அவன் தன்னைப் பார்ப்பது புரிய “அப்படி எல்லாம் மனசு விட்டுறக் கூடாது பார்த்தி. கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று சொல்லி ஆறுதலாக புன்னகைத்தாள்.
“அப்பாடி, எனக்கு தேவதைகள் ததாஸ்து சொன்ன மாதிரி இருக்கு”, என்று சொல்லி அவன் சிரிக்க “என்ன கிண்டல் பண்ணுறீங்களா?”, என்று கேட்டாள்.
“சத்தியமா இல்லை. நீ என்னோட தேவதை தான். தேவமங்கைன்னு கூட சொல்லலாம்”
“ஐயோ நீங்க வேற. விடுங்க. ஏதாவது சாப்பிடுறீங்களா? வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?”, என்று வெட்கத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம், நான் கிளம்புறேன்”, என்று அவன் சொல்ல “அதுக்குள்ளயா?”, என்று அவசரமாக கேட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
தன்னுடன் பேச அவள் ஆசைப் படுகிறாள் என்று தெரிந்த பிறகு அவன் எப்படி உடனே செல்வானாம்?
“உன்னோட டிரைவிங் கிளாஸ் பத்தி சொல்லேன் மங்கை”, என்று கேட்டு பேச்சை வளர்த்தான்.
“எனக்கு ஒரு நாளைக்கு மூணு கிளாஸ் வரும். நானும் ஜோதி அக்காவும் லேடீஸ்க்கு எடுப்போம். அருண் அண்ணா பசங்களுக்கு எடுப்பாங்க. வருமானம் எல்லாம் ஓகே தான். நல்ல படியா தான் போகுது. ஜென்ஸ்க்கு எடுக்க இன்னொரு ஆள் மட்டும் பாத்துட்டு இருக்கோம்”
“அப்படின்னா எனக்கு டிரைவிங் தெரிஞ்சா எனக்கு வேலை கொடுப்பியா?”
அவனைப் பார்த்து சந்தோஷமாக சிரித்தவள் “இப்பவே வேலைல சேந்துறீங்களா?”, என்று கேட்டாள்.
“சாரி எனக்கு கார் ஓட்ட தெரியாது”
“அது என்ன கம்பா சூத்திரமா. நாலு நாள்ல கத்துக்கலாம்”
“பீஸ் எவ்வளவுன்னு சொல்லு, உன் கிட்டயே ஸ்டூடண்டா சேந்துறேன்”
“உங்க கிட்ட எப்படி பார்த்தி பீஸ் வாங்குறது?”
“பண விஷயத்துல சரியா இருக்கணும் மா”
“அப்படியா? அப்படின்னா அன்னைக்கு டாக்டர் பீஸ், அப்புறம் டேப்லட்க்கு எல்லாம் நான் கொடுக்கணும் தானே?”
“ஏய், எனக்கு நீ பைசா தருவியா?”, என்று கேட்டவனின் குரல் சற்று ஓங்கி ஒலிக்க மெல்லியதாக சிரித்தாள்.
அவள் சிரிக்கவும் தான் நடப்புக்கு வந்தவன் “இன்னொரு தடவை அதுக்கு பணம் தரேனு சொல்லக் கூடாது”, என்றான் உரிமையாக.
“என்ன மா கோபம் வருது உங்களுக்கு? நீங்க அமைதின்னுல நினைச்சேன்”
“வர வேண்டிய இடத்துல வரத் தான் செய்யும்”, என்று சொன்னவனின் உரிமை பேச்சு அவளுக்கு அவ்வளவு பிடித்தது.
“சரி ஓகே எப்ப கிளாஸ் வரீங்க?”
“முதல்ல வேலைக்கு போனா ரிலாக்சா வந்து சேந்துருவேன்”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க நாளைல இருந்து வறீங்க? ஒரு ரெண்டு மணி நேரத்துல ஒண்ணும் ஆகிறாது. ஜாப் கிடைச்சிட்டா உங்களுக்கு நேரம் இருக்காது. இப்பவே கத்துக்கோங்க, நீங்க கத்துகிட்டா உங்களுக்கு வேற ஜாப் கிடைச்சா கூட எனக்கு வர கஷ்டமர்க்கு நீங்க பார்ட் டைம்மா சொல்லிக் கொடுப்பீங்கல்ல?”
“ஓஹோ பிளான் பண்ணி தான் அப்ப என்னை டிரைன் பண்ண போறீங்க அப்படி தானே மேடம்?”
“ஹா ஹா ஆமா. ஆனா சம்பளம் தந்துருவேன்”
“இது எந்த விதத்துல நியாயம்? எனக்கு பிரீயா சொல்லித் தருவீங்களாம்? அதே நான் வேலைக்கு வந்தா சம்பளம் கொடுப்பீங்களாம்? எப்படி மங்கை இது?”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க நாளைல இருந்து கிளாஸ்க்கு வரீங்க தானே?”, என்று கேட்டவளின் முகத்தில் அவ்வளவு ஆர்வம்.
“வரணுமா? வரணும்னு நீ எதிர் பாக்குறியா மங்கை?”, என்று கேட்டவன் அவளை ஆழமாக பார்க்க அவன் பார்வையில் அவள் நெஞ்சம் பட படத்தது.
