“ஒரு குறையும் இல்ல, எல்லாம் அதிகம் தான் , அதிக பிரசங்கித்தனத்திலிருந்து எல்லாமே அதிகம் தான், நீயும் உன் ப்ரண்ட் ம், அவங்க அண்ணன் முன்னாடி பஞ்சாயத்துக்கு நிக்குறது பத்தாது ன்னு, நீ இப்ப என்னையும் கோர்த்து விடலாம் பாக்குறியா”, என்று சொன்னாள்.
“நீ நியாயவாதியாவே இரு, நீ வேணா அவர் பக்கம் நின்னுக்கோ, இனி என் ப்ரண்ட் சேட்டை பத்தி எல்லாம் நீ பேசக் கூடாது, நான் இன்னைக்கு பேசினது க்கு நீ யோசித்து சரி சொல்ற, சரியா”, என்று சொல்லி விட்டு “கிளம்பு கிளம்பு” என்று சொன்னாள்.
“திமிரு புடிச்சவ இதுக்கு தான் வர சொன்னியா”, என்று கேட்டவள் கிளம்பினாள்.
அவள் மனதிற்குள் சிறு சலனம் தோன்றினாலும், வீட்டின் சூழ்நிலையை கருதி அதிகமாக பேசவில்லை,
வண்டியில் செல்லும் போது நந்தினியோ, ‘இவ ஏதாவது பேசி வீட்டில் குட்டையை குழப்பி விடக்கூடாது’ என்று பயமும் இருந்தது.
‘அப்பா அவசர அவசரமாக யாரையாவது பார்த்து திருமணம் பேசி விடுவாரே, பரீட்சை எழுத முடியாதே’ என்ற எண்ணமும் இருந்தது,
அதே எண்ணம் மதுவுக்கும் இருந்ததால், நிதானமாக பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
‘முதலில் அத்தை இடம் கேட்போமா’ என்று நினைத்தவள், இங்க பேசுவோமா, இல்ல அவர்கள் வீட்டில் பேசுவோமா’ என்று நினைத்தாள்.
அதன் பிறகு சற்று நேரம் யோசித்து விட்டு, ‘இல்ல முதல்ல அத்தை கிட்ட கேட்டுட்டு, அதுக்கப்புறம் நந்தினி அப்பாட்ட பேசலாம்’, என்று நினைத்துக் கொண்டவள்,
அவள் நினைத்தது போலவே சிவாவின் அம்மாவிடம் வந்து “அத்த பேசனும் “என்று வந்து நின்றாள்.
“சிவாக்கு அலையன்ஸ் பாக்க ஆரம்பிப்பீர்களா” என்று கேட்டாள்.
“இல்லையே ஏன்” கேட்டார்.
“அதான் வேலைக்கு போயிட்டான் இல்ல”, என்றாள்.
“இப்ப தானே 26 வயசு ஆகுது, இன்னும் 2 வருஷம் போகட்டும்”, என்று சொன்னார் .
“அப்ப எனக்கு மட்டும் எதுக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வச்சீங்க”, என்று கேட்டாள்.
அவரும் சிரித்துக்கொண்டே “அது பசங்களுக்கு மெதுவா தான் பண்ணுவாங்க, பொம்பள பிள்ளைகளுக்கு காலகாலத்தில் பண்ணனும்”, என்று சொன்னார்.
“ஏன் பொண்ணுகளுக்கு மெதுவா செய்தா ஆகாதா” என்று கேட்டாள்.
“ஆகாது ன்னு யார் சொன்னா, சரணுக்காக பேசனும் முடிவு எடுத்ததால நான் கேட்டேன்”, என்றார்.
“அப்ப தப்பு எங்க அம்மா மேல தான், நீங்க உங்க பையனுக்காக யோசிச்ச மாதிரி எனக்காக அம்மா யோசிக்கலை”, என்றாள்.
“நீ தப்பா யோசிக்காத மது”, என்றார்.
இவளோ நகம் கடித்தபடி யோசனையோடு இருந்தவள்,”அத விடுங்க அத்த, வேலைக்கு போயிட்டானே வேற எங்கேயும் போய் பொண்ணு பாத்துற கூடாது ன்னு தான் கேட்டேன் அத்தை”, என்றாள்.
“நீ யார பொண்ணா நினைச்சுட்டு கேக்குற”, என்று அவரும் கேட்டார்.
“இல்ல என் பிரண்ட் நந்தினி இருக்கா இல்ல, அவளும் எக்ஸாம் தான் ட்ரை பண்றா, இந்த தடவை எப்படியும் கிளியர் பண்ணிடுவான்னு நம்பிக்கை இருக்கு, கிளியர் பண்ணாட்டி கூட கிளியர் பண்ண வச்சிடலாம், இன்னும் ரெண்டு தடவை கூட எழுத வச்சா வேலை கிடைச்சிடும், அவளுக்கும் இவனுக்கும் சூட் ஆகும் இல்ல”, என்று கேட்டாள்.
“ஓஹோ உன்னை சுத்தி உன் பிரண்ட்ஸா வச்சுக்கணும்னு நினைக்கிறியா”, என்று அவரும் சிரித்துக் கொண்டே கேட்டவர். சற்று யோசனை ஆனார்.
