அத்தியாயம் 26

மகாவை தாங்கி பிடித்த லேகா பயத்தில் உறைந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க

“மேம்….மேம்…” என்று ஜெனிஷா மகாவை உலுக்க, நினைவு வந்தவளாக மகாவுக்கு முதலுதவி செய்ய தொடங்கியிருந்தாள் லேகா.

அதே சமயம் மகா மயங்கியதை பார்த்து ஓடி வந்த சத்யா வேகமாக அவளை தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

ஐசியு வின் உள்ளே  மகாவை பாரிசோதித்து கோண்டு இருக்க , அதன் வாசலில் ஜெனிஷா ஒரு புறம் கைகளை பிசைந்து கொண்டும் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டும் இருக்க, சத்யா பயத்துடன் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான்.

ஒரு நாள் முழுவதும் சுயநினைவு தப்பிப் போய் இருந்த மகாவின் நிலையை நினைத்து அனைவரும் பயந்துதான் போனார்கள்.

லேகா ஒரு புறம் அனைத்து டெஸ்ட்களையும் எடுத்துக்கொண்டு டாக்டர்களுடன் சுற்ற, சத்யா அந்த ஐசியுவை விட்டு நகர மாட்டேன் என்பது போல அங்கேயே காத்திருந்தான்.

“ மகா அம்மா….” உதடுகள் தானாக முனுமுனுத்துக் கொள்ள சத்தியா தலை குனிந்த படி  அமர்ந்திருந்தான். அவன் நிலையை பார்த்து வருந்திய ஜெனிஷா அவன் அருகே சென்று

“மேம்க்கு ஒன்னும் ஆகாது சார், பயப்படாதீங்க “ என்று அவன் தோள் தொட்டு சமாதானம் செய்ய முயல, அவன் நிமிராமல் தலை குனிந்தபடி தான் இருந்தான்.

ஜெனிஷா “சார்…. “ என்று அழைக்க, கரகரத்த குரலில் சத்யா பேச தொடங்கினான்.

“அம்மா இல்லனா இன்னைக்கு நான் இங்க இப்படி இந்த இடத்துல அவார்ட் வாங்கி இருந்திருக்க மாட்டேன்.

ஏதோ ஒரு இடத்துல மூட்டை தூக்கிட்டு அடி மிதி வாங்கிட்டு தான் இருந்திருப்பேன்.”

என்று பேசியவன், பேச்சு புரியாமல் ஜெனி அவன் பேசுவதை கேட்டாள்.

“ ரோட்ல இருக்க இடமில்லாம, சாப்பாடு இல்லாம இருந்த என்ன, அவுங்க பையன நினைச்சி… இல்ல, அவுங்க பையனாவே தான் வளர்த்தாங்க.

அன்னைக்கு அம்மா கண்ணுல மட்டும் நான் படலனா இன்னைக்கு நான் உயிரோட இருந்திருப்பேனா கூட தெரியல “ என்று பேசியவனின் பேச்சில் திகைத்து போன ஜெனி

“என்ன சொல்றாரு இவரு, அப்போ மகா மேம் பையன் இல்லையா சார் ? “ என்று இவள் அதிர்ந்து போன நிலையில் இருக்க, அதே நேரம் உள்ளே லேகா மகா அருகில் அமர்ந்தபடி

“ அன்னைக்கு நீ வரலைனா என்ன அந்த கிழவனோட சேத்து எரிச்சி போட்டுருப்பாங்க ம்மா.

என்னோட பத்து வயசுல இருந்து உன்ன என்னோட தெய்வமா பாத்துட்டு வரேன் ம்மா . ப்ளீஸ் ம்மா எழுந்திச்சி வந்துரு, நீ எங்களுக்கு வேனும் ம்மா….. வா ம்மா….”

என்று அழுதபடி இரு உள்ளங்கள் கதறும் சத்தம் கேட்டும் கேட்காதது போல படுத்திருந்தாள் மகா. அவன் இல்லா உலகில் வாழ்ந்தது போதும் என்று நினைத்து விட்டாளோ என்று தெராயாத நிலை தான்.

நர்ஸ் வந்து ரிப்போர்ட் ஒன்றை லேகாவிடம் நீட்ட, கண்களை துடைத்தபடி அதை வாங்கி பார்த்தவள் அதிர்ந்து போய் வேகமாக வெளியே ஓடி வந்தாள்.

