அவள் அம்மா பேச, “நீ பேசாதம்மா, உனக்கு தான் அறிவு இல்ல, நீ யோசித்து இருந்தனே கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க கூடாது, இந்தா இன்னைக்கு சொல்லிட்டாரு பாத்தியா, சொந்தத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும் ன்னு , அதனால தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு யோசிக்கிறேன்னு சொல்றாரு, வேண்டாம் நான் போறேன்”, என்று சொல்லி விட்டு,
“பாப்பா அம்மா கூட வாரியா, இங்கே இருக்க போறியா”, என்றாள்.
அதுவோ சிவா கழுத்தை கட்டிக் கொண்டு, “சித்தப்பா கூட இருக்கேன்”, என்றது குழந்தை .
“சரி நீ உங்க சித்தப்பா கூட இரு, நான் போறேன்”, என்று சொல்லி விட்டு விறு விறு என இறங்கி தன்னுடைய அம்மாவின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
சரணும் ஒரு நிமிடம் அதிர்ந்தவனாய், “மது நில்லு, நான் இப்ப என்ன சொன்னேன் ன்னு, நீ இப்ப கோவிச்சுட்டு போற, இங்க நில்லு, நான் கேக்குறதுக்கு நீ பதில் சொல்லாம, நீ எதையோ பேசி, எதையோ மாத்தி விட்டுட்டு போற”, என்று அவன் கத்த தொடங்கினான்.
அவளோ “நீங்க சொன்னதை நீங்களே யோசிச்சு பாருங்க, புரியும், வேணும் னா பேப்பர் ல கையெழுத்து போட்டு தரவா”,என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றாள்.
அவனும் அவள் பின்னே ஓடத் தொடங்கி இருந்தான்.
வீட்டினர் அனைவரும் “டேய் கதவை சாத்திட்டு வா”, என்று சொல்லி விட்டு மதுவின் வீட்டிற்கு சென்றனர்.
அதற்குள் மதுவோ வீட்டிற்குள் சென்றவள், அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
அறைக்கு உள்ளே நுழைந்த உடனேயே, “அப்பாடா ஒரு வழியா தப்பிட்டேன், ரெண்டு நாளைக்கு இந்த சண்டையை சமாதானப்படுத்துவதிலே சுத்திட்டு இருக்குங்க, வேண்டாம் இப்போதைக்கு சமாதானம் ஆகக்கூடாது, சிவாவை மாட்டி விட வேண்டாம்”, என்று யோசித்தபடி அமைதியாக இருந்தாள்.
சரண் அறையின் கதவைத் தட்டி “மது கதவை திற, இப்ப நீ கதவை திறக்கல அப்புறம் நான் கதவை உடைக்க தான் செய்வேன்”, என்றான்.
இவளோ அமைதியாக இருந்தாள், சற்று நேரம் ஆளாளுக்கு கதவைத் தட்ட இவ்ளோ சத்தம் இல்லாமல் இருக்க,
சிவா தான், “மது லூசு மாதிரி டிசைட் பண்ணாத, கதவை திற, நீ இப்ப வெளியே வாரியா இல்லையா? இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்லு, என்ன நடந்துச்சு, என்ன பேசிட்டு இருந்தீங்கன்னு கூட சொல்றதுக்கு முன்னாடி, டக்குனு நீயா கோபப்பட்டு வந்துட்ட, கதவை திற”, என்று சிவா சத்தமாக சொன்னான்.
“டேய் ஒழுங்கு மரியாதையா பிள்ளையை தூக்கிட்டு வீட்டை பார்த்து போ, என்கிட்ட வாங்கி கட்டிறாத, உனக்கு இது தேவையில்லாத விஷயம்.,
இது எனக்கும் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டவருக்கும் இருக்கும் பிரச்சனை, அவருக்கு சொந்தத்துல கல்யாணம் பண்ணல ன்னு ரொம்ப வருத்தமா இருக்கு போல., அதனால இப்ப அதை பத்தி பேசிட்டு இருக்கோம்., நீ ஒழுங்கு மரியாதையா போய்ரு, இல்லாட்டி நீ மிதி வாங்குவ பாத்துக்கோ, இந்த கல்யாணத்துக்கு முக்கிய காரணமே நீ தானே, வெளியே வந்தேன் உன்னை மிதிச்சிருவேன் ஓடிடு”, என்று சொல்லி உள்ளிருந்து கத்தி கொண்டு இருந்தாள்.
