இரவு எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. தன்னை மறந்து தூங்கியவன் காலை மிக்ஸியின் சத்தத்தில் தான் கண்களை திறந்தான்.
எப்போதும் பின் ட்ராப் சைலன்டில் இருக்கும் இவன் அப்பார்ட்மெண்டில் இப்படி சத்தமா என்று பயந்து தான் முழித்தான் இன்பா.
கண்களை திறந்து சுற்றி பார்த்து முழித்தவனுக்கு அவன் இருக்கும் இடம் புரிந்து தலையை தட்டிக்கொண்டான்.
கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தவன் சுற்றி பார்த்தான். கட்டிலின் அருகில் துண்டு, பேஸ்ட், சோப், பிரஷ் என்று எடுத்து வைத்திருந்தனர்.
அதை பார்த்து சிரித்தவன் அதை எடுத்து கோண்டு குளியல் அறை சென்று குளித்து முடித்து வந்தவன்.
“இப்போ என்ன பண்ணலாம்? வெளிய போனோமா? இந்த மகா எங்கன்னு வேற தெரியல. தனியா எப்படி போறது? “ என்று தலையை சொரிந்தவன்.
மெல்ல கதவை திறந்து பார்த்தான். ஹாலில் ஜெயா டிவி பார்த்தபடி பூண்டு உறித்து கொண்டு இருக்க, அவள் அருகே குணா சின்ன வெங்காயம் உறித்து கொண்டு இருந்தாள்.
அப்படியே சமையல் அறை பக்கம் பார்க்க அங்கே மகா, சுபா இருவரும் எதையோ அடுப்பில் வைத்து கிண்டிக் கொண்டு இருக்க அமிர்ந்தம் வேறு ஏதோ செய்து கொண்டிருந்தானர்.
இருபது வருஷம் மேலே ஹாஸ்டலிலேயே இருந்தவனுக்கு இந்த சூழ்நிலையை பார்த்து பயம் தான் வந்தது. அவன் அத்தையை விட்டால் வேறு சொந்தம் இல்லை. அப்படி தான் வளர்ந்தவன்.
லீவுக்கு அவன் அத்தை வீட்டுக்கு சென்றாலும் அங்கே வீரமுத்து இவனை தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டாத குறையாக தான் வைத்திருப்பார்.
இவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாளே “ என்ன இப்போ எதுக்கு வந்திருக்க எதுவா இருந்தாளும் கூப்பிடு வரேன் “ என்று முகத்தில் அறைந்த படி பேசுவரை பார்க்க பிடிக்காமல் இவனும் வெளியே வர மாட்டான்.
அவன் அத்தை தான் பின் அவன் அறைக்கு வந்து உணவு கோடுத்து விட்டு பேசி விட்டு போவார். இப்படி இருந்தவனுக்கு எல்லாமே புதிதாக தான் தெரிந்தது.
இப்போது கிடைத்திருக்கும் புது சொந்தங்களை பார்த்து கொஞ்சம் பயமும் வந்தது. இவ்வாறு பல சிந்தனைகளுடன் அங்கேயே இன்பா நின்று விட
“ அத்தான்…. அத்தான்…அங்க என்ன பண்றிங்க? முழிச்சிட்டிங்களா? இங்க வாங்க “
என்ற குணாவின் சத்தத்தில் சுயம் வந்து அவளை பார்த்து சிரித்த படி அங்கே இருந்த ஓர் இருக்கை கொண்ட சோபாவில் அமர்ந்த படி சமையல் அறையை எட்டி பார்த்தான்.
அங்கு இவனின் மனைவி புடவையை சுற்றிக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தாள்.
தலை முடியை பின்னல் இட்டு தலை நிறைய பூ வைத்திருந்தாள். கழுத்தில் புது மஞ்சள் கயிறு மின்ன நெற்றியில் பொட்டு வகுட்டில் குங்குமம் என்று அவளை அள்ளிக்கொள்ள தான் தோன்றியது.
