அவர்களை அனுப்பி விட்டு சோபாவில் ஒரு ஓரமாக அமர்ந்தவள், தனது செல்போனை எடுத்து நண்பர்கள் அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கியிருந்தாள்.
ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தவள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் பார்த்து விட்டு நிமிரும் போது சற்றுநேரம் சென்றிருப்பது புரிந்தாலும், ஹாலில் யாரும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
‘நம்மள விட்டுட்டு எல்லாரும் எங்க போனாங்க’, என்று யோசித்தவள், சற்று படபடப்போடு அங்கிருந்து எழும் போது கிச்சனில் மெல்லிய குரலில் பேச்சு சத்தம் கேட்டது.
மெதுவாக ஹாலில் இருந்து கிச்சனுக்கு சென்றாலும், அவளுடைய மெல்லிய கொலுசொலி, கையில் அணிந்திருந்த வளையல் ஒளியும் அவள் வருவதை கூற, அங்கிருந்த பெரியவர்கள் “என்ன மது” என்று கேட்டனர்.
“எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா, பயந்து போயிட்டேன் தெரியுமா, என்ன விட்டுட்டு எங்க போனீங்க”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“உன்ன விட்டுட்டு, எங்க போக போறோம், இது உன் வீடு, நீ இங்க இருக்க, நாங்க எங்க போவோம், எங்க அண்ணன் வீட்டுக்கு போவோம்”, என்று அவளத்தையும், அவள் மாமாவின் மனைவியும் சேர்ந்து சொன்னார்கள்.
அவளோ இருவரையும் பார்த்து, “ஆமா இங்க என்ன மீட்டிங் நடக்கு, எல்லாரும் இங்க இருக்கீங்க”, என்று கேட்டாள்.
அங்கு பெண்கள் மாநாடு போல் பெண்களாக கிச்சனுக்குள் குழுமியிருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“எல்லாரும் ஹாலில் உட்கார்ந்து பேச வேண்டியது தானே, அதுவும் இல்லாமல் ரகசியமா எல்லோருக்கும் கிச்சன் ல என்ன வேலை, அப்பவே சாப்பிட்டாச்சி
தானே “, என்று சொன்னபடி அவள் அம்மாவை “நீங்க எப்போ இங்கே வந்தீங்க” என்று கேட்டாள்.
அவரோ பிரிட்ஜில் இருந்து மாவு எடுத்து கொண்டு, “எக்ஸ்ட்ரா தோசை ஊத்த வேண்டியது இருந்தது, அதுக்கு தான் வந்தேன் ” என்றார்.
சிவாவின் அம்மாவும் அதற்கு சற்று தள்ளி நின்றார். பின்பு அனைவரும் ஹாலுக்கு வந்தனர், அங்கு மதுவின் வீட்டு பெரியவர்களாக பெண்களும், சிவாவின் வீட்டு முக்கிய சொந்தங்களாக சில பெண்களும் மட்டும் இருந்தனர்.
மற்ற ஒருவரையும் காணோம், “மத்த எல்லாரும் எங்கே” என்று கேட்டாள்.
“எல்லாரும் தூங்க போயாச்சு ,நாங்களும் இப்ப கெளம்ப போறோம்”, என்று சொல்லி விட்டு சிவா அம்மாவிடம் “சரி நீங்க பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு நகர,
“அனைவரும் அவளுக்கு தலையில் பூ போட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க”,என்று சொல்லவும்,
“ஆசீர்வாதம் எதுக்கு “என்று சொன்னவள், அவளை மற்றவர்கள் பார்த்த பார்வையில் தான் அவளுக்கு அன்றைய நாளின் நினைவு வந்தது,
‘அச்சச்சோ’ என்று நினைத்தவள் குனிந்த படியே அவர்களை நோக்கி நகர்ந்தாள்.
“அதெல்லாம் வேண்டாம் நீ அப்படியே இரு” என்று சொல்லி விட்டு ஆளாளுக்கு அவள் தலையில் பூ தூவி ஆசீர்வாதம் செய்து விட்டு அவரவருக்கு தக்கபடி அறிவுரை சொல்லிவிட்டு கிளம்ப தொடங்கினர்.
அதே நேரம் அவளின் மாமா மனைவியும், அத்தையும் சேர்ந்து, “இருங்க அண்ணி நாங்க வந்திடறோம்”, என்று சொல்லி மதுவின் அம்மாவிடம் சொன்னவர்கள்.
அவளை மாடிப்படி முடிவு வரை கொண்டு போய் விட்டு விட்டு, “போ ரூமுக்கு போ, இதற்கு மேல் நாங்க வரமாட்டோம், நீ போய் தூங்கு”, என்று சொல்லி விட்டு கீழே இறங்கிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள்.
கையில் போன் மட்டும் வைத்துக் கொண்டு நிற்க, ‘அய்யோ’ என்று பயத்தில் மனது அடித்தாலும், ‘எப்படி அவன் அறைக்குள் செல்வது’ என்று யோசித்தவள்.
‘பேசாமல் மாடி ஹாலில் இருக்கும் சோபாவில் இருந்து கொள்ளலாமா’ என்று யோசனையோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே,
யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற, நிமிர்ந்து பார்த்தவளை அறையின் வாசலில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான் சரண், “என்ன ஐடியா பண்ணிட்டு இருக்க, அந்த சோஃபா வில் படுத்துக்கலாமா. ன்னா” என்று கேட்டான்.
