ஸ்டெல்லாவை பார்த்தவன் பதறிப்போனவனாக

“அய்யோ! இவங்களா… அடேய் தருண், இவங்க கிட்ட மாட்டுன முடிஞ்சுது சோலி, தப்பிச்சிருடா” என்று உஷாரானவன்.

“சார்…. தண்ணி குடிச்சிட்டு வரேன் சார்” என்று மிக மெதுவான குரலில் யாருக்கும் கேட்காதபடி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

த்ரூவ் இந்த வயதில் எட்டியிருக்கும் உயரம் அத்தனை அதிகம். இந்தியாவில் இருக்கும் பிசினஸ் சர்க்கிலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவன்.

இவனை எதிர்த்த பலரை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டு வந்தவன். இவனை எதிர்த்து நின்று பேசவே யோசிப்பார்கள்  மத்தியில் இவன் பார்த்துப் பேசத் தயங்குவது அவள் இடம் மட்டும் தான்.

“என்னதான் ஊருக்கே பெரிய பருப்பா இருந்தாளும் வீட்டுக்கு விளக்குமாறு தான் போல” என்று முணுமுணுத்தது வேறு யாரும் இல்லை, தருண் தான்.

அருகில் இருந்த ஒரு டெஸ்க் பின்னே மறைந்து நின்றபடி த்ரூவைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“நம்ம சாரையா விளக்குமாறுன்னு சொல்ற..?”

 என்ற குரலில் பயந்து போய் தருண் திரும்ப, அங்கே மேகனா கையில் போன் ரெக்கார்டரை ஆன் செய்து வைத்துக்கொண்டு ஒற்றை புருவம் தூக்கி இவனைப் தான் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“என்ன தருண் இப்படி பேசுறீங்க……” என்று கையில் போனை ஆட்டியபடி கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தவன்,

“இன்னைக்கு ராசில இன்பம்னு போட்டுருக்கும் போதே நினைச்சேன், பெருஸா எதுலயோ சிக்கி சீரலிய போறோம்னு, அது இது தான?”

என்று முனங்க,

“என்ன…, என்ன தருண் சொன்னீங்க, சிக்கி சீரலிய போறீங்களா?”

“அய்யோ மேகா! நான் போய் அப்படிலாம் பேசுவனா? அதுவும் உங்கள பாத்து” என்று வேகமாக தருண் தலையசைக்க,

“நீ பேசினியா இல்லையான்னு சார் இதை கேட்டுட்டு சொல்லட்டும்” என்று சிரித்தபடி எழுந்தவளை நக்கலாக தருண் பார்க்கவும், புரியாமல் மேகனா “என்ன…” என்று கேட்டு நிற்க,

“அங்க பாரு” என்று தருண் காட்டிய பக்கம் பார்த்த மேகனா,

“அச்சோ மேம்மா….” என்று வேகமாக சாரில் அமர்ந்தவள் தலையை குனிந்தபடி,

“மேம் இருக்காங்கன்னு சொல்ல மட்டியா தருண்?”

“நீ எங்க என்ன பேச விட்ட?”,

“சரி சரி இவங்க வந்தத நான் பாக்கவே இல்ல, தெரிஞ்சிருந்தா அப்போவே வீட்டுக்கு ஓடிருப்பேன்.”

“ம்ஹூம்….. கொடுத்து வச்சவ டைம்க்கு வீட்டுக்கு போற.”

“ஏன் உனக்கு ஆசையா இருந்தா நீயும் சார் கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தான?”

“சார் கிட்ட கேக்க தான் வந்தேன், ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சி” என்று தலையை தொங்க போட்டவனை பார்த்து “ச்சு.ச்சு…ச்சு…” என்று உச்சிக்கொட்டியவள்.

“சரி மேம் இங்க வர அளவு என்ன சம்பவம் பண்ணி வச்சிங்க?”

“ம்க்கும்… அப்படியே மொத ஆளா என்ன கூப்பிட்டு தான் சொல்றாங்க, நீ வேற போ மேகா. மார்னிங்ல இருந்து ரெண்டு பேரும் ஏதோ சின்ன பிள்ளை மாதிரி ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருக்காங்க. என்ன மேட்டர்னே தெரியல.”

“சார் ஆர்கே ப்ராஜெக்ட்ல கை வைச்சா தான் மேம் இங்க வருவாங்க.”