“அத்தான் போதும் போதும் அக்கா எங்கயும் போகல பொறுமையா பாருங்க “ என்ற ஜெயாவின் குரலில் அசடு வழிந்து சிரித்து வைக்க, மகா கையில் காப்பியுடன் வந்தவள்.
“ காப்பி குடிங்க இன்னும் டென் மினிட்ஸ் ல சாப்பிட்றலாம் “
“என்னது இவ்ளோ சீக்கிரமா சாப்பிடனுமா “ என்று இன்பா நேரத்தை பார்க்க மகாவும் நேரத்தை தான் பார்த்தாள்.மணி பத்தை தொட காத்திருந்தது.
“ அத்தான் மணி எத்தன ன்னு நினைச்சிட்டு இருக்கிங்க பத்தாக போது இந்நேரம் எங்க வீட்டுல மார்னிங் டிபன் முடிஞ்சி, இந்நேரம் எதாவது ஸ்நாக்ஸ் உள்ளே போயிருக்கும் அத்தான். இப்போவே சிறு குடல் பெருங்குடல்ல தின்ற ஸ்டேஜ் அத்தான் “ என்று உதட்டை பிதுக்கியவளை பார்த்து சிரித்தவன்.
“ சரி சரி சாப்பிட்ரலாம் டென் மினிஸ் தான ம்மா “
“நீங்க நார்மலா எத்தனை மணிக்கு சாப்பிடுவிங்க “
“அது மார்னிங் எப்பவும் காப்பி டீ பிஸ்கேட்ஸ் அவ்ளோ தான் சம்டைம்ஸ் டைம் இருந்தா ஆம்லெட் சாப்பிடுவேன் “
“என்னது காலைல அப்போ சாப்பிட மாட்டிங்களா அத்தான் “ என்ற ஜெயாவை பார்த்து
“அதுக்கு டைம் இருக்காதும்மா. மார்னிங் முழிச்சி கிளம்ப கரெக்டா இருக்கும்மா.”
“டோன்ட் வொரி அத்தான், எங்க அக்கா மார்னிங்கே முழிச்சிடுவா. அண்ட் அவ செய்ற டிபன் எல்லாம் சூப்பரா இருக்கும். அதிலயும் அந்த புனிதா சட்னி “என்று குணா சப்புக்கொட்டினாள்.
“அ… என்னது புனிதா சட்னியா? அப்படிலாமா சட்னி இருக்கு” என்று இன்பா மகாவைப் பார்க்க, அவளோ தலையில் அடித்தபடி
“அது புதினா. அதைத்தான் அந்த லட்சணத்துல சொல்றா அவ என்று சொல்லிவிட்டு இவள் நகர…”
“அவ அப்படிதான் அத்தான். அந்த புதினா சட்னிங்கிறது மட்டும் வாயில வராது. ஆனா அத வச்சா போதும், இட்லிக்கு அதை தொட்டுக்க மாட்டா. சட்னிக்கு தான் இட்லிய தொட்டுட்டு சாப்பிடுவா த்தான்”
“சட்னி பைத்தியமா நீ, குணா?”
“லைட்டா அத்தான். உங்களுக்கு இப்படி ஏதாவது அடிக்ட் ஃபுட் இருக்கா அத்தான்?” என்றதும் யோசித்த இன்பா…
“இஞ்சி டீ…ன்னா எத்தனை வாட்டி வேணும்னாலும் குடிப்பேன்மா “என்று இன்பா பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவள், அங்கே வந்து வாங்க சாப்பிடலாம் என்று அழைக்க அவனோ.
“நான் இன்னும் நீ கொடுத்த காப்பியையே இன்னும் முழுசா குடிச்சி முடிக்கல த..” தங்கமே என்று சொல்ல வந்தவனை கண்களை உருட்டி சுற்றி தங்கைகளை காட்டி மிரட்டவும்.
“இவ ஒருத்தி… “சலித்துக்கொண்டாலும் அங்கிருந்த மூன்று நாட்களும் அவன் மகாவை தங்கமே என்று அழைக்கவே இல்லை.
