மேலும் மேலும் காதல்
நிரம்பி வழிகிறது,
நம் அறை கதவை
பூட்டியே வைக்கிறேன்.,
நாளுக்கு நாள் கூடும்
உன் காதலில்
முழ்கி திளைக்கவே,
அறைக்கு வந்தவுடன், “மது என்னை நம்பு டா, நான் அந்த அர்த்தத்துல சொல்லல”, என்று சொல்லி அணைக்க வந்தவனை தள்ளி விட்டு மாடி ஹாலுக்கு வந்தாள்.
‘உண்மையை உளறி, எங்கே அவனிடமே தோள் சாய்ந்து விடுவோமோ’ என்று தோன்றியதால் ஆரம்பித்த சண்டையை அப்படியே தொடர்ந்து மெய்டேய்ன் செய்து கொள்வதற்காக, வேகமாக வந்தவள், மாடி ஹாலில் இருந்த சோபாவில் காலை கட்டிக்கொண்டு அமர்ந்து, தன் முட்டிலேயே முகம் புதைத்து கொண்டாள்,
வெளியே வந்து பார்த்த சரணோ ‘அச்சச்சோ ஏதோ ஒரு வார்த்தையை, ஏதோ ஒரு வேகத்தில் விடப் போக அதை இவ வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டாளே’ என்ற எண்ணத்தோடு அவளை பார்த்து விட்டு, அருகில் வந்து நின்றான்.
“மது வந்து சாப்பிடு, கோபத்தை சாப்பாடு மேல காட்டாத, அப்பறமா இப்படி உட்கார்ந்து கொள்ளலாம் “, என்று சொன்னான்.
இவளோ கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள், அதை பார்த்தவன் பின்பு கீழே இறங்கி சென்றான்.
மெதுவாக அவன் சென்று விட்டானா என்று பார்த்தவள், போயிட்டான் என்றவுடன், ‘அப்பாடா எவ்வளவு நடிக்க வேண்டியது இருக்கு, அய்யய்யோ’, என்று நினைத்தவள்,
பின்பு ‘நல்லவேளை ஒரு வார்த்தை விட்டார். அந்த வார்த்தை வச்சிட்டு தப்பிக்க முடிந்தது. இல்லாட்டி நான் தொலைந்தேன், பழைய மாதிரி திட்டு வாங்குறதுக்கு நான் என்ன பயந்த மதுவா, இப்ப பதிலுக்கு பதில் பேசுறதுக்கு ரைட்ஸ் இருக்க மது, சோ இத அப்படி மெயின்டெயின் பண்ணனும்’, என்று நினைத்தவள்,
‘வேண்டாம் பாவம்,சரணை பார்த்தால் பாவமா இருக்கு, வேண்டாம்’, என்று யோசித்தவள்,
‘அப்புறமா சமாதானம் பண்ணிக்கலாம், அப்புறமா சமாதானம் ஆன மாதிரி ஆகலாம்’,என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
ஏதோ யோசனையில் அதே போல முட்டியில் தலை சாய்த்து அமர்ந்திருக்க,
சிவா தான் வேகமாக மாடிக்கு ஓடி வந்தான்.
“முழுசா என்ன விஷயம் ன்னு சொல்லல மது, என்னையும் பேசக்கூடாது ன்னு சொல்லுட்ட”, என்று சொன்னான்.
அவளோ மெதுவாக எட்டிப் பார்த்து விட்டு, “லூசாடா நீனு, நீயா வந்து மாட்டிக்காத, பேசாம இரு,நாம பேசுவோம், பேசி பார்ப்போம் பொறு., இந்த பிரச்சினையை வைத்து தான் உங்க அண்ணனையே நான் சம்மதிக்க வைக்கணும்னு வச்சிருக்கேன், பேசாம இரு, எதையும் வாங்கி கட்டிக்காத சரியா, உங்க அண்ணன் ஓகே சொல்லிட்டா, உங்க அம்மா ஓகே சொல்லிடுவாங்க., அதை மட்டும் மைண்ட் ல ஏத்திக்கோ வாய மூடிட்டு வேலைய பாரு, என் பிள்ளை எங்கடா, உன்னை நம்பி தானே பிள்ளையை விட்டேன்,
அது வேற உன்னை நம்பி, சித்தப்பா கூட இருக்கேன், அப்படின்னு என்கிட்டயே சொல்லுது”, என்று நக்கல் அடித்தாள்.
