அவனும் சேர்ந்து அவளோடு பேசிக்கொண்டே நடந்து வர, தோழிகளோடு சேர்ந்து வந்து சேர்ந்து கொண்டாள், சரணின் சித்தப்பா மகள்.
மதுவை சரணின் அருகில் அமர்த்தப்பட்ட பிறகு கண்ணிமைக்கும் பொழுது ஆக நேரம் ஓடி மறைந்தது போல தோன்றியது, மந்திரங்கள் ஓத பெரியவர்கள் ஆசியோடு, அட்சதை தூவ கெட்டி மேளம் முழங்க சரண் கட்டிய திருமாங்கல்யம் மதுவின் கழுத்தில் ஏறியது,
தாலி கட்டும் போது தலை குனிந்து அதை வாங்கிக் கொண்டவளுக்கு தன் மார்பில் விழுந்த மஞ்சள் சரடில் இருந்த தாலி, நீ அவன் மனைவி என்பதை அழுத்தமாகச் சொல்லியது, அதன் பிறகு நடந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிய வீட்டு பெரியவர்கள் மட்டும் ஆசீர்வதித்து முடித்திருந்தனர்.
இனி அலுவலகம் சார்ந்த மக்களும், மற்றவர்களும் வருவார்கள் என்ற விதத்தில் அவன் உடை மாற்றி வரச் சென்றான்,
அது போலவே சற்று நேரத்தில் உடைமாற்றி வந்த சரண், மதுவிற்கு வித்தியாசமாகவே தெரிந்தான்.
எப்போதும் வீட்டில் சாதாரண வீட்டிற்கு அணியும் உடையோ, அல்லது நார்மல் பார்மல் டிரஸோ அணிந்து பார்த்து இருந்ததால், இன்று சற்று வித்தியாசமாகவே அவளுக்கு தோன்றியது.
எப்போதாவது ஊரில் வேலையில் இருந்து நேரே வந்தால், பிளாக் அண்ட் ஒயிட் ல் மட்டுமே வருவான், அது அவன் அணியும் யூனிஃபார்ம் என்று தெரியும், இன்று அதற்கு மேல் கோர்ட் அணிந்து கோட் சூட்டோடு பார்ப்பதற்கு அவனின் கம்பீரம் கூடியது போலத் தோன்றியது. பார்த்தவுடன் உடனே தெரிந்து கொண்டதால், தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து நின்றவன்,
“என்ன, பார்வை பலமா இருக்கு”என்றான்.
“ஒன்னும் இல்ல” என்று சொல்லியபடி தலை திருப்பினாலும், ‘அய்யோ இவன் வேற மூஞ்சில இருந்தே படிப்பானே’ என்று நினைத்துக் கொண்டவள்,
“மனசுல கூட எதையும் நினைக்க முடிய மாட்டீக்கே” என்று தனக்குள் முனங்கி கொண்டே அமைதியாக இருந்தாள்.
“என்ன நீ உன்னையே திட்டிக்கிற, என்ன விஷயம்”, என்று கேட்டான்.
“இதுவுமா தெரியுது” என்று யோசித்துக் கொண்டே “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நானே திட்டிக்கலை”, என்று சொன்னவள், அமைதியாக நின்றாள்.
அதற்குள் அவளுக்கும் நெற்றியில் திருநீறு குங்குமம் போன்றவற்றை சரி செய்து விட்டு போவதற்கு அழகு நிலைய பெண் வந்து சரி செய்ய தொடங்க, அவளது தோழிகளும் சரணது உறவு பெண்களும் அருகில் இருந்தனர்.
