அவளோ, “நீங்க எனக்கு என்ன உறவு”, என்றாள்.

    இவனோ அவளை பார்த்து, “எதுக்கு, நீங்க தெரிஞ்சு தான் கேக்குறீங்களா, இல்ல தெரியாம கேக்குறீங்களா”, என்றான்.

     “ஓரளவுக்கு கெஸ் பண்ணி இருக்கேன், அது கரெக்டா பாருங்க, எங்க அண்ணா வந்து உங்களை மச்சான் சொன்னாரு சரியா, நீங்க அண்ணாவை மாப்பிள்ளை சொன்னிங்க, அப்போ அண்ணா மச்சான் ன்னு சொன்னாங்க., அப்போ எனக்கு நீங்க மச்சான் தான் சரிதானா, நல்லா இருக்குல்ல”, என்றாள்.

    ‘உண்மையிலேயே லூசா இது’, என்று யோசனையோடு அவள் முகத்தை பார்த்தான்.

    அவளோ, “ஏன் என்னாச்சு”, என்றாள்.

    அவளை பார்த்தவன், “என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களாங்களா, உங்க அண்ணன் மச்சான் ன்னு கூப்பிட்டா அது வேற”, என்று சொன்னான்.

   “நானும் கூட உங்களுக்கு வேற தான்” என்று சொல்லிவிட்டு, “கேட்கிறேன் ன்னு தப்பா நினைக்க கூடாது., நான் பல தடவை தான் யோசிச்சு பல தடவை இது ஓகேவா, ஓகே இல்லையா, தப்பா சரியா ன்னு யோசிச்சு தான் இப்போ பேச நினைக்கிறேன்., ஆக்சுவலா உங்களை ஒரு தடவை பாத்துட்டு பேசணும் அப்படின்னு நினைச்சேன்,  உங்க போன் நம்பர் என்கிட்ட கிடையாது, கேட்ட தருவாங்க ஆனா எனக்கு மத்தவங்க மூலமா நான் உங்ககிட்ட பேசுறதுல எனக்கு இஷ்டம் இல்ல, சோ நானே உங்ககிட்ட பேசுறேன்”, என்று கேட்டாள்.

       அவனும் கையை கட்டிக் கொண்டு கைப்பிடி சுவரில் சாய்ந்த படி, இவளை நேராக பார்த்தான்.

    “என்ன பேசணும்” என்றான்.

       “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு”, என்று சொல்லவும்.

    ஒரு நிமிடம் அவளை கண்ணிமைக்காமல் பார்த்தவன், “நடக்கிறதை பேசு சரியா, தேவையில்லாத வார்த்தைகளை பேசாதீங்க, நான் உங்கள மரியாதையா பேசணும்னு நினைக்கிறேன்., என்னை நீ நான்னு பேச வச்சுடாதீங்க”, என்று சொல்லவும்.,

      “நீ நான்னு இல்ல, வாடி போடி கூட சொல்லலாம், தப்பு இல்ல”, என்று சிரித்தபடி சொன்னாள்.

    அவனும் ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன்,
“ஹலோ தெரிஞ்சு தான் பேசுறீங்களா”, என்றான்.

    “இதுல தெரியாம பேச ஒன்னும் இல்லையே., நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லையே, டீன் ஏஜ் பொண்ணு எல்லாம் கிடையாதுங்க, எனக்கும் 25 வயசு ஆகுது, என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு உங்கள புடிச்சிருந்துச்சு, அதை உங்ககிட்ட சொல்ல தான் டிளே ஆச்சு, உண்மையிலேயே புடிச்சிருக்கா இல்லையா., அப்படிங்கிறத யோசிக்கதுக்கு தான் இவ்வளவு நாள் டைம் எடுத்துக்கிட்டேன், இல்லன்னா அண்ணா நிச்சயதார்த்தன்னைக்கு நான் சொல்லி இருப்பேன்., இத்தனை நாள் நான் கேப் எடுத்துக்கொண்டதற்கு காரணம், எனக்கு யோசிக்கணும் அப்படிங்கறது தான்., நீங்க போன முறை வந்து இருக்கும் போது பார்த்தும் பாக்காத மாதிரி போனீங்க,  வா ன்னு கூட கேட்கல,  எதுவுமே கேட்கல அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.,  உங்களை திரும்பி கூட பாக்க கூடாதுன்னு தான் நினைச்சேன்.,  ஆனா இந்த மானங்கெட்ட மனசு இருக்கு பாத்தீங்களா., ரொம்ப மோசங்க நீங்களே வேண்டாம்னு சொன்னா கூட., என் மனசு காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேங்குது., நீங்க ஒதுங்கி போறதுலேயே தெரியுது, நீங்க அவாய்ட் பண்றீங்க ன்னு, என்னிடம் பேசிவிடக்கூடாதுன்னு நினைக்கிறீங்க ன்னு தெரியுது., பட் என்னால அதை ஏற்க முடியல., சோ இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்”, என்று சொல்லவும்.,

      “நீங்க வந்து எவ்வளவு நாள் இருக்கும், ஒரு மாசம் அவ்வளவு தானே, அதுக்குள்ள லவ்வா, சரி உங்க அண்ணன் நிச்சயதார்த்தத்தில் இருந்து இப்போ வரைக்கும் கணக்கு பார்த்தாலும், மேக்ஸிமம் நாலு மாசம் அவ்வளவு தானே”, என்று கேட்டான்.