“ம்ம்”, என்று முணுமுணுக்க அவள் மனது கொஞ்சம் அதிகமாகவே அவனுக்கு தெரிந்தது. தன்னிடம் இருக்கும் அதே ஆர்வம் அவளிடம் இருந்தால் சந்தோஷம் வராதா? அவ்வளவு சந்தோஷம் வந்தது பார்த்திபனுக்கு.
“நாளைக்கு வரேன். ஆனா ஒரு ஆப்ளிகேஷன்”
“என்ன பார்த்தி?”
“டிரைனரா நீ வந்தா நல்லா இருக்கும்”, என்று ஆழ்ந்த குரலில் சொல்ல சட்டென்று என்ன சொல்ல என்று தெரியாமல் திணறிப் போனாள்.
அவள் திணறுவதை ரசித்தவன் “ஏன் நீ எனக்கு சொல்லித் தர மாட்டியா?”, என்று கேட்டான்.
“நான்.. அது.. நான் இது வரைக்கும் பசங்க யாருக்கும் சொல்லித் தந்தது இல்லையே?”
“அது அவங்களால ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயந்து ஒரு சேப்ட்டிக்காக சொல்லிக் கொடுக்க மாட்ட. என் கிட்ட என்ன பயம்? எனக்கு சொல்லிக் கொடுக்கலாம். எனக்கு வேற யார் கிட்டயும் கத்துக்க வேண்டாம். நீ சொல்லிக் கொடுத்தா வரேன்”, என்றான் அடமாக.
“உங்களுக்கு கம்பர்டபிளா இருக்குமா?”, என்று தயக்கமாக கேட்டாள். ஏனென்றால் அதிக ஆண்கள் பெண் சொல்லிக் கொடுத்தால் தயங்குவார்கள். அதனால் தான் கேட்டாள்.
“உனக்கு கம்பர்ட்டபிளா இருக்காதுன்னு நினைக்கிறியா? நான் ஏதாவது உன்னை கஷ்டப் படுத்துவேன்னு நினைக்கிறியா மங்கை?”
“சே சே உங்க கிட்ட எனக்கு என்ன பயம்?”, என்று அவசரமாக கேட்டவள் “உண்மையிலே உங்க கிட்ட இருக்குறது எனக்கு பயமா தான் இருக்கு. என் மனசு என் கிட்டயே வேற மாதிரி நடந்துக்க சொல்லுது”, என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“சரி அப்பா கிட்ட சொல்லிட்டு நாளைல இருந்து வந்துறேன்”, என்றான். அவளும் தலையசைத்தாள். அடுத்து என்ன பேச என்று இருவருக்கும் தெரிய வில்லை.
ஏதாவது பேச வேண்டும் போலவும் இருந்தது. ஆனால் எதை பற்றி என்பதும் தெரிய வில்லை. அவர்கள் அமைதியாக இருக்க அப்போது உள்ளே வந்த ஜோதி “அவங்க வந்துட்டாங்க மங்கை”, என்றாள்.
“அப்படியாக்கா, இதோ வரேன்”, என்று சொல்ல அவளும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
மங்கை எழுந்து கொள்ள அவனும் எழுந்தவன் “கிளாஸ் இருக்கா மங்கை?”, என்று கேட்டான்.
“ஆமா, இருக்கு. ஆள் வந்துட்டாங்க”, என்று அவள் தயக்கமாக சொல்ல “பரவால்ல நீ பாரு. நான் கிளம்புறேன்”, என்றான்.
“ஹம்ம் சரி”, என்று அவள் சொல்ல அவனுக்கு அவள் எண்ணை எப்படியாவது வாங்க வேண்டுமே என்று தோன்றியது. நேரடியாக ஒரு பெண்ணிடம் போன் நம்பர் வாங்கவும் தயக்கமாக இருந்தது.
அதனால் “விசிட்டிங் கார்ட் எல்லாம் அடிச்சிருக்கியா? இல்லை.. அது வந்து.. யாராவது கேட்டா உங்க டிரைவிங் ஸ்கூல் பத்தி சொல்லலாம்ல அதான் கேட்டேன்?”, என்று சொல்ல அவன் நோக்கம் அவளுக்கு நன்கு புரிந்தது. ஆனாலும் கண்டு கொள்ளாதவாறு விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள். அதில் லேண்ட்லைன் நம்பர் மற்றும் ஒரு மொபைல் நம்பர் இருக்க “ரெண்டும் ஆபீஸ் நம்பர் தானா?”, என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.
“ஒண்ணு ஆபீஸ் நம்பர், இன்னொன்னு என்னோட பர்சனல் நம்பர்”, என்று சிரிப்புடன் சொல்ல அவனும் சம்மதமாக தலையசைத்தான். அவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.
“நேரடியா நம்பர் தான்னு கேட்டுருக்கலாமே?”
“கேக்கலாம் தான், ஏதாவது திட்டிட்டா என்ன பண்ணுறதுன்னு பயம் தான். சரி நான் கிளம்புறேன் மங்கை?”
“ஒரு நிமிஷம்”
“என்ன?”
“என் நம்பர்க்கு உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்க”, என்று அவசரமாக கேட்டாள். இப்போது அவன் சிரிக்க “அது… அது வந்து.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேட்டுக்குவேன்ல? அதுக்கு தான்”, என்று சொல்ல ஜில்லென்று அவன் மனம் எங்கோ பறந்தது.
“இதோ கொடுக்குறேன்”, என்றவன் அவளுக்கு அழைப்பு விடுக்க “நானும் சேவ் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னவள் காரை எடுக்க சென்று விட்டாள். அவனும் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினான்.