நேரம் பனிரெண்டு ஆகியிருக்க, அவள் படுத்துக் கொண்டாள். பழச் சாறு வரவழைத்து அவளுக்கு கொடுத்தான். சோர்வாக உணர்ந்தவளும் பருகி விட்டு படுக்க போக, அவளை பிடித்துக்கொண்டான்.
“நீ அவன் முன்னாடி அப்படி சைலன்ட்டா நின்னது என்னை கோவ படுத்துறது இயல்புதானே வேதா?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என அவள் அழுத்தமாக கேட்க, “என்னை பழி வாங்குறியா வேதா?” எனக் கேட்டான்.
“என்ன?” என அதிர்ந்தவள், “எப்படி… எப்படி பழி வாங்குறேன் உங்களை?” என எரிச்சலோடு கேட்டாள்.
“நீ என்னை விரும்பின, நான் உன்னை விட்டுட்டு போனேன். இப்ப நானும் உன்னை விரும்புறேன், எனக்கு அந்த வலிய உணர்த்த நினைக்கிற. வேணும்னே செய்ற”
“ரப்பிஷ்! உங்க புத்தி எனக்கு கிடையாது. என்ன கெட்ட நேரமோ உங்களை போய் நினைச்சு தொலைச்சிட்டேன். என்னை மோசமா ஏமாற வச்சு நீங்க ஓடிப் போயும் வேற ஒருத்தனை ஏத்துக்க தைரியமோ பக்குவமோ இல்லாம நின்னேன். என்னை உடைச்சிட்டு போன உங்களோடவே வாழற நிலைமைய என்னால தடுக்க முடியலை, என்னை நானே சரி பண்ணிக்க முயற்சி எடுத்துகிட்டேன். ஆனா திரும்ப திரும்ப என்னை உடைக்குறீங்க நீங்க”
“என்ன உடைச்சேன் உன்னை? எல்லாத்தையும் மறந்திட்டு புதுசா வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்னு உன்கிட்ட சொன்னேன்தானே? எதுக்கு பழசை பேசுற? நேத்திக்கு எவனோ ஒருத்தன் என் பொண்டாட்டிக்கு ப்ரொபோஸ் பண்றான், என் பொண்டாட்டி வாயே தொறக்காம அப்படியே நிக்கிறா. என்னை குத்தம் சொல்ல உனக்குத்தான் உரிமை இருக்கு, யாரையோ பேச விட்டு அமைதியா நின்ன. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் எடுக்கிறது வேதா?”
“ரூபன் நிலைமையை நினைச்சு பார்த்தீங்களா விஷ்வா? ஹ்ம்! உங்களுக்குத்தான் வேற யாரைப் பத்தியும் கவலையே இருந்தது இல்லையே. காலையில நம்ம மேரேஜ் பத்தி சொல்லியிருந்தா அவனுக்கு அப்படி ஒரு சங்கடம் வந்திருக்காதேன்னு குற்ற உணர்ச்சி எனக்கு” என விளக்கம் சொன்னாள்.
“யார் ரூபன் அந்த இடியட்டா?”
“அவன் ஒன்னும் இடியட் இல்லை!” என அவள் சீற, அவனுக்கு புகைந்தது.
“நீ ஏன் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு யாருக்கும் சொல்லலை?” என கேள்வி கேட்டவனுக்கு காரணம் சொன்னாள்.