வெளியே லேகாவை பார்த்ததும் இருவரும் எழுந்து அவளிடம் செல்ல

 “சத்யா ….. மகா அம்மாக்கு இதுக்கு முன்னாடி உடம்பு சரியில்லன்னு பாலாஜி உன் கிட்ட சொன்னானா “

“இல்லயே லேகா, அம்மா ஓட சின்ன விஷயத்தை கூட என் கிட்ட அவன் சொல்லிடுவான். அம்மா இங்க வர வரை நல்லா தான் இருந்தாங்க “

“இல்ல டா…. ஏதோ தப்பா இருக்கு…” என்றவள் ஜெனிஷா வைத்திருந்த மகாவின் பையை வாங்கி பார்த்தாள், அதிலிருந்து மாத்திரைகளை எடுத்து பார்த்து அனைவரும் அதிர்ந்து போக

லேகா “ இத்தனை மாத்திரையா, இது தூக்க மாத்திரை, இது வலி குறைக்கிற மாத்திரை “

“ அம்மா…. அம்மா… இத்தனை மாத்திரை போடுவாங்களா , அம்மாக்கு அப்போ என்ன, இத்தனை மாத்திரை போடுற அளவு அம்மாக்கு என்ன “ என்று லேகாவை சத்தியா பார்க்க , கண்கள் கலங்க நின்றவள் தேம்பி தேம்பி அழுதபடி

“மகா ம்மா… அம்மா… அம்மா க்கு ப்ரேயின் ட்யூமர். இது பஸ்ட் டேஜ் மாதிரி தெரியல டா ரொம்ப நாள  வலி இருந்திருக்கணும். அன அம்மா அந்த வலியை நம்ம கிட்ட  காட்டாம இருந்திருக்காங்க டா“

என்று முகத்தை மூடி லேகா அழுதாள் என்றாள். சத்தியா தோப் என்று அதிர்ச்சியில் சேரில் அமர்ந்து விட்டான்.

இவர்கள் நிலையைப் புரிந்து கொண்ட ஜெனி

“ லேகா இப்போ அழுறத நிருத்துங்க. நீங்க டாக்டர் தான. அடுத்து என்ன பண்ணலாம், மேம் அ எப்படி காப்பாத்தலாம் னு யோசிங்க “ என்று ஜெனி பேசியதும் கண்களை துடைத்தவள்,

“ரைட் நீங்க இருங்க நான் போய் டாக்டர பாத்துட்டு வர்றேன் “ என்று உள்ளே சென்று விட்டாள்.

இங்கு சத்தியாவின் நிலையைப் பார்த்துவிட்டு ஜெனி அவன் அருகே அமர்ந்து “ சார் இப்படி நீங்களே உடைஞ்சு போனா எப்படி. மேம்ம பாக்க வேணாமா “ என்றவளை முகம் வாடி போய் பார்த்தவன்.

சம்மதமாக தலை அசைத்து போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் தலையை சாய்ந்து அமர்ந்தவள்,

“மாதவே… மேம்க்கு எதுவும் ஆகாம பாத்துக்கோங்க “ என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

அதன்பின் லேகா மாகாவின் தலையில் இருக்கும் கட்டி குறைவதற்கும் அதற்கான ட்ரீட்மெண்ட் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தாள்.

மகா முழித்தால் தான் கட்டியின் அளவையும் மேற்கொண்டு சிகிச்சையும் பார்க்க முடியும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

மேலும் ஒரு நாள் கழிய ஜெனிஸா இவர்களுக்கு துணையாக அங்கேயே இருந்தாள்.

காரிடாரில் சத்தியா, லேகா அருகில் அமர்ந்தபடி ஜெனிஷா இருந்தனர்.  அந்த தளம் மகாவிற்காக தனியாக ஒதுக்கப் பட்டிருக்க லேகா , சத்தியா மற்றும் ஜெனிஷா மூவர் மட்டும் தான் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்க என்னவென்று திரும்பி பார்க்க அங்கே கருப்பு உடை அணிந்த பாதுகாவலர்கள் சூல, நடுத்தர வயதுடைய ஒரு பெண் மற்றும் ஆண் நடந்து வந்தனர்.