“நானும் அதான் யோசிச்சேன், ஆனா சார் அப்படி எந்த ப்ராஜெக்ட்ல கை வச்சாங்கன்னு தெரியலயே.”

“சரி, என்னவோ? நீ என்னென்னு கண்டு பிடிச்சி வை நாளைக்கு பேசலாம், நான் கிளம்புறேன் இப்போ. நாளைக்கு சொல்லு என்ன சம்பவம்னு, பாய்”

என்று மேகனா கிளம்பிவிட, தருண் த்ரூவ் அறையைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.
ஸ்டெல்லா த்ரூவ் பொறுப்பில் இருக்கும் ஆர்கே கம்பெனியின் ஜி.எம் ஆக இருக்கிறாள்.

அந்த கம்பெனி நிறுவனர் ஜெய் இறந்த பிறகு அந்த கம்பெனி பொறுப்பை பெற்ற த்ரூவ், ஜெய்யின் பி.எ ஆக இருந்த ஸ்டெல்லாவை ஜி.எம் ஆக பதவி உயர்வு கொடுத்து தனக்குக் கீழே வைத்துக்கொண்டான்.

என்ன தான் பெண்களை மரியாதையாக த்ரூவ் பார்த்தாலும், அவன் அருகே எந்தப் பெண்ணையும் நெருங்க விட மாட்டான்; அதை மீறி நெருங்க முயல்பவர்களை அருகில் வைத்திருக்கவும் மாட்டான். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

ஆனால் ஸ்டெல்லா, வந்த நாளிலிருந்து அவளை த்ரூவ் தள்ளிவைத்ததே இல்லை. ஆர்கே கம்பெனியின் ஜி.எம் என்றாலும், இவன் செல்லும் இடமெல்லாம் அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவான்.

இந்த ஆறு மாதமும் அவள் இன்றி இவன் எங்கும் சென்றது இல்லை. ஏன், இன்று அந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கூட அவளுடன் செல்லத்தான் நினைத்து இருந்தான், ஆனால் கடைசி நிமிடம் அவளுக்குப் பயந்து தனியே சென்றது வேறு கதை.

இதையெல்லாம் யோசித்தபடி த்ரூவ் அங்கே வாசலிலேயே நின்று கொண்டிருக்க, இவன் வந்து நிற்பது தெரியாத ஸ்டெல்லா அதே நேரம் நேரத்தைப் பார்த்துவிட்டு இவன் பக்கம் திரும்பினாள்.

இவன் நிற்பதை பார்த்தவளின் முகம் எந்த உணர்ச்சியும் இன்றித் தெளிவாகத்தான் இருந்தது, ஆனால் அந்தச் சாதாரண முகத்திற்குப் பின் இருக்கும் கோபத்தை உணர்ந்தவனாக த்ரூவ் சட்டையின் கையை முட்டி வரை உயர்த்திவிட்டபடி,

“இவளுக்கு எப்படி இந்த நியூஸ் எல்லாம் இவ்வளவு வேகமாகச் ரீச் ஆகுதோ?” என்று முனங்கியபடி ஒன்று தெரியாதது போல முகத்தை விறைப்பாக வைத்து கோண்டு அவன் சேரில் அமர்ந்தான்.

“என்ன சார் இது, காலையிலிருந்து உங்களைத் காண்டக்ட் பண்ண ட்ரை பன்ற, ஒரு பதில் கூட சொல்ல மாட்டேங்கிறீங்க” என்று பேச்சில் மட்டும் கோபத்தைக் கொண்டு வந்து பேசினாள்.

“டுடே செட்டியூல் டைட் அதான்” என்று பேசியபடி அவன் சிவிங்கத்தை மென்று கொண்டு இருக்க,

“ எப்படி ….நீங்க பிசியா?  எப்பவும் என்ன பிஸியா இருக்கும் போதும் கூடவே வச்சி சுத்திட்டு இன்னைக்கு பிசின்னு சொன்னா நான் நம்பனுமா” என்று யோசித்தவல்  மேலும் அவன் மீது கோபம்அதிகமாக

“ஓகே, அப்போ டுடே ஃபுல்லா பிஸியா இருந்தீங்க, ரைட்?”