ஆனால் அதற்கும் சேர்த்து அவர்கள் வீட்டுக்கு சென்றவுடன் நிமிடத்திற்கு ஒரு தங்கமே போட்டு டேலி செய்து கொண்டான்.
அனைவரும் வரிசையாக பாயில் அமர மகா மற்றும் அமிர்தம் தான் பரிமாறினர்.
அப்போது இன்பா “ எங்க அத்தை மாமா ரெண்டு பேரையும் காணோம்.”
“ஓ… சரி அத்த”, என்றவன் அப்போதுதான் இலையையே பார்த்தான்.
இட்லி, வடை, கேசரி, பச்சை பயிறு, தோசை, மட்டன் கிரேவி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி என்று இலையே நிரம்பி வழிய.
“ஏன் அத்தை, இன்னும் ரெண்டு டிஷ் சேர்த்திருக்கலாமே. அப்படியே ரவுண்டா ஆகிருக்கும்” என்றவனை புரியாமல் பார்த்த அமிர்தம்.
“என்ன தம்பி சொல்றீங்க? இன்னும் ரெண்டு தோசை வைக்கவா” என்று பாத்திரத்தை எடுத்து வந்தவரை பார்த்து பயந்த இன்பா.
“அச்சோ அத்தை வேணாம். இத்தனை சாப்பிட்டவே வயித்துல இடம் இருக்கான்னு தெரியல. நீங்க இன்னும் ரெண்டு வச்சா பக்கத்துல வயித்த கடன் தான் வாங்கனும்.”
“அட போங்க தம்பி, நீங்க பேசுறது ஒன்னும் புரியல” என்று அவர் நகர்ந்து விட்ட பிறகு சுற்றி பார்த்தவன்.
அவற்றை பொறுமையாக சாப்பிட தொடங்கினான். இவன் சாப்பிட்டு முடிக்கவே வெகு நேரம் ஆகிவிட்டது.
அதன் பின் மகாவும் சாப்பிட்டு முடிக்க மதியம் உணவு தயாராக தொடங்கியது.
அக்கம் பக்கத்தினர் சிலர் வந்து இன்பாவுடன் பேசிக்கொண்டு இருக்க பெண்கள் அனைவரும் அம்மாவிற்கு சமைக்க உதவியபடி இருந்தனர்.
அப்போது உணவு உண்ண வந்த சீனி உணவு உண்டு முடித்து கையோடு இன்பாவையும் கடைக்கு அழைத்துச் சென்று விட அன்று நாள் கடையில் அவனுக்கு அழகாகவே கழிந்தது.
மாமனார்டனுடன் சட்டென்று ஒட்டிக்கொண்ட இன்பாவிற்கு ஏனோ மகாவின் தங்கைகளுடன் பேச தயக்கமாகவும், சட்டென்று பேச முடியாமலும், பார்த்து பார்த்து பேச வேண்டியதுமாக இருக்க திணறவே செய்தான் இன்பா.
அதில் இருந்து தப்பிக்கும் விதமாக மதிய உணவையும் முடித்து கொண்டு இவன் கடைக்கு வந்து விட மாலை போல தான் வீடு திரும்பினான்.
இவன் வீட்டிற்கு வந்ததும் இவனுக்கு பிடித்த இஞ்சி டீ மற்றும் பிஸ்கேட்ஸ் இருக்க அதை ஆசையாக எடுத்தவன் மகாவை பார்த்து
“ இந்த மூனு நாள்ல என்ன டிரிபிள் சைஸ்க்கு மாத்தி தான் அனுப்பிவிடுவீங்க போல “
“ஏன் அப்படி சொல்றீங்க அம்மா எல்லாம் உங்களுக்கு பிடிக்கும்னு தான் பார்த்து பார்த்து செய்றாங்க”
“அவங்க சாப்பாட குறை சொல்லல டா அவுங்க நிறையா செய்றாங்கன்னு சொல்றேன். நான் ஹோட்டல்ல கூட இத்தனை ஐட்டம் சாப்பிட்டது இல்லை டா “
என்றவனை பார்த்து சிரித்தவள் “ டீ குடிங்க அம்மா கிட்ட நாளைக்கு கம்மியா செய்ய சொல்றேன் “ என்றவள் அவன் அருகே அமர்ந்து கொள்ள அதிர்ந்து தான் பார்த்தான் இன்பா.