இருவரையும் பார்க்கவே கம்பீரமாக இருந்தது. அவர்களை பார்த்து லேகா மற்றும் சத்தியா எழுந்து நிற்க அவர்கள் அருகே வந்த அந்த பெண் சத்தியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட , அவன் தலை குனிந்து நின்றான்.

“ப்ச் ஜெயா…..” என்று அருகில் இருந்தவன் ஜெயாவை பிடித்து நிறுத்த, ஜெனிஷா மலைத்துப் பார்த்தாள்.

“இவுங்களா ஜெயா மேம் , நம்ம மகா மேம்க்கு அக்கா மாதிரி இருக்காங்களே “ என்று எண்ணிக்கொண்டாள்.

“பின்ன என்னங்க மகாவ அட்மிட் பண்ணி மூணு நாள் ஆகுது இவன் என்னன்னா இப்போ போய் இல்ல கால் பண்ணியிருக்கான் “ என்று சீறி நின்றவளை பிடித்து அமைதிப்படுத்தினான்.

“இங்க அவன் மகாவ முதல்ல பாப்பான இல்ல நமக்கு கால் பண்ணும்னு நினைப்பானா ஜெயா “ என்று அவன் குரல் உயர்த்தவும் அமைதியான ஜெயா கண்களை மூடித்திறந்து கோபத்தை கட்டுப்படுத்தியவளுக்கு சத்தியாவின் நிலை அப்போது தான் புரிந்தது.

என்ன தான் இருந்தாலும் அவன் அம்மா அல்லவா என்று யோசித்தவள்  சத்தியாவின் தோளை தட்டிக்கொடுத்தாள்.

பின் லேகா பக்கம் திரும்பி “உள்ளே போய் பார்க்கலாமா “ என்றதும் அவள் தலையசைத்து உள்ளே அழைத்து சென்றாள்.

உள்ளே பார்த்து வந்த ஜெயா டாக்டர் அறைக்கு சென்று வந்து போனில் பேசிக்கொண்டே பதட்டத்தில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டே இருக்க அப்போது

“ஜெயா…..” என்று தழுதழுத்த குரலில் அவரை அழைத்தபடி அமிர்தம் தலைமுழுக்க நரைத்து தள்ளாடியபடி அங்கு வர ஜெயா ஓடிச் சென்று அவரைப் பிடித்துக் கொண்டாள்.

அவருடன் சந்தானம் மற்றும் சீனி முகம் கசங்க வந்தவர்கள் “மகா…. எப்படி இருக்க” என்று குரல் நடுங்க கேட்டிருந்தனர்.

அவர்கள் பின்னாடியே சுபா, ஜெகன் மற்றும் குணா, மகேஷ், சித்ரா, வீரமுத்து என்று அனைவரும் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்த ஜெனிஷா அவர்கள் பின்னே எட்டிப் பார்த்துவிட்டு சுற்றி சுற்றி பார்க்க இவள் தேடிய நபர் மட்டும் அங்கு இன்னும் வந்திருக்கவில்லை.

இவள் இப்படி சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்த குணா, லேகாவை அழைத்து

“அது அந்த பொண்ணு யாரு டி” என்று கை காட்டவும் அனைவரும் அவள் பக்கம் திரும்ப, லேகா “இவங்க ஜெனி, அம்மா கூட வந்தவங்க”

“ஓ….” என்று குணா நகர்ந்து விட லேகா ஜெனி அருகே சென்று

“நீங்க இதுவரை  இங்க இருந்ததுக்கு நன்றி ஜெனி, எங்களுக்காக இத்தனை நாள் இங்க இருந்தது ரொம்ப தாங்க்ஸ்  ” என்று அவளை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டாள்.

காரில் ஹோட்டலுக்கு சென்றவளுக்கு மணம் முழுக்க மகாவின் நினைப்பு தான். குடும்ப நபர்கள் சுற்றி இருக்கும்போது இவள் அங்கே வேற்றாளாக நிற்பது சங்கடமாக இருக்கவும் கிளம்பி வந்து விட்டாள்.

அங்கிருந்து இங்கே வந்தாலும் மனம் முழுக்க ஒரே கேள்விதான் தொக்கி நின்றது “சார் ஏன் வரல?”