“அடிப்பாவி என் அண்ணன் அங்க பொழம்பிட்டு இருக்கான், இங்க நீ ஜாலியா உட்கார்ந்து இருக்க”, என்று சொன்னான்.
“பாவமா தான் இருக்கு, ஆனால் உன் விஷயத்தை யோசிக்கனும் இல்ல”, என்றாள்.
அவளையே அவன் பார்த்து கொண்டிருக்க,
“என்ன டா, அப்படி ஒரு பார்வை”, என்றாள்.
“அவன் லவ் பண்ணினான் தெரியும், இப்போ நீ லவ் பண்ணுறீயா”, என்றான்.
லேசாக சிரித்தவள், “டேய் அவரு என் புருஷன் டா”,என்றாள்.
“அப்ப நீ போடுறது விளையாட்டு சண்ட தானே, இது பெரிசாகாது தானே”,என்றான்.
சிரித்தபடி தலையாட்டியவள், “எருமை மாடே சத்தமா பேசாத, எனக்கு பசிக்கு எனக்கு ஒரு நாலு இட்லி வச்சு நல்ல பிள்ளை மாதிரி எடுத்துட்டு வா பாப்போம், உங்க அண்ணன் ட்ட குடுத்து விடுறாத, அப்பறம் நான் வேற கோவத்த மெயின்டெயின் பண்றேன் ன்னு சாப்பிடாம வேற நடிக்கணும்”, என்று சொன்னாள்.
அவனும் “அடிப்பாவி நான் சத்தமா சிரிச்சிடுவேன், லூசு”, என்று சொன்னான்.
“மெதுவா பேசுறா எருமை”, என்று திட்டியவள்,
“போயி நாலு இட்லி இல்லை, அஞ்சு இட்லியா வச்சு எடுத்துட்டு வா, நல்ல பிள்ள இல்ல”, என்றவள், “அப்பத்தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் போ”, என்று சொன்னாள்.
“எப்படி எல்லாம் என்னை மிரட்டுற இரு, உண்மை தெரியுற அன்னைக்கு எங்க அண்ணன் உனக்கு ஆப்பு வைக்க போறான்”, என்று சொன்னான்.
“ஆமா உங்க அண்ணன் பெரிய ஆளு தான்”, என்று சொல்லிவிட்டு “மரியாதையா இட்லியோட வா, உங்க அண்ணனை மேல கூட்டிட்டு வந்துறாத”, என்று சொன்னாள்.
“டேய் திமிரு புடிச்சவனே, எட்டிட்டு மிதிச்சிருவேன் ஓடிப்போயிரு”, என்று அவனை மிரட்டி கொண்டு இருந்தாள்.
அவள் சொன்னது போலவே கீழே சென்று உணவை தட்டில் எடுத்து வைக்கவும், சரண் “நான் கொண்டு போறேன்”, என்று சொன்னான்.
“அவ இன்னும் தலையை நிமிர்த்தவே இல்லை, நான் எப்படியாவது பேசி பார்த்துட்டு வரேன், நீ இரு” என்று சொல்லி விட்டு “என்ன வார்த்தை விடுற” என்று அவன் பங்குக்கு பேசிவிட்டு சென்றான்.
“டேய் நான் என்னடா பேசினேன்? நீயும் சேர்ந்து அவளிடம் சொல்லாத”, என்று சொன்னான்.
அவனோ “முதல்ல என்ன சொன்னேன்னு யோசிச்சு பாரு”, என்று சொன்னான்.
அவனும் பாப்பாவிற்கு உணவே கொடுத்த படியே, “அம்மா என்னம்மா சொன்னேன்”, என்றான்.