அவன் பார்வையில் மகா “என்னங்க “ என்று கேள்வியாக பார்க்க
“அது நீ பக்கத்துல உட்கார்ந்தியா அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன் “
“ஏன் நான் உங்க மனைவி தான பக்கத்துல உக்காந்தா என்ன “
“அப்பா…. இப்போவாது நீ என் மனைவி ஞாபகம் வந்திச்சே “
“ஏன் இப்படி பேசுறீங்க நான் நல்லா தான உங்கள பாத்துகிட்டேன் “ என்று மகா யோசிக்க
“ரொம்ப யோசிக்காத வா… கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க அத்தை. அங்க போய் பேசலாம் “ என்று அவளை அழைத்து கொண்டு அருகில் இருந்த முருகர் கோவில் சென்றான்.
அங்கு அர்ச்சனை தட்டு வாங்கி கொண்டு இருவரும் உள்ளே முருகரை கும்பிட்டு விட்டு அங்கே சிறிது நேரம் அமர்ந்தனர்.
இன்பா எதுவுமே பேசவில்லை அமைதியாக அமர்ந்தவன் கோவிலை சுற்றி பார்த்துக்கொண்டிருக்க மகா அவனை பார்ப்பதும் சுற்றி இருப்பவர்களை பார்ப்பதும் என்று தடுமாறிய படி இருக்க
“எல்லாரும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணா கோவில மூட்டிட்டு நம்ம மட்டும் உட்கார்ந்து பேசுவோமா “ என்று பேசியவனை மறுப்பாக தலையசைத்து பார்த்தவள்
“என்ன பேசுறீங்க கோவில்னா எல்லாரும் வர தான செய்வாங்க “
“அது உனக்கு புரியலையே மகா “ என்று அவளை அமைதியாக பார்க்க
“இப்போ வீட்டுல நம்ம இல்லையே ங்க ஏன் மகான்னு கூப்பிடுறிங்க “
“கோபமாவா இருக்கீங்களா? அது வீட்டுல சிஸ்டர்ஸ் இருக்காங்க சின்ன பிள்ளைங்க அதான் ங்க “
“ எனக்கு அது தெரியாதா மகா எனக்கு பேசிக் நாலேஜ் இருக்கு மகா எங்க எப்படி நடக்கனும்னு. உன் சிஸ்டர்ஸ் இருக்காங்கன்னு தான நானும் தள்ளி தான இருக்கன் எல்லார் முன்னாடியும் பாய்ஞ்சிடலல.
பக்கத்துல கூட உட்கார மாட்டிக்கிற உன் கூட பேசணும் ஆசையா இருந்தா என்ன விட்டு தள்ளி போறதுலயே குறியா இருக்க மகா நான் அப்படி உன்ன என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ டிஸ்டன்ஸ்.
கோவிலுக்கு கூட ஒன் ஆஃப் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிட்டு வர இப்போ என் கூட நார்மலா பேச கூட யோசிக்கிற “ என்றவனின் கையை பிடித்த மகா
“ப்ளீஸ் கோபப்படாம பேசுங்க, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.”
“என்ன பொறுமையா கேட்க?” என்று இன்பா கோபத்தில் எகிறினான்.
ஆசையாக திருமணம் செய்தாள், இவள் பேசக்கூட யோசிக்கிறாளே என்ற கோபம் தான் அவனுக்கு.