“அங்க போறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிருக்கலாம்தானே வேதா? நானே எல்லாருக்கும் தெரியற படி செஞ்சிருப்பேன். சாப்பிட்டது ஒத்துக்கலைனு என்கிட்ட சொல்ல என்ன தடை உனக்கு? இப்போ பக்கத்துல நான் இருக்கும் போது ஹெல்ப் கேட்டு ரிஷப்ஷனுக்கு கால் பண்ற? நான் யார் உனக்கு? எனக்கான இம்பார்டன்ஸ் கொடுக்கலைங்கிறது விட என்னை இன்சல்ட் செய்ற நீ”
“இன்னிக்கு கோவத்துல இருந்தேன். நேத்து எதையும் உள் நோக்கத்தோட செய்யல நான். மேரேஜ் விஷயம் பத்திலாம் அங்க போற வரை யோசிக்கவே இல்லை. யாரையும் பேச விட்டும் வேடிக்கை பார்க்கல, மைண்ட் முழுக்க ரூபன் எவ்ளோ ஹர்ட் ஆகியிருப்பான்னு அவனை பத்தியே யோசிச்சிட்டு இருந்ததுல எதையும் என்னால கவனிக்க முடியலை. கார்ல உங்க கூட வந்தப்போ ரொம்ப டவுன் ஆகிட்டேன். நீங்கதானே என்னாச்சுன்னு என்னை கவனிச்சு பார்த்திருந்திருக்கணும்? எவ்ளோ கேவலமா என்கிட்ட கேள்வி கேட்டீங்க? இதோ இப்ப வரை அது தப்புன்னு ஒத்துக்க கூட இல்லை”
ஒரு கையை இடுப்பில் வைத்து அவள் சொல்வதை கவனமாக கேட்டவன், “அப்படி நான் கேட்ருக்க கூடாதுதான், கோவத்துல… ம்ஹூம் கோவம்னு கூட சொல்ல முடியாது வேதா. நீ என்னைத்தான் விரும்பினேன்னு எனக்கு தெரியும், இப்பவும் எவ்ளோ என்னை லவ் பண்றேன்னு புரியது. ப்ச், அங்க உன் அமைதி மத்தவங்கள என்ன நினைக்க வச்சிருக்கும்? உன் லவ் முழுக்க எனக்குதானே வேதா? அது தெரியாம என்னை கெட்டவனா பார்க்கிறாங்க, நேத்து லூசு மாதிரி நின்னேன்டி நான், உன்னாலதான்” என்றான்.
அவள் முகம் இளகாமல் இருக்கவும் ஆயாசமாக மேலே பார்த்தான். எப்படி இருந்திருக்க வேண்டிய நாள், எப்படியாகி விட்டது?
நிதானமாக அடியெடுத்து வைத்து சென்று அவளது காலடியில் அமர்ந்து கொண்டான். அவளது பாதத்தை அவன் தன் மடியில் எடுத்து வைத்துக் கொள்ள, சட்டென விலகியவள் படுக்கையிலேயே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டாள்.
தரையை வெறித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். அவளும் அவனை மன்னிப்பதில்லை என உறுதியாக இருக்க, பிடிவாதக்காரன் வெறும் தரையிலேயே படுத்து விட்டான்.
நேரம் மதியம் இரண்டரை ஆகியிருந்தது. அவளுக்கு பசிக்க, உணவு வரவழைத்தாள். சாப்பிடுவதற்காக அவனை அவள் பார்க்க, “போடி!” என சொல்லி அவளுக்கு முதுகு காண்பித்து படுத்துக் கொண்டான்.
“ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்னு புரிஞ்சுக்கோங்க. பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுங்க. இப்ப சாப்பிட வாங்க” என அழைத்தாள்.
“என் மேலயே முழு தப்பும்னு பேசாத வேதா, எனக்கு ஏத்துக்க கஷ்டமா இருக்கு. நான் பேசினதுக்கு அந்த சிட்டிவேஷன், என் குணம், உன் அமைதி எல்லாமே ஃபேக்டர்ஸ்”
“பசியில தலை வலிக்குதுங்க. நான் வர்றப்ப ஒழுங்கா எந்திரிச்சு உட்கார்ந்திருக்கீங்க!” என்றவள் ஓய்வறை சென்று விட்டாள். அவள் வரவும் நல்ல பிள்ளையாக சாப்பிட அமர்ந்திருந்தான்.
“நைட் டிக்கெட் போடுங்க, ஊருக்கு போலாம்” என்றாள்.
“வேதா…” கெஞ்சலாக அழைத்தான்.
