” அத விடுறா, அவர் லவ் பண்ணி தான் நான் இன்னிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் மாட்டிட்டு இருக்கேன்”, என்று சொன்னாள்.

    “உனக்கு இப்ப என்ன பிரச்சனை”, என்றான்.

     “உனக்கு தூது போற பிரச்சனை”, என்று சொன்னவள், “நீ வாய மூடிட்டு இருக்கணும் சரியா, நான் அத்தை கிட்ட சொன்னத அப்படியே மெயின்டெயின் பண்ற, உனக்கு தெரியாத மாதிரியே ஆக்ட்விடு”, என்று சொன்னாள்.

    “அப்படிங்கிற சரி பார்ப்போம்”, என்று சொல்லிவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே,

      சரண் மாடிப்படிகளில் இறங்கி வருவது தெரிந்ததும், இருவரும் அப்படியே பேச்சை மாற்றி மற்ற விஷயங்களை பேச தொடங்கினர்.

     அவர்களோடு சரணும் வந்து கலந்து கொள்ள ,அதே நேரம் மதுவின் அம்மாவும், சரணின் அம்மாவும் உள்ளே வர , அப்பாக்களும் வந்து சேர்ந்தனர்,  சூடான பஜ்ஜியோடு.

     அதுவரை விளையாடிக் கொண்டிருந்த சரண் மதுவின் குழந்தை நிலாவும் வீட்டிற்குள் வந்தவள், சித்தப்பா என்ற சத்தத்தோடு சிவாவின் மடியில் ஏறி அமர்ந்து கதை பேச தொடங்கி விட்டாள்.

        இவளோ அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு மதுவின் அம்மாவை பார்க்க, மதுவின் அம்மாவோ இவளை கேள்வியாக நோக்கினார்.

     இவளோ ‘அய்யய்யோ அத்தை ஏதோ சொல்லிட்டாங்க போலையே’, என்று நகம் கடித்த படி அவள் அம்மாவை பார்த்து, ‘என்ன’ என்னும் தோணியில் கேட்டாள்.

    “இங்க வா”, என்றார்.

     “போச்சே போச்சே” என்று யோசனையோடு அவர்கள் பின்னே சென்றாள்.

      ” என்னமா” என்றாள்.

    “என்னடி பெரிய மனுஷி மாதிரி நந்தினி கேட்போம்  ன்னு அத்த ட்ட கேட்டு இருக்க”, என்றார்.

      “அவ நல்ல பிரண்ட் இல்லம்மா, சிவாவுக்கும் நல்ல பிரண்ட், பிளஸ் ரெண்டு பேருக்கும் மைண்ட்  ஒன்னு போல ஒத்துப் போகும், அதுதான் கேட்டேன்”, என்று சொன்னாள்.

      இவள் பூனை போல அவர்கள் பின்னே செல்வதை பார்த்த சரண், ‘ஏதோ விஷயம் இருக்கிறது’ என்ற எண்ணத்தோடு அவர்கள் பின்னே சென்று இருந்தான்.

    அதை கவனிக்காதவர்கள் அங்கே பேசத் தொடங்கினர்.

     இவன் அமைதியாக சற்று தள்ளி நின்று கவனிக்க தொடங்கினான்.

       அவன் நின்றதை யாரும் கவனிக்கவில்லை, இவர்கள் கிச்சனிற்குள் நின்று பேச, அவன் கிச்சனுக்கு வெளியே நின்றான்.

    குழந்தையோடு பேசிக் கொண்டிருந்த மகிழ்வில் சிவாவும் அவன் சென்றதை கவனிக்கவில்லை.

    “நீ என்ன பெரிய மனுஷியா, உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க, இதை போய் லூசு மாதிரி வேற யார்கிட்டயும் கேட்டு வச்சிடாத, சிவாவும் நந்தினியும் நார்மலா தான் இருக்காங்க, நீ ரெண்டு பேர் மனசிலும் ஏதாவது எண்ணத்த உண்டு பண்ணிறாத”, என்று சொன்னார்.

    இவளோ திருதிரு வென முழித்துக் கொண்டு “இல்லம்மா அப்படி இல்லம்மா, எனக்கு என்னமோ ரெண்டு பேருக்கும் மேட் ஃபார் ஈச் அதர் ன்னு தோணிச்சு, அதனால தான்”, என்று சொன்னாள்.

     சட் என்று சரண் கிச்சனுக்குள் நுழைய அத்தனை பேரும் அதிர்வோடு பார்க்க,  இவளோ ‘மாட்டிக்கொண்டோம்’ என்ற நினைவோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

     பின்பு அவனை பார்க்கவே இல்லை, எங்கேயோ பார்ப்பது போல நின்றுக் கொண்டாள்.

      “என்ன பண்ணி வச்ச ஹாலுக்கு வா”, என்று சொன்னவன், “நீங்களும் வாங்க”, என்று சொல்லி விட்டு எப்போதும் போல அமர்ந்தவன்,

   இவளோ அவர்கள் அம்மா இருவரும் நின்ற இடத்திற்கு சற்று தள்ளியே நின்றாள்.