“ஏங்க, நான் சொல்றத கேளுங்க…” என்று அவன் கையை பிடித்து இழுத்தும், அவன் அவள் பேச்சை கேட்க மாட்டேன் என்பது போல தலையை திருப்ப, அதில் கடுப்பான மகா ஒரு வேகத்தில்
“எனக்கு எப்படின்னு தெரியலைங்க” என்று மகா கத்தவும், “ஏ… மகா, ஏன்டி கத்துற?” என்று இவன் சுற்றி பார்க்க
“அப்புறம் நான் பேசுறத கேட்க மாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்ண?” என்று முகத்தை குழந்தை போல வைத்து பேசியவள் மீது கோபம் எப்படி இருக்கும், இருந்தும் கோபமாக இருப்பது போல முகத்தை வைத்த இன்பா.
“என்ன பேசப் போற?”
“அது… வந்து… நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆச்சு. நான் டிவி எல்லாம் ரொம்ப பார்க்கக்கூட மாட்டேன். அதான் எனக்கு என்ன பண்ண தெரியலைங்க.
அம்மா கிட்ட கேட்ட நிங்க சொல்றத கேட்க சொல்றாங்க. உங்களை பார்த்தா ஒரு மாதிரி இருக்கு. அதான் என்ன பண்ணனும்னு சரியா தெரியல. இப்போ கூட உங்க கிட்ட பேசணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா என்ன பேச தெரியலையே” என்று பேசிய மகாவை பார்த்து நன்றாக சிரித்தான் இன்பா.
“அது… இத்தனை நேரம் கொஞ்சமே கொஞ்சம் கோபமா இருந்தேன்” என்று விரல்களை சுருக்கி அளவு காட்டி பேசியவனை மேலும் முறைத்தாள்.
“எனக்கும் இப்போ தான் கல்யாணம் ஆகிருக்கு. இனிமே தான் கத்துக்கணும். எனக்கு தெரியலைனா சொல்லி கொடுங்க. அதை விட்டுட்டு கோபமா, பேசாம இருந்தா எனக்கு எப்படி தெரியும்?”
“உங்க வீட்டுல இருக்கேன். எனக்கு புது இடம். இங்க என் மனைவி நீ, உன்னை வச்சி தான் எனக்கு மத்தவுங்க எல்லாம். அப்போ உன்னை தான நான் ரொம்ப தேடுவேன்.
எனக்கு வேற ரிலேஷன், உறவு முறை இப்படி எந்த பழக்கமும் இல்ல. அதான் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்” என்று பேசியவனின் கையை இறுக பிடித்து
“நான் உண்மையா இப்படி யோசிக்கவே இல்லீங்க. தனியா உங்க கூட பேச கூச்சமா இருந்துச்சு. அதான் வரலையே தவிர இப்படி எதுவும் யோசிக்கலையே. சாரிங்க” என்றவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட இன்பாவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
திருமணம் முடிந்து ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் இப்படி அழ வைத்து விட்டேனே என்று அவன் முகமும் வாடி விட
“ஏ… தங்கம் இங்க பாருங்க அழாத டா. நான் உன் சைடும் யோசிச்சிருக்கன்னும் எதோ கோபத்துல பேசிட்டேன் டா. நீ என்ன பண்ணுவ? உனக்கு இது புதுசு தான டா. அழாத டா தங்கம்” என்று அவளை சமாதானம் செய்ய
“இல்ல சாரிங்க. நான் உங்களை ஒழுங்கா பார்க்கவே இல்ல. சாரி.”
“அச்சோ… கல்யாணத்துக்கு அப்புறம் சரியான அழுகாச்சியா மாறிட்ட தங்கம். இங்க பாரு முகம்லாம் சிவந்து போச்சு” என்று அவள் கண்களை துடைக்க மகா அழுகையை நிறுத்திய பாடு இல்லை அதில்.
“அச்சோ யாரோ என் பொண்டாட்டிய தூக்கிட்டு போய்ட்டாங்க” என்று சுற்றி சுற்றி பார்த்தவனை அழுகையுடன் முறைத்த மகாவை பார்த்து கண்களை சிமிட்டியவன்
“ஐ… என் பொண்டாட்டி” என்று அணைக்க சென்றவனை தள்ளி விட்டு கண்களை உருட்டிய மகா
“என்ன பண்றீங்க? இது கோவில்” என்றதும் பல்லை காட்டிய இன்பா.