இதை யோசித்தபடியே ஹோட்டலுக்குள் சென்றவள் பாலாஜியை அங்கு ரிசப்ஷனில் பார்க்கவும் அவன் அருகே வேகமாக சென்று.

“ஹாய் சார்…..” என்று நின்றவளை திரும்பி பார்த்தவன்.

“நீங்களா… இங்க என்ன பண்றீங்க மேம் முழிச்சிட்டாங்களா அவங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்று பதறியவனை பாவமாக பார்த்த ஜெனி

“மேம் இன்னும் முழிக்கல சார். மேம் ஓட ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க அதான் நான் கிளம்பிட்டேன்.”

“ஓ…., டாக்டர் ஏதாவது சொன்னாங்களா”

“லேகா மேம் தான் டாக்டர் கிட்ட பேசுவாங்க மேம் முழிச்சா தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க”

என்றதும் பாலாஜி தளர்ந்து போய் வெளியே செல்லவும், ஜெனிஷா “சார்….” என்று பாலாஜியை நிறுத்தியவள்.

“நான் அங்க இருந்த வரை இன்பா சார் வரல அவருக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்க தான” என்று கேட்டவளை ஒரு வித சோகத்துடன் பார்த்தவன்.

“சார் இருந்திருந்தா மேம்ம இப்படி தனியா விட்டுருப்பாரா” என்றவன் பேச்சில் திகைத்து போனவளாக

”என்ன சார் சொல்றீங்க?”

“சார் பதினைஞ்சு வருஷம் முன்னாடி நடந்த ஒரு ஃபயர் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க.”

அதைக்கேட்டு “சார்….” என்று அலறியே விட்டாள் ஜெனி.

“மேம் எப்பவும் சார் பத்தி பேச மாட்டாங்க. ஆனா உங்ககிட்ட தான் ரொம்ப சொன்னாங்க சார் பத்தி. அத வச்சி தான் சார் பத்தியே எனக்கு தெரியும்.”

“சார்…நீங்க ஏதோ தெரியாம பேசலையே “என்று ஜீரணிக்க முடியாமல் ஜெனி கேட்டு நிற்க,

“நான் மேம் ஓட டிரஸ்ட் மூலமா தான் படிச்சேன். ஒவ்வொரு இயரும் மேம் சார் ஓட நினைவு நாளுக்கு சார பார்க்க போயிடுவாங்க. இது அங்க இருந்த எங்க எல்லாருக்கும் தெரியும்.”

இவற்றை கேட்டவளுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றது போல இருக்க நெஞ்சை தடவி விட்டுக்கொண்டாள்.

எத்தனை ஆசை ஆசையாக கண்களில் காதலை தேக்கி ரசித்து பேசினார். என்று அனைத்தையும் நினைத்து பார்த்தவளால் பேச முடியாமல் போக தலையசைத்த படி அவள் அறையை நோக்கி சென்றாள்.

அறைக்குள் சென்றவளுக்கு தன்னை போல கண்கள் கலங்கி கண்ணீர் வர தேம்பி தேம்பி அழுத படி நெஞ்சை நீவி விட்டுக்கொண்டாள்.

கதை வலியே கேட்ட இவளுக்கே இந்த நிலை என்றால் மகா அவர் என்ன பாடு பட்டிருப்பார் என்று அவரை நினைத்தும் அழுது தீர்த்தவள்.

அவள் லேப்டாப்பை உயிர்பித்து அதில் பாலாஜி சொன்ன தீ விபத்தை பற்றி தேட தொடங்கினாள். அரை மணி நேரத்தில் அதை கண்டும் பிடித்தவள் தலைப்பை படித்தாள்.

“சென்னையில் மின் கசிவால் தீ விபத்து! மொத்தம் ஐம்பத்து நான்கு பேர் உயிர் இழப்பு” என்று போட்டிருந்தது.

அன்று தீ அணைப்பு வீரர்கள் வந்து பார்க்கும் போது மகா மயங்கிய நிலையில் தொங்கி கொண்டு இருக்க இன்பா உடல் பாதி வெந்த நிலையில் அறை மயக்கத்தில் மகா கையை இறுகி பிடித்துக்கொண்டிருந்தான்.