“ம்ம்ம்..” என்று அவனும் சாதாரணமாகத் தலையை உலுக்க,

“ஓகே, அப்போ நானே உங்க பொசிஷன்ல இருந்து நிவேதன் சார் கான்ட்ராக்ட் சைன் பண்றேன்.”

என்று எழப் போனவளை “ஸ்டெல்லா…” என்ற அவன் குரல் தடுத்து நிறுத்த, மீண்டும் சேரில் அமர்ந்தாள் ஸ்டெல்லா.

“சொல்லுங்க சார்” என்று முகத்தை எப்போதும் போல் இலகுவாக வைத்துப் பேசியவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தவன்,

“நீங்க என் பெர்மிஷன் இல்லாம எங்கயும் சைன் போட கூடாது ஸ்டெல்லா!”

“சரி அப்போ நீங்களே பெர்மிஷன் கொடுங்க” என்று அந்த கான்ட்ராக்ட் ஃபைலை மேஜையில் வைக்கவும், த்ரூவ் மீண்டும் அவள் கண்களை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஃபைலைப் பார்த்தபடி,

“இந்த கான்ட்ராக்ட்ட நான் எப்பவோ ரிஜெக்ட் பண்ணிட்டேன் ஸ்டெல்லா, நீங்க மெயில் பார்க்கல.”

“நீங்க அந்த மெயில மட்டும் எனக்கு அனுப்ப மறந்திட்டீங்க சார்.” என்று ரோபோ போல பதில் பேசியவளை உற்று பார்த்தவன்

“ரோம்ப டென்ஷன் ஆக்கிட்டன் போல “ என்று நினைத்தவன்

“ஓ… சாரி ஸ்டெல்லா உங்களுக்கு ஒரு காப்பி அனுப்ப மறந்துடன், இதோ இப்போ அனுப்புறேன்” என்று அவனும் சாதாரணமாகவே பேசியபடி கணினி பக்கம் திரும்பியவன் காதில்,

“நோ தேங்க்ஸ் சார், அந்த மெயில் காப்பி எனக்கு கிடைச்சிருச்சு.”

“அதன் எனக்கே தெரியுமே அத பாத்துட்டு தான இப்படி சூடா வந்திருக்க . இது எவன் வேலைன்னு தெரியல  அவன் மட்டும் மாட்டட்டும் அவனுக்கு இருக்கு “ என்று நினைத்தவன் சமாளிக்கும் விதமாக

“அப்பறம் என்ன ஸ்டெல்லா, எல்லாம் ஓகே தான?”

“இல்ல சார், எதுவும் ஓகே இல்லை. இவ்ளோ பெரிய கான்ட்ராக்ட்ட ரிஜெக்ட் பண்றத எனக்கு முன்னாடியே நீங்க இன்பார்ம் பண்ணல, அன்ட் நீங்க மெயில்ல சொல்ற காரணம் அது சரியே இல்ல சார். இதுக்காகலாம் கான்ட்ராக்ட்டை கன்டினியூ பண்ண ஒத்துக்க மாட்டேன்னு சொல்றது…. நாட் ஓகே சார்,”

என்று தலையை மறுப்பாக அவள் அசைக்க, த்ரூவ் எதுவும் பேசாமல் அவள் கண்களையே ஒரு நிமிடம் பார்த்தவன்.

“எதுக்காக அந்த கான்ட்ராக்ட்டை கன்டினியூ பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்ற கேள்விக்கு சிறிது கூட தாமதிக்காமல் ஸ்டெல்லா,

“அந்த கம்பெனியோட மேனுஃபேக்ச்சர்ல தான் நமக்கு கிடைக்க வேண்டிய ப்ராடக்ட் எல்லாம் கம்பி ரேட்டுக்கு கிடைக்குது. அதை வச்சு தான் நம்ம கஸ்டமர்கு கம்மியான ரேட்ல எல்லாம் செஞ்சி தர முடியும்.

இப்போ இந்த காண்டரக்ட் நீங்க கன்டினியூ பண்ணலனா கண்டிப்பா சேர்ஸ் ரேட் கம்மி ஆகும் சார். இதுனால அந்த கம்பெனிய நம்பி இருக்கவுங்களுக்கு தான் கஷ்டம்”

“இது தான் காரணம்னா நீங்க பயப்பட வேண்டியது இல்ல ஸ்டெல்லா” என்று பேசியவனை ஒற்றை புருவம் தூக்கிப் பார்க்க,

“நம்ம மெயின் ப்ராடக்ட் ஆன பாட்ஸ் உற்பத்தி பண்ற கம்பெனி ஒன்ன சொந்தமா வாங்கிட்டோம்.”

