அவனே இப்போது தான் கற்று கொள்கிறான். அதிலும் பாதி நேரம் விதண்டாவாதம் தான். இதில் எங்கு சரியாக கற்று இருக்க போகிறான்?
கண்டிப்பா மூஞ்சுல கோடு போடு போறான். மாட்டினடி சம்யுக்தா!
வேகமாக சுழற்றுவது கேட்ட போதும் எதுவும் நடக்காததில், வேற பக்கம் திரும்பிவிட்டான் போல என்ற ஆசுவாசத்துடன் கண்களை திறந்த சம்யுக்தாவின் கண்களுக்கு மிக அருகில் வந்து சென்றது சுருள் வாள்.
ஆஹ்! சம்யுக்தா கண்களை விரித்து விட்டாள்! முதலில் அதிர்ச்சியில் பின் ஆச்சரியத்தில்!
“எப்படி?” என்று சர்வாச்சார்யா முடித்து இவளிடம் கேட்க,
“வராத, அப்புறம் உனக்கு தான் கஷ்டம். அட்டை மாதிரி உன்கிட்ட ஒட்டிக்குவேன். இறுக்கமா, பிரிக்கவே முடியாத மாதிரி ஒட்டிக்குவேன். பரவாயில்லையா?” என்றான் உண்மையாகவே!
“ஆஹ்ன். ஏன்? ஏன்?” சம்யுக்தா மனது நொடியில் எங்கு எங்கோ சுத்திவிட்டது.
“கோயம்பத்தூர் போகத்தான்”
“போடா”
“ஏன் கோவம்? நீ என்ன எதிர்பார்த்த?” என்று இவளின் முகத்துக்கருகில் வந்து அவளை உற்று பார்த்தான் கள்ளன்!
“நான், நான் என்ன எதிர்பார்க்க போறேன்?” என்று அவன் நெற்றியில் விரல் வைத்து தள்ளிவிட்டாள்.
“உன் கன்னம் வேற என்னமோ சொல்லிச்சு”
“கிறுக்கன் மாதிரி பேசாத”
“உன்கிட்ட கிறுக்கனா இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலவே” என்று கண்ணடித்தான்.
“நீ என்ன நைஸ் பண்ணாலும் கோயம்பத்தூர் கூட்டிட்டு போக மாட்டேன்” சம்யுக்தா உடனே சொன்னாள்.
“இல்லைன்னா மட்டும் ஜோடி போட்டுட்டு போயிடுவோம் பாரு” அவன் அலுத்து கொண்டான்.
“இருந்தா என்னடி பண்ணுவ? உன் ரௌடி அப்பாவை விட்டு என் தலையை எடுத்திடுவியா?” அவன் பாய்ந்தான்.
“என் அப்பாவை ரௌடி சொல்லாத” சம்யுக்தாவிடம் அவ்வளவு கோவம்.
அவரோட அந்த அடையாளத்தால நாங்க இழந்தது அதிகம்!
“நாங்க சென்னையில் இருந்து இங்க வந்தும் கூட நீங்க அவரை இப்படி தான் அட்ரஸ் பண்ணுவீங்களா? அப்பா இப்போ எஸ்டேட் தானே பார்த்துகிறார். அப்புறமும் ஏன் அவரை இப்படி சொல்ற நீ?” சம்யுக்தா கோவமாக கேட்டாலும், அவளின் முகம் கசங்கி போனது.
“இனி சொல்ல மாட்டேன்” என்றான் அவன். அவளின் மனதை அறிந்து கொண்டானோ!
“நைட் நான் வருவேன். தூங்க கூடாது” என்று சொல்ல,
“அது முடியாதுடி. நீ வராத”
“உங்களுக்காக தானே வரேன்”
“தேவையில்லை. முதல்ல எழுந்திரு” என்றான் அதட்டலாக.
“ஏன் நான் இருந்தா உங்களுக்கென்ன?” அவன் முன்னே முட்டியில் அமர்ந்தவாறே கேட்டாள்.
“உன்னை அப்படியே தூக்கி என் மடியில வைச்சுகிட்டா ஓகேவா?” என்று வில்லங்கமாக மிரட்டினான்.
“என் வெய்ட் என்ன தெரியுமா? அப்படியெல்லாம் என்னை தூக்க முடியாது” என்றவள், படக்கென எழுந்துவிட்டாள்.
“தூக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஏண்டி இவ்வளவு வேகமா எழுந்துகிற?” என்று தானும் எழுந்து இவளை சீண்டினான்.
“ஆமா அப்படியே இவர் பெரிய பாடி பில்டர். போடா” என்றவள் அந்த நொடியிலே இவன் கைகளில் மிதந்தாள்.
“ஆஹ்” என்று பெண் அதிர்ச்சியில் இவனை பார்க்க,
“இப்போ என்ன சொல்ற?” என்று மிதப்பாக கேட்டான்.
பெண்ணின் இடையை அவன் கைகள் அழுத்தமாக பற்றியிருக்க, அவனின் மூச்சு காற்றில் இவள் முகம்.
