ஜெயன் மாஸ்டர் டிகிரி முடித்து, பிஎட் படிப்பில் கவனம் செலுத்தினான். மகேஷ் பேங்க் எக்ஸாம் கிளியர் செய்து கிளர்க்காக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிய துவங்கினான்.
கண்ணன் தன் தந்தையின் வீட்டு உபயோக பொருள் விற்கும் கடையை கேஜி எலெக்ட்ரானிக்ஸ் என பெயர் மாற்றி கம்ப்யூட்டர், செல்போன், வீட்டு பாதுகாப்புக்கான காமெராக்கள் என மக்கள் தேடி வாங்கும் பொருள்களின் டீலர்ஷிப், விற்பனை என தன் கவனத்தை திருப்பி வியாபார உலகத்தில் தடம் பதித்தான்.
சுகனின் திருமணத்திற்கு முன் வளர் சுஜாவிற்கு ஒரு வசதியான வரனை கொண்டுவர, சுஜாவின் அண்ணன்கள் மறுக்க மறுபடியும் வீட்டினுள் பிரச்சனைகள் வரத் துவங்கின.
பாட்டியும், வளரும் தோட்டம், வசதி வாய்ப்பு என பார்க்க, ஈஸ்வர், நீலா, சுகன் அவ்வீட்டிலுள்ள பெண்களை அளவிட்டனர். ஒவ்வொரு வார்த்தைக்கும், தன் கணவன், மாமியார், மாமனார் என திரும்பிப் பார்த்துப் பார்த்து பேச, தங்கள் வீட்டு பெண்களின் எண்ணத்தை புரிந்து கொண்டனர்.
பாட்டியும், வளரும் சுஜாவிற்கு வரன் பார்க்கவில்லை. தங்கள் எதிரிக்கு தண்டனை கொடுக்க இந்த சம்பந்தத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்துள்ளனர் என புரிந்த ஈஸ்வரன்
“சாரிங்க. எங்க தங்கச்சி படிச்சிக்கிட்டு இருக்கு. படிப்ப முடிக்க இன்னும் ரெண்டு வருசம் இருக்கு. படிப்ப முடிச்ச பின்னாடி தான் நாங்க வரன் பார்க்கனும். உங்களுக்கு யாரோ தவறான தகவல தந்து இங்க அனுப்பி இருக்காங்க.” என பொறுமையாக சொல்ல,
அவர்களை கூட்டிட்டு வந்த மனிதரோ பாட்டி, வளர் பக்கம் திரும்பியும் பாராமல் “தம்பி யாரோ சொல்லி நான் இங்க வரல. இந்த சம்பந்தத்தை பற்றி எனக்கு சொன்னதே உங்க பாட்டியும், அத்தையும் தான்.”
“அவங்க நேத்து போன கல்யாண வீட்டுல இவங்கள பாத்திருக்காங்க. அவங்க எனக்கு தகவல் சொல்லி, நான் கூட்டிட்டு வந்திருக்கேன். நீங்க பெரியவங்கள ஒரு தரம் கேட்டுட்டு நல்ல பதிலா….. சொன்னா…” என ஈஸ்வரின் கடுமையான முகத்தை பார்த்து சொல்ல
“யோவ் தரகரே எந்திரிய்யா. இங்க பாரு எம்மவளுக்கு கல்யாணம் பண்ணி பல வருசம் ஆச்சி, சரியா? அதனால எம்பொண்டாட்டி பேச்ச விடு. அவ மவளுக்கு அவ மாப்பிள்ளை பாக்கலாம். எம்பேத்திக்கு அவங்கப்பாம்மா இருக்கும் போது இவ எப்படி மாப்பிள்ளை பாப்பா?”
“அடுத்து நிக்குது பாரு ஒரு கூனி! அதுக்கு ஒரு பையன். அவனுக்கும் ரெண்டு வருசம் முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சி. அவளுக்கு பொண்ணுங்கிடையாது, ஒரு மண்ணுங்கிடையாது. அப்புறம் யாருக்கு இது ரெண்டும் மாப்பிள்ளை பாக்குதுங்க?”
“ ஒரு ஊருக்குள்ள ஒரு வரன் சம்பந்தமா வரும்போது அங்க என்ன நினைப்பிருக்கு? கல்யாணம் பண்ற முடிவுல இருக்காங்களா? என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கு? அப்படின்னு ஒன்னுக்கு நாலுதடவை விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டு வரனும். இதெல்லாம் கேக்காம தொறந்த வீட்டுல ஏதோ பூந்தது போல ஒரு கும்பல கூட்டிட்டு யாரோ வேல வெட்டி இல்லாத ரெண்டு பொம்பளைங்க சொன்னாங்கன்னு வந்திருக்கிங்களே இது சரியா?” என தாத்தா மூஞ்சிலடிச்சது போல கேக்க
“ஐயா பையன் பெரிய உத்யோகத்துல இருக்கிறதா உங்கவூட்டம்மா சொன்னாங்க.”