      “சொல்லு என்ன காரியம் பண்ணி வச்சிருக்க, இது எதுக்கு தேவையில்லாத வேலை உனக்கு”, என்று மதுவை சத்தம் போட்டான்.

மதுவும் நகம் கடித்தபடி அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நந்தினி ட்ட ஏதும் கேட்டியா”, என்றான்.

அவளோ ஆமாம் என்றும் இல்லை என்றும் ஒன்று போல தலையசைத்தாள்.

    சிவாவோ ‘ஐய்யய்யோ ஏதோ பிரச்சனை ஆயிடுச்சு போலயே’ என்று நினைத்த படி அதிர்வோடு மதுவை பார்த்துக் கொண்டிருந்தான்.

    மதுவோ வராதே என்றபடி அவனுக்கு மட்டும் புரியும் வகையில் செய்கை காட்டினாள்., அதை யாரும் பார்க்கவில்லை,

        இவளோ சரணின் அம்மாவையும், மதுவின் அம்மாவையும், பார்த்தபடி ‘ரெண்டும் சேர்ந்து என்ன மாட்டி வச்சுருச்சு’ என்று யோசித்தாள்.

    மதுவின் அம்மாவிடமும், சரணின் அம்மாவிடமும், சரண் கேள்விகளைக் கேட்டு பதிலை வாங்கிக்கொண்டு பின்பு அவர்கள் இருவரையும் போக சொல்லி விட்டு மதுவை நிறுத்தி கேள்வி கேட்க தொடங்கினான்.

      ‘இவளோ பெரிய பஞ்சாயத்து தலைவர், கேள்வி  கேட்க தொடங்கிட்டார்’, என்று நகம் கடித்த படி வாய்க்குள் முணங்கி கொண்டிருந்தாள்.

     அவள் ஏதோ திட்டுகிறாள் என்பதை புரிந்த சரண்.,  “என்ன சொன்ன” என்று கேட்டான்.

   “ஒன்றும் இல்லையே”, என்றாள்.

   உடனே அவன் தான், “உனக்கு கொஞ்சம் கூட யோசிக்கவே தெரியாதா”, என்றவன்,

     “அப்பா அம்மா மனசுல வேற எண்ணம் கூட இருக்கலாம், அவங்க சொந்தத்தில் கூட பார்க்கணும்னு நினைச்சு இருக்கலாம், நீ என்ன உன் இஷ்டத்துக்கு பண்ற, ஏற்கனவே  நம்ம கல்யாணத்துக்கே எல்லாரும் ஆளாளுக்கு சொந்தத்தில் பார்க்கலாம் ன்னு பேசினார்களாம், உங்க வீட்லயும் அந்த பேச்சு இருந்துச்சு தெரியுமில்ல, சரி அவனுக்காவது பார்த்து வைப்பாங்கன்னு பார்த்தா, நீ எதுக்கு அவசரப்படுற”, என்று சொன்னான்.

    சிவா ஏதோ சொல்ல முயலும் போது, இவளோ சரணிடம் “ஓஹோ அப்போ உங்களை யாரு என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா”, என்று பேச்சை திசை திருப்பி விட்டாள்.,

        “ஏய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க”, என்று சொன்னான்.

     “உங்களுக்கு அப்ப மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கு, அப்படித்தானே.,  இவளை ஏன்டா கல்யாணம் பண்ணினோம், சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம் அப்படிங்கற எண்ணம் இருக்கு அப்படித்தானே”, என்றாள்.

      அவன்  அவளிடம் பதில் கேள்வி கேட்க தொடங்கும் போதே, மதுவின் அம்மாவும், சரணின் அம்மாவும், “என்னடா பேசுற, என்னமா பேசுற”, என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டனர்.

     இவளோ “நீங்க எல்லாம் பேசாதீங்க, உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது, அவர் சொன்னாரு நான் அவருட்ட கேட்டுகிட்டு இருக்கேன்”, என்றாள்.

    அம்மாக்கள் இருவரையும் பேசாமல் இருக்க சொன்னாள்., அதே நேரத்தில் அப்பாக்களும் வந்தனர், பிரச்சினையை அறிந்தவர்கள்,

     “மது தேவையில்லாமல் பேசாத”, என்று மதுவின் அப்பா அதட்டினார்.

     “நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க”, என்று சொன்னவள்.

      “அதுக்கு தான் சொன்னேன், அன்னைக்கே நான் சொன்னேனா, இல்லையா, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ன்னு சொன்னேனா இல்லையா”, என்று சொன்னாள்.

     “லூசா நீனு ஒரு பிள்ளையை பெத்து கையில வச்சுக்கிட்டு, அன்னைக்கே கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்லிட்டு இருக்க, அறிவில்ல”, என்றாள்.