“இல்லடா நீ சொன்னது சிவாக்கு பொண்ணு பாக்குற விஷயத்தை தான் சொன்ன, சொந்தத்தில் பாக்கணும்னு நினைப்பாங்க, உங்க வீட்லயும் எங்க வீட்லயும் கல்யாண சமயத்தில் சொந்தத்தில் முடிக்காமல், நாம வெளிய முடிக்கிறோம் அப்படிங்கிற ஒரு பேச்சு இருந்துச்சு ன்னு நீ சாதாரணமா சொன்ன, அதை அவ புரிஞ்சுகிட்டது வேற மாதிரி புரிஞ்சுகிட்டா, ஒரு பொண்ணாவது சொந்தத்தில் முடிக்கணும்னு நினைப்பாங்க இல்ல ன்னு சொன்னத அவ தப்பா நினைச்சிட்டா, அப்புறம் எதுக்கு என்னை முடிச்ச ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டா, வேற ஒன்னும் இல்ல, சரி விடு கோபம் வந்திருச்சு அவ்வளவு தான் விடு பார்க்கலாம்”, என்று சொன்னவர்,
“ஏதும் பேசி வச்சிடாதடா, இனிமேல் வார்த்தைகளை யோசிச்சு பேசு”, என்று சொன்னார்.
“ஐயோ நான் சொன்னது இந்த அர்த்தத்துல சொல்லலையேம்மா”, என்று சொன்னான்.
“நீ சாப்பிடு டா, பாப்பா நான் ஊட்டுறேன்”, என்று சொன்னார்.
நிலாவும் “பாட்டி நான் இன்னிக்கி சித்தப்பா கூட இருக்கேன், அம்மா கோவிச்சிட்டு போயிட்டாளா”, என்று கேட்டது,
“அம்மா கோவிச்சுட்டு எல்லாம் போகல, மேல மாடியில் இருக்கா, நீ இன்னைக்கு பாட்டி கூட இருந்துக்கோ, நாளைக்கு அம்மா கிட்ட கொடுக்கிறேன்”, என்று சொன்னார்,
“நாளைக்கு அம்மச்சி ட்ட, அப்புறம் எல்லாம் பாட்டிகிட்டே இருக்கேன், வீட்ல அம்மா கிட்ட தானே இருக்கேன்”, என்று சொல்லி சாப்பிட்டுவிட்டு அவரிடம் சென்று மடியில் ஏறி அமர்ந்து கொண்டது.
சரணின் அப்பா தான், “யோசிச்சு பேசுடா, அவ என்ன சொன்னா, வேற ஒண்ணுமே சொல்லல, இப்ப என்ன அந்த பொண்ண கேப்போமா ன்னு தானே கேட்டா, அவளுக்கு ஏதோ இந்த பொண்ண கேக்கணும் தோனி இருக்கலாம், அதனால சரி கேட்கலாமே நீ யோசித்து இருப்பா, அவளுக்கு ரெண்டு பேருமே பிரண்ட்ங்கறதுனால கூட அப்படி யோசித்து இருந்திருக்கலாம், சின்ன பொண்ணு தானடா, அதை சொல்ற விதமா சொல்லி இருந்திருக்கலாம், நீ எதுக்கு இப்படி பேசின”, என்று சொன்னார்.
“போச்சா, தப்பு என் மேல மாதிரி பேசுறீங்க”, என்று சொல்லி விட்டு “சரி நான் போய் பார்க்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“பொறுடா சிவா பேசி சாப்பிட வைக்கட்டும், நீ இப்போ போன அவ சாப்பிட ஆரம்பிக்கிற நேரம் அதையும் சாப்பிடாம போயிடப் போறா”, என்றார்.
இவளோஅங்கு சிவாவோடு அரட்டை அடித்தபடி, கொண்டு வந்து இட்லியை முழுங்கி விட்டு, “மவனே எல்லாத்தையும் நான் சாப்பிட்டேன்னு சொன்ன, மூக்கை உடைத்து விடுவேன். கேட்டா அவ கொஞ்சம் போதுண்டா, மீதியை நான் சாப்பிட்டேன் நீ சொல்லணும்”, என்று சொன்னாள்.