அவளது அறை, அவளது வாசனை மனதுக்குப் பிடித்த அவளின் அருகாமை அவன் தடுமாறாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவள் வேண்டும் என்று அவனது ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால் அவளை நெருங்கவும் பயமாக இருந்தது.
“லைட் ஆப் பண்ணிட்டு படுங்க. குட் நைட்”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். சில பல நொடிகள் அமைதியில் கழிந்தது.
“அப்போ அவ்வளவுதானா மங்கை? இன்னும் உன் கோவம் போகலையா? இன்னைக்கு எதுவும் கிடையாதா?”, என்று ஏக்கம் கலந்த குரலில் கேட்டான்.
ஒரு நொடி அவனை நெருங்கி வந்தவள் அவன் பின்னந்தலையை கையால் வளைத்து பிடித்து அவன் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள். ஒரு நொடி அதிர்ந்து விட்டான் பார்த்திபன்.
அவள் ஆழ்ந்த முத்தத்தில் அவள் இடையில் பதிந்திருந்த அவனது கரத்தின் அழுத்தம் அதிகரித்தது. அவளை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவன் அவளது இதழ் முத்தத்தின் அழுத்ததை அதிகரித்தான்.
ஆரம்பம் மட்டுமே அவளது செய்கையாக இருந்தது. இப்போது அவனது இதழ்கள் அவளது இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தது. அவ்வளவு ஆசையாக அவள் இதழ்களைச் சுவைக்க அதற்கு மறுப்பே சொல்லாமல் இசைந்தாள்.
அவன் மூச்சுக் காற்றில் வெப்பம் அதிகரிக்க அவன் உடல் அவளைக் கேட்டது. அவன் வேட்கையை உணர்ந்தவளுக்கு அவனை விட்டு விலகவே துளி கூட விருப்பம் இல்லை.
இருவரது மூச்சுக் காற்றும் ஒன்றுடன் ஒன்று கலக்க அந்த அளவு இருவரும் ஒட்டிக் கொண்டார்கள். அவனது கரம் முதல் முறையாக அவள் தேகத்தில் பயணித்தது.
அவள் அதிர்ந்து அவனைப் பார்க்கும் போதே அவனது கரம் அழுத்தமாக தவிப்பாக அவனைப் பயர்த்தாள். “என்ன டி பிடிக்கலையா?”, என்ற கிசுகிசுப்பான குரல் அவள் செவியைத் தீண்டியது.
அவனுக்கு மறுக்க எதுவும் இல்லை தான். ஆனால் முதல் முறை இப்படி ஒரு அந்தரங்கமான தீண்டல் அவளை ஒரு வித படபடப்புக்கு உள்ளாக்கியது.
அவள் கண்களில் பயத்துடன் கூடிய மயக்கம் தெரிய அதை அவ்வளவு அருகில் பார்த்தவனுக்கு மேலும் போதை ஏறியது மட்டும் நிஜம்.
அவள் மனது புரிந்தாலும் அவள் சம்மதம் வேண்டி அவன் விலகி அமர அவன் விலகியதும் அவள் அவனை நிமிர்ந்து பயர்த்தாள்.
“சாரி, என்னையே அறியாம”, என்று அவன் சொல்ல அவன் விலகியது தான் அவளை அதிகம் பாதித்தது.
“பிடிக்கலைன்னு நான் எப்ப சொன்னேன்? எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல அதற்கு மேல் அவனால் அவளை விட்டு விலகி இருக்க முடியவில்லை.
அவன் இதழ்கள் அவள் தேகத்தில் இறங்கி பயணிக்க அவளுக்கு உலகம் மறந்து தான் போனது. அவனது நாசி அவள் வாசனையை உணர அவன் சிகை கோதி அவன் செய்கைகக்கு ஒத்துழைத்தாள்.
அவன் இதழ்கள் அவள் இதழ்களைத் தேடிப் பூட்டிக் கொள்ள அவள் விரல்கள் அவன் வெற்று முதுகில் சற்று அழுத்தமாகவே பதிந்தது.
அவன் கரம் அவளை முழுதாக உணர இதழ்கள் அவளை கொள்ளை கொள்ளும் முயற்சியில் இறங்கிக் கொண்டிருந்தது. அவனது நெருக்கத்தில் தினறினாலும் அவன் மோகத்தில் முக்குளித்தாள்.
அவளது சிணுங்களும் காலின் கொலுசொலியும் மட்டுமே அந்த அறையை ஆக்கிரமிக்க அவனது வேக மூச்சும் அதில் சேர்ந்து கொண்டது. அவளுடன் முழுதாக கலந்து விலகியவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மங்கையர்க்கரசி.
அடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் தேனிலவு நாட்கள் தான். அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தார்கள். அதற்கு பின் இருவரும் அவரவர் வாழ்க்கை ஓட்டத்தில் கலக்க இப்போது வர கனகாவுக்கு இப்படி ஆனது அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் சந்தானம் குடும்பத்தார்.
கனகாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்கு கோதையிடம் தான் பேசினார்கள். கனகாவுக்கு இப்படி ஆனது அவளுக்கு வருத்தம் தான் என்றாலும் அவளுக்கு பணிவிடை செய்ய கோதைக்கு மனது வரவில்லை.
“என்னை தப்பா நினைக்காதீங்க மாமா, அவளை பாத்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு தான். ஆனா என்னால அதை முழு மனசா செய்ய முடியுமான்னு தெரியலை. உங்க கிட்ட பாத்துக்குவேன்னு பொய் சொல்லவும் நான் விரும்பலை. சாப்பாடு என்னால மூணு வேளையும் செஞ்சு கொடுக்க முடியும். ஆனா அவளுக்கு ஊட்டவோ அவளுக்கு பணிவிடை செய்யவோ என்னால முடியாது. முன்னாடி இருக்குற ரூம்ல இருக்க வைங்க. சாப்பாடு நான் செஞ்சு தந்துறேன். ஆனா அவளைப் பாத்துக்க ஒரு ஆள் மட்டும் போட்டுருங்க”, என்று சொல்லி விட்டாள். அதுவும் கனகா முன்னிலையில் மருத்துவமனையில் வைத்து தான் சொன்னாள்.
அதைக் கேட்டு கனகா கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அது எதனால் என்று யாருக்குமே தெரிய வில்லை. ஒரு வழியாக அவளை வீட்டுக்கு அழைத்து வந்து அந்த வீட்டுக்கு பாரமாக ஒரு அறையில் போட்டார்கள்.
உடலில் அசைவு மட்டும் இருந்தது. ஆனால் எல்லாமே படுக்கையில் தான் என்றானதும் அவ்வளவு கொடுமையாக இருந்தது கனகாவுக்கு. பார்த்துக் கொள்ள ஒரு பணிப் பெண்ணை சந்தானம் வைத்து விட்டார். ஆனாலும் காலைகடன்களை கழிக்க கூட அந்த பெண்ணின் உதவியை நாடுவது அவ்வளவு அசிங்கமாக இருந்தது கனகாவுக்கு.
சீக்கிரம் சாவு வராதா என்று அவள் மனம் எதிர்பார்க்க அதை கடவுள் அவ்வளவு சீக்கிரம் கொடுக்க போவதில்லை என்பதை அவள் அறிய வில்லை.
சுமார் ஒரு மாதம் கழித்து தான் கனகாவுக்கு இப்படி ஆனது அனைவருக்கும் தெரிய வந்தது. சேது உட்பட அனைவரும் வந்து பார்த்தார்கள். ஆனால் யாருக்குமே அவளைக் கண்டு பரிதாபம் வரவில்லை.
“நம்ம வீட்டுக்கு வேணா கூட்டிட்டு போகலாமாங்க?”, என்று கேட்டாள் மங்கை.
“எனக்கு அப்பாவோட நிம்மதி முக்கியம் மங்கை. இங்கயே எல்லாரும் நல்லா தானே பாத்துக்குறாங்க. பாக்க ஆள் இல்லைன்னா கவலைப்படலாம். இப்ப தேவை இல்லை”, என்று சொல்லி விட்டான்.
சேதுவைக் கண்டு கனகாவின் கண்கள் எப்போதும் விட சற்று அதிகமாக கலங்க அவளை இமைக்காமல் பார்த்தாரே தவிர அவளிடம் ஒற்றை வார்த்தை பேச மனதில்லை. அப்படியே திரும்பிச் சென்று விட்டார்.
கனகாவின் பார்வை ஏக்கமாக அவரைப் பார்க்க அவர் திரும்பியே பார்க்க வில்லை. எப்படி முடிந்த காலம் திரும்ப வராதோ அது போல தான் தொலைந்து போல சிலரின் நேசமும் திரும்ப வரவே செய்யாது.
கவின் மற்றும் கயல் இருவரும் கல்லூரிப் படிப்பில் அடி எடுத்து வைத்தார்கள். அவர்கள் காதல் நிறைவேறுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சேது பிள்ளைகளுடனும் நண்பன் சந்திரனுடனும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
மங்கை மற்றும் பார்த்திபனின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக நிம்மதியாக சென்று கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவனை மயக்கிய மங்கையை தவிர வேறு யாராக இருக்க முடியும்?
இனியும் அவர்கள் வாழ்க்கை அவ்வாறு செல்லும் என்றும் நம்புவோம்.. வாழ்க வளமுடன்.