“நாங்களே கூட்டிட்டு போனா ரெண்டு பக்கமும் சங்கடமா இருக்கும். நீங்க பொது மனுசன்னா பார்த்து பதமா பேசலாமுன்னு சொன்னாங்க. அத நம்பி நானு இவங்களோட வந்துட்டேன் என்ன மன்னிச்சிடுங்க.” என தெளிவாக சொல்லி வெளியேறினார்.
அந்த குடும்பமோ எதுவும் நடக்காததுபோல உட்கார்ந்து இருந்தனர். அதில் இருந்த ஒரு பெண்மணி, “ சரிங்க பொண்ண வரச் சொல்லுங்க. எங்க பையன் காத்துக்கிட்டு இருக்கான் பாருங்க” என சொல்ல
“அட லூசுங்களா!” என வளர் பார்க்க
வளரின் கழுத்தை தடவிய ஈஸ்வர், அவரை உள்ளே இழுத்துப்போக, பாட்டி ஏதும் புரியாமல் நிற்க, ஒரு சில நிமிடங்களில் காபி தட்டுடன் வந்த வளரை பார்த்து பதறினார். பெண்ணலங்காரத்தில் தன் மகள் வர பாட்டிக்கு பொட்டிலடித்தது போல இருந்தது.
மாப்பிள்ளை வீட்டினர், “பொண்ணு உங்க மவள மாதிரியே இருக்குமுன்னு நீங்க சொன்னது சரிதாங்க. அப்படியே இருக்குங்க” என அந்த அம்மா சொல்ல திரும்பி பார்த்த அனைவரும் சிரித்தனர்.
“பொண்ணோட புருசன் சம்மதம் வேணாங்களா?” என சக்திவேல் கேக்க
“எங்க பையன் தாலி கட்டினாதான் புருசன் ஆவான். அதுக்குள்ள அவன என்ன கேக்க??” என அந்தம்மா கத்த
சக்திவேல் எழுந்து போய் தன் மனைவிய பாத்து, கைபிடுச்சி, “இவ யேம் பொண்டாட்டி. இவள கட்டிக்க எஞ்சம்மதம் வேணாமா? அப்புறம் நான் கேஸ் போட்டா உங்க பிள்ளையும், இவளும் மாமியாரூட்டுல களி திங்கனுமே, பரவாயில்லையா?” என கேக்க
“இது தப்புங்க. நாங்க மரியாதையான குடும்பத்துல பொறந்தவங்க. நீங்க எங்கள அவமானபடுத்தறது போல பேசறிங்க” என அந்த மாப்பிள்ளை பையன் பேச, உள்ளிருந்து போலீஸ் சீருடையில் ஸ்டேஷன் செல்ல வந்த ஈஸ்வரன், கொத்தாய் அவன் சட்டையை பிடித்து தூக்கினான்.
“ஏன்டா எங்களுக்கு விருப்பமில்லைன்னு நான் தெளிவா சொல்லியும், சாணி மாதிரி உட்கார்ந்து இருக்கிங்க. இதுல நீங்க மரியாதையான குடும்பம்.” என்றவன்,
“இவ இவன் பொண்டாட்டிங்க. இவளுக்கு குழந்தை இல்ல அதான் இவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாமுன்னு பொண்ணு பாத்துட்டு இருந்தோமுங்க.”
“ இவங்க ரெண்டு பேரும் உங்கூட்டுல ஒரு பொண்ணு இருக்கிறதாகவும் கட்டி வச்சா இவங்களுக்கு அந்த பொண்ணு பேருல இருக்கிற நிலத்தை ஆளுக்கு அஞ்சு ஏக்கர் எழுதி வைக்கனுமுன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லி இங்க வந்தமுங்க” என மெதுவாக சொல்ல, ஈஸ்வர் தாத்தாவையும், சக்திவேலையும் பார்க்க இருவரும் தத்தம் மனைவியரை திரும்பி பார்த்தனர்.
இருவரும் முகம் கருக்க நின்றனர். தாத்தா, “ நம்ம பேத்திக்கு நீ பண்றது சரியா? ஊரான் பொண்ணுக்கு உன் மவ செஞ்சதையே இத்தனை வருசத்துக்கு அப்புறமும் ஜீரணிக்க முடியாம நான் அல்லாடறேன். ஆனா நீ?”
“ இனிமே நீ இருக்கிற இடத்துல நான் இருக்கமாட்டேன். உன் கைல தண்ணீ வாங்கி குடிச்சாலும் அது விசம் எனக்கு”
“உன் மவள பத்தி மருமவன் முடிவு பண்ணட்டும். நீ தோட்ட வீட்டுக்கு போயிடு. அந்த தோட்டம் என் பேருலதான் இருக்கு. நீ கடைசிகாலம் வரை இருந்துக்கோ. அங்க வெள்ளாமை வைக்கவோ, அறுவடை செய்யவோ இந்தூட்டுல இருந்து யாரும் வரமாட்டாங்க.”