‘இதில் ஏதோ இருக்கிறதே’ என்று நினைத்தவர், “இது நீயா கேட்கிறாயா? இல்லை அந்த கள்ள பய உன்ன விட்டு கேட்க சொன்னானா”, என்று கேட்டார்.
“அப்படியெல்லாம் இல்ல, நானா தான் கேட்கிறேன்”, என்று சொன்னாள்.
இவள் என்ன தான் சொன்னாலும், அவர் மனதில் யோசனை இருந்தது, ‘இவள் இப்படி பேசக்கூடிய ஆள் இல்லையே’ என்ற எண்ணத்தோடு “அதை அப்புறம் பார்ப்போம், அவனுக்கு இன்னும் ஒரு வருஷம் போகட்டும், அதுக்கப்புறம் பார்க்க ஆரம்பிச்சோம்னா ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் முடிப்பதற்கு சரியா இருக்கும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இவளோ “இல்ல அத்தை நான் எதுக்கு கேட்கிறேன் னா, கிளியர் பண்ணிட்டானு வைங்களேன் , அவங்க அப்பா சொந்தத்துல பாத்து பேசிருவாரு. அதுக்கு முன்னாடி நம்ம பார்த்திடலாமான்னு தான் கேட்டேன், வேற ஒன்னும் இல்ல, நம்ம பார்த்து பேசி வச்சிட்டு கூட, அப்புறமா இவ எக்ஸாம் எழுதட்டும், இவன் வேலைக்கு போகட்டும், அதுக்கப்புறம் அவளுக்கு வேலை கிடைக்கட்டும் கிடைச்சதுக்கு அப்புறம் மேரேஜ் வச்சுக்கலாம்”, என்று பெரிதாக பிளான் செய்தாள்.
அவரும் சிரித்துக்கொண்டே “அப்புறம் பார்ப்போம், தீபாவளி வேலையை பார்ப்போம் இப்போ”, என்று சொல்லிவிட்டு பேச்சை மாற்றி விட்டு சென்றாலும் யோசனையோடு நகம் கடித்த படி காலில் அமர்ந்திருந்தாள்.
வேலை விட்டு வந்த சிவாவோ, “ஹலோ மேடம் என்ன ஆச்சு பயங்கர யோசனைல இருக்கீங்க”, என்று சொல்லி எதிர் சோபாவில் அமரந்தான்.
அவள் சுத்தி முத்தி வீட்டை பார்க்க, அவனோ,
” இல்ல இல்ல எங்க அம்மா உங்க அம்மா வெளிய உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க, அப்பாஸ் ரெண்டு பேரும் எங்கேயோ கடைக்கு போனாங்க, நான் கூட பஜ்ஜி எல்லாம் சூடா போட்டா வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்”, என்று சொன்னான்.
“உங்க அண்ணனும், உன் பொண்ணும் எங்க”, என்று கேட்டாள்.
“அண்ணன் மாடியில் இருப்பான், என்ன செய்வான் வரும் போது கேஸ் கட்டை தூக்கிட்டு வந்திருப்பான், உக்காந்து பாத்துட்டு இருப்பான், பாப்பா தூங்குகிறாளா இல்ல ,அம்மா கூட இருக்காலான்னு தெரியலையே, நான் வேணும்னா போய் பாத்துட்டு வரவா”, என்று கேட்டான்.
“ஏன் நாங்க ரெண்டு பேரும் ரகசியம் பேச போகிறோம், யார் யார் எங்க இருக்கீங்கன்னு பார்க்க வந்தேன் ன்னு போய் சொல்லப் போறியா”, என்று கேட்டாள்.
“ஏய் என்ன ரகசியம்” என்று மெதுவாக கேட்டான்.
“உன் தல”, என்று சொன்னவள், “நான் இன்னைக்கு அவ ட்ட பேசினேன் டா”,என்றாள்.
“இன்னைக்கு தான் பேசினியா”, என்று கேட்டான்.
“இன்னைக்கு இல்ல, நேத்து பேசிட்டேன்”, என்றாள்.
“சொல்லவே இல்ல”, என்றான், சிரித்தபடி
“வாய மூடிட்டு இரு”, என்று சொன்னவள், “அப்புறமா மெதுவா அத்தை கிட்ட பிட்ட போட்டேன், அத்தை அப்படின்னு சொல்லி”, என்று சொன்ன கதையை சொன்னாள்.
“அடிப்பாவி அம்மாட்ட போய் எதுக்கு பேசுன”, என்று கேட்டான்.
“நிலைமை அப்படிடா, என்ன பண்றது? அதுதான் அத்த ட்ட போய் மெதுவா சொன்னேன், நானா கேட்டேன் மாதிரி சொல்லி இருக்கேன்”, என்று அவள் கையை ஆட்டி சொன்னாள்.
அவனும் தலையில் கை வைத்த படி “அம்மாக்கு டவுட் வந்திருக்கும் லூசே, அம்மா பத்தி உனக்கு தெரியாது., அம்மா லேசா னா கூட கண்டு பிடிச்சிடுவாங்க, உன் புருஷன் உன்ன லவ் பண்ண விஷயத்தையே அம்மா தான் கண்டுபிடிச்சாங்க தெரியுமா”, என்று சொன்னான்.