    இவளும் அவனை பார்த்து, “காதல் என்பது வரதுக்கு ரொம்ப நாள் தேவை இல்லை, அஞ்சு வருஷத்துல வந்தாலும் காதல் தான், அஞ்சு நிமிஷத்துல வந்தாலும் காதல் தான்,  மனசுக்கு புடிச்சி இருக்கணும், நம்ம லைஃப்ல இவங்க கூட இருந்தா, நல்லா இருக்கும் தோன்றனும்,  அதற்கு பெயர் தான் காதல், என்ன பொருத்தவரைக்கும் எனக்கு உங்கள பார்த்த உடனே சின்ன ஸ்பார்க் வந்தது, அதை பத்தி நான் அலசி ஆராய்ந்து பார்ப்பதற்கு தான் இத்தனை நாள் எடுத்துக்கிட்டேன்., இல்ல னா அன்னைக்கே சொல்லி இருப்பேன்”, என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் நின்று அவனைப் பார்த்தவள்.,

  “நீங்க உடனே பதில் சொல்லணும் ன்னு இல்ல.,  யோசிச்சு நிதானமா சொல்லுங்க”, என்று சொன்னாள்.

    அவனோ, “ஹலோ நில்லு நில்லு, என்ன விட்டா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற, இங்க பாரு இதுல எங்க குடும்பம்  கவுரவம்  அடங்கி இருக்கு., நீ வந்து சொன்னதுக்காக நான் யோசிச்சு பதில் எல்லாம் சொல்ல முடியாது புரிஞ்சுதா”, என்று சொன்னான்.

    அவன் பேச்சு மற்றும் குரலின் மாற்றத்தில், ஒரு நிமிடம்  அவனைப் பார்த்தாள்,

   பின்பு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “ஓகே சொல்லுங்க” என்று கேட்கும் போது.,

    அவனோ, “உனக்கும் எனக்கும் எந்த விதத்தில் பொறுத்தம் இருக்கும்னு நினைச்சுட்டு நீ வந்து பேசுற.,  சினிமா டயலாக் எல்லாம் பேசக் கூடாது, மத்தவங்க சொன்னது அப்படி இப்படி எல்லாம் பேசக்கூடாது.,

   எதார்த்தத்தை பேசணும்,
ஏண்டா இவன கல்யாணம் பண்ணனும்னு பீல் பண்ண கூடாது, அந்த மாதிரி ஒரு எண்ணம் லைஃப்ல வரவும் கூடாது புரிஞ்சதா, உங்க வீட்ல உனக்கு நல்ல பையனா பார்ப்பாங்க, அந்த மாதிரி  பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,

    கையை உயர்த்தி பேசுவதை நிறுத்தியவள்., “உங்களோட முடிவை நீங்க சொல்லிட்டீங்க ஓகே, நான் என்ன முடிவு எடுக்கணும் ன்னு நீங்க சொல்லக்கூடாது., ஏன் முடிவை நான் தான் எடுப்பேன், எனக்காக ஒரே ஒரு ஹெல்ப், இப்ப சொன்னீங்க இல்ல, அதுக்காக இல்ல, நான் ரெண்டு மூணு நாளாவே என் காதுலையும் விழுந்தது, உங்க வீட்ல உங்களுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கிறாங்கன்னு.,

    எனக்காக ஒரே ஒரு ஹெல்ப், உண்மையிலே நீங்க நினைச்சா பண்ண முடியும், நான் இங்க இருந்து ட்ரைனிங் முடிச்சு போற வரைக்கும் மட்டும், இந்த அலையன்ஸ் பாக்குற விஷயம், இந்த என்கேஜ்மென்ட் கல்யாணம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தள்ளி போடலாமா”, என்றாள்.

    “ஹலோ எதுக்குங்க தள்ளி போடணும், எங்க வீட்ல உள்ள விஷயங்களை நாங்க எதுக்குங்க தள்ளி போடணும்”, என்று கேட்டான்.

   “இல்ல நான் ட்ரைனிங்க்கான கவுன்சிலிங் போன அப்ப, மூணு நாலு ஊர் வச்சு கேட்கும் போது, நான் தான் மதுரை வேணும்னு கேட்டேன், எனக்கு உங்களோட பழகுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், என்னை புரிய வைக்கிறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்னு நினைச்சேன், ஆனா நீங்க நான் முழுசா சொல்றதுக்கு முன்பே உங்களோட மறுப்ப தெரிவிச்சுட்டீங்க, என்ன ரீசன் எனக்கு தெரியாது”, அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது., எங்கேயோ இருளை வெறித்தபடி தான் பேசிக் கொண்டிருந்தாள்.

   “நீங்க எனக்காக ஒரே ஒரு உதவி செய்யணும்னு நினைச்சீங்கன்னா, நான் ட்ரைனிங் முடிச்சு இங்கே இருந்து போற வரைக்கும் மட்டும் இந்த கல்யாண பேச்சை தள்ளி வெச்சீங்கன்னா போதும்., அதுக்கப்புறம் நான் பாத்துப்பேன்”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக அறையை நோக்கி நகர்ந்து சென்றவள்.,

   வேகமாக கதவை திறந்து  கதவை சாத்திக்கொண்டு அப்படியே கதவில் சாய்ந்து நின்றவள் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது.

   ‘தன்னுடைய விருப்பத்தை முழுதாக தெரிவிக்கும் முன்னே, அவராகவே முடிவு செய்துவிட்டாரே’ என்று தோன்றும் போது,

    ‘நீ புடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் தானே அவங்க பதில் சொன்னாங்க, அவங்கள பொருத்தவரைக்கும் நீ அவங்க தங்கச்சியோட நாத்தனார், அது மட்டும் தான்  அவங்க வீட்டு பிள்ளை மட்டும் பார்க்கிறாங்க’, என்று மனதிற்குள் தோன்றினாலும்.,

     ‘ஓகே ஆல் இஸ் வெல்’, என்று தன் மனதை தேற்ற முயற்சி செய்தவளுக்கு அன்று முடியா இரவாகவே தோன்றியது.