17

       கண்ணாடி இதயம்
பாதரசம் பூச மறந்து
காதல் பூசி வைத்தது,
பிம்பமாக என்
முகத்திற்கு
பதிலாக நம் காதல்
கலந்து விரவி
நிறைந்து கிடக்கிறது,

      3 வருடங்களுக்கு பிறகு

        குழந்தைக்கு 2 1/2 வயது இருக்கும் போது சிவாவிற்கு வேலை கிடைத்தது.,

      ஒரு அட்டெம்ப்ட்க்கு பிறகு தான் வேலை கிடைத்தது, இப்போது அவன் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிறது.

     அந்த முறை தீபாவளி கொண்டாத்திற்காக வீட்டிற்கு வந்திருந்தவர்களிடம் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    இங்கே விடுங்க நாங்க பார்த்துக் கொள்கிறோம், என்று இரண்டு பாட்டி தாத்தாவும் கேட்டனர்.

   சரண் முடியவே முடியாது என்று சொல்லி விட்டான்.

    அதை சிவா கேட்ட போது, “நீயும் உன் ப்ரண்ட் ம் பண்ணுறதே தாங்கல, உங்க  கூட்டணி மட்டும் போதும், இந்த வாண்டையும் கூட்டு சேர்க்காதீங்க”, என்றான்.

     பெரியவர்களிடம், “சின்ன க்ளாஸ் தானே ம்மா, எங்க கூட இருக்கட்டும், பெரிய க்ளாஸ் வரும் போது முடிவு பண்ணலாம்”, என்று முடித்து விட்டான்.

            சற்று நேரம் கழித்து சிவா தான் தனியாக பேச வேண்டும் என்பது போல் செய்கை காட்டிக் கொண்டிருந்தான்.

      அவளும் “பேசலாம்” என்று மட்டும் சொன்னாள்.

      குழந்தை பெரியவர்களோடு இருக்க,  சரண் அலைபேசி அழைப்பு வர பேசிக் கொண்டிருக்கும் போதே,

     சிவா மதுவிடம் “ப்ளீஸ் இப்பவாவது பேசேன்”, என்று கேட்டான்.

     “நான் தான் ஏற்கனவே சொன்னேன் தானே, ஏற்கனவே நான் பேசிட்டேன், ஆனா அவ எந்த பதிலும் சொல்லல”, என்று சொன்னாள்.

    “இப்பதான் எனக்கு வேலை கிடைச்சிருச்சு இல்ல, இப்ப கேளேன்”, என்று சொன்னான்.

    “கேட்கிறேன் டா, அவளும் தான் எக்ஸாம் எழுதுறா டா, அவ என்ன சொல்றான்னு தெரியலையே, சரி பேசுறேன்”, என்று சொல்லி விட்டு, “டேய் எதுவும் வம்புல கிம்புல மாட்டி,  உங்க அண்ணன் முன்னாடி நிக்க வச்சிடாத”, என்று சொன்னாள்.

      “அடே அப்பா, நீ எங்க அண்ணனுக்கு பயப்படுறவ தான், நான் நம்பிட்டேன்”, என்றான்.

      “பேமிலி விஷயத்தில் எப்படியோ, உங்க அண்ணன் நான் சொன்னா கேட்டுக்குவாரு, ஆனா இந்த மாதிரி பிரச்சனை னா என் பேச்சை நம்பவே மாட்டாரு, அதுவும் நீயும் நானும் சேர்ந்து ஒரு விஷயத்துல இறங்குகிறோம் னா, உன் அண்ணன் கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திட்டு பூதக்கண்ணாடி வச்சு நம்ம மேல தப்பு தேடுவாரு சரியா, அதனால மாட்டுனா நீயும் சேர்ந்து வந்து நிக்கணும், நல்ல பிள்ளை மாதிரி போய் தள்ளி நின்னுகிட்டு என்னை மட்டும் மாட்டி விட்ட, அதுக்கப்புறம் இருக்கு”, என்று சொன்னாள்.

     “நான் எப்போ அப்படி மாட்டி விட்டேன்”, என்றான்.

       “நிலா வயிற்றில் இருக்கும் போது, நான் ஐஸ் கிரீம் கேட்டதை மாட்டிவிட்டு நீ நல்ல பிள்ளை மாதிரி இருந்து கிட்ட இல்ல”, என்று கேட்டாள்.

    “அது உண்மைதானே, நீதானே ஐஸ்கிரீம் கேட்ட, அப்புறம் நான் எப்படி பொய் சொல்ல முடியும்”, என்றான்.

“வாடா இந்த தடவை நீ என்ன மாட்டிவிடு. நான் உன்னை மாட்டிவிட்டு ஒதுங்கிக்கிறேன்,  நீ தான் ப்ரொபோஸ் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டேன்னு சொல்லி.,  நான் ஒன்ன மாட்டி விட்டுட்டு போய்டுறேன்”. என்று சொன்னாள்.

    “முதல்ல ஏதாவது பண்ணும்மா, அப்புறமா நீ என்ன மாட்டி விட்டா கூட, நான் வாங்கிக்கிறேன்”, என்றான்.

    “டேய் நீ இந்த அளவுக்கு பைத்தியம் ஆயிட்டியா” என்று கேட்டாள்.

       “நீ கேட்க போறீயா இல்லையா” என்றான்.