இவர்களின் நிலையை பார்த்து வேகமாக மீட்பில் இறங்கிய வீரர்கள் மகாவை கிரேன் மூலம் பிடித்துக்கொள்ள அதை பார்த்து உறுதி செய்த இன்பாவின் கண்கள் அப்போது தான் மூடியது.

தீயணைப்பு வீரர்கள் அவனையும் காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனான் இன்பா.

தன் உயிரில் கலந்தவன் உயிர் பூமியை விட்டு சென்றது தெரியாத நிலையில் மகா தீவிர சிகிச்சையில் மூன்று நாள் இருந்தே கண்களை திறந்தாள்.

கண்களை திறந்தவள் முதலில் தேடியது இன்பாவை தான்.

“இன்பா…. இன்பா…” என்று தேடியவள் அவன் அங்கு இல்லை என்றதும் மீண்டும் மயங்கி விட்டாள்.

அதன் பின் மறு நாள் கண்களை திறந்தவள் யாரிடமும் பேசவில்லை. ஏதோ வெறித்தபடி இருந்தவளை என்ன செய்தும் இயல்புக்கு கொண்டு வர முடியவில்லை.

அதிர்ச்சி தான் காரணம் என்று டாக்டர் சொல்லியிருக்க அனைவரும் வந்து அவளுக்கு சமாதானம் சொல்ல தொடங்கினர்.

என்ன செய்தும் இறுகிப் போனவளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பின் அமிர்ந்தம் அவளை அவரோடு அழைத்துக்கொண்டு சென்று வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்.

மூன்று மாதம் சென்றிருக்க பாதி உடலாக மாறி போனால் மகா. சரியான உணவின்றி தூக்கம் இன்றி எதையோ வெறித்த படி இருந்தவளை  பார்த்து அனைவரும் பயந்து தான் போனார்கள்.

 அப்போது பார்த்து மகா பாஸ் ஆகி விட்டாள் என்று ரிசல்ட் வர அனைவரும் நொந்து தான் போனார்கள்.

எத்தனை கனவுகளுடன் இருந்தார்கள். அதுவும் இன்பா

“ என் தங்கத்தை ஐஏஎஸ் ஆ கண்டிப்பா ஆக்குவேன். நான் கலெக்டர் புருஷன் டா “ என்று சொல்லி சுற்றுபவன் நினைவு வந்து அனைவரும் வாடி போனார்கள்.

அடுத்து என்ன செய்ய என்று திக்கு தெரியாமல் நின்ற நேரம் மகா புடவை உடுத்தி பையுடன் இன்டர்வியூவுக்கு செல்ல கிளம்பி வந்திருந்தாள்.

அதில் அதிர்ந்த அமிர்ந்தம் அவளை கட்டிக்கொண்டு “ மகா…. ம்மா …. உனக்கு சரி ஆகிடுச்சா ம்மா “ என்று அழுது தீர்த்து விட்டார்.

ஆனால் அந்த கண்ணீர் எதுவும் அவளை எட்டவில்லை போல. எதுவும் நடவாதது போல “ நான் இன்டர்வியூ போயிட்டு வரேன் “ என்று தனியாக செல்ல முயன்றவளை தடுத்து அவளுடன் ஜெயா மற்றும் சந்தானம் சென்றிருந்தனர்.

ரெயிலில் டெல்லி சென்று கொண்டிருந்தவள் தலை முழுக்க ஒருவன் தான் இருந்தான். சிரித்த முகமாக முறைத்த முகமாக சேட்டை செய்யும் கண்ணாக என்று எத்தனை பரிமாணம் எடுத்து அவளும் கலந்து இருந்தவன்.

இமை மூடும் நேரம் அவனின் நெருப்பில் எரிந்த வின்பமே வர கண்களை மூட பயந்தாள் மகா.

நேற்று வரை சுற்றி நடப்பது உணராமல் இருந்தவளுக்கு நேற்று நல்லறிவு இன்பாவின் குறள் கேட்டு திடிக்கிட்டு விழித்தாள் மகா. கண்கள் ஆறாக மாற அவன் குறள் கேட்ட திசையை நோக்கி அவனுடன் கலந்துவிட சென்றாள் மகா.