வேகமாக தலையை அசைத்தவள், மீண்டும் இல்லை எனும் விதமாக தலையாட்ட,
“உள்ளே வா” என்று கூப்பிட சற்று தயங்கிய படியே அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.
அவனோ “மது உனக்கு வர்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லு, நான் வந்து உன்னை தூக்கிட்டு வரேன்”, என்று சொல்லவும்,
“இல்ல வேண்டாம்” என்று படபடப்பாக சொன்னவள், கையில் செல்போனை இறுக்கமாக பிடித்தபடி அறை வாசல் வரை வந்தாள்.
அவன் அறை வாசலில் நிற்பதை பார்த்து விட்டு அவளும் அங்கேயே நிற்க.,
அவனோ “நீ உள்ள போ வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன் மாடி ஹாலில் இருந்த விளக்கை எல்லாம் அணைத்து விட்டு அறைக்குள் வர அப்போது வாசலில் உள்ளே நுழைந்தவள் வாசலில் சற்று தள்ளியே நின்று கொண்டிருந்தாள்,
அதை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது, எதுவும் சொல்லாமல் அவள் தோளில் கை போட்டபடி தன்னோடு சேர்த்து பிடிக்க, பதறி அவனிடம் இருந்து விலக நினைத்தவளுக்கு அது சற்றும் பலனளிக்காமல் போனது.
அப்படியே தோளை பிடித்து கட்டில் அருகில் கூட்டி வந்து அமர வைத்தவன், அவளருகே அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து தன் கையோடு சேர்த்து கொண்டான்.
அவளது செல் போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தான். அதை பார்த்ததுமே அவளுக்கு கைகள் சில்லிட்டு போக தொடங்கியிருந்தது.
அவனும் எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக அவளிடம் பேச தொடங்கினான்.
“என்ன ஆச்சு மது, ஏன் இவ்வளவு டென்ஷன்” என்று கேட்டான்.
“ஒன்னும் இல்லையே” என்று சொன்னவள் அவனிடமிருந்து கையை உருவ முயற்சி செய்தாள்.
எதுவும் சொல்லாமல், “என்ன ஆச்சு” என்றான்.
“இல்ல கொஞ்சம் கையை விடுறீங்களா” என்று கேட்டு அவள் அவனிடமிருந்து கட்டாயப்படுத்தி கையை உருவிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்.
“ஏன் என்ன ஆச்சு உட்காரு” என்றான்.
“இல்ல நான் அந்தப்பக்கம் போறேன்”,என்றாள்.
“ஏன் என்னாச்சு” என்று கேட்டபடியே அவளோடு சேர்ந்து எழுந்தவன், அவளை மெதுவாக அணைத்தபடி “சொல்லு மது என்ன”, என்று கேட்டான்.
அவளது தோளில் அவனது நாடி வைத்திருந்தான். அவள் உயரத்திற்கு ஏற்றாற் போல் குனிந்து வைத்திருக்க, அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“நீங்க அன்னைக்கு நான் கேட்கும் போது, சரி சொன்னீங்க, இன்னைக்கு ஹக் பண்றீங்க” என்றாள்.
“அது, உனக்கு நான் எப்ப சரி சொன்னேன்” என்று கேட்டான்.
“இல்ல நீங்க சொன்னீங்க, மாடில வச்சு பேசும்போது நீங்க சொன்னீங்க” என்று சொன்னாள்.
“என்ன சொன்னேன் திருப்பி சொல்லு”, என்று கேட்டான்.
இவளுக்கும் குழப்பமாகி விட்டது, ‘மாடியில் வைத்து சொன்னது மாதிரி கனவு கண்டேனா’ என்று யோசிக்கவும் செய்தாள்
“அது கனவா நிஜமா ன்னு அப்புறமா யோசி”, என்று சொன்னவன்,
“அது எனக்கு கல்யாணம் அப்படி ன்ற மைன்ட் செட் இன்னும் வரல, அதனால எனக்கு கொஞ்சம் டைம் வேணும் னு சொன்னேன்” என்று தயங்கி தயங்கி அவனிடம் சொன்னாள் .
அவனும் “ஆமா சொன்னேன், ஆனா அப்ப நான் என்ன பதில் சொன்னேன்” என்று சொன்னவள், “சரி ன்னு சொன்னீங்க” என்று அவள் முகத்தின் அருகே தெரிந்த அவன் முகத்தை திரும்பி பார்க்க,
“என்ன சொன்னேன் ன்னு நான் சொல்லட்டா,சரி பார்க்கலாம்னு சொன்னேன், ஆனா ஓகே, நீ சொல்றதுக்கு சரி னா, சொன்னேன். என்று கேட்டான்.
‘இல்ல, நீங்க பேச்சு மாறி பேசுறீங்க “, என்றால் தயங்கி மெதுவாக,
அதற்கு அவனும் “என் பேச்செல்லாம் மாற்றம் எதுவும் இல்ல பார்க்கலாம்னு சொன்னேன், வேற ஒன்னுமே சொல்லல, இப்பவும் சொல்றேன் ஓகே பார்க்கலாம், ஆனா அதுக்காக நான் உன்கிட்ட இருந்து தள்ளி இருப்பேன் ன்னு சொல்லலையே, நீயும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தானே சொன்ன., என்னை ஹக் பண்ண கூடாது, என்னை கிஸ் பண்ண கூடாதுன்னு ஏதும் சொன்னீயா” என்று சொல்லியபடி அவள் கன்னத்தில் ஆழமாக அழுத்தமாக தன் முதல் முத்தத்தை பதித்தான்.