        “கேட்டு தொலைக்கிறேன்” என்று சொல்லி விட்டு , “ஆனா ஒரே வயசு ஒத்துப் போகுமா டா”, என்று கேட்டாள்.

        “ஏமா நீ கேளுமா முதல்ல, அப்புறமா மற்றதை பார்க்கலாம், நீ என்ன அண்ணி கெத்து காட்டுறியா, ப்ரண்ட் ங்கிற இடத்துல இருந்து போயிட்டீயா”, என்று கேட்டான்.

       “அப்படி எல்லாம் இல்லடா, நான் எப்பவுமே உனக்கு பிரண்ட் தான், நான் என்னைக்கு   அண்ணி ன்னு கூப்பிட சொன்னேன்”, என்று இவள் கேட்டாள்.

       அவனும் “ஏன் சொல்லித்தான் பாரேன்”, என்றான்.

     இவ்வளவு அவனை முறைத்தப்படி “போடா, அவசரப்படாமல் இரு, கேட்டு சொல்றேன்”, என்று சொன்னவள்,

    இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி என்னும் சூழ்நிலையில் நந்தினிக்கு அழைத்து பேசினாள்.

    “எப்படி இருக்க, எப்படி போகுது எக்ஸாம், இந்த தடவ கிளியர் பண்ண வாய்ப்பு இருக்கா”, என்று கேட்டாள்.

    “ட்ரை பண்றேன் , உன்  ப்ரண்ட் ஒரு அட்ம்ட்க்கு அப்புறம் தான் கிளியர் பண்ணி இருக்கான், நான் என்னத்த யோசிப்போம், ஆனா இந்த தடவை எப்படியாவது கிளியர் பண்ணனும் டி பிரேயர் பண்ணிக்கோ”, என்று சொன்னாள்.

     “நான் பிரேயர் பண்ணிக்கிறேன். நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா”, என்று கேட்டாள்.

    “என்ன ஹெல்ப்” என்று கேட்டாள்.

      “வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள்.

     “அடியை புருஷன் பக்கத்துல இருக்காங்க, உன் பிரண்ட்  ம் பக்கத்துல இருக்காரு, அதெல்லாம் விட்டுட்டு என்கிட்ட தான் பேசணுமா”, என்று கேட்டாள்.

      “கண்டிப்பா உன்கிட்ட தான் பேசணும் வா”, என்று சொன்னாள்.

    “நாளைக்கு வாறேன்”, என்று சொன்னாள்.

     “நாளை கழிச்சு தீபாவளி, நீ நாளைக்கெல்லாம் வரமாட்ட, இன்னைக்கு ஈவினிங் வீடு வந்து சேரு, அம்மா வீட்டுக்கு போவோம், அங்க வச்சு பேசிக்கலாம்”, என்று சொல்லி போனை வைத்தாள். நந்தினியின் வரவுக்காக காத்திருந்தாள்.

     அவள் வந்த பிறகு தன் அம்மாவின் வீட்டிற்கு அழைத்து சென்றவள்,  அவளிடம் முன்பு கேட்ட அதே கேள்வியை கேட்டதோடு இல்லாமல்,

     “இப்போ சிவாவிற்கு வேலை கிடைச்சிருச்சி, நீ எக்ஸாம் எழுது, வேண்டாம் ன்னு சொல்லலை,  ஆனால் நீ ஓகே சொன்னேனா, உங்க வீட்ல நான் கேட்கிறேன், ஜஸ்ட் இது அரேஞ்ச் மேரேஜ் மாதிரியே பார்க்கலாம், நான் அத்தை கிட்ட சொல்றேன்,

   சிவாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்,  இப்ப நீ தான் பதில் சொல்லணும்”, என்று சொன்னாள்.

      அவளும் “லூசு மாதிரி பேசாதடி, எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க, எங்கப்பா பத்தி உனக்கு தெரியும் இல்ல, அக்கா பாரு எவ்ளோ கஷ்டப்பட்டாலும் இன்னும் அந்த லைப்ல தான் இருக்கா, ப்ரெஸ்டிஜ் பாப்பாங்க, அது இது ன்னு பேசுவாங்க”, என்று சொன்னாள்.

    “நான் உங்க அப்பாட்ட பேசுறேன், நீ எதுக்கு இதைப்பற்றி யோசிக்கிற” என்று சொல்லி விட்டு “நான் பேசி பார்க்கிறேன், உன்கிட்ட கேட்டா எனக்கு தெரியாது,  அவளா வந்து கேட்டா நான் என்ன பண்ணுவேன்னு சொல்லிட்டு தூர போயிரு,  ஒருவேளை உங்க அப்பா ஓகே சொல்லிட்டாருன்னா, நீ சம்மதிச்சிரு”, என்று சொன்னாள்.

     “என்ன பழிவாங்குறீயா, உன்ன சிவாவோட அண்ணனை கல்யாணம் பண்ண சொன்னதுக்காக, இப்போ என்னை வந்து கோர்த்து விட பாக்குறியா”, என்று கேட்டாள்.

    “ஹலோ மேடம் யோசிச்சு பேசணும், என் பிரண்ட்க்கு என்ன குறைச்சல்,  என்ன குறை ன்னு வேண்டாங்கிற” என்று கேட்டாள்.