இருவரின் கண்களும் மற்றவரை சுண்டி இழுக்க, “குட்டி இடுப்பாடி உனக்கு?” அவன் மாய உலகத்தில் தொலைந்தது போல் முணுமுணுக்க,
கண்களை முழுதும் விரித்த சம்யுக்தா அவன் கைகளில் இருந்து குதித்துவிட்டாள்.
சர்வாச்சார்யா வேகமாக தலையை உலுக்கி கொண்டவன், “ஹேய் என்னை என்ன பண்ற நீ?” என்று இவளிடம் கோவமாக வேறு கேட்டான்.
“நீ தான் பண்ண? நான் இல்லை” சம்யுக்தாவும் சிலுப்பி கொண்டாள்.
“இனி என் பக்கத்துல வராத” என்று இவளை மிரட்டிவிட்டு சென்றான்.
“சரி கண்ணு” என்ற கற்பகம் பாட்டி, நம் நாயகனுக்கான உணவை கொடுக்க சென்றார்.
“இன்னும் வரலையா?” என்று அவர் திரும்பி வந்து கேட்க,
“இல்லை பாட்டி” என்றாள் சம்யுக்தா.
வாங்கி வந்ததை அவனுக்கு சென்று கொடுக்க வேண்டுமே! பெண்ணும் நேரத்தை பார்த்தாள்.
“நாளைக்கு அந்த தம்பிக்கு பிரியாணி வேணுமாம்” என்று பாட்டி சொல்ல, சம்யுக்தாவிற்கு வருத்தம் தான்.
ஏமாற்றத்தை உணவின் மூலம் சரிக்கட்ட நினைக்கிறார் போல!
குருமூர்த்தி வந்துவிட, “சாப்பாடு வைக்கவாப்பா?” என்று கேட்டாள் சம்யுக்தா.
“உன்கிட்ட பேசணும். உட்காரு” என்ற குருமூர்த்தி,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு என்னால கோயம்பத்தூர் வர முடியாது” என்றார்.
தவிர்க்க முடியா வேலை போல. பரபரப்பாக தெரிந்தார் குருமூர்த்தி.
“நாம இன்னொரு நாள் போயிக்கலாம்ப்பா” என்றாள் சம்யுக்தா.
“இல்லைமா. நான் அதை யோசிச்சுட்டேன். என்னால் அடுத்த இரண்டு, மூணு நாளுக்கு அசைய முடியாது. உன் பிறந்த நாளும் வந்திடும். நீ போய்ட்டு வா” என்றார் குருமூர்த்தி.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே செல்ல போகிறோம் என்று மகள் ஆசையாக காத்திருந்திருக்கலாம்! தந்தையின் எண்ணம் அது!
இந்த வேலையும் திடீரென முளைத்தது தான்!
“சிவப்பிரகாசம் சார் டெல்லியிலே காத்திருந்தும் வேலை நடக்கலை. ஆனா அந்த முக்கிய புள்ளியை கண்டுபிடிச்சுட்டாங்க” என்று லிங்கம் போனில் அழைத்து குருமூர்த்தியிடம் சொன்னார்.
“அப்புறம் என்ன? அவன்கிட்ட பேச வேண்டியது தானே?” என்று குருமூர்த்தி கேட்க,
“பேச முடியாதாம். அவனுக்கு பேச ஒன்னுமே இல்லையாம். சர்வாச்சார்யா மட்டும் தான் வேணுமாம்” என்றார் லிங்கம்.
“கேட்டா தூக்கி கொடுக்க சொல்லுங்க” என்று கோவப்பட்டார் குருமூர்த்தி.
“மூர்த்தி. ஆள் கொஞ்சம் பெரிய கை. அப்படியெல்லாம் எடுத்தோம், கவுத்தோம்ன்னு செய்ய முடியாது”
“வேறென்ன தான் செய்ய போறீங்க?”
“அதுக்கு தான் உன் உதவி வேணும்” என்றார் லிங்கம்.
“நானா? நான் என்ன செய்யணும்?”
“அந்தாளோட தம்பி இப்போ சென்னையில இருக்கான்”
“அப்புறமென்ன? அவனை கட்டம் கட்ட வேண்டியது தானே?”
“அதான் சொன்னேன் இல்லை. அந்தாள் பெரிய கை. நம்மாளுங்க யாரும் செய்ய மாட்டேங்கிறாங்க”
குருமூர்த்தி மௌனம் காத்தார்.
“சண்முகம் நான் வெளியே தெரியாதபடி சப்போர்ட் பண்றேன், நேரடியா என்னால எதையும் செய்ய முடியாது. அதுவும் மூர்த்திக்காக மட்டும் தான்னு சொன்னான்” என்றார் லிங்கம்.
“இல்லை. நான் திரும்ப இதுக்குள்ள வர விரும்பல” என்றார் குருமூர்த்தி.
“இவரை பார்த்துக்க நான் ஒத்துக்கிட்டதும் உங்களுக்காக, வசுந்தரா மேடம்க்காக மட்டும் தான்” என்று குருமூர்த்தி சொல்ல,
“ப்ளீஸ்” என்றார் வசுந்தரா. அவரும் லிங்கத்துடன் தான் இருக்கிறார்.
