தந்தைதான் “இப்போது அப்பா அம்மா வேண்டாம்.. நீங்களே பார்த்துப்பீங்க” என்றார்.
பெண்ணவள் “அப்பா.. அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க எங்கிட்ட பேசவேயில்ல..” என்றாள்.
தந்தைக்கும் என்ன சொல்லுவதென தெரியவில்லை “ஆல்ரைட்.. ஈவ்னிங் சீக்கிரமாக வீடு வா.. வேலையை பார்..” என்றார் எப்போதான குரலில்.
பெண்ணவள் “சாரி ப்பா..” என்றாள்.
“ஈசியான வார்த்தைதானே.. சொல்லு. நான் போய் அவங்ககிட்ட எப்படி சாரி சொல்லுவேன்” என்றார். தர்மசங்கடம் தானே.. பெண்ணினையும் விட்டுக் கொடுக்காமல், அவர்கள் மனமும் புண்படாமல்.. என்ன காரணம் சொல்லுவார் இவளை பெற்றவர். எல்லா உறவுகளும் ஒருசில நேரம் நம்மை சோதித்தே தீரும்.
பெண்ணவள் கண்களில் இப்போதும் கண்ணீர்.. “அப்பா..” என்றாள்.
“வேலையை பாரு.. நான் வைக்கிறேன்” என்றார். என்ன பேசுவதென தெரியவில்லை. பெண்ணவளும் அழைப்பினை துண்டித்தாள்.
தந்தைக்கும் மகளுக்கும் வேலை ஓடவில்லை.
இது இப்படியேதான் தொடர்ந்தது.
சிவகுமாரின் அக்கா மூலமாக.. வர்ஷினிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டினரிடம் பேசினர். முதல்நாள் இரவே சட்டென சிவகுமாருக்கு உடல்நலமில்லாமல் போனதால். அவர்கள் இப்போதைக்கு திருமணம் செய்யவில்லை பெண்ணுக்கு.. தவறுக்கு மன்னிக்கவும் என பேசியிருந்தனர். ஆனால், அதன்பின் சிவகுமாரின் அக்கா இன்னமும் தம்பியிடம் பேசவில்லை.
இன்னமும் எதுவும் சரியாகவில்லை. விஜயா கண்டிப்பாக சரியாகவில்லை. பெண்ணை பார்க்கவும் பேசவும் இல்லை.
மதுதான் வாய்விட்டு திட்டினாள்.. “லவ் பண்றவ.. ஒருவருஷம் முன்னாடியே செய்திருக்க வேண்டியதுதானே. கல்யாணம் செய்து குழந்தையிருக்க வேண்டிய வயதில் காதல். ஏன் டி அவனை உனக்கு ஸ்கூல் டைமிலிருந்து தெரியும்தானே.. இப்போதான் ப்ரொபோஸ் பண்ணினானா.. இத்தனைநாள் என்னதான் செய்தீங்களோ.. இப்போ பாரு எல்லோருக்கும் கஷ்ட்டம். அப்பா என்னமோ உன்னை போரீன் அனுப்பமாட்டேன்குறார். அவர் இப்படி நினைக்கிறார்ன்றதே இப்போதான் சொல்றார். என்னதான் நடக்குது நம்ம குடும்பத்தில்.” என தங்கையை வசை பாட தொடங்கி.. கவலையில் முடித்தாள்.
வர்ஷினிக்கு இந்த திட்டுதான் ஆனந்தமாக இருந்தது.. பேசிவிட்டால் கூட பரவாயில்லை.. அப்பாவும் அம்மாவும். அப்பா சிலநேரம் ஏதாவது கேட்க்கிறார் செய்கிறார்.. ஆனால், அம்மா தன் முகம் கூட பார்க்கவில்லை என ஏக்கமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் மது புலம்பி தீர்த்தாள்.
அந்த வார இறுதியில் தர்ஷன் குடும்பம் வந்தது.
அவனுக்கு, வர்ஷினியின் காதல் பிடிக்கவேயில்லை. அதுவும் அந்த நண்பர்கள் கூட்டம் “அப்பா அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகி நின்று போச்சாம். எதுக்கு காம்ப்ளீகேட் பண்ணிக்கிட்டு.. அப்படியே விடுங்க.. அவளே சரியாகிடுவா.. இந்த வருஷம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம் அப்பா. இவளுக்காக நீங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.. மதுவும் அம்மாவும் நீங்க சரியாகவே இல்லைன்னு கவலைபடுகிறார்கள்.” என அவனும் கொட்டி தீர்த்தான், வர்ஷினியின் எதிரேயே.
வர்ஷினி அமைதியாகவே இருந்தாள்.