“ஓ… இது கோவிலா… நான் என்னவோ பார்க்குன்னு நினைச்சிட்டேன்” என்று பேசியவனின் வாயில் ‘பட்’ என்று ஒன்று வைத்த மகா,
“கோவிலை இப்படி சொல்லாதீங்க.”
“அடியே, அதை நீ இப்படி அடிச்சி தான் சொல்லுவியா?” என்று வாயை தேய்த்தவன்.
“சரி வாங்க, டைம் ஆச்சு” என்று அவனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
அதன் பின் இரண்டு நாட்களும் இன்பாவே “என்ன தங்கம் இது, என்ன இப்படி ஃபாலோ பண்ற” என்று சொல்லும் அளவுக்கு அவள் அவனுடனே இருந்தாள்.
மூன்று நாள் கழித்து சித்திரா மற்றும் வீரமுத்து இருவரும் வந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து இன்பாவின் வீட்டுக்கு வந்தனர்.
மகா கிளம்பும் போது ஆமிர்தம் ஆயிரம் அறிவுரை சொல்லி, தங்கைகள் அவளை காட்டிக்கொண்டு அழுது என்று அவளை அனுப்பி வைக்க, இத்தனையிலுமே மகா அழாமல் அனைவரையும் சமாதானம் செய்து வண்டியில் ஏறினாள்.
“என்னம்மா மகா அழாம இருக்கா, அதிசயம் தான்ம்மா” என்ற சித்திராவை பார்த்து மகா சிரிக்க இன்பா மெல்லிய குரலில்,
“நான் கூட நீ ரொம்ப அழுவேன்னு உன்னை எப்படி எல்லாம் சமாதானம் பண்ணனும்னு யோசிச்சி வச்சிருந்தேன் தெரியுமா?” என்று சொன்னவனின் தோளில் தயக்கம் இன்றி சாய்ந்தாள் மகா.
“ஏன்னா தெரியல, நான் அழுதா இன்னும் அழுவாங்கன்னு அழ மாட்டேனா, இல்ல வேற எதவதா தெரியலங்க.”
“அன்னைக்கு கோவில்ல மட்டும் என் முன்னாடி அழுதியே?”
“அது நீங்க…. உங்ககிட்ட என்னோட எல்லாத்தையும் கமிக்க முடியும்” என்று கண்களை சிமிட்டி பார்த்தவள் தினமும் புதிதாக தான் தெரிந்தாள்.
“உன்னை முழுசா படிக்க எனக்கு இந்த ஜென்மம் பத்தாது போல தங்கமே.”
“அவசரம் வேண்டாம், பொறுமையா ரசிச்சி படிக்கலாம் நீங்க என்ன பத்தி, நான் உங்களை பத்தி. டைம் பத்தாம போனா அடுத்த ஜென்மம் கிட்டயும் கடன் வாங்கிக்கலாம்” என்று பேசியவளை கண் இமைக்க மறந்து பார்த்தான்.
“நல்லா பேசுற தங்கமே. ஆபீஸ்ல நீ முறைக்கிறத பாத்துட்டு உனக்கு முறைக்க மட்டும் தான் வரும்னு நினைச்சேன்” என்று சொன்னவனை முறைத்தவள் கோபமாக முகத்தை திருப்பிக்கொள்ள, சிரித்துக்கொண்டான் இன்பா.
இல்லறம் என்பது ஊடல், கூடல், தேடல், தவிப்பு, கோபம் என்று பல உணர்வுகளால் கலந்தவை. அதை அனைத்திலும் துளி துளியாய் பருகி ரசித்து வாழ்வதே திருமணம்.
அதில் ஒன்று மட்டும் போதும் என்று சுகித்தாள். தேனையே அதிகமாக உட்கொண்டால் அது திகட்டி விடும், இல்லறம் திகட்டாதது.