“நிறைய பேர்கிட்ட கேட்டுட்டோம். யாரும் சம்மதிக்கலை. உங்ககிட்ட கேட்க எனக்கும் இஷ்டமில்லை. ஆனா எனக்கு வேற வழியும் இல்லை” என்ற வசுந்தராவின் மனது அவர் பேச்சிலே புரிந்தது.
வருத்தப்பட்டு தான் கேட்கிறார். நிச்சயம் யாரோ இவரை கேட்க சொல்லி கட்டாயபடுத்தி இருக்கிறார்கள்.
வேறு யார் எல்லாம் அவரின் குடும்பத்தினர் தான்.
சிவப்பிரகாசம் வீடியோ காலில் இருக்க, வீட்டினர் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தனர்.
“வசுந்தரா” என்ற சிவப்பிரகாசம் சங்கடத்துடன், “குருமூர்த்தியை கேட்கலாமா?” என்று கேட்டார்.
“அவர் கொலைகாரன். அவரோட உதவி நமக்கெதுக்கு?” வசுந்தரா கோபத்துடன் சொன்னார்.
“சொல்லி காட்ட இதுதான் நேரமா அண்ணி?” என்று சிவபிரகாசத்தின் தங்கை கேட்க,
“நம்ம பையன் அவர்கிட்ட பாதுகாப்பா இருக்கான்னு தெரிஞ்சும் தானே, நீங்க எல்லாம் அவரை பேசுனீங்க?” என்று பதிலுக்கு கேட்டார் வசுந்தரா.
“வசுந்தரா. ப்ளீஸ். எனக்கு மட்டும் அந்தாள்கிட்ட உதவி கேட்க ஆசையா என்ன? யாரும் செய்ய முடியாது சொல்றாங்க, இப்போ நான் என்ன பண்ணட்டும்? நீயே சொல்லு?” என்று சிவப்பிரகாசம் கேட்க,
“அவர் இதெயெல்லாம் விட்டுட்டார். நமக்காக மட்டும் தான் சர்வாவை கூட பார்த்துகிறார். இந்த துப்பு கொடுத்தது கூட அவர்தான். இதுக்கு மேலயுமா அவர்கிட்ட கேட்கணும்?” என்றார் வசுந்தரா.
“அண்ணி. நீங்க அந்தாளுக்கு செஞ்சதும் பெரிசு தான். ஆயுள் தண்டனை கிடைச்சு, காலத்துக்கும் ஜெயில்ல இருந்திருக்க வேண்டிய ஆள், இப்போ மகளோட இருக்கார்”
“நான் நியாயமா தான் தீர்ப்பு கொடுத்தேன்”
“இல்லை. சண்முகம் தம்பி இன்னும் சில வருஷம் உயிரோட இருந்திருப்பார். இந்தாள் அடிச்சதுனால தான் சீக்கிரம் போய் சேர்ந்தான்னு டாக்டர் ரிப்போர்ட் கொடுப்பார்” என்று சின்ன மாப்பிள்ளை சொன்னார்.
“என்ன சொல்ல வரீங்க இப்போ?” வசுந்தரா அதிர்ந்து போனவராக கேட்டார்.
“குருமூர்த்திகிட்ட பேசுங்க” என்றார் அவர்.
“மாமா. ப்ளீஸ் இப்படி வேண்டாம்” என்று சிவப்பிரகாசம் இடையிட்டவர், “ஆபத்துல இருக்கிறது நம்ம மகன் வசுந்தரா. அவனுக்காக நாம சிலதை செஞ்சுதான் ஆகணும். குருமூர்த்தியை நாம பார்த்துக்கலாம். அவருக்கு எந்த தொந்தரவும் இல்லாம நாம பார்த்துக்கலாம். ப்ளீஸ் பேசு” என்று சிவப்பிரகாசம் கேட்டார்.
வசுந்தராவிற்கு வீட்டினரின் குணம் உண்மையிலே பயத்தை தான் கொடுத்தது.
குருமூர்த்தியிடம் நான் பேசவில்லை என்றால் நிச்சயம் இவர்கள் பேசுவார்கள் என்பதும் புரிந்து போனது.
மகன் என்ற சுயநலம் அவருக்கும் உண்டு என்றாலும், குருமூர்த்திக்கும் ஓர் மகள் இருக்கிறாளே!
அந்த சிறு பெண் வசுந்தராவிற்கு குற்ற உணர்ச்சியை கொடுத்தாள்.
“இந்த தொழிலை விட்டா உங்களால வேற எதையும் செய்ய முடியாதா? கூலி வேலைக்கு போனா கௌரவ குறைச்சலா என்ன? இந்த கேடுகெட்ட வேலை செய்றதுக்கு மூட்டை தூக்கி பொழைக்கலாம்” என்று குருமூர்த்தி முகத்துக்கு நேரே சீறியவர் வசுந்தரா.
இன்று அவரே செய்ய சொல்கிறார். காலம் தான் எவ்வளவு விசித்திரமானது!