என்றவனை நம்ப முடியாமல் ஒரு நிமிடம் பார்த்தபடி இருக்க, த்ரூவும் ஸ்டெல்ல அடுத்து என்ன பேசப் போகிறாள் என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்திருந்தான்.

த்ரூவின் பார்வையை கண்ட ஸ்டெல்ல உடனே சீட்டை விட்டு எழுந்து, “அப்படினா ஓகே சார், அந்த கான்ட்ராக்ட்டை கன்டினியூ பண்ண வேண்டாம்” என்றவளை சலிப்பாகப் பார்த்த த்ரூவ்,

“அவ்ளோ தான் உன் ரியாக்ஷன் ல” என்று எண்ணியவன்.

“ம்ம்ம்” என்றதும் நன்றி சொல்லி அவள் வெளியே சென்றுவிட்டாள்.

ஸ்டெல்லா சென்றதும் வாயில் இருந்த சிவிங்கத்தை துப்பியவன், தன் டிராவை திறந்து வேகமாக சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்; அதை ஆழ்ந்து புகைத்தவன் புகையை வெளியே விட்டபடி தலை சாய்த்தவனுக்கு அத்தனை ஏமாற்றம்.

அவளுக்காக விட முயலும் இந்த சிகரெட்டை கூட இவளின் ஒட்டுதல் இல்லா பேச்சினாலே பல முறை மீண்டும் புடிக்கும் நிலைக்கும் தள்ளும் அவளை என்ன செய்ய என்று கோபமாக நினைத்தவன்.

“இவளுக்காக இருக்குற கம்பெனி பத்தாதுன்னு என்னோன்னு வாங்கி போட்டா சலனமே இல்லாம போறாளே!”

என்று கண்களை மூடியவன் கண் முன், ஸ்டெல்லா கையை நிவேதன் பிடித்து இழுத்த நிகழ்வு வர, கைகளை இறுக மடித்து அவன் தொடையில் குத்தி  கோண்டான்.

நிவேதன் ஆர்கே கம்பெனியுடன் டையெப்பில் இருக்கும் கம்பெனி ஓனர். அவனுக்குத் திருமணம் ஆகி குடும்பம் இருந்தும், வேலை விஷயமாக அங்கே வந்து செல்லும் ஸ்டெல்லாவைத் தவறாகப் பார்ப்பதும், தொடுவதுமாக இருந்தான்.

இது தெரிந்து த்ரூவ் சும்மா விடுவானா என்ன?

“சார்…” என்ற குரல் கேட்டுத் த்ரூவ் திரும்பிப் பார்க்க, தருண் தான் நின்று கொண்டிருந்தான்.

“சார் டைம் ஆச்சி, வீட்டுக்கு போகவா?” என்று கேட்டவனுக்குக் கைகளை அசைத்துச் சம்மதம் சொல்லிவிட்டு, மீண்டும் இவன் புகைக்கத் தொடங்க, தருணும்.

“சார் தலையை ஆட்டினதும் கிளம்பிடுடா,” என்று எண்ணி அவனும் கிளம்பிவிட்டான்.

த்ரூவ் ஜன்னல் அருகே எழுந்து அங்கும் இங்கும் நடந்தவன், கண்களை மூடி அவளின் முகத்தைக் கண் முன்னே கொண்டு வரப் பார்த்தான். அதில் எதிலாவது அவளின் சிரித்த முகம் இருக்கிறதா என்று தேடித் தோற்றுப்போனவன், நெற்றியில் கை வைத்துக்கொண்டு,

“என்ன பொண்ணுடி நீ… இப்படி இருக்க?” என்றபடித் தரையைப் பார்த்தவன், வாய்விட்டு “ஸ்டெல்லா…” என்று அவள் பெயரை அழைத்தான்.

“எஸ், சொல்லுங்க சார்,” என்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.

நெருப்பாக அவள், அனலாக அவன்; இருவரும் சேர்ந்தால் இவர்களின் நிலை? இந்த அலரியை அணைக்குமா இந்த அனல்.