“அந்த நிலத்துல வர்ற வருமானம் மட்டும் உனக்கு. அதை வேறெதுவும் செய்ய முடியாது.”
“கருப்பன கூப்பிடு குணம்.” என தன் மனைவியிடம் ஆரம்பித்து, பெரிய மகனிடம் முடிக்க, ஓடி வந்தான் தோட்ட வேலை செய்யும் கருப்பன்.
“ஊருக்குள்ள இந்தம்மா இனிமேல எங்குடும்பத்த சேர்ந்தவங்க இல்ல. அதனால என் குடும்பத்து பேர சொல்லி இந்தம்மா கொடுக்கல், வாங்கல் வச்சிக்கிட்ட நாங்க பொறுப்பில்லைன்னு பார்க்கறவங்ககிட்ட சொல்லிடு” என சொல்ல கருப்பன் செய்வதறியாது நின்றான்.
“என்னங்க! இந்த வயசுல எனக்கிந்த தண்டனை தேவையா? என்னை மன்னிச்சிருங்க” என பாட்டி கெஞ்ச,
சக்திவேலும் “ எனக்கும் இவ வேணாமுங்க. உங்களுக்கே தெரியும் இவள பத்தி. நானும் எங்குடும்பமும் இனியாவது நல்லா இருக்கனுமுன்னு நெனச்சிங்கனா இவள எங்கிட்ட இருந்து பிரிச்சி விட்டுடுங்க.” என சொல்ல
“அவளுக்காக எங்கள அத்து விடறிங்களா? நாங்க இல்லாம நீங்க வாழ்ந்திடுவிங்களா? சோத்துக்கு பிச்சை எடுக்கனும்.” என வளர்மதி அறிவில்லாமல் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து கத்த
“ஐய்யோ தெரியாம தப்பு பண்ணிட்டோம். எங்கள எல்லோரும் மன்னிச்சிருங்க. ஏதோ அந்த கழுதைமேல இருந்த கோபத்துல ஒரு தப்பு பண்ணிட்டோம். இனிமேல் அவ இருக்குற திசையகூட நாங்க பாக்கமாட்டோம்” என பாட்டி பம்ம
“ஏன்மா அந்த நிலத்தை எப்படி விடமுடியும்? அது எனக்கு சேர வேண்டியது. அப்பாவும், நீங்களும் கமுக்கமா போய் அவ பேருல எழுதி வச்சிட்டு இப்போ நடிக்கிறிங்களா? அம்மா உன்னைய அத்துவிடறத்துக்கு ஈடா அந்த நிலத்த குடுக்க சொல்லுங்க அதுபோதும். அம்மா இனி சேர்ந்து வாழ்ந்து என்னத்த சாதிக்க போற? நீ பிரிஞ்சு வந்து எனக்கு அந்த நிலத்தை எழுதி வை. உன்ன நான் கண்ணுல வச்சி நல்லா பாத்துக்கிறேன்.” என வளர் பதறிக்கொண்டு சொல்ல, நிலத்திற்காக தன் அப்பா, அம்மாவை பிரிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் வளரை பார்த்து சுஜா குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர்.
“சொத்துக்காக இந்தளவுக்கு இறங்குற இவங்கள நம்பி, இவங்ககூட வாழற தைரியம் எனக்கு இல்லிங்க. அதனால எனக்கு மட்டுமாவது விடுதலை குடுங்க” என சக்திவேல் கைகூப்பி வேண்டுகோள் வைக்க
“என்ன அந்த கழுதை உங்களையும் மயக்கிட்டாளா? என்னய அத்துவிட்டுட்டு அவளோட போக போறிங்களா?” என கத்த அருகிலிருந்த ஈஸ்வர் பேசுமுன் எழுந்து வந்த சுபாஷ், வளரை அறைந்தான்.
“நீங்க இவ்வளவு மோசமா நடந்துப்பிங்கன்னு நான் நினைச்சிக்கூட பாக்கல. சுதி என்னைய அண்ணான்னு சொல்லுது. அப்போ எங்கப்பாவை அது என்ன ஸ்தானத்துல வச்சிருக்கு? உங்க சாக்கடை வாய மூடல நிரந்தரமா கண்ணைமூட வேண்டியிருக்கும்” என்றவன்
உடனே தாத்தா, “கல்யாணம் பண்றது, புள்ள பெத்துக்கிறது இது ரெண்டும்தான் முக்கியமில்ல? நாயி பூனைகூட ஜோடி சேந்து குட்டி போடுது. இது ஒரு சாதனையா? இதவிட நீங்க செஞ்ச சாதனைய சொல்லட்டுமா? அடுத்த வீட்டு பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளைய கட்டிக்கிறது, அண்ணிங்க நகைய திருடிக்கிறது, அடுத்தவஙக சொத்துக்கு ஆளா பறக்கிறது, இதுதான் உங்க சாதனை. புருஷன், புள்ள போனாலும் பணம் வந்தா போதுமுன்னா வேசிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என கேக்க பாட்டி பதில் சொல்ல முடியாம திணற,