சற்று நேரத்தில் இருவரும் வருபவர்களை வரவேற்க தயாராக நிற்க, அதன் பின் ஒவ்வொருவராக வர அவர்களுக்கு நேரம் சரியாக தான் இருந்தது,
எதையும் யோசிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு வந்தவர்கள், அவனிடம் நடந்து கொண்ட மரியாதையே பார்க்கும் போது அவள் மனது நினைக்க தோன்றியது , ‘ஐயோ மனசுல நெனச்சா கூட கண்டுபிடிப்பாங்களே’ என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாலும்,
அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது, இவனிடம் வாய்யடிக்காவிட்டாலும்,
சிவாவிடம் எத்தனை முறை கேலியும் கிண்டலுமாக பேசியிருப்பாள், “உங்க அண்ணன் என்ன பெரிய பஞ்சாயத்து தலைவரா”, என்று,
ஆனால் இன்று மனதிற்குள் “உண்மையிலேயே பெரிய பஞ்சாயத்து தலைவர் தான் போல, ஆளாளுக்கு மரியாதை கொடுப்பது பார்த்தா அப்படித்தான் இருக்கும் போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததோடு,
மேடம் என்றும், அம்மா என்றும், அழைக்க சற்று கூச்சமாக இருந்தது ,
‘ஐயோ இது என்ன, மேடம் ன்றாங்க, அம்மா ன்றாங்க’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,
அவ்வப்போது கேள்வியாக அவனைத் திரும்பிப் பார்க்க, அவனும் “என்ன அப்படி பார்க்கிற”, என்று கேட்டான்.
“இல்ல ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.
“ஓகே, ஓகே உன்னோட சந்தேகம் எதுவா இருந்தாலும், அப்புறம் கேட்கலாம், இப்ப கொஞ்சம் ஃப்ரீயா இரு”, என்று சொல்லி விட்டு அவ்வப்போது அவளை கவனிக்கவும் தவறவில்லை.
மாலை நேரம் அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்த போது தோழிகள் உடனிருந்து அவளை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
“இதுபோல தான் பா, சினிமா ல ஒரு பாட்டு வரும்” என்று சொல்லி பாடல் வரிகளை பாடி காட்டி அவளை கிண்டல் செய்தனர்.
“தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு, மாடி கொண்ட ஊஞ்சல்,
மடிமேல் கொஞ்சும் பூனை, சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு,
அந்த நிலை இங்கே இல்லை, அனுப்பி வைக்க வழியே இல்லை,
அழுவதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் தொல்லை,
போனவுடன் கடிதம் போடு, புதினாவும் கீரையும் சேரு, புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை,
ஏன் என்றால் சுவர் தான் உண்டு, தூரம் இல்லை இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா, வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா”
அவள் அமைதியாக இருந்தாலும், ஆனால் சிரிப்பு என்பது வரவில்லை, என்றாலும் அவர்களைப் பார்த்த பார்வையில் கொலை வெறி இருந்தது.
அதே நேரம் சிவா வந்து, “இந்த ஒரு வாரம் தான், அப்புறம் எங்க அண்ணன் கூட ஊருக்கு போய்ருவா தானே, அப்ப இதே மாதிரி லெட்டர் போடு, போன் பண்ணு ன்னு,நாங்க எல்லாம் சொல்லி அனுப்புவோம், அப்படித்தானே மது”, என்று கேட்டான்.
அவனை அடிக்க ஏதாவது இருக்கிறதா என்று தேட, “இங்க பாரு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க, யாரையாவது அடிக்க வேண்டியது தானே, அதென்ன என்னையவே அடிக்க அடிக்க வர்ற, இனி அடிக்க கூடாது”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“அடிக்கக் கூடாதா, இருடா உனக்கு இருக்கு” என்று அவள் அவனை கையைக் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் போது,
அதுவரை நண்பர்களோடு வெளியே பேசிக் கொண்டிருந்தவன் வீட்டிற்குள் வந்தான்.
அவளின் அருகே வந்து அமர்ந்தான். அவள் தோழிகளோடு சேர்ந்து சிவாவும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், “இந்த பொண்ணுக கூட தான் இருப்பியா” என்று கேட்டான்.
“உனக்கு பொறாமை, பொறாமை, உன்னால இப்படி உட்காந்து பேச முடியல இல்ல, அதான் வேற ஒன்னும் இல்ல,
“உன்னை கல்யாணம் பண்ணின உடனே உன்னை மாதிரி பேசுறான், இது சரி இல்ல, கொஞ்சம் சொல்லி வை, உன் புருஷன்கிட்ட” என்று சொல்ல அவளோ அவனை கொலை வெறியோடு திரும்பிப்பார்த்தாள்.
“ஆத்தி பத்திரகாளியா இல்ல இருக்கா, எனக்கு இது தெரியாம வந்து பேச வந்துட்டேனே” என்று சொல்லி விட்டு எழுந்து சென்றவன்,
“உன் பாடு திண்டாட்டம் தான் போ, அவ பத்திரகாளி ரூபத்தில் இருக்கா”, என்று சொல்லிவிட்டு ஓடினான்.