ஐஸ்வர்யாதான் “வர்ஷிக்கு, காதல் எல்லாம் வருமா.. அதுவும் அப்பாவை எதிர்த்து. நம்ம குடும்பத்தை பற்றி யோசிக்கவேயில்ல வர்ஷினி நீ” என்றாள்.
விஜயா பிடித்துக் கொண்டார் இப்போத்துதான் “என்னமோ பார்த்து பார்த்து வளர்த்துக்கு என் முகத்தில் கரியை பூசிட்டா.. அத்தை நம்மக்கிட்ட இன்னமும் சரியாக பேசவில்லை டா.. அப்பாவிற்கு மனதே சரியில்ல. எதோ உள்ளூர் என்றால் கூட பரவாயில்லை.. வந்த வரங்களை எல்லாம் வெளிநாடு என தட்டி கழித்தோம்.. இப்போது பாரு.. சொந்தமெல்லாம் கேட்க்கும் என்ன பதில் சொல்ல போறோமோ.” என்றார்.. மகனிடம் ஆற்றாமையாக.
தர்ஷன் “வர்ஷினி.. கோவமா வருது. எவ்வளோ காம்ப்ளீகேட் பண்ற எல்லோரையும்.. அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு தேவையா.. நல்லா இருந்திடுவியா” என கோவத்தோடு ஆரம்பிக்க.
தந்தை “டேய்..” என்றார் அவன் முடிக்கும் முன்.
வர்ஷினிக்கு இப்போதுதான் நெருடல் வந்தது.. எல்லோரின் எதிர்ப்பும் இப்படி இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை பெண். யார் முகத்தினையும் ஏறிட்டு பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
சிவகுமார் “நான் முன்னாடி பார்த்தவர்களிடம் பேசிட்டேன். நீங்க யாரும் எதற்கும் கவலை படாதீங்க. எல்லாம் பார்த்துக்கலாம்.” என்றார்.
தர்ஷன் “என்னமோ பண்ணுங்க.. அவளை விடுங்க.. நீங்க இன்னமும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க” என்றான்.
சிவகுமார் முறைத்தார் மகனை. அமைதியானான் தர்ஷன்.
அந்த வார இறுதியில் சர்வேஷ்ஷூம் தன் வீட்டில் பேசினான். தன் அக்கா லக்ஷ்மியிடம்தான் பேசினான்.. அன்று விடுமுறை என்பதால் அம்மா வீட்டில் இருந்தாள் லக்ஷ்மி. பிள்ளைகள் எல்லாம் கீழே விளையாட சென்றிருக்க.. மாலை நெருங்கும் நேரத்தில் அழைத்தான்.
சர்வேஷ் “அக்கா.. அம்மா எங்க” என்றான்.
லக்ஷ்மி “இப்போதான் காபி கலக்கப் போயிருக்காங்க.. என்ன டா, சண்டே எங்கள் ஞாபகம்.. ம்.. என்ன பார்ட்டி ஏதும் இல்லையா” என்றாள்.. என்னமோ இன்னமும் அவனோடு விளையாட்டு பேச்சுதான் லக்ஷ்மிக்கு.
சர்வேஷ் “ஏன் பேச கூடாதா.. எப்போதும் நான் பேசிட்டுதான் இருக்கேன். நீ ஒரு கால் செய்யரீயா” என்றான்.
“டேய்.. ப்ளேட்டினை திருப்பாதே.. எங்கடா என் அழைப்பினை எடுக்கிற.. ஆமாம், என்ன அமைதியா பேசுகிறாய்.. என்ன பிரச்சனையா” என்றாள்.
தம்பி “அம்மா எங்க? ஸ்பீக்கர் போடு” என்றான்.
அக்காவோ போனினை எடுத்துக் கொண்டு கிட்சென் வந்தாள் “என்ன டா.. ஏதாவது ஹாட் நியூஸ்சா.. சொல்லு.. என்ன பம்முற.. துர்க்காகிட்ட சொல்லிட்டியா.. அவ ஒரு அமுக்குணி ஒரு வார்த்தை சொல்லல.. என்ன ஓகே ஆகிடுச்சா” என்றாள்.. கிட்சென் வருவதற்குள்.
அன்னைக்கு இதை யூகிக்க முடிந்தது போல “சந்தோஷம் டா.. இங்கிருக்கும் போதே சொல்லியிருக்கானும்.. பேசி அப்போது நிச்சயம் செய்திருக்கலாம்..” என்றார்.
அக்காவும் “அவ்வளவுதானா.. நீ அன்று கொடுத்த பில்டப்புக்கு.. எதோ வெளிநாட்டுகாரி.. இத்தாலி.. ப்ரான்ஸ் ரேஞ்சுக்கு எதிர்பார்த்தோம் டா.. வர்ஷினிதானே எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன்” என்றாள்.