“கோவத்துல சொல்லலை, எனக்கு சரியாக நாள் ஆகும். இப்ப நாம ஒன்னா இருந்தா வேற சண்டை வரலாம்”
“அப்படிலாம் ஆகாது, நான் பொறுப்பு”
“உங்களை நம்புறதா இல்லை, உடனே கோவ பட வேணாம். என்னையும் நான் நம்புறதா இல்லை, உங்களை ஏதாவது பேசிடுவேன்”
“என்னையும் யோசிச்சு முடிவெடு வேதா. நீ உன் அம்மா வீடு போனதிலிருந்து அவஸ்தை படுறேன். இந்த ரெண்டு நாள் நீ எனக்கு இல்லைனா ஊர்ல போய் ஒரு நாள் ஓட்டுறதே எனக்கு கொடுமையா இருக்கும்” என அவன் சொல்ல, அப்படியா என்பது போல பார்த்தாள்.
“சண்டைக்கு பயப்படறவன் இல்லைடி நான், தனிமை பிடிக்கல. உனக்கு ட்ரமாடிக்கா தெரியலாம், ஆனாலும் உண்மை என்னன்னா என் பேஸிக் நீட்ஸ்ல நீயும் இருக்க வேதா”
“இந்த பேச்சுக்கொன்னும் குறை இல்லை!” என அவள் முணு முணுக்க, அவள் சாப்பிடப் போன உணவை தன் வாயில் ஊட்டிக் கொண்டான்.
‘உன்னை என்ன செய்ய?’ என அவள் பார்க்க, “உனக்கு வெளில போலாம்னா ஈவ்னிங் போலாம். வேணாம்னாலும் ஓகே, இங்கேயே இருக்கலாம். நாளைக்கு நைட்தான் ஊருக்கு கிளம்பறோம், அது வரைக்கும் உன்னை விட மாட்டேன்” என அடமாகவே சொன்னான்.
மறுப்பேதும் சொல்லாமல் அவள் அமைதியாக சாப்பிட, “ஸாரிடி, சமாதானம் ஆகு” என்றான்.
“இனி இந்த டோன் விட்டு கொஞ்சம் உங்க சவுண்ட் கூடினாலும் பொட்டிய கட்டிடுவேன்” என மிரட்டிக் கொண்டே சாப்பிட்டாள்.
அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே அவன் சாப்பிட, இடையில் அவனுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டாள்.
“எங்கே போனாலும் இழுத்துகிட்டு வந்திடுவேன், யாராலேயும் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு கொண்டு போயிடுவேன்” என தீவிர தொனியில் சொன்னான்.
“எங்க கைலாஸாவுக்கா?” என கடுப்பாக அவள் கேட்க, அவன் சிரித்தான்.
“பேச்சை பாரு சைக்கோ மாதிரி!” என அவள் திட்ட, “ஆமாம்டி, நீ ஏஞ்சல், நான்தான் சைக்கோ” என கடுப்படித்தான்.
“இல்லை இவர்தான் தேவ தூதர்!” என காரமாக அவள் சொல்ல, சுதாரித்துக் கொண்டவன் அவள் பேசுவது காதில் விழவில்லை என்பது போல காதை குடைந்து கொண்டான்.
சாப்பிட்டு முடித்தவன், “நானெல்லாம் ஒருத்திக்காக வேலை வெட்டிய விட்டுட்டு இப்படி பிளான் பண்ணி ஊர் விட்டு ஊர் வந்து கெடப்பேன்னு சொன்னா என்னைய பத்தி தெரிஞ்ச எவனா இருந்தாலும் நம்ப மாட்டான். உன்னோட இருக்கணும்ங்கிற ஒரே காரணம்… ஹ்ம்ம்! எங்க என் மனசு உனக்கு புரியுது” என சொல்லிக் கொண்டே எழுந்தான்.
ஜன்னல் பக்கமிருந்த திரையை விலக்கி விட்டு கண்களுக்கு தெரிந்த தோட்டத்தை பார்த்து நின்றான்.
சில நிமிடங்கள் சென்று வேதா அவனை பின்னாலிருந்து கட்டிக் கொள்ளவும் கண்களை மூடி அந்த நொடியை உள் வாங்கியவன் அவள் பக்கமாக திரும்பி நன்றாக அவளை அணைத்துக் கொண்டான்.
“லவ் விட முக்கியம் ரெஸ்பெக்ட், புரிஞ்சுதா?” என அவள் கேட்க, அணைப்பை இறுக்கி சரிதான் என்பதை உடல்மொழியால் சொன்னான்.