இவளோ செல்லும் அவன் முதுகையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள், தோழி “நாங்க கிளம்பட்டுமா” என்று சொல்லி கொண்டு இருந்தனர்.
அதற்குள் மதுவின் அம்மாவும், சிவாவின் அம்மாவும் வந்தனர்.
“சாப்பிட்டு போலாம், எல்லாருக்கும் சேர்த்து தான் சாப்பாடு சொல்லிருக்கு, சாப்பிட்டு அப்பறமா கிளம்புங்க, அது வரைக்கும் உங்க பிரண்டு கூட இருங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதே நேரம் தோழிகள் சும்மா இருக்காமல் மதுவின் அம்மாவிடம், “ஆன்ட்டி உங்களுக்கு கஷ்டமா எதுவும் ஃபீல் இருக்கா, அவளை வேற எங்கேயோ கல்யாணம் பண்ணி கொடுத்தா, கொஞ்சம் வருத்தம் அழகெல்லாம் வரும் தானே, இப்ப அழுகை வருதா?”, என்று கேட்டாள்.
“நான் எதுக்கு வருத்தப் போறேன், ஏறக்குறைய பாதி நேரம் சிவா கூட இங்க தான் இருப்பா, அப்புறம் என்ன புதுசா மாறப்போகுது, வீட்டில் இருக்குறத, இங்க இருக்கா அவ்வளவு தான்”, என்று சொல்லி விட்டு சென்றார்.
இவளோ ‘பாவிங்களா கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
‘இதுக்குதான் என்னை கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க முடிவு பண்ணி இருந்தாங்க போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
இரு வீட்டு உறவினர்களும் ஒன்றாக அமர்ந்து பேசுவதை பார்க்க, “இது போல இருப்பது எல்லாம் நடக்காது” என்று நந்தினி சொல்லிக் கொண்டிருந்தவள்.
“நீ கொடுத்து வச்சவடி, இங்க பாரு”, என்று சொல்ல மதுவும் அவர்கள் பேசுவதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவளிடம், நந்தினி தான் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள், “சில வீட்டில் மாப்பிள்ளை வீட்டு கெத்து அப்படின்னு சொல்லி ஏதாவது சொல்லி பிரச்சினை கிளப்ப டிரை பண்ணுவாங்க,அது இது ன்னு பேசுவாங்க, ஆனா இந்த மாதிரி இரண்டு பேர் குடும்பமும் ஒரே மாதிரி உட்கார்ந்து பேசுவது எல்லாம் தனி தான் தெரியுமா”, என்று சொன்னாள்.
அருகில் உள்ள தோழியோ “அவங்க சின்ன பிள்ளையில் இருந்து பக்கத்து பக்கத்து வீட்ல இருக்காங்க இல்ல, அப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரியும் தானே, அப்படி இருக்க போய் தான், உங்க வீட்ல குடுத்தே ஆகணும் நினைத்திருப்பாங்க”, என்று சொன்னாள்.
மற்றவர்களும் சேர்ந்து இருந்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர்.
இவ்வளவு எதுவும் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒரு வீடு போல சேர்ந்து அமர்ந்து பேசுவது தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்போது கிச்சனிலிருந்து வெளியே அந்த மதுவின் தாய்மாமா மனைவி, “உன் பிரண்ட்ஸ் எல்லாம் பேசிட்டு இருக்கட்டும் , நீ வந்து குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்து உட்காரு”, என்றார் .
“சரி வீட்டுக்கு போயிட்டு வரலாமா” என்று கேட்டாள்.
“ஏன் அப்ப இது வீடு இல்லையா”, என்றார்.
சொல்ல அவளும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மாடியிலிருந்து குளித்துவிட்டு உடை மாற்றி கீழே வந்த சரணும் அவளை தான் பார்த்துக் கொண்டே வந்தான்.
தற்செயலாக அவனை பார்த்தவள், ‘அய்யோ முகத்தை பார்த்தே கேள்வி வேற கேட்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அமைதியாக எழுந்து அத்தை அருகே நிற்க, மதுவின் அத்தையோ ஏதோ சர்வ சாதாரணம் போல அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மாடிக்கு போக சொன்னவனிடம் அத்தை மெதுவான குரலில் பேசிக் கொண்டே இவளை பார்க்க இவளோ தோழிகள் இருந்த பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
மதுவின் அத்தை அவளருகே வந்து “வா” என்று அழைத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டில் அவளுக்கென அவள் அம்மா துணிகள் எடுத்து வைத்திருந்த பையை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றனர்.