சர்வேஷ் “அம்மா.. அது என்னான்னா, அவங்க அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டாம்ன்னு சொல்கிறார்” என அப்போதுதான் அந்த கண்டிஷனையே சொன்னான்.
லக்ஷ்மி “என்ன வேலையை விட்டுட்டு வரேன்கிறீயா” என்றாள்.
“ஏய் அக்கா கொஞ்சம் சும்மாதான் இரேன்” என்றான்.
அன்னை “பேசிக்கலாம் பா.. உனக்கும் இங்கே வர டைம் ஆகுமில்ல.. பொறுமையாக பேசி சரி பண்ணுவோம். நீ அதெல்லாம் கவலைபடாத. நான் வர்ஷினிகிட்ட பேசுகிறேன். அவளையும் தைரியமா இருக்க சொல்லு..” என்றார்.
தம்பி “அப்புறம் எதுக்கு நீயெல்லாம் இருக்க.. அதைவிட வேற என்ன வேலை லக்ஷ்மி உனக்கு. ஆபீஸ் வேலைன்னு அம்மாவீட்டில் வந்து உட்காந்துக்கிற.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா.. அம்மாவை நான் கூட்டிட்டு வந்திடுவேன். அப்புறம் உன் வீட்டில்தான் நீ இருக்கணும்.. அப்போ அப்போ சமையல் கத்துக்கோ..” என்றான்.. அவனும் நக்கலாக.
“சீக்கிரம் சொல்லுடா.. அவ என்ன சொல்றான்னு கேளு.. அம்மா பிரச்சனையே இல்ல.. நீ அவகிட்ட பேசு” என்றாள்.
“பேசுகிறேன் அக்கா.. பாப்பா என்ன பண்ணுது.. பையன் சத்தத்தினை காணோம்..” என விசாரித்து பேசி முடித்து, வைத்தான்.
மதுவின் கணவர் செந்தில்நாதன் வந்தார்.. அவரின் மாமனார் வீட்டிற்கு.
வர்ஷினியிடம் நல்லவிதமாக பேசினார்.. அவளின் திருமணம் காதல் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை, வேலை.. ட்ரான்ஸ்பர் என பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்.
வர்ஷினி மதுவைதான் நிம்மதியாக பார்த்தாள்.
வர்ஷினி ஹரிணியோடு உள்ளே செல்லவும்தான் செந்தில் மாமனாரிடம் “மாமா, பையன் குடும்பம் விசாரிங்க.. நல்லா இருந்ததுன்னா.. கட்டி வைக்கலாம். வெளிநாடு.. வர்ஷினியோட பழையகதை.. அதையெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்க. குடும்பம் சிக்கல் அப்படி இப்படின்னு ஏதாவது இருந்தால் எடுத்து சொல்லுங்க வர்ஷினிகிட்ட.. அவ எப்போது கல்யாணம் என வருகிறாளோ செய்துக்கலாம். கல்யாண விஷயத்தில் அவங்க கன்ஸன்தான் முக்கியம். யோசிச்சு செய்ங்க மாமா” என்றார் மூத்த மாப்பிள்ளை என்ற பொறுப்பில்.
சிவகுமார் விஜயா இருவருக்கும் நிம்மதி. இறங்கி கருத்து சொல்லாமல்.. பொதுவாக பேசி இன்றைய சூழலை அவர் எண்ணுகிறார் என்பதில்.. வர்ஷினியையும் யோசிக்கிறார் எனும் போது பெற்றோருக்கு நிம்மதி. அத்தோடு கூடுதல் மகிழ்வாக.. செந்திலின் கருத்தில்.. மதுவின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது எனவும் தோன்றியது. ம்.. விசாலமான மனம்.. இனிய உறவுகள் சூழ்ந்ததால்தான் கிடைக்கும்.
அடுத்த இரண்டுநாளும் மது அவர்களின் குடும்பம்தோடு தர்ஷன் ஐஸ்வர்யா மகனோடு வெளியே சென்றனர். அவர்களும் பிள்ளைகளோடு விளையாடிவிட்டு.. நான்குநாட்கள் இருந்துவிட்டு மும்பை கிளம்பினர் தர்ஷன் குடும்பம்.
ஷாப்பிங் சென்றனர். சொந்தங்களின் வீட்டு விசேஷங்களை சென்று விசாரித்து வந்தனர். நாட்கள் கடந்தது.
செந்தில் மதுரை சென்றுவிட்டார்.. தன் மனைவியோடு. பிள்ளைகள் மட்டும் சென்னையில் இருந்தனர்.