான். ஹி லுக்ஸ் கியூட் டாடி. ஐ லைக் ஹிம். நான் அந்த பாய்கிட்ட போய் நாம பிரண்ட்ஸ் ஆகிக்கலாமான்னு கேட்டேன் டாடி” என்ற மகளைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அகன்.
“இந்த ஜென்ட்ரேஷன் அப்படி யுகா. அது மட்டுமில்லாம யுகா பொண்ணு கொஞ்சமாவது அம்மா மாதிரி இருக்கணும்ல” என்றவன் இதழ்மடித்து சிரிப்பை அடக்க,
“உங்களை” என்றவளுக்கும் சிரிப்பு வந்திருந்தது.
பிரணவிகா அப்படியே யுகந்தாராவின் காப்பியாக இருந்தாள். சேட்டையிலும் வாயிலும் தாயை மிஞ்சிய சேயாகவே இருந்தாள். இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட அகனின் நிலைமை தான் சில சமயம் பரிதாபமாய் இருக்கும்.
வார்த்தையை எண்ணி எண்ணி பேசுபவனுக்கு விடாமல் பேசிக் கொண்டே இருக்கும் மனைவியும் மகளும் வரமாய் தெரிந்தனர். அவர்களைச் சுற்றி மட்டுமே அவன் உலகம் இயங்குகிறது.
இருவரின் பேச்சையும் பொறுமையாய் கேட்பதற்கு அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். பல வருடங்கள் பேச்சுத் துணைக்கே ஆள் இல்லாமல் இருந்தவனுக்கு வரமாய் வந்திருந்த தேவதைகளாகவே தெரிந்தனர் மனைவியும் மகளும்.
“வயித்துக்குள்ள இருக்குற என் பையன் வெளிய வரட்டும். உங்க ரெண்டு பேருக்கும் அப்போ இருக்கு” என்று அவ்வப்போது சிலுப்பிக் கொள்வாள் தாரா.
பிரணவிகா பிறந்த சமயத்தில் தான் லட்சுமி பாட்டி தவறியிருந்தார். வேணியும் பூமிநாதனும் இங்கு சில நாட்களும் மடத்துக் குளத்தில் சில நாட்களும் என்று வாழ்ந்து கொண்டிருந்தனர்.
நகுலன் இப்போதெல்லாம் விடாமல் தம்பியை வந்து பார்த்துவிட்டு செல்கிறான். ஆனால் எக்காரணம் கொண்டும் அகன் பொள்ளாச்சி பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. சுகந்தி ஒரு முறை நகுலனுடன் வந்து அகன் குடும்பத்தை பார்த்து சென்றிருந்தார்.
மகள் எப்போது தூங்குவாள் என்று யுகா பாவமாய் பார்த்திருக்க, அவளோ தந்தையிடம் கதை கதையாய் பேசிக் கொண்டிருந்தாள்.
‘இவ எனக்கு மேல பேசுவா போல இருக்கே? தூக்கம் வருதா பாரு இவளுக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
அவளின் முணுமுணுப்பு அகனுக்கும் கேட்டிருந்தது. ஒரு வழியாக மகளைத் தூங்க வைத்தவன், மனைவியின் அருகில் வந்திருந்தான்.
“மேடம்க்கு என்ன பிரச்சனை இப்போ? ஏன் இன்னைக்கு இப்படி இருக்க யுகா?” என்றான்.
“எனக்கே தெரியலை” என்றவளுக்கு கோபம் மட்டும் வந்திருந்தது.
“மேடமோட மூட் ஸ்விங்க்ஸ சரி பண்ண என்ன பண்ணலாம்?” என்றவன் அவளைத் தன் கையணைப்பில் கொண்டு வர, வாகாக அவன் மேல சாய்ந்து கொண்டவள்,
“ஒன்னும் பண்ண வேண்டாம், இப்படியே இருங்க” என்றவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.
“தேங்க்ஸ் யுகா” என்றவனை கேள்வியாய் பார்த்தாள்.
“இந்த குட்டி தேவதையை பெத்துக் குடுத்ததுக்கும், இனி ஒரு குட்டி பேபியை பெத்துக் குடுக்கப் போறதுக்கும்” என்றான்.
“அப்போ அதுக்கு மட்டும் தான் நானா?” என்றவளைப் பாவமாய் பார்த்தான். கர்ப்ப கால நாட்கள் அவளைப் படுத்தி எடுப்பது அவனுக்கும் புரிந்திருந்தது.
“அதுக்கு மட்டும் தான் நீன்னு நிஜமா உனக்குத் தோணுதா?” என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்தபடி.
“சாரி அகன்” என்றாள்.
“இனி ஒரு தடவை அப்படி கேட்காத யுகா” என்றவனின் அமைதியைப் பார்த்து தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்,
“அதான் சாரி சொல்லிட்டேன்ல” என்றாள்.
“சாரி அக்சப்டேட்” என்றான் சன்ன சிரிப்புடன்.
“என் லவ்வோதிக வாழ்க்கை வறண்டு போய் கிடக்கு. ஒரு குளிர்ச்சியே இல்லை” என்றாள் கடுப்புடன்.
“பார்த்தா அப்படி தெரியலையே?” என்று அவள் வயிற்றை அவன் ஜாடையாய் காட்ட,
“அது வேற டிபார்ட்மென்ட், இது வேற டிப்பார்மென்ட்” என்றாள் தாரா.
“எது எப்படி இருந்தாலும் இந்த வாய் மட்டும் குறைய மாட்டேங்குதுடி உனக்கு” என்றவனை ஆசையாக அவள் பார்த்து வைக்க,
“ஆரம்பிச்சுட்டியா?” என்றான் சிரிப்புடன்.
“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? ஏதோ நான் சைட் அடிச்சு உங்களுக்கு வாழ்க்கை குடுக்க போய் ஆச்சு. இல்லைன்னா இப்ப வரைக்கும் சார் முரட்டு சிங்கிளா தான் சுத்திட்டு இருந்திருக்கணும்” என்றாள் சிலுப்பலுடன்.
“அது சரி..! எது எப்படி இருந்தாலும் எனக்கு வேற யாருமெல்லாம் வேண்டாம். எனக்கு இந்த வசியக்காரி வாயாடியே போதும். அனஸ்தீசியாவை பேஷன்ட்டுக்கு குடுக்குறியோ இல்லையோ எனக்கு தான் டெய்லி குடுக்குற போல யுகா. அதான் யுகா மயக்கத்துல இருந்து வெளிய வரவே முடியலை” என்றான்.
“நீங்களும் என்னை மாதிரியே பேசுறதுல டெவலப் ஆகிட்டிங்க பம்பரக்கட்டை மண்டையன்” என்றவளை மேற்கொண்டு பேச விடாமல் யுகத்தின் அகமாய் மாறியிருந்தான் அகன் கார்த்திகேயன்.