சரணம் தலையில் கை வைத்த படி, “எதையோ பேச போக எங்கேயோ முடிந்து விட்டதே” என்று யோசனை யோடு மதுவின் அம்மா அப்பாவிடம் “சாரி அத்த,சாரி மாமா நான் அந்த மாதிரி அர்த்தத்துல சொல்லல, இவ ஏதோ அர்த்தம் தப்பா எடுத்துக்கிட்டா, நான் பேசுறேன்”,என்று சொன்னவன் சற்று நேரம் அமைதியாகவே அவர்கள் வீட்டு ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.
பின்பு மதுவின் அம்மாவும் சத்தம் போட்டு அவளை கதவை திறக்க வைக்க,
இவனும் உள் சென்று கதவை சாத்திவிட்டு, “லூசாடி நீ, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன சொல்லிட்டு வர்ற”, என்றான்.
இவளோ முகம் திருப்பிக் கொண்டு கோபமாக இருப்பது போல் அமர்ந்து கொண்டாள். அவங்க முன்னாடி சிரிச்சிட கூடாது, சிரிச்சேனா நான் மாட்டிவிடுவேன்”, என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவனும் இவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, இவ்ளோ மூகத்தை தூக்கி அப்படியே திரும்பி அமர்ந்திருந்தாள், ‘இந்த லூசு சிவாவுக்காக நான் என்ன எல்லாம் கஷ்டப்பட வேண்டியது இருக்கு, கடவுளே இதில் இருந்து என்னை காப்பாற்றதுக்கு ஒரு வழி பண்ண மாட்டியா’, என்று யோசித்து விட்டு அமைதியாக அமைந்திருந்தாள்.
“மரியாதையா வீட்டுக்கு வா”, என்று சத்தமாகவே சொல்லிக் கொண்டிருந்தான்.
அதுபோலவே அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தவன்,
“தப்பா எடுத்துக்காதீங்க, வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், அவ தன்னால சரியாகவே மாட்டா கொஞ்சம் அவளுக்கு பேய் ஓட்டணும்”, என்று சொன்னாள்.
” நான் ஒன்னும் பேய் இல்ல, நீங்க ஒன்னும் எனக்கு பேய் ஓட்ட வேண்டாம் போங்க”, என்று அவனைப் பிடித்து தள்ளி விட்டு அவனிடம் இருந்து கையை உருவிக் கொள்ள முயற்சி செய்தாள்,
சரணின் அம்மாதான் “ஏன்டா இப்படி பேசுற, பேசாம இரு”, என்று சொன்னாள்.
அம்மா “அவ லேசான்ற விஷயத்தை பெருசாகிட்டா, நான் அந்த அர்த்தத்துல சொல்லல, நான் சொன்ன அர்த்தம் வேற, இவ எடுத்துக்கிட்ட அர்த்தம் வேறமா, இப்போ இதை பேசி தீர்க்கலை னா இன்னும் இது பெரிய பிரச்சினையாகும், உடனே பேசி தீர்த்தா தான் இது சரியா வரும், என்றவன்,
அவளை “மது வா” என்று சொல்லி மதுவின் கையை மீண்டும் பிடிக்கப் போக, அவள் நகர்ந்து போனாள்.
“இங்க பாரு ஒழுங்கா வந்துரு, இல்லாட்டி வேற மாதிரி ஆயிரும் வா” என்று சொல்லி கையைப் பிடித்து இழுக்க, அவள் வர மறுக்க,
“சரி அப்ப வா தூக்கிட்டு போறேன்”, என்று சொன்னான்.
“ஒன்னும் வேண்டாம் ” என்று அவனிடம் கோபத்தை காட்ட,
அவனும் “ஒழுங்கா வந்துரு” என்று சொல்லி கையைப் பிடித்து இழுத்தபடி தன் வீடு நோக்கி நடந்தான்.
இவளோ அவன் தன் கையை அழுத்தமாக பிடித்து இருப்பதை பார்த்தபடியே அவனிடம் முரண்டு பிடித்துக் கொண்டே சென்றாள்.
மனதிற்குள் ‘அய்யய்யோ நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே, எப்படியாவது சமாளிக்கலாம்’, என்ற எண்ணத்தோடு செல்ல.,
இங்கு பெற்றவர்கள் எல்லாம் மதுவின் வீட்டிலே அமர்ந்து விட்டனர்.
“அவன் எப்படியும் சமாதானப்படுத்தட்டும், கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க போறோம்”, என்று சொல்லி அவர்கள் இருவரும் அமர்ந்துவிட,
இவன் அவளை வீட்டிற்கு அழைத்து சென்ற போது , சிவாவும் குழந்தையும் ஹாலிலேயே அமர்ந்திருக்க, அவன் அவளை தங்களை அறைக்கு அழைத்து சென்றான்.
பயத்திற்கு முக்கியத்துவம்
அளிக்காமல் முயற்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
வெற்றி என்பது நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்..!