அமைதியாக அவர் பின்னோடு மாடிக்கு சென்றவளுக்கு சரணின் அறை காட்டப்பட்டது.
“போ குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.
“அத்த அடுத்தவங்க பாத்ரூம் யூஸ் பண்ணுற பழக்கம் இதுவரைக்கும் இல்ல” என்று சொன்னாள்.
“இதுவரைக்கும் வேற இனிமேல் அப்படி இருக்கக் கூடாது, இது உன் வீடு, உன் ஹஸ்பென்ட் ரூம் யூஸ் பண்ற அப்படி ன்னு நினைச்சிக்கோ”, என்று சொல்லிவிட்டு அவர் மாடியில் இருந்த ஹாலில் அமர்ந்து விட்டார்.
வேறு வழியில்லாமல் அறைக்கு சென்றவள், குளிக்க கிளம்ப, அறைக்குள் கதவைத் தட்டிக் கொண்டு வந்த மது அத்தை அவள் கட்டவேண்டிய புடவையை கையில் கொடுத்து, “இதை கட்டிக்கொண்டு வா” என்று சொல்லிவிட்டு “கதவை சாத்திக்க நான் வெளியே இருக்கிறேன், சீக்கிரம் குளிச்சிட்டு வா” என்று அவளது அலங்காரங்களை கலைக்க உதவி செய்து விட்டு , “புடவை மட்டும் அவுத்து இப்படி போடு”, என வாங்கி மடிச்சு போட்டுவிட்டு.,
‘உடனே மடித்து உள்ளே வைக்கக் கூடாது, கொஞ்ச நேரம் ஆகட்டும்”, என்று சொன்னாள்.
“சரி” என்று சொன்னபடி அவர்கள் சொன்னதை செய்து விட்டு குளிக்க சென்றாள், குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தவளுக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், ஆனால் இந்த உடையில் இருக்க சொல்வது எரிச்சலாக இருந்தது,
அத்தை அவள் தலையை உதறி மீண்டும் பின்னலிட்டு கொண்டிருக்க,
“ஏன் அத்த புடவை தான் கட்டணுமா, அதான் நைட் ஆக போகுது தானே, எனக்கு நைட் டிரஸ் தாங்க” என்று கேட்டாள்.
“அடியே உன்ன கல்யாணம் பண்ணிட்டு, அந்த பையன் என்ன பாடு பட போறேன்னு தெரியலையே”, என்று சொன்னார்.
“அத்தை” என்று சொன்னவள் அதன் பிறகு நினைவு வந்தவளாக, “இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே, கேட்டீங்களா”, என்று சொன்னனாள்,
“எப்படினாலும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிட்டு போயாகணும், அப்புறம் இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன், அதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன் னா என்ன அர்த்தம்”, என்று சிரித்தபடி அவள் கண்ணம் கிள்ளி,
“இப்போ உள்ள பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எதுவும் இல்ல, இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும், எதுவும் தனியா சொல்லிக் கொடுக்கனும் ன்னு அவசியம் இல்ல, கீழே வா உன் பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிடுறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, வந்து சாப்பிட்டுட்டு கீழே கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்துட்டு அப்புறம் மேலே வரலாம்”, என்று சொன்னார்.
அவளுக்கு தான் முகம் முழுவதும் வெட்கம் பூசிக்கொண்டது, ‘ஐயையோ இத வேற என்ன சொல்லுவாங்க, தெரியலையே’ என்று யோசித்தவள்.
‘இல்ல டைம் கேட்டிருக்கேன் அதை புரிஞ்சுபாங்க’ என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் டைம் கேட்டதை நினைவுறுத்தும் போது, அவனின் குறுக்கு விசாரணைக்கு அவளின் பதில் எப்படி இருக்குமோ?,
ஒருவரின் முதிர்ச்சி அவர் எவ்வளவு
வயதில் உள்ளார் என்பதில் இல்லை..
எவ்வளவு அனுபவத்தையும்
அறிவையும் கொண்டிருக்கிறார்
என்பதில் தான் இருக்கிறது..!